12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 23

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 23

கேள்வி 23 : நாம் மிகை உணவூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் ?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • மாசுபடுத்திகளை ஓடை அல்லது கிணறுகளில் விடுவித்து மாசுபடுத்துவதைத் தடை செய்தல்.
  • நீர் மாசுபாட்டினை தடுத்துதல் மற்றும் பாசிகளின் பெருக்கத்தை கட்டுபடுத்துதல்.
  • சாக்கடைக் கழிவுகள் ஆற்று நீரில் நேரடியாக கலக்காமல் அதனை மடைமாற்றி சுத்திகரிப்பது.
  • நகராட்சி கழிவு நீர் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அறிவியல் முறைப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்.
  • கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் தொழிற்சாலை நீர்மக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவ வேண்டும்.
  • செயற்கை உரங்கள் மற்றும் தீங்குயிர்க் கொல்லிகளின் பயன்பாட்டினை முறைப்படுத்த (அ) கட்டுப்படுத்த வேண்டும்.
  • பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு அவசியமானதாகும்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

  • மாசுபடுத்திகளை ஓடை அல்லது கிணறுகளில் விடுப்பதைத் தடை செய்தல்.
  • நீர் மாசுபாட்டினை தடுத்து, பாசிகளின் பெருக்கத்தைக் கட்டுபடுத்துதல்.
  • சாக்கடைக் கழிவுகள் ஆற்று நீரில் நேரடியாக கலக்காமல், மடைமாற்றி சுத்திகரிப்பது.
  • நகராட்சி கழிவு நீரை வெளியேற்றுவதற்கு முன் அறிவியல் முறைப்படி சுத்திகரிப்பது.
  • கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் தொழிற்சாலை நீர்மக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல்.
  • செயற்கை உரங்கள் மற்றும் தீங்குயிர்க் கொல்லிகளின் பயன்பாட்டினை முறைப்படுத்துதல்.
  • பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு அவசியம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement