12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

கேள்வி 22 : B செல் மற்றும் T செல் மனித உடலில் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அது மற்ற செல்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது. ஏதேனும் இரண்டு வேறுபாடுகளைக் குறிப்பிடுக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

B மற்றும் T லிம்போசைட்டுகள்

  • இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில், 20% முதல் 30% வரை லிம்போசைட்டுகள் உள்ளன.
  • லிம்போசைட்டுகள் உட்கரு மற்றும் சைட்டோபிளாசத்தை மட்டுமே கொண்டுள்ளன.
  • இவை B மற்றும் T என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
  • இந்த இரண்டு வகை லிம்போசைட்டுகளும் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • B செல்கள் எலும்பு மஜ்ஜையிலேயே முதிர்ச்சியடைந்து B லிம்போசைட்டுகளாக மாறி நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலை அடைகின்றன.
  • T செல்கள் எலும்பு மஜ்ஜையிலிருந்து வெளியேறி, தைமஸில் முதிர்ச்சியடைந்து T-லிம்போசைட்டுகளாக மாறி நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலை அடைகின்றன.

பொதுவான பண்புகள் (வேறுபாடுகள்)

  • இரண்டு செல்களிலும் பெரும்பகுதி உட்கருவாகவும், மற்ற பகுதிகளில் சிறிய சைட்டோபிளாசம் மட்டுமே இருக்கும்.
  • இவை இரண்டும் நோய் எதிர்ப்புச் சக்தியில் (தடைகாப்பியல்) ஈடுபடுகின்றன.
  • முதிர்ச்சியடைந்த பிறகு, இவை உற்பத்தி செய்யப்பட்ட இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் செல்கின்றன.

 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement