TNPSC TRB TET 12 ஆம் வகுப்பு தமிழ் 100 வினா விடை | 12th Tamil Part-12
மயிலை சீனி. வேங்கடசாமியைப் பற்றிய தகவல்கள்:
- பிறப்பு: 16-12-1900.
- தந்தை: சீனிவாசன் (சித்த மருத்துவம் வல்லவர்).
- ஆசிரியர் பணி: தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- ஆய்வுகள் வெளிவந்த இதழ்: ஆரம்பாசிரியன்.
- புலமை பெற்ற எழுத்து முறைகள்: வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ்பிராம்மி.
- அறிந்த மொழிகள்: மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம்.
- தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்.
- ஆய்வுப் பரப்பு: பொ.ஆ. 3 முதல் 9-ஆம் நூற்றாண்டு மன்னர்கள் (குறிப்பாக, களப்பிரர் ஆட்சி, மூன்றாம் நந்திவர்மன்).
- முதல் ஆய்வு நூல்: நந்திவர்மன் பற்றிய ஆய்வு.
- முக்கிய நூல்: களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.
- இருண்ட காலம்: தமிழர்களின் வரலாற்றில் களப்பிரர்கள் காலம் 'இருண்ட காலம்' எனப்படுகிறது.
- பணி: பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.
- உரைநடை நூல் (மலையாளக் கவிதை தொடர்பான): அலையும் சுவடும்.
- கவிதை நூல்கள்: ஒளிப்பறவை, சர்ப்பயாகம்.
- மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள்: ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி.
- உயிரெழுத்துகள் வகைகள்: இரண்டு (குறில், நெடில்).
- விதிக்குச் சான்று: தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் விதிக்குச் சான்று - பின் + இரவில் = பின்னிரவில்.
- விதி கூறும் நூல்: பழையன கழிதலும் புதியன புகுதலும் - நன்னூல்.
- பொருள்கள்: "கலம்" - பாத்திரம், "களம்" - கூடும் இடம் / போர்க்களம்.
- பொருள் கோள்கள்: எட்டு வகைப்படும். ஆற்றுநீர்ப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள் போன்றவை செய்யுள் உறுப்புகளுடன் தொடர்புடையவை.
- நிரல்நிறை அணி விளக்கம்: சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்ளுதல்.
- பொருள்கள்: "ஏகதேசம்" - ஏதேனும் ஒன்று, "குடும்பு" - கூடி வாழ்தல்.
- பேச்சு முறை: பேசுபவர் முன்னிலையாரையும் சேர்த்துக் கொண்டு பேசுவது - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.
- பெயர்ச்சொல் பிரிவு: தமிழ் மொழியில் பெயர்ச்சொற்கள் திணை அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
- இருதிணைப் பொதுச் சொற்கள்: குழந்தை, கதிரவன்.
- பொருளுணர்தல்: "முடித்தால் தரலாம்" - செயல் முடிந்த பின், "முடிந்தால் தரலாம்" - கொடுக்கும் எண்ணம்.
- மெய்ப்பாடுகள்: எண்வகை மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளன.
- மெய்ப்பாடு: கல்வியை நிலைக்களனாகக் கொண்டு பிறக்கும் மெய்ப்பாடு - பெருமிதம்.
- பொருள்: "மருட்கை" - வியப்பு.
- தொல்காப்பிய வனப்பு: தொன்மை.
- "பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான்" - பாரதிதாசன்.
- "ஒளிப்பறவை", "சர்ப்பயாகம்" - சிற்பி பாலசுப்பிரமணியம்.
- "கண்ணாடி ஆகும் கண்கள்" - அய்யப்ப மாதவன்.
- "சாகங்கொண்ட மீனொன்று" மொழிபெயர்ப்பாளர் - என். சத்யமூர்த்தி.
- "உரிமைத்தாகம்" சிறுகதை ஆசிரியர் - பூமணி.
- சாகித்திய அகாதெமி விருது பெற்ற பூமணி நூல் - அஞ்ஞாடி.
- "மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" நூல் - குறுந்தொகை.
- வீழக் காரணம் (நெடுநல்வாடை): பறவைகள் நிலத்தில் வீழக் காரணம் கடும் குளிர்.
- ஆயர்கள்: குளிரைத் தாங்க கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
- நெடுநல்வாடை அடைமொழிகள்: "நெடு" - தலைவிக்குத் துன்பம், "நல்" - தலைவனுக்கு வெற்றி.
- திணைகள்: வெற்றி பெற்ற அரசன் வாகைப் பூ சூடி மகிழ்வது - வாகைத்திணை. நெடுநல்வாடை பாடப்பட்ட திணை - வாகைத்திணை.
- ஒப்பிடுதல் (மழைக்காலம்): அய்யப்ப மாதவன் - நரம்புகளுக்குள் வீணை மீட்டுதல்.
- கணவனின் இல்லம்: மருதத்திணை "நும்மனை" எனக் கூறும்.
- தற்காலிகத் தங்குமிடம்: சங்க இலக்கியம் "புக்கில்" என அழைக்கிறது.
- தனிக்குடும்பத் தொடக்கம்: மணந்தகம்.
- தாயமுறை: பதிற்றுப்பத்து குறிப்பிடும் "மருமக்கள் தாயமுறை" சேரநாட்டில் நிலவியது.
- புக்கில்: தற்காலிகத் தங்குமிடம்.
- முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு: 1812.
- மொத்த அதிகாரங்கள்: 133.
- அறத்துப்பால்: 38 அதிகாரங்கள்.
- பொருட்பால்: 70 அதிகாரங்கள்.
- இன்பத்துப்பால்: 25 அதிகாரங்கள்.
- சிறப்புப் பெயர்: உலகப்பொதுமறை.
- பாதுகாப்பு அரண்: "அறிவு உடைமை" அதிகாரத்தில் திருவள்ளுவர் அறிவைப் பாதுகாப்பு அரண் என்கிறார்.
- அறிவு விளக்கம்: "மனம் போகும் போக்கில் செல்லவிடாமல் தடுப்பதே அறிவு" - திருவள்ளுவர் கூற்று.
- முக்கியமானது: நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே (மனத்திட்பம்) முக்கியம்.
- கல்விப் பயிற்சி தொடக்கம்: ஐந்தாம் பிராயத்தில் - வித்தியாரம்பம்.
- விழா: சுவடியில் மை தடவி வாசிக்கத் தொடங்கும் விழா - மையாடல் விழா.
- எழுத்தாணி வகைகள்: வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி, மடக்கெழுத்தாணி.
- நீதி நூல்கள்: "ஆத்திசூடி", "கொன்றை வேந்தன்" - அகரவரிசையில் அமைந்தவை.
- பண்டையப் பள்ளிக்கூடங்கள் குறித்து எழுதியவர்: உ.வே. சாமிநாதர்.
- தலைக்கோலி பட்டம்: மாதவி பெற்ற பட்டம்.
- மாதவியின் பரிசுத் தொகை: 1008 கழஞ்சுப் பொன்.
- இசைக்கருவிகள்: குழல், யாழ், தண்ணுமை.
- மனனப் பயிற்சிக்கு உதவியவை: "நிகண்டு", "காரிகை" - தமிழ் இலக்கணம் / இலக்கியம் சார்ந்தவை.
- நெறிப்படுத்துதல்: முற்காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை அன்பினால் அடக்குதல்.
- பிரிவு: "ஓதற்பிரிவு" பற்றி குறிப்பிடும் இலக்கண நூல் - தொல்காப்பியம்.
- அரங்கு அமைப்பு: நாடக அரங்கில் தூண்களின் நிழல் விழாதபடி அமைக்கப்பட்டவை - நிலைவிளக்குகள்.
- அரங்கின் மேல் பகுதி: ஓவிய வேலைப்பாடுமிக்க அரங்கின் மேல் பகுதி - விதானம்.
- வேடுவர் தலைவன்: இராமன் கங்கையைக் கடக்க உதவிய வேடுவர் தலைவன் - குகன்.
- கதிரவன் மகன்: சுக்ரீவன்.
- இராமனிடம் அடைக்கலம் புகுந்த இராவணன் தம்பி: வீடணன்.
- தண்டியலங்காரம் 'பாவிகம்' எனக் கூறுவது: பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப.
- தீக்காய்வார் உவமை: அரசர்களைச் சார்ந்திருப்பவர் தீக்காய்வார் போல அகலாது அணுகாது நடந்து கொள்ள வேண்டும்.
- தொழில் உவமை அணிச் சான்று: அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க.
- உவம உருபு: "குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று" - இதில் அற்று என்பது உவம உருபு.
- முதல் சாரசனிக் கட்டடம்: 1768-இல் கட்டி முடிக்கப்பட்ட - சேப்பாக்கம் அரண்மனை.
- மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்: தற்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
- பண்பாட்டைக் காக்கும் அருங்காட்சியகம்: சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகம்.
- பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி) உருவான ஆண்டு: 1840.
- இந்தியரால் உருவாக்கப்பட்ட கல்லூரி: ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி - பச்சையப்பன் கல்லூரி.
- சென்னைக் கோட்டைக்கல்லூரி உருவான ஆண்டு: 1812.
- இராணி மேரிக் கல்லூரி உருவான ஆண்டு (பெண்களுக்கான): 1914.
- மதராசப்பட்டினத்தை விலைக்கு வாங்கியவர்: கிழக்கிந்திய நிறுவன அலுவலர் - பிரான்சிஸ் டே.
- மதராசப்பட்டினத்தை ஆங்கிலேயருக்கு வழங்கியவர்: உள்ளூர் ஆளுநர்கள் - சென்னப்பரின் மகன்கள்.
- ஜலாலுத்தீன் ரூமி: பாரசீகக் கவிஞர்.
- பிழையற்ற தொடர்: "நான் வெந்நீரில் குளித்தேன்" - வெந்நீர் என்பது வெம்மையான நீர்.
- காப்பியம் குறிப்பு: அகலக்கவி, தொடர்நிலைச் செய்யுள்.
- இயல் தலைப்பு: "சிறுகை அளாவிய கூழ்" - இயல் 6.
- மேலாண்மை: "பருவத்தே பயிர் செய்" - நேர மேலாண்மை.
- பறவையின் இறகு சொல்வது: காற்றின் தீராத பக்கங்களில் வாழ்வை எழுதுதல்.
- தேர் ஆதாரம்: பெரிய தேரின் ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பது அச்சாணி.
- சாலைப் பாதுகாப்பு: மஞ்சள் விளக்கு - கவனி (தயாராக இரு). பாதசாரிகள் கடக்கும் கோடுகள் - பாதுகாப்பாகக் கடக்க.


0 Comments