12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 25
கேள்வி 25 : வேளாண் வேதிப்பொருட்கள் என்றால் என்ன ? அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
வேளாண் வேதிப்பொருட்கள் :
தாவரங்கள் வளர்வதற்கும் மற்றும் தீங்குயிரிகளை கட்டுப்படுத்துவதற்கும் வேளாண் தொழிலில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் வேளாண் வேதிப் பொருட்கள் எனப்படும்.
விளைவுகள் :
- நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் மண் வாழ் உயிரினங்களை அவை கொல்லக்கூடும்.
- நீர் நிலைகளில் மிகை உணவூட்டத்தை ஏற்படுத்தும்
- நீர் வாழ் விலங்குகளையும் அவற்றின் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.
- மிகக்குறைந்த அளவு தீங்குயிர்கொல்லிகளை கொண்டிருந்தாலும், அந்த நீர் மனித பயன்பாட்டிற்கு தகுதியற்றதாகும்.
- இவ்வேதிப் பொருட்களின் துகள்கள் (துாசிப்படலம்) மற்றும் எச்சங்கள் காற்று மாசுபாட்டினை ஏற்படுத்தும்.
- மாசடைந்த காற்றினை உள்ளிழுப்பது சுவாசக் கோளாறுகளை ஏற்படத்தும்.


0 Comments