12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11 C
கேள்வி 11 C : கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக. இ) நுண்ணுயிரிய எரிபொருள் கலன்கள் :
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
நுண்ணுயிரிய எரிபொருள் கலன் (Microbial Fuel Cell) என்பது பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒரு உயிரிய மின் வேதியியல் முறையாகும்.
செயல்படும் விதம்:
- இக்கலனில் ஒரு நேர்மின்வாய் மற்றும் ஒரு எதிர்மின்வாய் இருக்கும்.
- பாக்டீரியாக்கள் கரிம மூலக்கூறுகளை ஆக்சிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி கலனை இயக்குகின்றன.
- நேர்மின்வாய் முனையில் உள்ள நுண்ணுயிரிகள் கரிம எரிபொருட்களை ஆக்சிஜனேற்றம் செய்யும்போது, புரோட்டான்கள் வெளியேறி எதிர்மின்வாயை அடைகின்றன.
- அதே நேரத்தில், எலக்ட்ரான்கள் நேர்மின்வாய் வழியாக வெளிச்சுற்றுக்கு அனுப்பப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.


0 Comments