TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-3
முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் (வரலாறு, புவியியல்)
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் எதனை உருவாக்கி கருவிகளாகப் பயன்படுத்தினர்? | பிளேக்ஸ் எனப்படும் கற்செதில்களை உருவாக்கிக் கருவிகளாகப் பயன்படுத்தினர். |
| 2 | இரு புறமும் செதுக்கப்பட்டதால் கீழ்ப் பழங்கற்காலக் கருவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | இருமுகக் கருவிகள் என்று அழைக்கப்பட்டன. |
| 3 | கர்நாடகாவின் இசாம்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பிம்பெத்கா ஆகிய இடங்களில் எவ்வகைக் கருவிகள் கிடைத்துள்ளன? | அச்சூலியன் கருவிகள் கிடைத்துள்ளன. |
| 4 | இடைப் பழங்கற்காலத்தில் உடற்கூரியல் ரீதியாக நவீன மனிதர்கள் சுமார் எத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படுகிறது? | 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படுகிறது. |
| 5 | கருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட கருவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | லெவலாய்சியன் கருவிகள் எனப்பட்டன. |
| 6 | சப்-சஹாரா பகுதி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் தோன்றிய மனிதப் பண்பாடு எது? | மேல் பழங்கற்காலப் பண்பாடு. |
| 7 | மேல் பழங்கற்காலத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? | குரோமக்னான் என்று அழைக்கப்பட்டார்கள். |
| 8 | பனிக்காலம் முற்றுப்பெற்ற சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த காலகட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | ஹோலோசின் காலகட்டம் எனப்படுகிறது. |
| 9 | இந்தியாவில் இடைக்கற்காலப் பண்பாடு கி.மு. எந்த வாக்கில் தோன்றியது? | கி.மு. 10,000 வாக்கில் தோன்றியது. |
| 10 | தமிழ்நாட்டில் கொசஸ்தலையாறு பகுதியில் வாழ்ந்த மனித மூதாதையர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்? | ஹோமோ எரக்டஸ் வகையைச் சேர்ந்தவர்கள். |
| 11 | கீழ்ப் பழங்கற்கால மக்கள் செய்பொருட்களுக்கு எவ்வகைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்? | பஸால்ட் எனும் எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். |
| 12 | புதிய கற்காலத்தில் மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | 'செல்ட்' என்று அழைக்கப்பட்டன. |
| 13 | தமிழகத்தில் முதன்முதலில் மண்பாண்டங்களும் வேளாண்மை செய்ததற்கான சான்றும் எங்கு கிடைத்துள்ளன? | பையம்பள்ளியில் கிடைத்துள்ளன. |
| 14 | பெருங்கற்காலத்தில் நடப்பட்ட தூண் போன்ற நடுகற்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | மென்ஹிர் எனப்பட்டன. |
| 15 | கற்திட்டைகளில் ஒருபுறம் இடப்பட்டிருக்கும் இடு துளை எவ்வாறு அழைக்கப்படும்? | 'போர்ட் ஹோல்' எனப்படும். |
| 16 | புகழ் பெற்ற எகிப்திய பாரோவான டூடன்காமனின் சமாதி எங்குள்ளது? | லக்ஸருக்கு அருகே உள்ள அரசர்களின் பள்ளத்தாக்கில் உள்ளது. |
| 17 | எகிப்தியர்களின் எழுத்து மற்றும் கற்றலின் கடவுளான தோத் எந்தப் பறவையின் முகத்தைக் கொண்டிருந்தது? | இபிஸ் என்ற பறவையின் முகத்தைக் கொண்டிருந்தது. |
| 18 | பொதுவான தகவல் தொடர்புக்கு எகிப்தியர்கள் பயன்படுத்திய சித்திர எழுத்து வடிவம் எது? | ஹெரிடிக் எழுத்து (பிக்டோகிராம்) பயன்படுத்தப்பட்டது. |
| 19 | நெப்போலியனால் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரோசெட்டா கல் தற்போது எங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது? | லண்டனில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. |
| 20 | யூப்ரடிஸ், டைக்ரிஸ் என்ற நதிகள் எங்கு இணைகின்றன? | பாரசீக வளைகுடாவில் இணைகின்றன. |
| 21 | பண்டைய சுமேரியாவில் கில்காமெஷ் காவியம் எத்தனை களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்தது? | 12 களிமண் பலகைகளில் எழுதப்பட்டிருந்தது. |
| 22 | அஸிரியர்கள் வழிபட்ட காக்கும் தெய்வத்தின் பெயர் என்ன? | லமாஸு என்ற தெய்வமாகும். |
| 23 | சுமேரியர்கள் வழிபட்ட காற்று மற்றும் ஆகாயத்திற்கான கடவுளின் பெயர் என்ன? | என்லில் என்பதாகும். |
| 24 | பாபிலோனியர்கள் எந்தக் கடவுளை வழிபட்டார்கள்? | மரடுக் என்ற கடவுளை வழிபட்டார்கள். |
| 25 | ஹமுராபி தமது சட்டத் தொகுப்பை எந்தக் கடவுளிடமிருந்து பெறுவது போல் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் உள்ளது? | சூரியக் கடவுளான சமாஷிடமிருந்து பெறுவது போல் உள்ளது. |
| 26 | சுமேரிய நாட்காட்டியில் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் இருந்தன? | ஏழு நாட்கள் இருந்தன. |
| 27 | 'தி ஸ்பிரிங் அண்ட் ஆடோம் அனல்ஸ்' என்ற நூல் எந்த நாட்டின் அதிகாரபூர்வ அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது? | சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது. |
| 28 | வாழ்க்கைக்கான வழிகாட்டியான 'தாவோ டே ஞிங்' என்ற நூலை எழுதியவர் யார்? | லாவோட்சே ஆவார். |
| 29 | ஹரப்பாவில் வளர்க்கப்பட்ட மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | ஜெபு என்றழைக்கப்பட்டன. |
| 30 | சிந்துசமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய செம்மணிக்கல் எவ்வாறு அழைக்கப்பட்டது? | கார்னிலியன் என்று அழைக்கப்பட்டது. |
| 31 | கியூனிஃபார்ம் எழுத்துகளில் காணப்படும் எந்தக் குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்? | மெலுஹா என்ற குறிப்பாகும். |
| 32 | தமிழ்நாட்டில் தமிழ் பிராமி கல்வெட்டு காணப்படும் பகுதி எது? | அரச்சலூர் என்ற பகுதியாகும். |
| 33 | நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது? | தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கிறது. |
| 34 | மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் பொதுமக்களால் பேசப்பட்ட மொழி எது? | பிராகிருதம் ஆகும். |
| 35 | அரிக்கமேடு அகழாய்வை மேற்கொண்ட நம் நாட்டின் தொல்லியல் அறிஞர்கள் யார்? | ஏ. கோஷ் மற்றும் கிருஷ்ண தேவா ஆவர். |
| 36 | கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? | புல்லியன் என்று அழைக்கப்பட்டன. |
| 37 | பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள், கடற்பொருள்களைக் குறிப்பதாகக் கருதப்படும் 'பாண்டிய காவாடகா' என்ற குறிப்பு எந்நூலில் இடம்பெற்றுள்ளது? | அர்த்த சாஸ்திரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. |
| 38 | ஆப்பிரிக்காவில் உள்ள ஓசலிஸ் துறைமுகத்திலிருந்து நாற்பது நாள்களில் இந்தியாவை அடைந்துவிடலாம் என்று கூறியவர் யார்? | மூத்த பிளினி கூறியுள்ளார். |
| 39 | பியூட்டிங்கேரியன் அட்டவணையில் இலங்கைத் தீவு எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது? | Taprobane எனக் குறிக்கப்பட்டுள்ளது. |
| 40 | அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடிவத்திற்கு என்ன பெயர்? | அசோகன் பிராமி என்று பெயர். |
| 41 | சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன? | கரூரை அடுத்த புகலூரில் கண்டெடுக்கப்பட்டன. |
| 42 | சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவரான வெண்ணிக்குயத்தியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? | வெண்ணி என்ற ஊரைச் சேர்ந்தவர். |
| 43 | கொடுமணலிலும், குட்டூரிலும் நடந்த அகழாய்வுகளில் வெளிப்பட்டவை எவை? | இரும்பு உருக்கு உலைகள் வெளிப்பட்டுள்ளன. |
| 44 | அரிக்கமேட்டிலும், கடலூருக்கு அருகில் குடிக்காடு என்ற ஊரிலும் எத்தகைய தொழிலகங்கள் இருந்துள்ளன? | கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்துள்ளன. |
| 45 | யவனர் என்னும் சொல் எந்த கிரேக்கப் பகுதியிலிருந்து வந்தது? | அயோனியா விலிருந்து வந்தது. |
| 46 | தென்கிழக்கு ஆசியாவைத் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு குறிப்பிடுகின்றன? | சுவர்ணபூமி என்று குறிப்பிடுகின்றன. |
| 47 | லத்தீன் எழுத்துகளில் எழுதப்படும் சீனச் சொற்களை உச்சரிக்க மொழியிலாளர்களால் உருவாக்கப்பட்ட முறை எது? | பின்இன் (Pinyin) ஒலிபெயர்ப்பு முறை. |
| 48 | ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் எது? | 'ஜென்ட் அவெஸ்தா' என்பதாகும். |
| 49 | மகாவீரரின் தாயார் திரிசரை எந்த இனத்தைச் சேர்ந்த இளவரசியாவார்? | லிச்சாவி இனத்தைச் சேர்ந்த இளவரசியாவார். |
| 50 | மகாவீரர் தனது 72 வது வயதில் எங்கு காலமானார்? | ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் காலமானார். |
| 51 | இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணச் சிலை எங்கு அமைந்துள்ளது? | கர்நாடகாவில் உள்ள சிரவணபெலகொலாவில் (பாகுபலியின் சிலை). |
| 52 | கௌதம புத்தரின் தந்தை சுத்தோதனார் எந்த இனக்குழுவின் தலைவராக இருந்தார்? | சாக்கியர்கள் எனும் சத்திரிய இனக்குழுவின் தலைவராக இருந்தார். |
| 53 | பௌத்தத்தின் அசல் வடிவமாக புத்தர் போதித்த சிறிய பாதை எவ்வாறு அழைக்கப்பட்டது? | ஹீனயானம் என்று அழைக்கப்பட்டது. |
| 54 | புத்த இலக்கியங்கள் எத்தனை மஹாஜனபதங்களைப் பட்டியலிடுகின்றன? | பதினாறு மஹாஜனபதங்களைப் பட்டியலிடுகின்றன. |
| 55 | மகாஜனபதங்கள் காலத்தில் வரி வசூல் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? | பகதுகர் எனப்பட்டார். |
| 56 | மகத நாட்டில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? | பாலி என்று அழைக்கப்பட்டது. |
| 57 | அஜாதசத்ரு வழியில் வந்த அரசர்களை அகற்றிவிட்டு மக்கள் யாரை அரசராக நியமித்தார்கள்? | சிசுநாகரை அரசராக நியமித்தார்கள். |
| 58 | மௌரிய நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகம் யாருடைய கீழ் கொண்டு வரப்பட்டது? | ஸ்தானிகா என்பவரின் கீழ் கொண்டு வரப்பட்டது. |
| 59 | இந்திய வரலாற்றின் இடைக்காலம் எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை என வரையறை செய்யப்படுகிறது? | கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை என வரையறை செய்யப்படுகிறது. |
| 60 | தென்னிந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ந்த பேரரசு எது? | சோழப் பேரரசு வீழ்ந்தது. |
| 61 | அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்தியப் படையெடுப்பிற்குத் தலைமையேற்ற படைத்தளபதி யார்? | மாலிக்காபூர். |
