12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 39

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | Q.No 39

கேள்வி 39 : கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் முக்கிய உடல் பண்புகள் / அறிகுறிகள் யாவை ?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் (XXY-ஆண்கள்)

கிளைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome) என்பது ஆண்களைப் பாதிக்கக்கூடிய ஒரு மரபியல் குறைபாடு ஆகும்.

மரபியல் அடிப்படை:

இந்த குறைபாடு உள்ள ஆண்களுக்கு இயல்பை விட ஒரு கூடுதல் X குரோமோசோம் காணப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களின் மொத்த குரோமோசோம் எண்ணிக்கை 47 (44AA + XXY) ஆக உள்ளது.

முக்கிய உடல் பண்புகள்/அறிகுறிகள்:

  • குறுகிய அல்லது முழுமையாக வளர்ச்சி அடையாத ஆண் உறுப்புகள்.
  • மார்பக வளர்ச்சி (Gynaecomastia) காணப்படும்.
  • கை மற்றும் கால்கள் நீளமாக இருக்கும்.
  • உயரமாக, சற்று குண்டான தோற்றம் கொண்டவர்களாக இருப்பர்.
  • இவர்கள் மலட்டுத் தன்மை கொண்டவர்களாக (குழந்தை பேறு இல்லாதவர்கள்) இருப்பர்.
  • இவர்களது குரல் உரத்த ஒலியுடன் இருக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement