12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 12
கேள்வி 12 : கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- உயிரிய வாயு உற்பத்தி : விவசாயக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகள், உரங்கள், தாவரப் பொருட்கள், கழிவுநீர், உணவுப் பதப்படுத்தல் கழிவுகள் உள்ளிட்ட பல மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உயிர்வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
- உயிர்வாயுவின் கூறுகள் : உயிர்வாயுப் பதனமுறையின் போது, காற்றில்லாச் சூழலில் நுண்ணுயிரிச் செரிமானத்தின் விளைவாகக் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை உயிர்வாயுவில் காணப்படுகின்றன.
- மீத்தேன் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் : மெத்தனோஜென்ஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் மீத்தேன் வாயுவை உருவாக்குகின்றன. இவை ஆக்ஸிஜன் அற்ற சேறு மற்றும் விலங்குகளின் இரைப்பை ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவை இரைப்பையில் உள்ள செல்லுலோசைச் சிதைக்க உதவுகின்றன.
- சாண எரிவாயு உற்பத்தி : கால்நடைக் கழிவான சாணம் (கோபர்) காற்றில்லாச் சூழலில் மக்கச் செய்யப்படுவதன் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
- சாண எரிவாயு உற்பத்தி நிலைகள் : கரைதல், அசிடோஜெனிசிஸ் மற்றும் மீத்தேன் உருவாக்கம் ஆகிய மூன்று நிலைகளில் காற்றில்லாச் செரிமானம் நிகழ்ந்து, சாண எரிவாயு உருவாகிறது.
- உயரியவாயு வெளியேற்றம் : உயிர்வாயுத் தொட்டியின் வெளிப்புறத் துளையுடன் இணைக்கப்பட்ட குழாய் வழியாக உயிர்வாயு வெளியேற்றப்படுகிறது.
- சாணக் கரைசலின் பயன்பாடு : மற்றொரு வெளிப்புறத் துளை வழியாக வெளியேறும் சாணக் கரைசல் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
- உயிர்வாயுவின் பயன்கள் : உயிர்வாயுவானது ஒளியூட்டல் மற்றும் சமைத்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.


0 Comments