TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-6
அரசியல் மற்றும் நிர்வாகம்
- மாநில சட்டமன்றத்தைக் கூட்டவும், கலைக்கவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் கொண்டவர் யார்?
- விடை: மாநில ஆளுநர்.
- மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்?
- விடை: மாநில ஆளுநர்.
- சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
- விடை: மறைமுகமாக.
- தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை என்ன?
- விடை: 234 தொகுதிகள்.
- சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டுவர இயலும் மசோதா எது?
- விடை: நிதி மசோதா.
- குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு கொள்பவர்கள் யார்?
- விடை: சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
- பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகியவை கொண்டுள்ள நீதிமன்ற அமைப்பு எது?
- விடை: பொதுவான ஒரு உயர்நீதிமன்றம்.
- இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, குடியுரிமை பெறுவதற்கான எத்தனை வழிமுறைகளை பரிந்துரைக்கிறது?
- விடை: ஐந்து வழிமுறைகளை.
- இந்தியக் குடியுரிமையை இழப்பது பற்றிய விதிகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியிலுள்ள விதிகள் குறிப்பிடுகின்றன?
- விடை: இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள்.
- வெளிநாட்டு வாழ் இந்தியர் (NRI) என்பவர் யார்?
- விடை: இந்தியக் கடவுச் சீட்டினை பெற்று வெளி நாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள்.
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சம வாய்ப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதமளிக்கிறது?
- விடை: பிரிவு 14.
- சமயச்சார்பின்மை (Secularism) என்ற சொல்லுக்கு அடிப்படையான 'செகுலம்' (saeculum) என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் என்ன?
- விடை: காலம் அல்லது உள்ளுணர்வு காலம்.
- அசோகர் தனது 12வது பாறை அரசாணையில் எதைப் பற்றி அறிவித்திருந்தார்?
- விடை: அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் சாட்டாது என்பதை.
- இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களின் கூறுகள் தனது கல்லறையில் இடம்பெற வேண்டுமென விரும்பிய முகலாயப் பேரரசர் யார்?
- விடை: அக்பர்.
- கஜூராஹோவில் உள்ள 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்து கோவிலில் சிகரத்திற்குப் பதிலாக அமைக்கப் பட்ட கோபுரங்களின் பாணிகள் எவை?
- விடை: இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய குவிமாடம்.
- இந்திய அரசியலமைப்பு பிரிவு 25 (1) என்ன உரிமையை வழங்குகிறது?
- விடை: எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் என்ன?
- விடை: 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை.
- இந்திய தண்டனைச் சட்டம் 304A பிரிவு எதனுடன் தொடர்புடையது?
- விடை: ஓட்டுநர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்தல்.
- நீல வண்ணத்தகடு பொருத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துபவர்கள் யார்?
- விடை: அயல்நாட்டு பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள்.
- BSF, CRPF, ITBP, CISF, SSB ஆகிய மத்திய ஆயுதக் காவல் படைகள் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன?
- விடை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்.
- ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவி எது?
- விடை: பீல்டு மார்ஷல்.
- இந்திய சட்ட ஆணையத்தின் அடிப்படையில் 1860 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் எது?
- விடை: இந்திய தண்டனைச் சட்டம்.
- உச்சநீதிமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145 ன் படி எந்த ஆண்டு ஒழுங்குபடுத்தப்பட்டன?
- விடை: 1966 ஆம் ஆண்டு.
- டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து எந்த பகுதியைக் கைப்பற்றி தென்னிந்தியாவில் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர்?
- விடை: நாகப்பட்டினம்.
- பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோருக்கு மதராசப்பட்டினத்தில் கோட்டை அமைக்க எந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது?
- விடை: 1639 ஆம் ஆண்டில்.
- 1757 பிளாசிப் போரில் சிராஜ்-உத்-தௌலாவின் படைகளைத் தோற்கடித்த ஆங்கிலேயப் படைத்தளபதி யார்?
- விடை: இராபர்ட் கிளைவ்.
- இரண்டாம் கர்நாடகப் போரின் போது ஆற்காட்டை 1751ல் தாக்கி கைப்பற்றியவர் யார்?
- விடை: ராபர்ட் கிளைவ்.
- முதல் ஆங்கிலேய மைசூர் போரில் ஆங்கிலப் படையை தோற்கடித்து மங்களூரை கைப்பற்றியவர் யார்?
- விடை: ஹைதர் அலி.
- முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் முடிவில் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் யார்?
- விடை: இரண்டாம் மாதவராவ்.
- 1857 பெரும் புரட்சியின் போது மீரட்டில் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் சிறைச்சாலையை உடைத்து புரட்சியில் ஈடுபட்டனர்?
- விடை: மூன்றாம் குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள்.
- 1857 பெரும் புரட்சியின் முடிவில் இரண்டாம் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்ட ரங்கூனில் எந்த ஆண்டு இறந்தார்?
- விடை: 1862ல்.
- 1858ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் மூலம் இந்தியாவின் நிர்வாகம் யாரிடமிருந்து ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது?
- விடை: கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து.
- 1857 பெரும் புரட்சியை ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர் என விவரித்த வி.டி. சவார்க்கரின் நூல் எது?
- விடை: முதல் இந்திய சுதந்திர போர்.
- ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியரான சத்தியேந்திரநாத் தாகூர் யாருடைய மூத்த சகோதரர் ஆவர்?
- விடை: கவிஞர் இரபீந்தரநாத் தாகூரின்.
- 1918ல் மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு ஆகியோர் இந்திய ஆட்சிப் பணியில் எத்தனை சதவீதம் இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்தனர்?
- விடை: 33 சதவீதம்.
- இரயத்துவாரி முறையின் போது நிலவருவாயனது விளைச்சலில் பாதியாக இருந்ததை மூன்றில் ஒரு பங்காக குறைத்தவர் யார்?
- விடை: தாமஸ் மன்றோ.
- வில்லியம் பெண்டிங் பிரபு மகல்வாரி முறையில் 1833ல் சில அடிப்படை மாற்றங்களை யாருடைய வழிகாட்டுதலின்படி கொண்டு வந்தார்?
- விடை: இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட்.
- பாப்னா விவசாய எழுச்சி எந்தப் பகுதியில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பிக்கப்பட்டது?
- விடை: வங்காளத்தின் பாப்னாவில்.
- தக்காண விவசாயிகளின் குறைகளை களைய நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?
- விடை: தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்.
- 1890-1900 காலகட்டத்தில் நகர்ப்புற வட்டிக்காரர்களிடம் பெற்ற கடனுக்காக ஒடுக்கப்பட்டதால் புரட்சியில் ஈடுபட்ட விவசாயிகள் யார்?
- விடை: பஞ்சாப் விவசாயிகள்.
- மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் எந்த ஆண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்?
- விடை: 1921.
- விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நிர்வாகத்திற்காக யாரை நியமித்தனர்?
- விடை: நாயக்கர்களை.
- கட்டபொம்மனின் தந்தையான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் எந்தப் பகுதியை ஆட்சி செய்தார்?
- விடை: வீரபாண்டியபுரத்தை.
- இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் எந்த ஆண்டு நிலுவைத் தொகையை செலுத்தச் சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதங்கள் எழுதினார்?
- விடை: 1798ல்.
- கள்ளர்பட்டியில் நடந்த சண்டையில் கைது செய்யப்பட்ட கட்டபொம்மனின் அமைச்சர் யார்?
- விடை: சிவசுப்பிரமணியம்.
- முத்துவடுக நாதரை காளையார் கோவில் போரில் கொன்ற படைகள் எவை?
- விடை: ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள்.
- இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்ணரசி யார்?
- விடை: வேலுநாச்சியார்.
- மருது சகோதரர்கள் திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்ற சுதந்திரப் பிரகடனத்தை எப்போது வெளியிட்டனர்?
- விடை: ஜூன் 1801ல்.
- கொங்கு நாட்டுப் பகுதியில் மதுரை நாயக்க அரசின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருந்த நான்கு முக்கியப் பகுதிகள் எவை?
- விடை: சேலம், கோயம்புத்தூர், கரூர் மற்றும் திண்டுக்கல்.
- திப்புவின் குடும்பத்தினரும் பங்கெடுத்துக் கொண்ட, ஆங்கிலேயருக்கு எதிரான கலகம் எது?
- விடை: வேலூர் கலகம் 1806.
- வேலூர் கலகத்தின் போது ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த முயன்ற திப்புவின் மூத்த மகன் யார்?
- விடை: பதே ஹைதர்.
- சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தை எங்கு தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுகிறது?
- விடை: தட்சசீல பல்கலைக்கழத்தில்.
- நாளந்தா பல்கழைக்கழகம் தற்போது எந்த மாநிலத்தில் உள்ள ராஜகிருகத்தில் அமைந்துள்ளது?
- விடை: பீகாரில்.
- டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் இஸ்லாமிய ஆட்சியாளர் யார்?
- விடை: இல்துத்மிஷ்.
- ஸ்ரீரங்கத்தில் உள்ள அஹோபில மடத்தில் கல்விக்காக தன்னுடைய பங்களிப்பை வழங்கியவர் யார்?
- விடை: ஸ்ரீராமானுஜர்.
- பம்பாயில் எல்பின்ஸ்டன் பெயரால் நிறுவப்பட்ட கல்லூரி எதற்கான நிதியை சேகரித்து நிறுவப்பட்டது?
- விடை: ஆங்கில கல்வியை வழங்குவதற்கான நிதியை.
- 1813 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் எவ்வளவு தொகையை வழங்க ஏற்பாடு செய்தது?
- விடை: 1 இலட்சம் ரூபாய்.
- எந்தச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கிழக்கிந்திய நிறுவனத்தை கட்டாயப்படுத்தியது?
- விடை: 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம்.
- 1976ஆம் ஆண்டு டிசம்பர் வரை மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை, தற்போது எந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது?
- விடை: பொதுப் பட்டியலில்.
- தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் இருந்த கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: கடிகை.
- திருவிடைக்காளை கல்வெட்டு எதைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது?
- விடை: நூலகத்தைப் பற்றிய.
- வீரராஜேந்திர சோழனின் திருவாடுதுறைக் கல்வெட்டு எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
- விடை: மருத்துவப்பள்ளி பற்றியும்.
- பாண்டியர் காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: சாலபோகம்.
- பாண்டியர் காலத்தில் புகழ் பெற்ற கல்லூரி அமைந்திருந்த இடம் எது?
- விடை: காந்தளூர் சாலை.
- 1835 ஆம் ஆண்டு மேற்கத்திய கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர் யார்?
- விடை: வில்லியம் பெண்டிங் பிரபு.
- 1882 ஆம் ஆண்டு உள்ளூர் வாரியச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் முக்கிய நோக்கம் என்ன?
- விடை: புதிய பள்ளிகள் துவங்க அரசாங்கத்திடமிருந்து மானியங்களை வாங்க அதிகாரம் வழங்குதல்.
- 1956ல் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது?
- விடை: மதிய உணவுத் திட்டம்.
- இந்தியாவில் பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்று கூறிய வரலாற்று ஆய்வாளர் யார்?
- விடை: எட்வர்ட் பெயின்ஸ்.
- முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பியப் பயணி யார்?
- விடை: பெர்னியர்.
- 1948ஆம் ஆண்டு முதல் தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து திட்டக் குழு எப்போது அமைக்கப்பட்டது?
- விடை: மார்ச் 1950 இல்.
- 1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானம் யாருடைய தேசிய தொழில்மயமாக்கல் கொள்கையை பூர்த்தி செய்ய வலியுறுத்தியது?
- விடை: நேருவின் கொள்கையை.
- இந்தியாவில் எந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன?
- விடை: பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள்.
- இந்திய புள்ளிவிவர நிபுணரான பேரா.பி.சி.மஹலானோபிஸ் உருவாக்கிய மாதிரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: ப்ரீட்மேன்-மஹலானோபிஸ் மாதிரி.
- மகாரத்னா தொழில்கள் என அங்கீகரிக்கப்பட ஒரு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு எவ்வளவு ஆண்டு நிகர மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்?
- விடை: ரூ. 10000 கோடி.
- இந்திய இரயில்வே எந்த வகை நிறுவனங்களில் அதிக அளவில் பணியாளர்களைக் கொண்டுள்ளது?
- விடை: பொதுத்துறை நிறுவனங்களில்.
- ஆழமான நீர்ப் பகுதியை புவிப்படங்களில் குறிக்கப் பயன்படுத்தப்படும் வண்ணம் எது?
- விடை: அடர் நீல வண்ணம்.
- ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்குத் (எ.கா: மக்களடர்த்தி) தயாரிக்கப்படும் புவிப்படங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: கருத்துப்படங்கள்.
- கெடஸ்டர் (Cadastre) எனும் ஃப்ரெஞ்ச் சொல்லின் பொருள் என்ன?
- விடை: பிராந்திய சொத்துகளின் பதிவேடு.
- லிடியாவின் பேரரசர் மிடாஸ் உலோக நாயணத்தை எந்த நூற்றாண்டில் கண்டு பிடித்தார்?
- விடை: கி.மு.8ஆம் நூற்றாண்டில்.
- டெல்லி சுல்தான்கள் காலத்தில் மதிப்பு குறைந்த நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: ஜிட்டால்.
- செர்ஷா சூரி வெளியிட்ட 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
- விடை: ரூபியா.
- ஆங்கிலேயர்கள் தங்களது தங்க நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்?
- விடை: கரோலினா.
- "பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது" என்று கூறியவர் யார்?
- விடை: சர்ஜான் ஹிக்ஸ்.
- விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
- விடை: பணவாட்டம்.
- கருப்பு பணத்திற்கு எதிராக இந்திய அரசாங்கம் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தை எந்த ஆண்டு திருத்தியது?
- விடை: 2016ல்.
- 1846 ஆம் ஆண்டில் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச திருமண வயது என்ன?
- விடை: 10 வயது.
- ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா எந்த ஆண்டு மத்தில் சட்டபேரவையில் கொண்டுவரப்பட்டது?
- விடை: 1930 இல்.
- 1829 இல் வில்லியம் பெண்டிங் பிரபு எந்த விதிமுறையின் கீழ் சதி எனும் பழக்கத்தை ரத்து செய்தார்?
- விடை: விதிமுறை XVII.
- பெரியார் ஈ.வெ.ரா. எந்த மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டார்?
- விடை: தேவதாசி ஒழிப்பு மசோதாவை.
- 1859 இல் இந்து விதவை மறுமணச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சட்டமன்றத்திற்கு பல மனுக்களை சமர்ப்பித்தவர் யார்?
- விடை: ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
- கோபால கிருஷ்ண கோகலே 1905 ஆம் ஆண்டில் தொடங்கிய சங்கம் எது?
- விடை: இந்திய ஊழியர் சங்கம்.
- 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் என்ன?
- விடை: 68.33 ஆண்டுகள்.
- ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் எந்த ஆண்டு, எந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது?
- விடை: 1945 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில்.
- உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எது?
- விடை: உலக மனித உரிமைகள் அறிவிப்பு.
- 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு 1 இன்படி குழந்தை எனப்படுவர் யார்?
- விடை: பதினெட்டு வயதுக்குட்பட்ட அனைவரும்.
- சர்வதேச குழந்தைகள் ஆண்டாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
- விடை: 1979.
- பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா எந்த அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
- விடை: ஐ. நா. பாதுகாப்பு சபையால்.
- 1995ஆம் ஆண்டு நான்காவது உலக மகளிர் மாநாடு எங்கு நடைபெற்றது?
- விடை: பெய்ஜிங்கில்.
- 1995 முதல் செயல்பட்டு வரும் 'யுனிபெம்' (UNIFEM) அமைப்பின் முக்கிய நோக்கம் என்ன?
- விடை: பெய்ஜிங் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துதல்.
- சார்க் (SAARC) அமைப்பில் உள்ள 8 உறுப்பு நாடுகள் எவை?
* விடை: இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான்.


0 Comments