12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24

கேள்வி 24 : மனித வைரஸ் நோய்களின் நோய் காரணிகள். பரவும் முறை மற்றும் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக


விடை :

  • சாதாரண சளி (தடிமல்)
    • நோய்க்காரணி: ரைனோ வைரஸ்கள் (Rhinoviruses)
    • நோய்த்தொற்றும் பகுதி: சுவாசப் பாதை
    • பரவும் முறை: நீர்த் திவலைகள்
    • அறிகுறிகள்: நாசி அடைப்பு மற்றும் சளி திரவ வெளியேற்றம், தொண்டை வலி, இருமல் மற்றும் தலைவலி
  • புட்டாளம்மை (Mumps) (பொன்னுக்கு வீங்கி)
    • நோய்க்காரணி: மம்ப்ஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்), பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus)
    • நோய்த்தொற்றும் பகுதி: உமிழ்நீர்ச் சுரப்பி
    • பரவும் முறை: உமிழ்நீர் மற்றும் நீர்த் திவலைகள்
    • அறிகுறிகள்: மேலண்ணசுரப்பியில் (Parotid) வீக்கம் ஏற்படுதல்
  • தட்டாம்மை (Measles)
    • நோய்க்காரணி: ருபல்லா வைரஸ் (Rubeolla virus) (ஆர்.என்.ஏ வைரஸ்), பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus)
    • நோய்த்தொற்றும் பகுதி: தோல் மற்றும் சுவாசப் பாதை
    • பரவும் முறை: நீர்த் திவலைகள்
    • அறிகுறிகள்: கரகரப்பான தொண்டை, மூக்கு ஒழுகல், இருமல், காய்ச்சல், மற்றும் தோல், கழுத்து, காதுகளில் தோன்றும் சிவப்பு நிறத் தடிப்புகள்
  • கல்லீரல் அழற்சி (Viral Hepatitis)
    • நோய்க்காரணி: ஹெப்படைட்டிஸ்–B வைரஸ்
    • நோய்த்தொற்றும் பகுதி: கல்லீரல்
    • பரவும் முறை: பெற்றோர் வழி, இரத்தப் பரிமாற்றம்
    • அறிகுறிகள்: கல்லீரல் சிதைவு, மஞ்சள் காமாலை, குமட்டல், மஞ்சள் நிற கண்கள், காய்ச்சல் மற்றும் வயிற்று வலி
  • சின்னம்மை (Chicken pox)
    • நோய்க்காரணி: வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (Varicella- Zoster virus) (டி.என்.ஏ வைரஸ்)
    • நோய்த்தொற்றும் பகுதி: சுவாசப் பாதை, தோல் மற்றும் நரம்பு மண்டலம்
    • பரவும் முறை: நீர்த் திவலைகள் மற்றும் நேரடி தொடர்பு
    • அறிகுறிகள்: லேசான காய்ச்சலுடன் தோல் அரிப்பு, தோல் தடிப்பு மற்றும் கொப்புளங்கள்
  • இளம்பிள்ளை வாதம் (Polio)
    • நோய்க்காரணி: போலியோ வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்)
    • நோய்த்தொற்றும் பகுதி: குடல், மூளை, தண்டுவடம்
    • பரவும் முறை: நீர்த் திவலைகள், வாய்வழி மலத்தொற்று
    • அறிகுறிகள்: காய்ச்சல், தசை விறைப்பு மற்றும் பலவீனம், பக்கவாதம் மற்றும் சுவாசக் கோளாறு
  • டெங்கு காய்ச்சல் (Dengue fever)
    • நோய்க்காரணி: டெங்கு வைரஸ் (அ) ஃபிளேவி வைரஸ் (DENV அல்லது 1-4 வைரஸ்)
    • நோய்த்தொற்றும் பகுதி: தோல் மற்றும் இரத்தம்
    • பரவும் முறை: நோய்க்கடத்தியான ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள்
    • அறிகுறிகள்: திடீரெனத் தோன்றும் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி
  • சிக்குன்குன்யா (Chikungunya)
    • நோய்க்காரணி: ஆல்ஃபா வைரஸ் (டோகா வைரஸ்) (Alphavirus/Togavirus)
    • நோய்த்தொற்றும் பகுதி: நரம்பு மண்டலம்
    • பரவும் முறை: நோய்க்கடத்தியான ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் (Aedes aegypti)
    • அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி மற்றும் மூட்டுகளில் வீக்கம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement