1. இரத்தக் கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன ?
அ) Y-குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்.
ஆ) Y-குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்.
இ) X-குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்.
ஈ) X- குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்.
விடை : ஈ) X- குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்.
2. மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது.
அ) பல்கூட்டு அல்லீல்கள்.
ஆ) கொல்லி மரபணுக்கள்.
இ) பால் சார்ந்த மரபணுக்கள்.
ஈ) Y - சார்ந்த மரபணுக்கள்.
விடை : அ) பல்கூட்டு அல்லீல்கள்.
3. ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்த வகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள் ?
அ) IA IB மற்றும் IO IO
ஆ) IA IO மற்றும் IB IO
இ) IB IB மற்றும் IA IA
ஈ) IA IA மற்றும் IO IO
விடை : ஆ) IA IO மற்றும் IB IO
4. கீழ்க்கண்டவைகளில் தவறானது எது?
அ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல்கள் ஓர் உயிரின தொகையில் காணப்பட்டால் அவை பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்படுகின்றன.
ஆ) இயல்பான மரபணுக்கள் திடீர் மாற்றம் அடைந்து பல அல்லீல்களை உருவாக்குகின்றன.
இ) பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன.
ஈ) பல்வேறு உயிரினத்தொகையில் இரட்டைமய உயிரிகள் இரண்டு அல்லீல்கள் மட்டுமே கொண்டுள்ளன.
விடை : இ) பல்கூட்டு அல்லீல்கள் குரோமோசோமின் வெவ்வேறு இடத்தில் அமைந்துள்ளன.
5. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
அ) A மற்றும் B மட்டும்.
ஆ) A,B மற்றும் AB மட்டும்.
இ) AB மட்டும்.
ஈ) A, B, AB மற்றும் O.
விடை : ஈ) A, B, AB மற்றும் O.
6. கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபு வகையான IAIO X IAIB களுக்கிடையே பிறக்க சாத்தியமில்லை?
அ) AB
ஆ) O
இ) A
ஈ) B
விடை : ஆ) O
7. பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை ?
அ) அனைவரும் Rh+ வாக இருப்பார்கள்.
ஆ) இரண்டில் ஒருபங்கு Rh+ வாக இருப்பார்கள்.
இ) நான்கில் மூன்று பங்கு Rh- வாக இருப்பார்கள்.
ஈ) நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்.
விடை : ஈ) நான்கில் ஒரு பங்கு Rh- வாக இருப்பார்கள்.
8. இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
அ) AB மட்டும்.
ஆ) A, B மற்றும் AB.
இ) A, B, AB மற்றும் O.
ஈ) A மற்றும் B மட்டும்.
விடை : ஆ) A, B மற்றும் AB.
9. குழந்தையின் இரத்தவகை O என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்.
அ) IA IA மற்றும் IB IO.
ஆ) IA IO மற்றும் IB IO.
இ) IA IO மற்றும் IO IO.
ஈ) IO IO மற்றும் IB IB.
விடை : ஆ) IA IO மற்றும் IB IO.
10. XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்.
அ) வேறுபட்ட இனச்செல் ஆண்.
ஆ) வேறுபட்ட இனச்செல் பெண்.
இ) ஒத்த இனச்செல் ஆண்.
ஈ) ஆ மற்றும் இ.
விடை : அ) வேறுபட்ட இனச்செல் ஆண்.
11. ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?
அ) O மற்றும் Rh-
ஆ) O மற்றும் Rh+
இ) B மற்றும் Rh-
ஈ) AB மற்றும் Rh+
விடை : அ) O மற்றும் Rh-
12. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
அ) 25%
ஆ) 50%
இ) 100%
ஈ) 75%
விடை : ஆ) 50%
13. ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.
அ) மகள்கள் அனைவரும் கடத்திகளாகவும் மற்றும் மகன்கள் இயல்பாகவும் இருப்பார்கள்.
ஆ) 50% மகள்கள் கடத்திகளாகவும் மற்றும் 50% இயல்பான பெண்களாக இருப்பார்கள்.
இ) 50% நிறக்குருடு ஆண்களாகவும் மற்றும் 50% இயல்பான ஆண்களாக இருப்பார்கள்.
ஈ) அனைத்து சந்ததிகளும் கடத்திகளாக இருப்பார்கள்.
விடை : அ) மகள்கள் அனைவரும் கடத்திகளாகவும் மற்றும் மகன்கள் இயல்பாகவும் இருப்பார்கள்.
14. டவுன்சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது?
அ) 20
ஆ) 21
இ) 4
ஈ) 23
விடை : ஆ) 21
15. கிளைன்ஃபெல்டர்சிண்ட்ரோம்குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
அ) XYY
ஆ) XO
இ) XXX
ஈ) XXY
விடை : ஈ) XXY
16. டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது.
அ) சிறிய கருப்பை.
ஆ) வளர்ச்சியடையாத அண்டகங்கள்.
இ) வளர்ச்சியடையாத மார்பகம்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்.
விடை : ஈ) மேற்கண்ட அனைத்தும்.
17. பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ) 13-டிரைசோமி.
ஆ) 18-டிரைசோமி.
இ) 21- டிரைசோமி.
ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை.
விடை : அ) 13-டிரைசோமி.
18. பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்த வகை முறையே --------- மற்றும் ----------ஆகும்.
அ) AB, O.
ஆ) O, AB.
இ) A, B.
ஈ) B, A.
விடை : ஆ) O, AB.
19. ZW-ZZ வகை பால் நிர்ணயம் எதில் காணப்படுகிறது.
அ) மீன்கள்
ஆ) ஊர்வன.
இ) பறவைகள்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்.
விடை : ஈ) மேற்கண்ட அனைத்தும்.
20. இணை ஓங்கு தன்மை இரத்த வகை எது ?
அ) A.
ஆ) AB.
இ) B.
ஈ) O.
விடை : ஆ) AB.
21. ZW-ZZ வகை பால் நிர்ணயத்தில் கீழ்க்கண்டவைகளில் தவறானது எது ?
அ) பறவை மற்றும் சில ஊர்வனவற்றில் காணப்படுகிறது.
ஆ)பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர்.
இ) ஆண்கள் ஒத்தயினச்செல்லை உற்பத்தி செய்கின்றனர்.
ஈ) இவை ஜிப்சி அந்தி பூச்சியில் காணப்படுகின்றன.
விடை : ஆ)பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளனர்.
22. நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?
அ) மெண்டல்
ஆ) டார்வின்
இ) பிரான்சிஸ் கால்டன்
ஈ) கார்ல் பியர்சன்
விடை : இ) பிரான்சிஸ் கால்டன்
23. மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விரும்பத்தகுந்த பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தையை பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலாம்.
அ) நேர்மறை இனமேம்பாட்டியல்
ஆ) எதிர்மறை இனமேம்பாட்டியல்
இ) நேர்மறை சூழ்நிலை மேம்பாட்டியல்
ஈ) நேர்மறை புறதோற்ற மேம்பாட்டியல்
விடை : அ) நேர்மறை இனமேம்பாட்டியல்
24. என்பவை பல்வேறு மனித மரபு கடத்தல் நோய்கள் குறிப்பாக பிறவி வழி வளர்சிதை மாற்றக் குறைபாட்டு நோயினை கட்டுப்படுத்துவதில் பங்கு பெறுகிறது.
அ) புறதோற்ற மேம்பாட்டியல்
ஆ) இனமேம்பாட்டியல்
இ) சூழ்நிலை மேம்பாட்டியல்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை : அ) புறதோற்ற மேம்பாட்டியல்


0 Comments