12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

கேள்வி 16 : சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைப்பதில் தனி நபரின் பங்கினை விவாதி.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • வாகனங்களின் வினைவேகமாற்றிகள் பயன்படுத்துதல், மாசுபடுத்தும் வாயுக்களை குறைக்க உதவுகின்றன.
  • உள்வீட்டுத் தாவரங்கள் (ம) திறன் மிகுந்த உயிரிய வடிகட்டிகள் போன்றவற்றை வீட்டில் பயன்படுத்துதல்.
  • செயற்கை உரங்கள் மற்றும் தீங்குயிர்க் கொல்லிகளின் பயன்பாட்டினை முறைப்படுத்துதல்/ கட்டுப்படுத்தல் வேண்டும்.
  • இரைச்சல் அதிகமாக உள்ள இடத்திலும் மற்றும் அதனைச் சுற்றிலும் மரங்களை நடுதல் நல்ல தீர்வாகும்.
  • CFCs பயன்பாட்டை குறைத்தல் (CFCs அற்ற குளிர்வூட்டிகளை பயன்படுத்துதல்) அல்லது தடை செய்தல்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

  1. வாகனங்களில் வினைவேகமாற்றிகள் பயன்படுத்துதல்.
  2. உள்வீட்டுத் தாவரங்கள் (ம) உயிரிய வடிகட்டிகள் பயன்படுத்துதல்.
  3. செயற்கை உரங்கள் மற்றும் தீங்குயிர்க் கொல்லிகளின் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்துதல்.
  4. இரைச்சல் அதிகமாக உள்ள இடத்திலும் அதனைச் சுற்றிலும் மரங்களை நடுதல்.
  5. CFCs பயன்பாட்டை குறைத்தல் அல்லது தடை செய்தல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement