12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 15
கேள்வி 15 : நாம் காற்று மாசுறுதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- நகரங்களில் காற்று மாசுபாட்டிற்கான சிறந்த தீர்வு மரங்களாகும்.
- காடுகள் கரிமப்பொருட்களை சேகரிக்கும் இடமாகவும் புவிக்கோளின் நுரையீரலாகவும் செயல்படுகின்றன.
- வாகனங்களின் வினைவேகமாற்றிகள் மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவுகின்றன.
- வாகனங்களின் டீசல் வெளியேற்று வடிகட்டிகள் துகள்களைத் தடுக்கின்றன.
- நிலை மின் வீழ்படிவாக்கிகள் தொழிற்சாலைகளிலிருந்து மாசுபடுத்திகள் வெளியேறுவதை குறைக்கின்றன.
- உள்வீட்டுத் தாவரங்கள் மற்றும் உயிரிய வடிகட்டிகள் மூலம் வீட்டிற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும்.


0 Comments