12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 19

கேள்வி 19 : வாழிட இழப்பை ஏற்படுத்தும் காரணிகள் யாவை ?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

வாழிட அழிவிற்கான காரணங்கள்:

  1. மனிதக் குடியிருப்புகள்விவசாயம்சுரங்கம் அமைத்தல்தொழிற்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்ற மனிதச் செயல்பாடுகளால் இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.
  2. அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கம்நகரமயமாக்கம் மற்றும் தொழில்மயமாக்கம் ஆகியவற்றின் விளைவாகவும், வேளாண்மை முன்னேற்றத்திற்காகவும் இயற்கை வளங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
  3. வெப்பமண்டல மழைக்காடுகள் இத்தகைய வாழிட அழிவிற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாகும். பூமியின் நிலப்பரப்பில் 14% இருந்த இவற்றின் பரப்பளவு தற்போது 6% கூட இல்லை.
  4. தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மலைகள் மனித ஆக்கிரமிப்புகளால் வேகமாக அழிந்து வருகின்றன.

வாழிட அழிவின் விளைவுகள்:

  1. வாழிட அழிவின் விளைவாக உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள இயலாமலோ அல்லது வேறு பாதுகாப்பான இடங்களை நோக்கியோ செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
  2. தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன.
  3. விலங்குகள் அவற்றின் சொந்த வாழிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement