12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 46
கேள்வி 46 : டர்னர் சிண்ட்ரோம் முக்கிய உடல் பண்புகள் / அறிகுறிகள் யாவை ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
டர்னர் நோய்க்குறி (XO - பெண்கள்)
டர்னர் நோய்க்குறி என்பது பெண்களைப் பாதிக்கக்கூடிய ஒரு மரபணுசார் குறைபாடாகும்.
மரபியல் அடிப்படை:
இத்தகைய மரபணுக் குறைபாட்டிற்குக் காரணம், பெண்களில் ஒரு X-குரோமோசோம் குறைவாகக் காணப்படுவதாகும். இந்த நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நபர்கள், பொதுவாக 45 குரோமோசோம்களை மட்டுமே (44 உடல் குரோமோசோம்கள் மற்றும் ஒரு X குரோமோசோம்) கொண்டுள்ளனர்.
முக்கிய உடலியல் பண்புகள் / அறிகுறிகள்:
- மலட்டுத்தன்மை
- குள்ளமான உடல் அமைப்பு
- அகன்ற சவ்வுகளையுடைய கழுத்து (Pterygium Colli)
- குறைந்த மார்பக வளர்ச்சி
- அண்டச் சுரப்பிகளின் வளர்ச்சியின்மை (Ovarian Dysgenesis)
- பருவமடைதலின்போது மாதவிடாய் சுழற்சி ஏற்படாதிருத்தல் (Primary Amenorrhea)


0 Comments