1. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்.
ஆ) கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்.
இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே.
ஈ) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்.
விடை : இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே.
2. பிளாஸ்மோடியத்தின் புறச் சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம்
அ) இரத்த சிவப்பணு.
ஆ) லியூக்கோசைட்டுகள்.
இ) இரைப்பை.
ஈ) கல்லீரல்.
விடை : ஈ) கல்லீரல்.
3. பிளாஸ்மோடிய வைவாக்ஸின் ஸ்போரோசோயிட்டுகள் ---------- ல் உருவாக்கப்பட்டது.
அ) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்).
ஆ) ஸ்போரோபிளாஸ்டுகள்.
இ) ஊசிஸ்டுகள்.
ஈ) ஸ்போர்கள்.
விடை : இ) ஊசிஸ்டுகள்.
4. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ----------- ஆகும்.
அ) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி.
ஆ) மன மருட்சி ஏற்படுத்துபவை.
இ) அ மற்றும்ஆ இரண்டும்.
ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி.
விடை : ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி.
5. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி.
ஆ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து.
இ) ஹெராயின்- உளவியல் மருந்து.
ஈ) பென்சோடைஅசபைன்- வலி நீக்கி.
விடை : அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி.
6. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது........................
அ) பாக்டீரியா.
ஆ) பூஞ்சை.
இ) வைரஸ்.
ஈ) புரோட்டோசோவா.
விடை : ஆ) பூஞ்சை.
7. ----------- அதிகமாக எடுத்துக் கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
அ) அபின்.
ஆ) மது.
இ) புகையிலை.
ஈ) கோகெய்ன்.
விடை : ஆ) மது.
8. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட்-ல் காணப்படுகிறது.
அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்.
ஆ) மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்.
இ) நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்.
ஈ) பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்.
விடை : அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்.
9. நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
i) லீஷமேனியா டோனோவனி - 1. அமீபியாசிஸ்
ii) உச்சரீரீயா பான்கிராஃப்டி. - 2. காலா-அசார் .
iii) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் - 3. தூக்க வியாதி.
iv) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - 4. யானைக்கால் நோய்.
a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).
b) (A-ii), (B-iv), (C-i), (D-iii).
c) (A-iii), (B-i), (C-ii), (D-iv).
d) (A-i), (B-iv), (C-iii), (D-ii).
விடை : a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).
10. பாரடோப் என்பது.
அ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
ஆ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
ஈ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
விடை : இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி
11. ஒவ்வாமையில் தொடர்புடையது
அ) IgE
ஆ) IgG
இ) IgA
ஈ) IgM
விடை : அ) IgE
12. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் ------- என அழைக்கப்படுகிறது.
அ) வேற்றிடப் பரவல் .
ஆ) ஆன்கோஜீன்கள்.
இ) புரோட்டோ - ஆன்கோஜீன்கள்.
ஈ) மாலிக்னன்ட் நியோப்ளாசம்.
விடை : அ) வேற்றிடப் பரவல் .
13. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .
அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .
ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ .
இ) ஒற்றை இழை டி.என்.ஏ .
ஈ) இரட்டை இழை டி.என்.ஏ.
விடை : அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .
14. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
அ) நினைவாற்றல் செல்கள் .
ஆ) பேசாபில்கள் .
இ) பிளாஸ்மா செல்கள் .
ஈ) கொல்லி செல்கள்
விடை : இ) பிளாஸ்மா செல்கள் .


0 Comments