12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23

கேள்வி 23 : மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • எச்.ஐ.வி., மனித உடலில் மேக்ரோபேஜ் செல்களில் நுழைந்த பிறகு, ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் நொதியால், வைரஸின் ஆர்.என்.ஏ.,வை டி.என்.ஏ.வாக மாற்றிக் கொள்கிறது.
  • இந்த வைரஸ் டி.என்.ஏ., விருந்தோம்பி செல்களின் டி.என்.ஏ.வுடன் இணைந்து தொற்று ஏற்பட்ட செல்களை, வைரஸ் துகள்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
  • மேக்ரோபேஜ்கள் தொடர்ச்சியாக வைரஸ்களை உற்பத்தி செய்வதன் மூலம், அவை எச்.ஐ.வி., தொழிற்சாலையாக செயல்படுகின்றன.
  • உதவி T லிம்போசைட்டுக்களினுள் நுழைந்த எச்.ஐ.வி., பெருகி, சந்ததி வைரஸ்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
  • வெளிவந்த சந்ததி வைரஸ்கள், ரத்தத்தின் மற்ற உதவி T.செல்களையும் தாக்குகின்றன.
  • இந்நிகழ்வு தொடர்வதால், விருந்தோம்பியின் உடலில் உதவி T.லிம்போசைட் செல்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்குகிறது.
  • இந்நிகழ்வு நடைபெறும் காலத்தில் பாதிக்கப்பட்ட மனிதருக்கு நோய்த்தடைக்காப்பு குறைபாடு ஏற்பட்டு, பலவித நோய்த்தொற்றுக்கு ஆளாகி, எவ்வித நோய் தொற்றையும் தடுக்க இயலாத நிலைக்கு உள்ளாகி விடுகிறார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement