12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26
கேள்வி 26 : மனிதனில் பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியை விளக்குக.
விடை :
மலேரியா நோயை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம்:
- இரண்டு விருந்தோம்பிகளைக் கொண்டது.
- முதன்மை விருந்தோம்பி: பெண் அனாபிலஸ் கொசு.
- இரண்டாம் நிலை விருந்தோம்பி: மனிதன்.
பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சி நிலைகள்:
- ஷைசோகோனி (Schizogony)
- கேமோகோனி (Gamogony)
- ஸ்போரோகோனி (Sporogony)
மனிதனில் வாழ்க்கைச் சுழற்சி:
- நோய்த்தொற்று கொண்ட பெண் அனாபிலஸ் கொசு கடிக்கும்போது, அதன் உமிழ்நீருடன் ஸ்போரோசோயிட்டுகள் மனிதனின் இரத்த ஓட்டத்தில் நுழைகின்றன.
- ஸ்போரோசோயிட்டுகள் உடனடியாக கல்லீரல் செல்களுக்குள் சென்று பாலிலா பலபிளவு (Schizogony) முறையில் பெருக்கமடைந்து, மீரோசோயிட்டுகளை உற்பத்தி செய்கின்றன.
- கல்லீரல் செல்களிலிருந்து வெளியேறும் மீரோசோயிட்டுகள் இரத்தச் சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.
- சிவப்பணுக்களுக்குள் நுழைந்த மீரோசோயிட்டுகள்:
- ட்ரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன.
- "முத்திரை மோதிர நிலை" (Signet ring) உருவாகிறது.
- பாலிலா இனப்பெருக்க முறையில் பிளவுற்று சைஷாண்டுகளை உருவாக்குகின்றன.
- சைஷாண்டுகளில் 'ஷஃப்னரின் துகள்கள்' (Schuffner's granules) காணப்படுகின்றன.
- சைஷாண்டுகள் பிளவுற்று ஒற்றை உட்கரு கொண்ட மீரோசோயிட்டுகளை உருவாக்குகின்றன.
- இரத்தச் சிவப்பணுக்கள் வெடித்து, மீரோசோயிட்டுகளையும், ஹீமோசோயின் நச்சினையும் இரத்தத்தில் வெளியிடுகின்றன.
- மீரோசோயிட்டுகள் வெளியாவதால், சுழற்சி முறையில் காய்ச்சலும் மற்ற அறிகுறிகளும் ஏற்படுகின்றன. (சுழற்சி தோராயமாக 48 முதல் 72 மணி நேரத்திற்கு ஒருமுறை நிகழ்கிறது).
- மீரோசோயிட்டுகள் சில நேரங்களில் மேக்ரோகேமிட்டோசைட்டுகளாகவும் (பெண் இனச்செல்) மைக்ரோகேமிட்டோசைட்டுகளாகவும் (ஆண் இனச்செல்) மாற்றமடைகின்றன.
கொசுவில் வாழ்க்கைச் சுழற்சி:
- கொசுவின் குடலில் பாதிக்கப்பட்ட சிவப்பணுக்கள் உடைவதால், வெளியேறும் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து ஊகைனெட் (இரட்டைமய கருமுட்டை) என்ற இரட்டைமய கருமுட்டையை உருவாக்குகின்றன.
- ஊகைனெட் குடற்சுவரைத் துளைத்துச் சென்று ஊசிஸ்டுகளாக மாறுகின்றன.
- ஊசிஸ்டுகள் குன்றல் பகுப்பு முறையில் பிளவுற்று ஸ்போரோசோயிட்டுகளை உருவாக்குகின்றன. இந்த நிகழ்வு ஸ்போரோகோனி எனப்படும்.
- ஸ்போரோசோயிட்டுகள் கொசுவின் உமிழ்நீர்ச் சுரப்பியை நோக்கி நகர்ந்து தங்குகின்றன.
- உமிழ்நீர்ச் சுரப்பியில் ஸ்போரோசோயிட்டுகளைக் கொண்ட கொசு மற்றொரு மனிதனைக் கடிக்கும்போது புதிய சுழற்சி தொடங்குகிறது.


0 Comments