12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18
கேள்வி 18 : நம் வெப்ப மண்டலங்களிலிருந்து துருவங்கள் நோக்கி நகரும் பொழுது உயிரிய பல்வகைத்தன்மையின் பரவல் குறைகிறது ஏன் ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
வெப்ப மண்டலத்திலிருந்து துருவங்களை நோக்கிச் செல்லச் செல்ல, சிற்றினங்களின் எண்ணிக்கை குறைவதால், உயிரினப் பல்வகைத்தன்மையும் குறைகிறது. இதற்குக் காரணம், துருவப் பகுதிகளில் நிலவும் கடுமையான மற்றும் குறைந்த வெப்பநிலை கொண்ட காலநிலையே ஆகும்.
உதாரணங்கள்:
- நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள கொலம்பியாவில் ஏறத்தாழ 1400 பறவை இனங்கள் காணப்படுகின்றன.
- நியூயார்க் பகுதியில் (41°N) 105 இனங்களும், கிரீன்லாந்தில் (71°N) 56 இனங்களும் மட்டுமே உள்ளன.
வடக்கு கனடா, அலாஸ்கா, வடக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யா போன்ற துருவங்களை ஒட்டிய நாடுகளில் உள்ள பனிச்சமவெளிகள் மற்றும் பசுமை மாறா ஊசியிலை காடுகளில் குறைந்த எண்ணிக்கையிலான மரங்களே காணப்படுகின்றன.


0 Comments