12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21
கேள்வி 21 : எ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான B- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பதியாவதில்லை - விளக்குக.
விடை :
- லாக்டோஸ் இல்லாத நிலையில்:
- ஓபரானின் அடக்கி புரதமானது இயக்கிப் பகுதியுடன் (Operator) பிணைந்து கொள்கிறது.
- இதனால், RNA பாலிமெரேஸ் நொதியானது படியெடுத்தல் செயல்முறையைத் தடுக்கிறது.
- இதன் விளைவாக, β-கேலக்டோசிடேஸ் உள்ளிட்ட லாக்டோஸ் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான நொதிகள் எதுவும் உற்பத்தியாவதில்லை.
- லாக்டோஸ் இருக்கும் நிலையில் (மற்றும் குளுக்கோஸ் இல்லாத நிலையில்):
- ஆற்றல் மூலமாக லாக்டோஸ் கிடைக்கும்போது, அது பெர்மியேஸ் நொதியின் மூலம் பாக்டீரியா செல்லின் உள்ளே நுழைகிறது.
- உள்ளே நுழைந்த லாக்டோஸ், தூண்டியாகச் (Inducer) செயல்பட்டு, அடக்கிப் புரதத்துடன் இணைந்து அதைப் செயலற்றதாக மாற்றுகிறது.
- செயலற்ற அடக்கிப் புரதத்தால் ஓபரானின் இயக்கிப் பகுதியுடன் பிணைய முடிவதில்லை.
- இதனால், RNA பாலிமெரேஸ் நொதியானது இயக்கி இடத்தில் பிணைந்து, ஓபரானைப் படியெடுத்து லேக் தூதுRNA-வை (lac mRNA) உற்பத்தி செய்கிறது.
- இதன் விளைவாக, லாக்டோஸ் வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான அனைத்து நொதிகளும் (β-கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ்) உருவாக்கப்படுகின்றன.


0 Comments