பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்வித்தகுதியை நாளை முதல் பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவுசெய்யலாம் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை நாளை (புதன்கிழமை) முதல் ஜுன் 13-ந் தேதி வரை பள்ளியிலேயே இணையதளத்தின் மூலம் பதிவுசெய்யலாம். அவர்கள் அனைவருக்கும் மே மாதம் 30-ந் தேதியிட்ட பதிவுமூப்பு வழங்கப்படும்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 7 லட்சத்து 56 ஆயிரத்து 464 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித்தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவுசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.

மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் சாதிச் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

தற்பொழுது புதிதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை வேறொரு வேலைநாளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் நாளை (புதன்கிழமை) பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்பட உள்ளது. நாளை முதல் ஜுன் மாதம் 13-ந் தேதி வரை (15 நாட்களுக்குள்) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பிளஸ்-2 கல்வித்தகுதிக்கு மே மாதம் 30-ந் தேதியிட்ட பதிவுமூப்பு (சீனியாரிட்டி) வழங்கப்படும்.

கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதை ஒட்டி ஒரேநாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம் ஏற்படும் காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்ப்பதற்காக பள்ளிகளின் வாயிலாகவே இணையதளம் மூலம் பதிவுசெய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் பிளஸ்-2 கல்வித்தகுதியை தாங்கள் படித்த பள்ளிகளிலேயே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளி வைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 23-8-2010-க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23-8-2010-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், `ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள், பி.எட். படித்து பட்டதாரி ஆசிரியர்களாக உள்ளனர். பிளஸ்-2 படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ பெற்று இடைநிலை ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தகுதியை சோதிப்பதற்காக இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவேண்டும் என்றும், அவ்வாறு அந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களை ஆசிரியர் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், "23-8-2010-ந் தேதிக்கு பிறகு அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் அதன் தேர்ச்சி சதவீதம் 60 என்றும், இந்த தேர்ச்சியை அவர்கள் 5 வருடத்திற்குள் பெறவேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருந்தது.

மேலும், "பணி நியமனம் செய்யப்படாதவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் முதலில் தேர்ச்சி பெறவேண்டும். பின்னர் அதன் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் அறிவித்தது. தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்'' என்றும் கூறியது.

இந்தநிலையில், "தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வகுத்த விதிமுறைகளின்படி 23-8-2010-க்கு பின்னர் ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கு உரிய பணி நியமனம் தொடர்பான பணி 23-8-2010-ம் தேதிக்கு முன்பே தொடங்கி இருந்தால் அத்தகைய ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதத்தேவை இல்லை'' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஜுலை 12-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி கூறியதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு ஒரே நேரத்தில் தயார் செய்வது கஷ்டமாக உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் இடையே இடைவெளி போதுமானதாக இல்லை. எனவே ஆசிரியர் தகுதி தேர்வை தள்ளிப் போடவேண்டும் என்று ஏராளமானவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு ஜுலை 12-ந் தேதிக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. அந்த தேதி வேலை நாள் ஆக இருப்பதால் அரசு சிறப்பு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து பெரிய அளவில் பல சந்தேகங்கள் கிளம்பின. அதாவது 23-8-2010-க்கு பின்னர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை தேர்ந்து எடுக்க எழுத்து தேர்வு எழுதுவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்ட நாள் 23-8-2010-ந் தேதிக்கு முன்பு இருந்தால் அவர்கள் தகுதி தேர்வை எழுத வேண்டாம்.

அதுபோல வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் 23-8-2010-ந் தேதிக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் பணி 23-8-2010-ந்தேதிக்கு முன்பாக நடைபெற்று இருந்தால் அவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதத் தேவையில்லை.

 

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் தகுதியாக இருந்தால் அவர்கள் தேர்வை எழுதலாம். அந்த நம்பர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்தார்.பேட்டியின் போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கே.அறிவொளி உடன் இருந்தார்.

Recruitment of TamilNadu Teachers Eligiblity Test - Status of your Application form

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TNTET 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.00100001)

          (for all the candidates who have applied for Examination)
                                                      App No.      

பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள்

  1. 2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி இயக்குனரின் வாழ்த்துக்களும் அறிவுரைகளும்.
  2. 2012-2013 ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி.
  3. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் | CCE TRAINING| முக்கியக் குறிப்பு 
  4. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சென்னை-6 தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல். 
  5. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சென்னை-6 தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.  
  6. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் | CCE TRAINING| முக்கியக் குறிப்பு 

"டி.இ.டி., தேர்வு, ஜூலை 12 ஆம் தேதிக்கு மாற்றம் - டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி.

"டி.இ.டி., தேர்வு, ஜூலை 12 ஆம் தேதிக்கு மாற்றம்  - டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி. 

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,895
பட்டதாரி ஆசிரியர்கள் 18,311
இடைநிலை ஆசிரியர்கள் 5,451
ஆசிரியர் பயிற்றுநர்கள் 634
சிறுபான்மை மொழிப்பாட
ஆசிரியர்கள் 32
உடற்கல்வி பயிற்சி ஆசிரியர்கள் 687
தையல் ஆசிரியர்கள் 47
இசை ஆசிரியர்கள் 41
ஓவிய ஆசிரியர்கள் 78
விவசாய ஆசிரியர்கள் 25
மொத்தம்: 28,201

என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆக., 23, 2010க்கு முன், ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிக்கை மற்றும் இதர பணிகள் நடந்து, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை - ஆசிரியர் தேர்வு வாரியம்.

என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆக., 23, 2010க்கு முன், ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிக்கை மற்றும் இதர பணிகள் நடந்து, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை - ஆசிரியர் தேர்வு வாரியம்.

25 தனியார் பதிப்பகங்களுக்கு பொதுக்கல்வி வாரியம் அனுமதி

தனியார் பள்ளிகளுக்கு, புத்தகங்களை விற்பனை செய்ய, 25 பதிப்பகங்களுக்கு, மாநில பொதுக்கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை, தமிழக அரசே இலவசமாக வழங்குகிறது. தனியார் பள்ளிகள் விரும்பினால், தமிழக அரசின் பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில், தற்போதுள்ள பாடத்திட்டத்தின்படி, தனியார் பதிப்பகங்கள் தயாரிக்கும் புத்தகங்களுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி, புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இதன்படி, தனியார் பதிப்பகங்களிடம் இருந்து விண்ணப்பங்களும், மாதிரி பாடப் புத்தகங்களும் வரவேற்கப்பட்டு, அவற்றை பள்ளிக் கல்வித் துறை பரிசீலனை செய்து, தகுதியான பதிப்பகங்களை தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட, 25 பதிப்பகங்களுக்கு அனுமதி பெறும் வகையில், அவை பொதுக்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் வைக்கப்பட்டது. குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 25 பதிப்பகங்களுக்கும் அனுமதி அளித்தனர். ஓரியண்ட் பிளாக் சுவான், மேக்மில்லன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்து வகை நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது

தமிழகத்தில்  உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடப்பு கல்வி ஆண்டில் அறுமுகமாகிறது. இதையொட்டி அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை பணியிடைப் பயிற்சி நடக்க உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் ஆணைக்கிணங்க,  தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2012-13 -ஆம் கல்வியாண்டு முதல் 1-ஆம் வகுப்பிலிருந்து 8 -ஆம் வகுப்புவரை முப்பருவக் கல்வி முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து பொது வழிகாட்டுதல் கையேடும் பாடக் கையேடுகளும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைப்படி கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்வது தொடர்பாக தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் பணியிடைப் பயிற்சியானது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 1,14,402 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,  மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 22.05.2012 அன்று அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், 24.05.2012, 25.05.2012 ஆகிய தேதிகளில் அனைத்து உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும், மே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்து வகை நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பயிற்சி மையத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே, இப்பயிற்சியில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் நடைபெற உள்ளது.CLICK

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வினை எழுத உள்ள அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வினை எழுத உள்ள அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.  

திருவாரூரில் ஆசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் மையம் மாற்றப்பட்டுள்ளது

திருவாரூரில் ஆசிரியர் தேர்வுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் மையம் மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரும் 27}ம் தேதி நடத்தப்படவுள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கான நேரடி போட்டித் தேர்வு நடைபெறும் திருவாரூர் மாவட்ட மையங்களில் ஒன்றான திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்துக்குப் பதிலாக திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வா.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை மையமாகக் கொண்டு நுழைவுச் சீட்டுப் பெற்றவர்கள் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மையத்துக்குச் சென்று ஆசிரியர் போட்டித் தேர்வை எழுதலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் சட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி துவங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் சட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சியாகும் மாணவர்கள், கலந்தாய்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள குரூப் 4 தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தேதி ஜுன் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுவரை 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், தொடர்ந்து பலரும் விண்ணப்பித்து வருவதால் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசுத் துறையில் சுமார் 10,718 காலிப் பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப்பள்ளி ஆசிரியர்கள் : பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. 

  1.  District level Transfer Counselling for the Teachers working in Adi Dravidar and Tribal Welfare Schools . 
  2. General Transfer Counselling for the Teachers working in Adi Dravidar and Tribal Welfare Schools.  

நாளை நடைபெறும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தில், இளநிலை பட்டம் குறித்து பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளி கூறியிருப்பதாவது: முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, 27ம் தேதி (நாளை) நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த பலர், இளநிலை பட்டம் குறித்து நிரப்ப வேண்டிய கட்டத்தை நிரப்பாமல் விட்டதால், இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், தாங்கள் ஐந்தாண்டுகள் பட்டம் பயின்றதாகவும், அதனால் இளநிலை பட்டத்திற்கான கட்டத்தை நிரப்பவில்லை எனவும் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளதோடு, தங்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.கோரிக்கை நியாயமாக இருப்பதால், இந்த விண்ணப்பதாரர்களை, சில நிபந்தனைகளுடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் என, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பின்போது இளநிலை பட்டத்தை பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இளநிலை பட்டமும், முதுகலை பட்டமும் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பை, விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யாதவர்கள், தேர்வு வாரிய இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) இருந்து, தங்களுக்கான, "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து, தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவொளி அறிவித்துள்ளார்.


நாளை நடைபெறும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தில், இளநிலை பட்டம் குறித்து பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
டி.ஆர்.பி., உறுப்பினர் அறிவொளி கூறியிருப்பதாவது: முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, 27ம் தேதி (நாளை) நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்த பலர், இளநிலை பட்டம் குறித்து நிரப்ப வேண்டிய கட்டத்தை நிரப்பாமல் விட்டதால், இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், தாங்கள் ஐந்தாண்டுகள் பட்டம் பயின்றதாகவும், அதனால் இளநிலை பட்டத்திற்கான கட்டத்தை நிரப்பவில்லை எனவும் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளதோடு, தங்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.கோரிக்கை நியாயமாக இருப்பதால், இந்த விண்ணப்பதாரர்களை, சில நிபந்தனைகளுடன் தேர்வெழுத அனுமதிக்கலாம் என, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. 

அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பின்போது இளநிலை பட்டத்தை பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இளநிலை பட்டமும், முதுகலை பட்டமும் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பை, விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யாதவர்கள், தேர்வு வாரிய இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண) இருந்து, தங்களுக்கான, "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து, தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவொளி அறிவித்துள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.


பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.

அமைச்சர் அறிவிப்பு:கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில், "பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.அதை தொடர்ந்து, புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை, அறிக்கையை ஒன்றை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியது.

அரசாணை வெளியீடு:அதன் அடிப்படையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.