| 62 | பாமினி சுல்தானிய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கு காரணமான அமைச்சர் யார்? | மகமுத் கவான் காரணமாவார். |
| 63 | கம்போடியாவில் உள்ள மிகப்பிரமாண்டமான அங்கோர்-வாட் கோவில்கள் யாருடைய பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கைக் காட்டுகின்றன? | சோழர்கால பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கைக் காட்டுகின்றன. |
| 64 | விஜயநகர அரசின் தலைநகரை பெனுகொண்டாவிற்கும் பின்னர் சந்திரகிரிக்கும் மாற்றியவர்கள் யார்? | விஜயநகர அரசர்கள் மாற்றினர். |
| 65 | முதல் ஆறு மொகலாயப் பேரரசர்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர்? | "மாபெரும் மொகலாயர்கள்” எனக் குறிப்பிடப்படுகின்றனர். |
| 66 | சோழர் காலத்தில் ஊர்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? | 'நாடு' மற்றும் 'கோட்டம்' என்று அழைக்கப்பட்டது. |
| 67 | விஜயநகர அரசர்களின் பிரதிநிதியாக தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் பணியமர்த்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் யார்? | நாயக் என்றழைக்கப்படும் அதிகாரிகள் ஆவர். |
| 68 | வட இந்தியாவில் அக்பர் மொகலாய அரசை ஒருங்கிணைத்த காலத்தில் முக்கிய அரச நிர்வாகப் பொறுப்பில் பணியமர்த்தப்பட்டவர் யார்? | தேடர்மால் போன்ற நிர்வாகிகள் ஆவர். |
| 69 | இடைக்கால இந்தியாவில் பார்சிகள் மற்றும் யூதர்கள் முறையே எங்கு குடியேறினர்? | பார்சிகள் குஜராத்திலும், யூதர்கள் கேரளத்திலும் குடியேறினர். |
| 70 | ஸ்ரீரங்கம் கோவிலில் கம்பர் எந்த நூலை முறைப்படி அரங்கேற்றம் செய்தார்? | இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். |
| 71 | கர்நாடக இசைக்குரிய ராகங்களை வகைப்படுத்தியவர் யார்? | கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கட மகி வகைப்படுத்தினார். |
| 72 | வட இந்தியாவில் கிணறுகளிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்ட சக்கரம் எது? | 'பாரசீகச் சக்கரம்' பயன்படுத்தப்பட்டது. |
| 73 | இந்தியாவிலிருந்து பதினேழாம் நூற்றாண்டில் துணிகளுக்கு சிவப்பு வண்ணத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட தாவரத்தின் வேர் எது? | சாய் என்னும் தாவரத்தின் வேர் பயன்படுத்தப்பட்டது. |
| 74 | ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்யும் நாடோடிச் சமூகத்தினர் பொதுவாக எவ்வாறு அழைக்கப்பட்டனர்? | பஞ்சாரா என்றழைக்கப்பட்டனர். |
| 75 | கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும் கீழ்ப்பகுதியில் எந்நிலையிலும் காணப்படுகிறது? | உருகிய நிலையிலும் காணப்படுகிறது. |
| 76 | புவியின் கருவம் இரு அடுக்குகளைக் கொண்டது, அதில் உட்கருவம் எந்நிலையில் உள்ளது? | திடநிலையிலும் உள்ளது. |
| 77 | செடிமென்ட் என்ற இலத்தீன் மொழி சொல்லிற்குப் பொருள் என்ன? | படிதல் என்பது பொருளாகும். |
| 78 | உருமாறிய பாறைகளில், கிரானைட் பாறை உருமாறும்போது என்னவாக மாறுகிறது? | நீஸ் ஆக மாறுகிறது. |
| 79 | புவி அதிர்ச்சியை உருவாக்கும் அலைகளில் மிகவும் வேகமாகப் பயணிக்கக் கூடியவை எவை? | முதன்மை அலைகள் (Primary or 'P' - waves). |
| 80 | சிலி நாட்டில் 1960 ஆம் ஆண்டு ரிக்டர் அலகில் 9.5 ஆகப் பதிவான புவி அதிர்ச்சி ஏற்பட்ட இடம் எது? | பயோ-பயோ என்ற இடத்தில். |
| 81 | செயல்படும் எரிமலைக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஓர் உதாரணம் என்ன? | செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை. |
| 82 | 2012-ல் ரஷ்யாவில் உள்ள உலகின் மிக ஆழமான பகுதியாக அந்தஸ்தைப் பெற்ற கிணறு எது? | சாவ்யோ கிணறு. |
| 83 | பாறைகளின் மேற்பரப்பு வெங்காயத் தோல் உரிவது போன்று உரித்தெடுக்கப்படுவதற்கு என்ன பெயர்? | பாறை மேல் தகடு உரிதல் என்று பெயர். |
| 84 | அமெரிக்காவில் உள்ள எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் உலகின் சிறந்த வெப்ப நீரூற்று எது? | 'ஓல்டு பெய்த்புல்' வெப்ப நீருற்று. |
| 85 | குறுகிய பள்ளத்தாக்கிற்கு கொலராடோ ஆற்றினால் உருவாக்கப்பட்ட சிறந்த உதாரணம் எது? | 'கிராண்டு கேன்யான்' இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். |
| 86 | ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நன்னீர் குருட்டு ஆறு எது? | பிஹாரிலுள்ள 'கன்வர் ஏரி' ஆகும். |
| 87 | ஸ்லாவிக் மொழியில் 'கார்ஸ்ட்' என அழைக்கப்படுவது எவ்வகை நிலத்தோற்றம்? | சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் என அழைக்கப்படுகிறது. |
| 88 | இத்தாலிய மொழியில் செம்மண் என்பதைக் குறிக்கும், சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் உருவாகும் நிலத்தோற்றம் எது? | டெர்ரா ரோஸா என்பதாகும். |
| 89 | உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளையான 'சைனோசை ஜியான்காங்' எந்த நாட்டில் உள்ளது? | சீனாவில் உள்ளது. |
| 90 | பனியாறுகள் நகரும் போது ஆற்றுப்பள்ளத்தாக்குகள் மேலும் ஆழமாக அரிக்கப்பட்டு உருவாகும் பள்ளத்தாக்குகள் எவை? | U வடிவப் பள்ளத்தாக்குகள் உருவாக்கப்படுகின்றன. |
| 91 | இன்சல்பர்க் என்ற ஜெர்மானிய வார்த்தையின் பொருள் என்ன? | தீவுமலை என்பதாகும். |
| 92 | சீனாவில் உள்ள 335 மீட்டர் உயரமுடைய பீடபூமி எதனால் ஆனது? | மிக கனமான காற்றடி வண்டல் படிவால் ஆனது. |
| 93 | வளிமண்டல அழுத்தத்தின் செங்குத்துப்பரவலில், ஒவ்வொரு 300 மீட்டர் உயரத்திற்கும் எத்தனை மில்லிபார் காற்றழுத்தம் குறைகிறது? | 34 மில்லிபார் அளவு காற்றழுத்தம் குறைகிறது. |
| 94 | நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | 'அமைதி மண்டலம்' எனப்படுகிறது. |
| 95 | துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | 'குதிரை அட்சங்கள்' என்றும் அழைக்கப்படுகிறது. |
| 96 | மேலைக் காற்றுகள் 40° அட்சங்களில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | 'கர்ஜிக்கும் நாற்பதுகள்' எனவும் அழைக்கப்படுகின்றன. |
| 97 | இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டும் முறை எந்த ஆண்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது? | கி.பி. 2000-ல் நடத்தப்பட்ட கூட்டத்தில். |
| 98 | சூரிய மறைவின் பொழுது பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் "பெண்குதிரை வால்கள்" என்று அழைக்கப்படும் மேகங்கள் எவை? | கீற்று மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. |
| 99 | ஐக்கிய நாடுகளின் கொடியில் சித்தரிக்கப்பட்டுள்ள நிலவரைபடக் கோட்டுச் சட்டம் எது? | "சமதள துருவ கோட்டுச் சட்டம்" சித்தரிக்கப்பட்டுள்ளது. |
| 100 | ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹெலிகாப்டர் விபத்தில் மாயமான போது பயன்படுத்தப்பட்ட தேடல் தொழில்நுட்பம் எது? | தொலை நுண்ணுணர்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. |


0 Comments