12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27
கேள்வி 27 : போதை மற்றும் மதுவை வரையறையின்றி பயன்படுத்துவதைத் தடுக்க சில வழிகளைப் பரிந்துரை செய்க.
விடை :
- சகாக்களின் அழுத்தத்தை திறம்படக் கையாளுதல்: போதை மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று சகாக்களின் அழுத்தம் ஆகும். போதைப்பொருள் மற்றும் மதுவைத் தவிர்ப்பதற்கு நல்ல நண்பர்கள் குழு அவசியமாகிறது.
- பெற்றோர் மற்றும் சகாக்களின் உதவியை நாடுதல்: நெருங்கிய மற்றும் நம்பகமான நண்பர்கள் அல்லது பெற்றோரிடம் இருந்து உதவி பெறுவது, கவலைகள் மற்றும் குற்ற உணர்வுகளைப் போக்க உதவும்.
- கல்வி மற்றும் ஆலோசனை: நேர்மறையான அணுகுமுறையை உருவாக்கும் கல்வி மற்றும் ஆலோசனை, வாழ்க்கையின் சிக்கல்களையும் ஏமாற்றங்களையும் கையாள உதவுகிறது.
- ஆபத்தான அறிகுறிகளைக் கண்டறிதல்: போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதற்கான அறிகுறிகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கண்டறிவது இன்றியமையாதது.
- தொழில்முறை மற்றும் மருத்துவ உதவியை நாடுதல்: போதைக்கு அடிமையானவர்கள் மனநல ஆலோசகர்கள், உளவியலாளர்கள் மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் போன்ற தொழில்முறை மருத்துவ உதவிகளை நாடலாம்.


0 Comments