TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-11
வரலாற்றுப் புவியியல் மற்றும் மானுடவியல் கேள்விகள்:
- ஹோமோனின்கள் எனப்படும் விலங்கியல் பழங்குடி இனம் எவற்றை குறிக்கும்?
- விடை: மனித மூதாதையர்களின் உறவினர்களையும் அதன் தொடர்புடைய நவீன மனிதர்களையும் குறிக்கும்.
- ஹோமினின் பழங்குடி இனத்தில் இன்றளவும் வாழும் இனம் எது?
- விடை: மனித இனம் மட்டுமே.
- தொல்பழங்கால மக்கள் முதன்முதலில் எதைப் பழக்கப்படுத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது?
- விடை: நாய்கள்.
- பனிக்காலம் சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பாகங்களை பனியால் மூடியிருந்தது?
- விடை: 8,000 ஆண்டுகளுக்கு முன்பு.
- ஓல்டோவான் தொழில்நுட்பக் கருவிகள் என்பவை எக்காலக் கற்கருவிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
- விடை: தொடக்க கால கற்கருவிகள் சேர்க்கை.
- ஹோமோ ஹெபிலிஸ் எந்த ஆயுதங்களைச் செய்தார்?
- விடை: பல்வேறு கருவிகளைச் செய்தார்.
- பஸால்ட் எனும் எரிமலைப் பாறைகளை கருவிகள் செய்ய பயன்படுத்திய மக்கள் எந்தப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள்?
- விடை: கீழ்ப் பழங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள்.
- தொல்பழங்காலத் தமிழகத்தின் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு எந்த பகுதிகளில் காணப்படுகிறது?
- விடை: சென்னையைச் சுற்றியுள்ள அதிரம்பாக்கம், குடியம் உள்ளிட்ட பகுதிகளில்.
- ஹரப்பா நாகரிகத்தில் மாக்கல்லில் செய்யப்பட்ட சிலை எதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது?
- விடை: மதகுரு அல்லது அரசன்.
- சிந்துசமவெளி எழுத்துக்கும் எந்த மொழிக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்?
- விடை: திராவிட அல்லது தமிழ் மொழிக்கும்.
- மெசபடோமியா எந்தெந்த நாடுகளின் பகுதிகளைக் குறிக்கிறது?
- விடை: மேற்கு ஆசியாவின் ஈராக், குவைத் பகுதிகளைக் குறிக்கிறது.
- சுமேரியர்களில் தானியத்திற்கான பெண் தெய்வம் எது?
- விடை: நின்லின்.
- பாபிலோனைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த அரேபியப் பாலைவன மக்கள் யார்?
- விடை: அமோரைட்ஸ் (பாபிலோனியர்கள்).
- எகிப்திய நாகரிகத்தில் இறந்த உடலைப் பதப்படுத்துவது எந்த கடவுளோடு தொடர்புடையது?
- விடை: அனுபிஸ் கடவுளோடு.
- எகிப்தியர்கள் பேப்பரை எந்த தாவர தண்டிலிருந்து தயாரித்தனர்?
- விடை: பாப்பிரஸ் என்ற காகித நாணல் தாவர தண்டிலிருந்து.
- சீனாவில் முதன்முதலில் பட்டுப் பாதையைத் திறக்க வழிவகுத்தவர் யார்?
- விடை: ஜாங் குயென்.
- தொல்காப்பியத்தின் எந்தப் பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை வரையறுக்கிறது?
- விடை: மூன்றாவது பகுதி.
- முதுகுடுமிப் பெருவழுதி எந்த மரபைச் சேர்ந்த சங்ககால மன்னர்?
- விடை: பாண்டிய மரபைச் சேர்ந்தவர்.
- சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் எங்கு கிடைத்துள்ளன?
- விடை: கரூரை அடுத்த புகலூரில்.
- சோழர்கள் செப்பு நாணயங்களில் எவற்றின் உருவங்களைப் பொறித்திருந்தனர்?
- விடை: புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும்.
- உமணர் குல மகளிர் உப்பு விற்றது குறித்து எந்தச் செய்யுள்கள் குறிப்பிடுகின்றன?
- விடை: சங்கச் செய்யுள்கள் குறிப்பிடுகின்றன.
- தமிழ் இலக்கியங்கள் தென்கிழக்கு ஆசியாவை எவ்வாறு குறிப்பிடுகின்றன?
- விடை: சுவர்ணபூமி என்று குறிப்பிடுகின்றன.
- பொற்பனைக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
- விடை: புதுக்கோட்டை மாவட்டத்தில்.
- பண்டைய கிரேக்க நூலான எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் என்ற நூலில் எந்த அரசர்கள் குறித்த குறிப்புகள் உள்ளன?
- விடை: சேர, பாண்டிய அரசர்கள் குறித்த குறிப்புகள் உள்ளன.
- எந்த நூலில் ஆப்பிரிக்காவில் உள்ள ஓசலிஸ் துறைமுகத்திலிருந்து நாற்பது நாள்களில் இந்தியாவை அடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
- விடை: பிளினியின் இயற்கை வரலாறு என்ற நூலில்.
- சாணக்கியர் இயற்றிய நூல் எது?
- விடை: அர்த்த சாஸ்திரம்.
- அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட வரிவடிவம் என்ன?
- விடை: அசோகன் பிராமி.
- அசோகர் தனது தம்மம் குறித்த செய்தியைப் பரப்புவதற்காக யாரை இலங்கைக்கு அனுப்பினார்?
- விடை: தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும்.
- மௌரிய ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் யாருடைய கீழ் கொண்டு வரப்பட்டது?
- விடை: ஸ்தானிகா என்பவரின் கீழ்.
- குப்தப் பேரரசின் காலத்தை செவ்வியல் காலம் என்று விவரித்தவர் யார்?
- விடை: பர்ட்டன் ஸ்டெய்ன்.
- பிம்பிசாரரின் புதல்வர் யார்?
- விடை: அஜாதசத்ரு.
- நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
- விடை: மகாபத்ம நந்தர்.
- மகாவீரர், புத்தர் காலத்தில் குலக்குழு ஆட்சி எவ்வாறு அழைக்கப்பட்டது?
- விடை: கண-சங்கங்கள் என்று அழைக்கப்பட்டது.
- சீனாவில் ஷாண்டுங் மாகாணத்தில் பிறந்த சிந்தனையாளர் யார்?
- விடை: கன்பூசியஸ்.
- லாவோட்சே கி.மு. 604-ல் பிறந்து எழுதிய நூலின் பெயர் என்ன?
- விடை: தாவோ டே ஞிங்.
- ஜொராஸ்ட்ரிய மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
- விடை: பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர்.
- இந்தியா வந்த பார்ஸிகள் தம்மோடு எந்த மதத்தைக் கொண்டு வந்தனர்?
- விடை: ஜொராஸ்ட்ரிய மதத்தை.
- சமண மதத்தின் 24 வது தீர்த்தங்கரர் யார்?
- விடை: மகாவீரர்.
- கௌதம புத்தரின் தந்தை யார்?
- விடை: சுத்தோதனார்.
- கௌதம புத்தர் எந்த வனத்தில் பிறந்தார்?
- விடை: லும்பினி வனத்தில் பிறந்தார்.
- கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம் எது?
- விடை: குஷிநகரம்.
- புத்தரின் போதனைகளில் உள்ள உன்னதமான எண் வழிப்பாதையில் 8-வது பாதை எது?
- விடை: நல்ல தியானம்.
- ஆசிவகம் என்ற நாத்திகப் பிரிவைத் தோற்றுவித்தவர் யார்?
- விடை: மக்கலி கோசலர்.
- வட இந்தியாவில் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியவர் யார்?
- விடை: முகமது கோரி.
- பாமினி சுல்தானியத்தின் தலைநகரம் எது?
- விடை: பிடார்.
- கங்கையும் கடாரமும் கொண்ட சோழன் என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்?
- விடை: முதலாம் இராஜேந்திரன்.
- விஜயநகர அரசு எந்த நதியின் தென்கரையில் உருவாக்கப்பட்டது?
- விடை: துங்கபத்ரா நதியின் தென்கரையில்.
- பாபர் கி.பி. 1526 ஆம் ஆண்டு பானிபட் போர்க்களத்தில் யாரை வெற்றி கொண்டார்?
- விடை: இப்ராகிம் லோடியை.
- போர்ச்சுகீசியர்கள் எந்த ஆண்டு கோவாவைக் கைப்பற்றினர்?
- விடை: கி.பி. 1510-ல்.
- விஜயநகர அரசின் நாயக்கர்களுக்கு அடுத்த நிலையில் இருந்து படைகளுக்குத் தேவையான வீரர்களை வழங்கியவர்கள் யார்?
- விடை: பாளையக்காரர்கள்.
- பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் எவ்வாறு அறியப்பட்டன?
- விடை: பிரம்மதேயம்.
- சுட்ட களிமண்ணாலான சவப்பெட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: சார்க்கோபேகஸ்.
- பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் மட்பாண்ட சாடிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: அர்ன்.
- வியன்னா பாப்பிரஸ் எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
- விடை: பாப்பிரஸ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
- மகாராஷ்டிரத்தில் விதோபாவின் பக்தர்களால் 14 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இயக்கம் எது?
- விடை: வர்க்கரி சம்பிரதயா இயக்கம்.
- சங்கரர் மற்றும் ராமானுஜர் மேற்கொண்ட பக்தி இயக்கத்தால் எந்த மதம் தனது பிடிப்பை இழந்தது?
- விடை: சமண மதம்.
- குருநானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் எது?
- விடை: சீக்கிய மதம்.
- பெரியபுராணத்தை எழுதியவர் யார்?
- விடை: சேக்கிழார்.
- வட இந்தியாவில் கிணறுகளிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்ட சக்கரம் எது?
- விடை: பாரசீகச் சக்கரம்.
- பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் எது?
- விடை: துணிகள்.
- புவியின் மேலோட்டிற்குக் கீழேயுள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: கவசம் (Mantle).
- புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: கருவம் (Core).
- பாறைக் குழம்பு வெப்பம் தணிந்து குளிர்ந்து பாறையாவது எந்த வகை பாறைகள் எனப்படுகின்றன?
- விடை: தீப்பாறைகள்.
- படிவுப்பாறைகள் உருமாறும்போது என்ன பாறைகளாக மாறுகின்றன?
- விடை: உருமாறிய அல்லது மாற்றுருவப் பாறைகளாக மாறுகின்றன.
- புவி அதிர்ச்சி கீழ்மையத்தின் நேர் எதிரே மேற்பரப்பில் அமைந்துள்ள மையத்திற்கு என்ன பெயர்?
- விடை: மேல்மையம் (Epicentre).
- புவி அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் என்ன?
- விடை: நில அதிர்வு அளவைப் படம் (Seismograph).
- ஆழிப்பேரலை என்ற சுனாமி வார்த்தை எந்த மொழியிலிருந்து உருவானது?
- விடை: ஜப்பானிய மொழி.
- வால்கனோ என்ற சொல் எந்த ரோமானிய நெருப்புக் கடவுளின் பெயராகும்?
- விடை: வல்கேன்.
- தனிந்த எரிமலைக்கு ஒரு உதாரணம் தருக?
- விடை: கிளிமஞ்சரோ எரிமலை - தான்சானியா.
- பாறைகளில் உள்ள இரும்புத்தாது ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து இரும்பு ஆக்ஸைடாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: ஆக்சிகரணம்.
- குறுகிய பள்ளத்தாக்கிற்கு சிறந்த உதாரணம் எது?
- விடை: கிராண்டு கேன்யான்.
- முக்கோண வடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: டெல்டா.
- கிரேட் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் எது?
- விடை: நல்லர்பார்.
- ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள சுண்ணாம்பு குகைகள் எவை?
- விடை: போரா குகைகள்.
- குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் விழுதுகள் போன்று காட்சியளிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: கல் விழுதுகள்.
- ஆல்ப்ஸ் மலைகளில் உறைபனிக் கோடு எவ்வளவு உயரத்தில் காணப்படுகிறது?
- விடை: 2700 மீட்டர்.
- மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும் போது தோன்றும் கூரிய பக்கங்களை உடைய சிகரம் போன்ற வடிவம் எது?
- விடை: மேட்டர்ஹார்ன்.
- ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை எதற்கு உதாரணம் ஆகும்?
- விடை: இன்சல்பர்க்.
- கடலை நோக்கி இருக்கும் பாறைகள் மீது கடல் அலைகள் மோதுவதால் உருவாகும் செங்குத்துப் பாறைகள் எவை?
- விடை: கடல் ஓங்கல்.
- வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வாயுவின் சதவீதம் எவ்வளவு?
- விடை: 21 சதவீதம்.
- வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதென்பதைக் கண்டறிந்தவர் யார்?
- விடை: டேனியல் ரூதர்ஃபோர்டு.
- ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ள மீள் அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: ஓசோனோஸ்பியர்.
- வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படுத்தும் அலகு எது?
- விடை: மில்லிபார்.
- வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: கோள்காற்றுகள் (நிலவும்காற்று).
- காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை என்ன விளைவு என்கிறோம்?
- விடை: கொரியாலிஸ் விளைவு.
- ஆஸ்திரேலியாவில் வீசும் வெப்பச் சூறாவளிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: வில்லிவில்லி.
- பிரான்சின் மத்தியத் தரைக்கடல் பகுதியில் வீசும் தலக்காற்றின் பெயர் என்ன?
- விடை: மிஸ்டரல்.
- வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர் உயரத்தில் காணப்படும் மெல்லிய மேகங்கள் எவை?
- விடை: கீற்று மேகங்கள் (Cirrus).
- இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் விழும் 2 செ.மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: கல்மாரி மழை.
- புவியின் மேற்பரப்பில் எத்தனை சதவீத நீரானது கடல் நீராக உள்ளது?
- விடை: 97 சதவீதம்.
- அட்லாண்டிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியின் பெயர் என்ன?
- விடை: பியூரிட்டோ ரிகோ அகழி.
- கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன்சரிவுடன் ஆழ்கடலை நோக்கி சரிந்து காணப்படும் பகுதி எது?
- விடை: கண்டச்சரிவு.
- அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் ஏற்படும் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: உயர் ஓதங்கள் (Spring tides).
- தென் அமெரிக்காவின் அட்டகாமா பாலைவனமாகவே இருப்பதற்கு காரணமாக உள்ள குளிர் நீரோட்டம் எது?
- விடை: பெருவியன் அல்லது ஹம்போல்டு நீரோட்டம்.
- ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று எந்த நாடு அழைக்கப்படுகிறது?
- விடை: பின்லாந்து.
- சூழலியல் பற்றி படிப்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
- விடை: சூழலியலாளர் (Ecologist).
- மண்ணிலுள்ள தாவர, விலங்கு கழிவுகளை சிதைத்து மக்க வைக்கும் உயிரினங்கள் எவை?
- விடை: சிதைப்பவை (Decomposers).
- மக்கள்தொகை வளர்ச்சியைக் குறிக்கும் மக்கள் தொகையியலின் ஆங்கிலச் சொல் என்ன?
- விடை: Demography (டெமோகிராபி).
- இந்தியாவில் 1881-ஆம் ஆண்டு முதல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது?
- விடை: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை.
- உலக வங்கியின் அறிக்கையின் படி உயர்ந்த வருவாய் உள்ள நாடுகளின் வருமான அளவீடு எவ்வளவு?
* விடை: >12,235 அமெரிக்க டாலர்.


0 Comments