7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 7th Social Science Part-17


TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 7th Social Science Part-17


புவியியல் வினா விடைகள் (நிலவியல் மற்றும் மனித புவியியல்)1. நிலவியல் (Landforms)
எண்வினாவிடை
1'V' வடிவப் பள்ளத்தாக்கு எதனால் உருவாக்கப்படுகிறது?ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்குவதால்.
2ஆறு சமவெளியை அடையும் போது சுழன்று பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?ஆற்று வளைவுகள் (Meanders).
3ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஏரியாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படும்?குதிரைக் குளம்பு ஏரி.
4வெள்ளச்சமவெளியின் உயர்ந்த ஆற்றங்கரைகள் எவ்வாறு அழைக்கப்படும்?லெவீஸ் அல்லது உயர் அணை.
5ஆறு கடலை அடையும் போது ஆற்று நீரின் வேகம் குறைந்து பல பிரிவுகளாக பிரிந்து செல்வது என்ன?கிளையாறுகள்.
6தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் காணப்படும் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.
7வட அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் உள்ள நீர்வீழ்ச்சி எது?நயாகரா நீர்வீழ்ச்சி.
8ஆப்பிரிக்காவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி எது?விக்டோரியா நீர்வீழ்ச்சி.
9பள்ளத்தாக்கு பனியாறுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு எங்கு காணப்படுகிறது?இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில்.
10கண்டப்பனியாறுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பகுதிகள் எவை?அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்து.
11மலைச்சரிவில் பனியரிப்பால் ஏற்படும் நாற்காலி போன்ற நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?சர்க்குகள்.
12ஸ்காட்லாந்திலுள்ள காரிக் சர்க்கு மற்றும் ஜெர்மனியிலுள்ள கார் சர்க்கு எதற்கு உதாரணம்?பனியரிப்பால் ஏற்படும் சர்க்குகளுக்கு.
13பனி உருகும் போது சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு உருவாகும் ஏரி எது?டார்ன் ஏரி.
14இரண்டு சர்க்குகள் சேர்ந்து கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுப்பது எவ்வாறு அழைக்கப்படும்?அரெட்டுகள்.
15U-வடிவ பள்ளத்தாக்கு எதனால் ஏற்படுகிறது?பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால்.
16பனியாற்றினால் கடத்தப்பட்டு படியவைக்கப்படும் மணல் மற்றும் வண்டல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?பனியாற்று மொரைன்கள்.
17காற்றின் அரிப்பால் பாறையின் அடிப்பகுதி குறுகலாகவும் மேற்பகுதி அகன்றும் காணப்படுவது என்ன?காளான் பாறை.
18வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் தூண் போன்ற தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று எவ்வாறு அழைக்கப்படும்?காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்.
19அமெரிக்காவில் கலஹாரி பாலைவனத்தில் காணப்படுவது எவ்வகை நிலத்தோற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்?காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்.
20பாலைவனங்களில் காற்று வீசும் போது உருவாகும் பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் என்ன?பிறைவடிவ மணல் குன்றுகள்.
21மணல் துகள் லேசாகவும் எடை குறைவாகவும் உள்ளதால் காற்று வெகுதொலைவிற்கு கடத்தி செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?காற்றடி வண்டல் படிவுகள்.
22காற்றடி வண்டல் படிவுகள் உலகிலேயே அதிகமாக காணப்படும் நாடு எது?சீனா.
23வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் எந்த பாலைவனத்தில் இருந்து கடத்தப்பட்டவை?கோபி பாலைவனம்.
24அலைகளின் மோதலினாலும் அரிப்பினாலும் கடலை நோக்கி செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பாறை என்ன?கடல் ஓங்கல் (Sea Cliff).
25கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நிற்பது என்ன?கடல் வளைவுகள்.
26கடல் வளைவுகள் அலைகளால் அரிக்கப்பட்டு பக்கச்சுவர்கள் மட்டும் நிற்பது என்ன?கடல் தூண்கள்.
27உலகிலேயே மிக நீளமான கடற்கரை எங்குள்ளது?அமெரிக்காவின் மியாமி கடற்கரை.
28உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையாகக் கருதப்படுவது எது?சென்னையில் உள்ள மெரினா கடற்கரை.
29கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் எவ்வாறு அழைக்கப்படும்?காயல்கள் அல்லது உப்பங்கழிகள்.
30ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி, கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி எதற்கு எடுத்துக்காட்டு?காயல்கள் அல்லது உப்பங்கழிகள்.
31ஆங்கிலச் சொல்லான 'Gradation' என்பதன் தமிழாக்கம் என்ன?சமநிலைப் படுத்துதல்.
2. மனிதப் புவியியல் (Human Geography)அ. இனம், மதம் மற்றும் மொழி
எண்வினாவிடை
32வெள்ளை நிறத்தோலும் அடர்பழுப்பு நிறக்கண்களும் அலை போன்ற முடியும் நீண்ட மூக்கும் கொண்ட ஐரோப்பிய இனத்தவர் யார்?காக்கசாய்டு.
33கருமை நிறத் தோல், அகலமான மூக்கு, நீளமான தலை மற்றும் தடித்த உதடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கர்கள் யார்?நீக்ராய்டு.
34வெளிர் மஞ்சள் நிறம், தட்டையான முக அமைப்பு கொண்ட ஆசிய மற்றும் ஆர்க்டிக் பிரதேச மனித இனம் எது?மங்கோலாய்டு.
35அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத்தோல் மற்றும் குறைவான உயரம் கொண்ட ஆஸ்திரேலிய மற்றும் ஆசிய மக்கள் யார்?ஆஸ்ட்ரலாய்டு.
36இந்தியாவில் திராவிடர்களின் முதல் நிலைத் தோற்றமாக எந்த நாகரிகம் கருதப்படுகிறது?சிந்து சமவெளி நாகரிகம்.
37தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகியவை எம்மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை?திராவிட மொழிகள்.
38உலகளாவிய மதங்களாகக் கருதப்படுபவை எவை?கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம்.
39ஜூடோயிசம், இந்துமதம் மற்றும் ஜப்பானிய ஷிடோயிசம் ஆகியவை எவ்வகை மதங்கள்?மனித இனப்பிரிவு மதங்கள்.
40அனிமிஸம் மற்றும் ஷாமானிஸம் ஆகியவை எவ்வகை மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன?நாடோடிகள் அல்லது பாரம்பரிய மதங்கள்.
41சமண மதத்தின் வழிபாட்டுத்தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?பசாதி.
42ஜூடாய்ஸம் மதத்தைப் பின்பற்றுவோரின் வழிபாட்டுத்தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?சினகாக்.
43ஜொராஸ்டிரியம் மதத்தின் வழிபாட்டுத்தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?அகியாரி.
44இந்தியாவில் எந்த மொழி ஆட்சி மொழியாக உள்ளது?இந்தி மொழி.
45இந்திய அரசால் மொத்தம் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?22 மொழிகள்.
ஆ. குடியிருப்பு வகைகள் மற்றும் நகரங்கள்
எண்வினாவிடை
46இமயலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர் பகுதிகளில் காணப்படும் குடியிருப்புகள் எவ்வகையைச் சேர்ந்தவை?நேர்க்கோட்டு குடியிருப்பு.
47சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுவது எவ்வகை குடியிருப்பு?செவ்வக வடிவக் குடியிருப்புகள்.
48சட்லஜ் பகுதியில் காணப்படும் குடியிருப்பு அமைப்பு எதற்கு உதாரணம்?செவ்வக வடிவக் குடியிருப்புகள்.
49ஏரிகள் மற்றும் குளங்களைச் சுற்றி ஒரு மையப்பகுதியை மையமாகக் கொண்டு அமைவது எவ்வகை குடியிருப்பு?வட்டவடிவக் குடியிருப்புகள்.
50சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து எல்லா திசைகளிலும் பரவி காணப்படும் குடியிருப்பு எது?நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்.
51பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகளில் எவ்வகை குடியிருப்பு காணப்படுகிறது?நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்.
52எவ்வளவு மக்கள் தொகைக்கு மேல் வசிக்கும் இடத்தையே நகரம் என்று அழைக்கிறோம்?5000க்கும் மேலான மக்கள்.
53ஒரு குடியிருப்புப் பகுதியை மாநகரம் என்று அழைக்க மக்கள் தொகை எவ்வளவு இருக்க வேண்டும்?100000 மக்கள் தொகைக்கு மேல்.
54வாஷிங்டனுக்கும் பாஸ்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசம் எவ்வகை நகரத்திற்கு சிறந்த உதாரணம்?மீப்பெரு நகரம்.
55இந்தியாவில் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியான மீப்பெரு நகரம் எங்குள்ளது?கல்கத்தா.
56குஜராத்தின் காந்தி நகர், சூரத், வதோதரா மற்றும் இராஜபுதனம் ஆகியவை எவ்வகை நகரங்களாகும்?மீப்பெரு நகரங்கள்.
57அதிக மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களில் நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகள் என்ன?செயற்கைக்கோள் நகரம்.
58பீகாரில் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் எதற்கு உதாரணம்?செயற்கைக்கோள் நகரம்.
59தமிழ்நாட்டில் எத்தனை முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன?12 முக்கிய நகரங்கள்.
60மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பது எந்தப் புவியியல் ஆகும்?மனித புவியியல்.
இ. முக்கிய தினங்கள்
எண்வினாவிடை
61ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி எந்த நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?உலக மக்கள் தொகை நாள்.
62ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?பன்னாட்டு தாய்மொழி தினம்.
63உலக நல்லிணக்க நாள் எந்த மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது?ஜனவரி.
64ஒவ்வொரு ஆண்டும் மே 21 ஆம் தேதி எந்த நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?உலக கலாச்சார பல்வகை நாள்.
3. வளங்கள் மற்றும் தொழில் (Resources and Industry)அ. ஆற்றல் வளங்கள் (Energy Resources)
எண்வினாவிடை
65சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீராற்றல் ஆகியவை எந்த வகையான வளங்களுக்கு எடுத்துக்காட்டுகள்?புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
66தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் எந்த வகையான வளங்களின் கீழ் வருகின்றன?உயிரற்ற வளங்கள்.
67உலகிலேயே அதிக அளவில் நீர் மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடு எது?சீனா.
68சீனாவின் யாங்ட்ஸி நதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டம் எது?த்ரீகார்ஸ் அணை.
69த்ரீகார்ஸ் அணை நீர் மின் சக்தி திட்டத்தில் நிறுவப்பட்ட மின்திறன் அளவு எவ்வளவு?22,500 மெகாவாட்.
70கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற காற்றாலைப் பண்ணை எது?முப்பந்தல்.
71ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய காற்றாலைப் பண்ணை எங்குள்ளது?ஜெய்சால்மர்.
72மஹாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் அமைந்துள்ள காற்றாலைப் பண்ணையின் பெயர் என்ன?பிரமன்வேல்.
73மஹாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் அமைந்துள்ள காற்றாலைப் பண்ணை எது?தால்கான்.
74ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய காற்றாலைப் பண்ணை எது?தாமன்ஜோதி.
முக்கிய நீர்மின் சக்தி திட்டங்கள்:
எண்அணை/திட்டம்மாநிலம்/நாடுநதி
75தெகிரி அணைஉத்ரகாண்ட்
76ஸ்ரீசைலம் அணை மற்றும் நாகர்ஜீனசாகர் அணைஆந்திரபிரதேசம்
77சர்தார் சரோவர் அணைகுஜராத்
78பக்ராநங்கல் அணைபஞ்சாப்
79கொய்னா அணைமகாராஷ்டிராகொய்னா
80மேட்டூர் அணை மற்றும் இடுக்கி அணைதமிழ்நாடு மற்றும் கேரளா
81இட்டைப்பு அணைபிரேசில் மற்றும் பராகுவேபரானா
82ஜிலுடு அணைசீனாஜின்ஷா
83குரி அணைவெனிசுலாகரோனி
84துக்குருயி அணைபிரேசில்டெகான்டின்ஸ்
ஆ. கனிம வளங்கள் (Mineral Resources)
எண்வினாவிடை
85இரும்புத்தாதுக்களான மேக்னடைட் மற்றும் ஹேமடைட் எதன் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகின்றன?எஃகு உற்பத்தியில்.
86எஃகு தயாரிக்க எத்தனை சதவீதம் இரும்புத்தாது பிரித்தெடுக்கப்படுகிறது?98%.
87இந்தியாவின் மொத்த பரப்பில் 95% இரும்புத்தாதுக்கள் எந்தெந்த மாநிலங்களில் கிடைக்கின்றன?ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், கர்நாடகா, கோவா.
88மனிதனால் முதலில் அறிந்து கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?தாமிரம் (செம்பு).
89தாமிர உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு எது?சிலி.
90உலகில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு எது?சீனா.
91உலக அளவில் 2500 டன் தங்க இருப்பு கொண்டு முதன்மையான நாடாக விளங்குவது எது?ஆஸ்திரேலியா.
92இந்தியாவில் தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?கர்நாடகா.
93உலகின் ஆழமான தங்கச்சுரங்களுள் ஒன்றான கோலார் தங்கவயல் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?கர்நாடகா.
94விமானங்கள், கப்பல்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் தொடர்வண்டி பெட்டிகள் தயாரிப்பில் பயன்படும் உலோகம் எது?அலுமினியம்.
95தூய அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படும் உயர்ரக உலோகக்கலவை எது?துராலுமின்.
96உலகின் முன்னணி பாக்ஸைட் உற்பத்தி செய்யும் நாடு எது?ஆஸ்திரேலியா.
97உலகிலுள்ள பாக்ஸைட் தாது படிவுகளில் நான்கில் ஒரு பங்கு எந்த நாட்டில் மட்டுமே உள்ளன?கினியா.
98தமிழ்நாட்டில் பாக்ஸைட் படிவுகள் அதிகளவில் காணப்படும் இடம் எது?சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலை.
99உலகளவில் வெள்ளி உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்குவது எது?மெக்ஸிகோ.
100உலகிலுள்ள வெள்ளியில் 50%க்கும் மேற்பட்டவை எந்த கண்டத்து நாடுகளில் காணப்படுகின்றன?தென் அமெரிக்க நாடுகள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement