Saturday, 3 March 2012

ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு,ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு


ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
 
ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 28 வரை அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 ரேஷன் கார்டுகளில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப்பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளிïர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது ரேஷன் கார்டுகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இணையதள முகவரி

என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012-ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக்கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் பொருள் வேண்டாதவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012-ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.

இந்த இணையதள வசதி நாளை (மார்ச் 1) முதல் 31-ந் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும். மேற்படி இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது.


சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 69 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இவர்களில் 3 ஆயிரத்து 300 பேர் தனித்தேர்வர்களாக தேர்வை எதிர்கொள்கிறார்கள். முதல் நாளில் ஆங்கில தேர்வு நடக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முடிவடைகின்றன.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 (மாநில பாடத்திட்டம்) பொதுத்தேர்வு வருகிற 8-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 71/2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான பாடத்திட்டத்துடன் மாதிரி வினாக்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.


# இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

# இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.

# தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர்.

# தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை, உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை முன்பு இருந்து வந்ததைப் போன்று பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு இருந்தது.

# இதற்கிடையே, இந்தியாவில் இலவச கட்டாய கல்வி சட்டம் கடந்த 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

# ஏற்கனவே திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

# இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முதல்கட்டமாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் மட்டும் தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

# தகுத்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

# தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வரையறை செய்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி தயாரிக்கப்பட்டு உள்ளது. 

# மொழி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம்), கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர், வரலாறு, புவியியல் உள்ளிட்ட சமூகவியல் ஆசிரியர் என்று 3 வகையாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

# தற்போது முதல்முறையாக தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதால் அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் மாதிரி வினாத்தாள்களுடன் கூடிய பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

# இதன்மூலம், எந்த முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்பதையும் தேர்வு எழுத காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம்.

# ஆசிரியர் தகுதித்தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும். 

# ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்த மார்க் 150. இந்த தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். 

# ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். மதிப்பெண் தகுதியையும் கூட்டிக்கொள்ளலாம்.

# தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்று 5 ஆண்டுகள் செல்லத்தக்கது. 

# தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

# தற்போது எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. உள்பட அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்தான் (60 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இடஒதுக்கீட்டு பிரிவினரில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் தேவையான அளவு தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு மட்டும் மதிப்பெண் தகுதியை சற்று குறைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு துறைகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தகவல்குரூப்-1, குரூப்-2, குருப்-4 பணிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்புகள் இந்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆண்டுவிழா முடிவடைந்த பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பணிகளுக்கான நியமனங்கள் வெளிப்படையாக இருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஏற்கனவே நடத்தப்பட்ட குரூப்-2 மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் உடல் ஊனமுற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குருப்-4 தேர்வின் முடிவையும் வெளியிட்டு இருக்கிறோம்.

குரூப்-1, குரூப்-2, குரூப்-4 பதவிகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசின் வெவ்வேறு துறைகளில் இருக்கும் காலி இடங்கள் பெறப்பட்டு மேற்கண்ட பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் வெளியிடப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை.


அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. 

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் நோக்கில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆண்டுதோறும் மாதிரி வினா புத்தகத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக சமச்சீர் கல்வி திட்டத்தின்கீழ் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளனர். இதுவரை மாநில பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. என வெவ்வேறு பாடத்திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வந்தனர்.

இந்த ஆண்டு சமச்சீர் கல்வி திட்டத்தின்படி 10-ம் வகுப்பு மாதிரி வினா தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்வழியில் அனைத்து பாடங்களுக்கான வினா புத்தகங்களின் விலை ரூ.135. ஆங்கில வழி புத்தகங்களின் விலை ரூ.130 ஆகும். மாணவர்கள் தேவைக்கேற்ப தனித்தனி பாடங்களுக்கும் மாதிரி வினா புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.

மாதிரி வினா புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் மாநிலம் முழுவதும் 36 மையங்களை அமைத்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE