9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-4


TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-4
பொது அறிவு வினா விடைத் தொகுப்பு (புவியியல், பொருளாதாரம், அரசியலமைப்பு)

புவியியல்
எண்வினாவிடை
1புவியின் மேற்பரப்பில் கடல் நீரின் சதவீதம் எவ்வளவு?97 சதவீதம்.
2புவியில் உள்ள நன்னீரில் பனிக்கவிகைகளாகவும் பனியாறுகளாகவும் காணப்படுவது எத்தனை சதவீதம்?99 சதவீதம்.
3நீர்ப்பரவலின் அடிப்படையில் புவியின் வட அரைக்கோளம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?நிலஅரைக்கோளம்.
4அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியின் பெயர் என்ன?பியூரிட்டோ ரிகோ அகழி.
5இந்தியப் பெருங்கடலில் உள்ள ஜாவா அகழியில் காணப்படும் பள்ளம் எது?சுண்டா பள்ளம்.
6தென் பெருங்கடலில் அமைந்துள்ள மிக ஆழமான அகழியின் பெயர் என்ன?தென் சாட்விச் அகழி.
7கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ள கடலடி நிலத்தோற்றம் எது?கண்டத்திட்டு.
8ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுத்தல் மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குச் சிறந்த கடலடி நிலத்தோற்றம் எது?கண்டத்திட்டுகள்.
9ஆழ்கடல் சமவெளி அல்லது கடலடிச்சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?அபிசல் சமவெளி.
10கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் விகித அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?உவர்ப்பியம்.
11அலை நீர் வீழும் போது ஏற்படும் ஆற்றலை எந்த உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?விசைப்பொறி உருளை (Hydro turbines).
12இந்தியாவில் கேரளக் கடற்கரையில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?விழிஞ்சியம்.
13உயர் ஓதங்கள் எந்தெந்த தினங்களில் ஏற்படுகின்றன?அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில்.
14இரண்டு உயர் ஓதங்களுக்கு இடையே ஏற்படும் ஓதங்கள் எவை?தாழ் ஓதங்கள்.
15பெருங்கடல் நீரோட்டங்கள் தென் அரைக்கோளத்தில் எந்த திசையில் நகருகின்றன?எதிர்க் கடிகாரத் திசையில்.
16சஹாரா பாலைவனத்தின் விரிவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் குளிர் நீரோட்டம் எது?கேனரி நீரோட்டம்.
17இந்தியாவுக்குப் பருவக்காற்று சரியான நேரத்தில் தொடங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நீரோட்டம் எது?பெருவியன் அல்லது ஹம்போல்டு நீரோட்டம்.
18ஹொக்கைடோ உலகின் மிகச் சிறந்த மீன் பிடித்தளமாக இருக்க உதவும் குளிர் நீரோட்டம் எது?ஒயோஷியோ நீரோட்டம்.
19'தி டைம்' இதழால் 'கோளத்தின் கதாநாயகன்' என்ற பட்டத்தைப் பெற்ற புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளர் யார்?சில்வியா ஏர்ல்.
20பிரான்ஸ் நாட்டின் கடல் ஆராய்ச்சியாளரான ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ் என்பவருக்கு 1945-ல் வழங்கப்பட்ட விருது என்ன?'போரின் சிலுவை' (Cross of War).
21உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?"டிராகன் துளை”.
22கடலின் ஆழத்தை அளவிடக் கூடிய ஓர் அலகு எது?பாத்தோம்கள்.
23வரைபடத்தில் ஒரே அளவிலான உப்புத் தன்மை கொண்ட பகுதிகளை இணைக்கும் கற்பனைக் கோடு எது?சம உவர்ப்புக்கோடு.
24காஸ்பியன் கடலின் உவர்ப்பியத்தின் அளவு (ஆயிரத்தின் பகுதி) எவ்வளவு?14-17 வரை.
25வட அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு பகுதியில் உள்ள 'சாத்தான் முக்கோணம்' என்று அழைக்கப்படும் பகுதி எது?பெர்முடா முக்கோணம்.
26ஐ.நா சபை கடல் சட்டத்தின் மீதான மாநாட்டை எந்த ஆண்டு நடத்தி நாடுகளுக்கான கடல் மைல்களை நிர்ணயம் செய்தது?2013 இல்.
271996-ல் நிறுவப்பட்ட தேசிய கடல் சார் நிறுவனத்தின் (NIO) தலைமையகம் எங்குள்ளது?கோவாவில் உள்ள 'டோனா போலா'.
28இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக 2010-ல் அறிவிக்கப்பட்ட உயிரினம் எது?கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்).
29ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டின் பெயர் என்ன?'தி கிரேட் பேரியர் ரீப்'.
30'தி கிரேட் பேரியர் ரீப்' பகுதியை உலகின் 7 இயற்கை அதிசயங்களில் ஒன்றாக அடையாளப்படுத்திய செய்தி நிறுவனம் எது?CNN நிறுவனம்.
31சூழ்நிலை மண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?சூழலியல் (Ecology).
32தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் உற்பத்தியாளர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?தற்சார்பு உயிரிகள்.
33உணவிற்காக உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் தாவர உண்ணிகள் எவ்வகை நுகர்வோர் ஆவர்?முதல் நிலை நுகர்வோர்.
34உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?'உணவுச்சங்கிலி' (Food Chain).
35ஒரு சூழலியல் பிரதேசத்தில் 70 சதவிகிதத்திற்கும் மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை இழந்துவிட்டால் அவ்விடம் எவ்வாறு கருதப்படுகிறது?வளமையங்களாக (Hotspot).
36உலகின் மொத்த வெப்ப மண்டலக் காடுகளில் ஐம்பது சதவீதக் காடுகளைக் கொண்டுள்ள பகுதிகள் எவை?மத்திய மற்றும் தென் அமெரிக்கா.
37இரப்பர், மூங்கில், எபோனி போன்றவை எந்தப் பல்லுயிர்த் தொகுதியில் காணப்படும் முக்கிய மரங்கள்?வெப்பமண்டலக் காட்டுப் பல்லுயிர்த் தொகுதி.
38வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதியில் வாழும் மக்களின் முக்கிய தொழில் என்ன?கால்நடை மேய்த்தல்.
39பாலைவனங்களில் வாழும் தனித்துவம் வாய்ந்த தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?பாலைவனத்தாவரங்கள் (Xerophytes).
40கோதுமை பயிரிட ஏற்ற இடமாக உள்ள பல்லுயிர்த் தொகுதி எது?மிதவெப்பமண்டலப் புல்வெளி பல்லுயிர்த் தொகுதி.
41குளிர்காலங்களில் 'இக்ளு' (Igloo) என்ற பனி வீடுகளில் வாழும் மக்கள் எந்தப் பல்லுயிர்த் தொகுதியைச் சேர்ந்தவர்கள்?தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.
42பேராழிகளில் காணப்படும் சிறிய, நகரும் ஒளிச்சேர்க்கை மிதவை நுண்ணுயிரிகள் எவ்வகை உற்பத்தியாளர்?முதன்மை உற்பத்தியாளர்.
43இந்தியாவில் எத்தனை முக்கியமான உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன?பதினெட்டு.
44அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கை உயிர்க்கோளம்-2 எத்தனை பல்லுயிர் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது?ஐந்து.
45மன்னார் வளைகுடா தேசிய பூங்காவாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?1986.
46புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் லப்பாசோ போன்ற தாவரங்களில் சுமார் 70 சதவிதம் எங்கு கிடைக்கிறது?மழைக்காடுகளில்.
471992 ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?'ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு'.
48மக்கள் தொகையியல் (Demography) என்ற சொல்லில் 'டிமாஸ்' என்ற கிரேக்க சொல்லின் பொருள் என்ன?மக்கள்.
49நவீன உலகில் மக்கள்தொகை கணக்கெடுப்பை முதன்முதலில் நடத்திய நாடு எது?டென்மார்க்.
50இந்திய அரசின் அதிகார பூர்வமான மக்கள்தொகை கொள்கை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?கி.பி 1952.
51சாலை மற்றும் தொடர்வண்டி பாதை போன்ற அமைப்புகளில் காணப்படும் குடியிருப்புகள் எவ்வகை குடியிருப்புகள்?நேர்க்கோட்டுக் குடியிருப்புகள்.
52ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் எவ்வடிவக் குடியிருப்புகள்?முக்கோண வடிவக் குடியிருப்புகள்.
53உலகில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் மிகப் பழமையான நகரம் எது?டமாஸ்கஸ் நகரம்.
54யுனெஸ்கோவின் 2016 மெர்சர் தகவலின் படி சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழ்ந்து வருவதில் முதலிடம் பெற்ற நகரம் எது?வியன்னா நகரம்.
55போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கிகள் ஆகியவை எந்நிலைத் தொழில்களுக்கு உதாரணம்?மூன்றாம் நிலைத் தொழில்கள்.
56நச்சு வாயுக்களில் உள்ள கந்தக டை ஆக்ஸைடு நீர்த்த கந்தக அமிலமாக மாறுவதனால் ஏற்படும் மழைப்பொழிவு எது?அமில மழை.
57ஓசோன் படலம் வளிமண்டலத்தில் எந்த அடுக்கில் 19 முதல் 30 கி.மீ வரை பரவிக் காணப்படுகிறது?படுகையடுக்கில் (Stratosphere).
58நீர்ம விசையியல் முறிவு தொழில்நுட்பத்தில் பாறைகளை உடைக்க அதிகளவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?மீத்தேன்.
59'வளம் குன்றா வளர்ச்சி' என்ற சொலுக்கான விளக்கத்தை 1987-ஆம் ஆண்டு அளித்த குழு எது?பிரண்டலேண்டு குழு.
6014-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 30 முதல் 60 சதவீத மக்களை அழித்த கொள்ளை நோய் எது?"பிளேக்".
61இந்தியாவில் 'வன மகா உச்சவம்' எனப்படும் மரம் நடுவிழா ஒவ்வொரு ஆண்டும் எந்த நாட்களில் கொண்டாடப்படுகிறது?ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை.
62கி.பி 2004-ல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பாக் வளைகுடாவில் பேரழிவைச் சந்தித்த காடுகள் எவை?மாங்குரோவ் காடுகள்.
63உலகின் முதல் நிலவரைபடவியலாளர் (First Cartographer) என கருதப்படுபவர் யார்?கிரேக்க நாட்டைச் சேர்ந்த அனாக்ஸிமேன்டர்.
64உலகிலேயே மிகப்பழைய நிலவரைபடமாகக் கருதப்படும் பாபிலோனிய வரைபடம் எவ்வாறு அறியப்படுகிறது?இமாகோ முண்டி.
6516-ஆம் நூற்றாண்டின் மத்தியில் நிலவரைபடங்களை உபயோகித்த புகழ்பெற்ற பெல்ஜியம் நாட்டு வரைபடவியலாளர் யார்?ஜெரார்டஸ் மெர்கேட்டர்.
66புவியின் உண்மையான வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?ஜியாய்டு.
67ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் எந்த நிலவரைபடக் கோட்டுச் சட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது?"சமதள துருவ கோட்டுச் சட்டம்".
68நிலவரைபடத்தில் பன்னாட்டு எல்லைகளைக் காட்டப் பயன்படும் நிறம் எது?இளஞ்சிவப்பு நிறம்.
691863-ஆம் ஆண்டில் "லீ ஜென்ட்" என்று பெயரிடப்பட்ட பெரிய பலூனை உருவாக்கிய பிரஞ்சு புகைப்படக்காரர் யார்?பெலிக்ஸ் நடார்.
70காணாமல் போன MH370 என்ற மலேசிய விமானம் எந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேடப்பட்டது?தொலை நுண்ணுணர்வுத் திறன்.
71இயற்கை பேரிடர்களின் தாக்கத்தை அறிந்து கொள்ளப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்களுக்கு ஒரு உதாரணம் தருக?லேன்ட்சாட், கார்ட்டோ சாட் அல்லது ஓசன்சாட்.
721995-ல் முழு உபயோகத்திற்கு வந்த GPS எந்த நாட்டின் பாதுகாப்புத் துறையினால் உருவாக்கப்பட்டது?அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறை.
731950-ல் புவியியல் தகவல் அமைப்பை (GIS) அறிமுகப்படுத்தியவர்கள் யார்?வால்டா டாப்ளர் மற்றும் ரோஜர் டாம்லின்டன்.
74இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் 2009-ஆம் ஆண்டு இலவசமாக உருவாக்கப்பட்ட இணைய தளத்தின் பெயர் என்ன?புவன்.
75ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ள நாடுகள் எவை?டோங்கா, பிஜி மற்றும் இந்தோனேசியா.
76டிசம்பர் 26, 2004-ல் சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு என்ன?9.1 ரிக்டர் அளவு.
பொருளாதாரம்
எண்வினாவிடை
77தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்பட்டு, நாட்டு வருமானம் என்றும் அறியப்படுவது எது?நிகர நாட்டு உற்பத்தி.
78உலக வங்கியின் அறிக்கையின் படி உயர்ந்த வருவாய் உள்ள நாடுகளின் வருமான அளவீடு என்ன?>12,235 அமெரிக்க டாலர்.
79வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் இருக்க இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?3வது பெரிய பொருளாதார நாடாக.
80மனித வளர்ச்சி அறிக்கை உலக அளவில் எந்த அமைப்பால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது?ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்.
81An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதிய பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் யார்?அமர்த்தியா சென்.
82தந்தி மூலமாக மின்னணு பணப் பரிவர்த்தனை முயற்சி முதன்முதலில் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?கி.பி. 1860.
83கடன் அட்டையை (கிரெடிட் கார்டை) 1946-ல் உருவாக்கியவர் யார்?ஜான் பிக்கின்ஸ்.
84டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் எந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டம் உருவாக்கப்பட்டது?"பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்".
85இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டது?1949.
86ஆங்கிலேய அரசு 1925-ல் இந்தியாவில் முதல்முறையாக எங்கு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகத்தை அமைத்தது?மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில்.
87மலேசிய நாட்டின் செலாவணியின் (பணத்தின்) பெயர் என்ன?ரிங்கிட்.
88தமிழகத்தின் கிழக்குக் கடலில் மிளகு மற்றும் நறுமணப்பொருள்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட வணிகப்பாதை எவ்வாறு அழைக்கப்பட்டது?'நறுமணப்பாதை'.
89'மறைநீர்' எனும் பதத்தை 1990-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் யார்?டோனி ஆலன்.
அரசியலமைப்பு மற்றும் சட்டம்
எண்வினாவிடை
90உலகிலேயே நீண்ட தூரம் இடம்பெயரும் பறவை எது?'ஆர்டிக் ஆலா பறவை.
91சுதந்திரம் அடைந்த பின் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது?1952.
92இந்திய தேர்தல் முறை எந்த நாட்டில் உள்ள தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது?இங்கிலாந்து.
93தேர்தல் ஆணையம் அமைத்திட வழிகோலும் இந்திய அரசியலாமைப்பின் பிரிவு எது?பிரிவு 324.
94உலகில் நோட்டாவை (NOTA) அறிமுகப்படுத்திய 14வது நாடு எது?இந்தியா.
95மக்களாட்சியில் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக செயல்பட்டு அரசின் பொதுப் பணத்தை ஆய்வு செய்பவர் யார்?எதிர்கட்சித் தலைவர்.
96மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. பேரறிக்கையில் எத்தனை உறுப்புகள் (Articles) உள்ளன?30 உறுப்புகள்.
9714 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் அடிப்படை உரிமை எது?சுரண்டலுக்கெதிரான உரிமை.
981950-ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை கடமைகள் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டன?1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம்.
99பனிரெண்டு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்தால் மரணதண்டனை வழங்க ஏப்ரல் 2018-ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் எது?குற்றவியல் சட்ட திருத்தச்சட்டம் 2018.
100தமிழ்நாட்டில் சோழர்களது ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட இரகசிய தேர்தல் முறை எது?'குடவோலை முறை'.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement