12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 24

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 24

கேள்வி 24 : திடக்கழிவுகளின் முக்கிய மூலாதாரங்கள்


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

கழிவின் வகை மூலாதாரங்கள்
குடியிருப்பு உணவுக் கழிவுகள், நெகிழிகள், காகிதம், கண்ணாடி, பதனிடப்பட்ட தோல், அட்டை, உலோகங்கள், தாவரக்கழிவுகள், சாம்பல், டயர்கள், மின்கலன்கள், பழைய மெத்தைகள்.
தொழிற்சாலை பொதிவுக் கழிவுகள், சாம்பல், வேதிப்பொருட்கள், குடுவைகள், நெகிழிகள், உலோகப் பகுதிகள்.
வணிகம் மெல்லிய மற்றும் தடிமனான நெகிழிகள், உணவுக் கழிவுகள், உலோகங்கள், காகிதம், கண்ணாடி, மரக்கட்டை, அட்டைப் பொருட்கள்.
நிறுவனங்கள் மரக்கட்டை, காகிதம், உலோகங்கள், அட்டைப் பொருட்கள், மின்னணுக் கழிவுகள்.
கட்டுமானம் மற்றும் இடித்தல் எஃகு பொருட்கள், கான்கிரீட், மரக்கட்டை, நெகிழிகள், இரப்பர், தாமிர கம்பிகள், அழுக்கு, கண்ணாடி.
வேளாண்மை வேளாண் கழிவுகள், கெட்டுப்போன உணவு, தீங்குயிர்க் கொல்லி கலன்கள்.
உயிரி மருத்துவம் பீச்சுக்குழல்கள் (சிரிஞ்சுகள்), துணிப்பட்டை (கட்டுத் துணிகள்), பயன்படுத்தப்பட்ட கையுறைகள், நீரகற்றுக் குழாய் (கேத்தீட்டர்), சிறுநீர்ப் பைகள், மருந்துகள், காகிதம், நெகிழிகள், உணவுக் கழிவுகள், சுகாதார அணையாடைகள் (நாப்கின்கள்) மற்றும் குழந்தைகளின் அணையாடைகள் (டயப்பர்கள்), வேதிப்பொருட்கள்.
மின்னணுக் கழிவுகள் (E-Waste) பயன்படுத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், டிரான்சிஸ்டர்கள், ஒலிப்பதிவுக் கருவிகள், கணினி தனியறைகள் (சிபியு), மின் பலகைகள் (சர்க்யூட் போர்டுகள்), குறுந்தகடுகள் (சிடி), ஒலி-ஒளி நாடாக்கள் (ஆடியோ-வீடியோ கேசட்டுகள்), சொடுக்கி (ஸ்விட்ச்), கம்பிகள், மெல்லிய கயிறுகள் (கேபிள்கள்), நிலை மாற்றிகள் (ட்ரான்ஸ்ஃபார்மர்கள்), மின்னேற்றிகள் (சார்ஜர்கள்) போன்ற மின்னணுப் பொருட்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement