12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16
கேள்வி 16 : சூழல் உள்பாதுகாப்பு மற்றும் சூழல் வெளிபாதுகாப்பு இரண்டையும் ஒப்பிட்டு வேறுபடுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
| எண் | சூழல் உள்பாதுகாப்பு (In-situ Conservation) | சூழல் வெளிபாதுகாப்பு (Ex-situ Conservation) |
|---|---|---|
| 1 | தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை அவற்றின் இயற்கையான வாழிடத்திலேயே பாதுகாத்தல். | அழியும் நிலையில் உள்ள விலங்கு மற்றும் தாவர இனங்களை, அவற்றின் இயற்கை வாழிடத்திலிருந்து மாற்றி, தனிப்பட்ட சிறப்புப் பகுதிகளில் பாதுகாத்தல். |
| 2 | இயற்கையான வாழிடங்களைப் புதுப்பித்தல் அல்லது வேட்டையாடிகள்/கொன்றுண்ணிகளிடமிருந்து சிற்றினங்களைப் பாதுகாத்தல். | இனத்தொகையைப் பெருக்குதல் (மீட்டெடுத்தல்) மூலம், ஒரு இனம் முற்றிலுமாக அழிந்து (மரபற்றுப் போவதில்) விடாமல் பாதுகாத்தல். |
| 3 | உதாரணங்கள்: தேசியப் பூங்காக்கள், உயிர்க்கோளக் காப்பிடங்கள், விலங்குப் புகலிடங்கள் (வனவிலங்கு சரணாலயங்கள்). | உதாரணங்கள்: விலங்கியல் பூங்காக்கள் (மிருகக்காட்சி சாலைகள்), தாவரவியல் தோட்டங்கள். |


0 Comments