12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1

1. சீம்பால் வழங்குவது.
அ) இயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு.
ஆ) இயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு.
இ) செயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு.
ஈ) செயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு.
விடை : ஆ) இயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக்காப்பு.

2. பாரடோப் என்பது.
அ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
ஆ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் இணையும் பகுதி .
இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
ஈ) கனமான பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .
விடை : இ) மாறுபடும் பகுதிகளில் உள்ள எதிர்ப்பொருள் தூண்டிகள் இணையும் பகுதி .

3. ஒவ்வாமையில் தொடர்புடையது
அ) IgE
ஆ) IgG
இ) IgA
ஈ) IgM
விடை : அ) IgE

4. உடனடி வினைக்கு காரணமாக இருப்பது .
அ) ஒவ்வாமை எதிர்வினை .
ஆ) நச்சுகளின் சுரப்பு .
இ) ஹிஸ்டமைன்களின் சுரப்பு .
ஈ) மேற்கூறிய அனைத்தும்.
விடை : அ) ஒவ்வாமை எதிர்வினை .

5. வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் ------- என அழைக்கப்படுகிறது.
அ) வேற்றிடப் பரவல் .
ஆ) ஆன்கோஜீன்கள்.
இ) புரோட்டோ - ஆன்கோஜீன்கள்.
ஈ) மாலிக்னன்ட் நியோப்ளாசம்.
விடை : அ) வேற்றிடப் பரவல் .

6. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .
அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .
ஆ) இரட்டை இழை ஆர்.என்.ஏ .
இ) ஒற்றை இழை டி.என்.ஏ .
ஈ) இரட்டை இழை டி.என்.ஏ.
விடை : அ) ஒற்றை இழை ஆர்.என்.ஏ .

7. கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைத் தவிர அனைத்தும் புற நிணநீரிய உறுப்புகள் ஆகும்.
அ) நிணநீர் முடிச்சுகள் .
ஆ) மண்ணீரல் .
இ) கோழைச்சவ்வு சார்ந்த நிணநீர் திசுக்கள் .
ஈ) தைமஸ் .
விடை : ஈ) தைமஸ் .

8. கீழ்கண்டவற்றுள் எது மேக்ரோபேஜ்?
அ) மோனோசைட்டுகள்
ஆ) எரித்ரோசைட்டுகள்
இ) த்ரோம்போசைட்டுகள்
ஈ) லிம்போசைட்டுகள்
விடை : அ) மோனோசைட்டுகள்

9. இன்டர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?
அ) செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ் எதிர்பொருள்
ஆ) வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது.
இ) இது ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கானது
ஈ) இது தொற்றுகளை ஏற்படுத்தும்
விடை : ஆ) வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது.

10. செல் வழி நோய்த்தடைகாப்பில் ------- மற்றும் திரவ வழி நோய்த்தடைகாப்பில் -------------- பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன. 
அ) B செல்கள் / T செல்கள்
ஆ) எபிடோப் / எதிர்பொருள் தூண்டி
இ) T செல்கள் / B செல்கள்
ஈ) எதிர்பொருள் / எதிர்பொருள் தூண்டி
விடை : இ) T செல்கள் / B செல்கள்

11. B செல்களை தூண்டுவது
அ) நிரப்புக் கூறுகள்
ஆ) எதிர்பொருள்
இ) இன்டர்பெரான்
ஈ) எதிர்பொருள் தூண்டி
விடை : ஈ) எதிர்பொருள் தூண்டி

12. திரிபடையச் செய்தல் மற்றும் வீழ்ப்படிவாதல் வினைகளில், எதிர்பொருள் தூண்டி ஒரு --------மற்றும் ------ ஆகும்.
அ) முழுசெல் / கரையும் மூலக்கூறு .
ஆ) கரையும் மூலக்கூறு / முழுசெல் .
இ) பாக்டீரியா, வைரஸ் .
ஈ) புரதம் / எதிர்பொருள் .
விடை : அ) முழுசெல் / கரையும் மூலக்கூறு

13. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
அ) நினைவாற்றல் செல்கள் .
ஆ) பேசா பில்கள் .
இ) பிளாஸ்மா செல்கள் .
ஈ) கொல்லி செல்கள்
விடை : இ) பிளாஸ்மா செல்கள் .

14. ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்படுகிறது. திசு சிதைவினால் உருவாகும் இந்த காயம் ---------------- க்கு எடுத்துக்காட்டாகும்
அ) இயந்திர தடைகாப்பு
ஆ) உடற்செயல் சார்ந்த தடைகாப்பு
இ) பேகோசைட்டோசிஸ்
ஈ) வீக்கம்
விடை : ஈ) வீக்கம்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement