Posts

அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் கட்டணம் உயர்வு அமலாகிறது

ரேசன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி மார்ச் 15 வரை நீட்டிப்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்: 2020 தேர்வு மையங்களில் மேல்நிலைப் பொதுத்தேர்வினை எழுத உள்ள 5,769 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகளுக்கும், சிறப்பான பங்களிப்பை நல்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், முதுகலை ஆசிரிய பெருமக்களுக்கும் கல்விச்சோலையின் இனிய நல்வாழ்த்துக்கள்.

சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் தொழில்கல்வி பட்டப் படிப்புகளுக்கான தேர்வின் மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டது.

வி.ஏ.ஓ. பணிக்கு 4–வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

2013-14-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 28 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சராக வைகை செல்வன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பாளர்கள் பொது நூலக துறை கட்டுப்பட்டில் இயங்கும் நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்யவரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, நூலகத் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை சென்னையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்பதற்காக "போலீஸ்காரரை பணியில் இருந்து நீக்கியது சரியல்ல" மீண்டும் வேலை வழங்க, ஐகோர்ட்டு உத்தரவு

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் நேற்று துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4 மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.

ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்' என்ற நடை முறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி தூர்தர்ஷனில் இன்று 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு, தொலைப்பாலம் நிகழ்ச்சியில், "தேர்வு உங்கள் வசம்' என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், "சிடி'யில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி தகவலை வெளியிட்டுள்ளது.

பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுத் துறையின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2013 - செய்முறை தேர்விற்கான முழு வழிகாட்டு அறிவுரைகள்

முதுநிலை விரிவுரையாளர்களாக தேர்வு பெற்ற, 33 பேரின் பட்டியலை ரத்து செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.

மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனலில் பெயர் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்கள், "ரகசிய அறிக்கை' (கான்பிடென்ஷியல் ரிப்போர்ட்) பெற உயர் அதிகாரிகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ மாணவியர் "ஆன்-லைன்' வழியில் அறிவியல் பாடத்தில் செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 51 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் பிளஸ்–2 தேர்வு மையங்களை கண்காணிக்க 368 பறக்கும் படைகள் காப்பி அடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவு

எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் பட்டம் எம்.எஸ்சி. வேதியியல் பட்டத்திற்கு இணையானது தமிழக அரசு உத்தரவு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2011-12ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 70 முதுகலை ஆசிரியர் களுக்கு 20.02.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு நடத்த உத்தரவு.

எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு: தனித்தேர்வர்களுக்கு 18–ந் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வி - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்க தமிழக அரசு ஆணை.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கல்வியால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று தமிழ்நாடு தேர்வாணையக்குழு தலைவர் ஆர்.நட்ராஜ் பேசினார்.

முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19 முதல் 21ம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 தேர்வில், சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 48 பேர் துணை கலெக்டர்களாகவும், 23 பேர் போலீஸ் துணை கண்காணிப்பாளர்களாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.

துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 முதல்நிலை தேர்வு (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 1¼ லட்சம் பட்டதாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர 7–ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

குரூப்–1 பணி ஒதுக்கீட்டிற்காக கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.

மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட, ஐ.எம்.எஸ்., பணியிடங்கள் காலியாக இருப்பதால், மெட்ரிக் பள்ளிகள் குறித்த ஏராளமான பணிகள் முடங்கியுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?

வரும், 16ம் தேதி நடக்க உள்ள, குரூப்-1 தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த விவகாரத்தில், "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, 77 பேரில், 67 தலைமையாசிரியர்களுக்கு, ஏழு மாதங்களுக்கு பின், மீண்டும் பணி வழங்கப்பட்டது.

குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, வரும் கல்வியாண்டில், 1,500 பள்ளிகள் மூடப்படும் அபாயம்.

தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த 3 ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க 11600 பள்ளிகளிடம் அடுத்த மாதம் விசாரணை நடத்த கட்டண குழு முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு பிப்ரவரி 22 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பொதுத் தேர்வு மையங்களில் இந்த ஆண்டும் ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும் என அந்தந்த மையங்களுக்கு அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்னோ பல்கலையில் "இ-ஞான்கோஸ்' கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும் மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, "ஆன்லைன்' மூலம் இலவசமாக படிக்கலாம் என, பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.

மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அதிக கல்விக் கட்டணத்தை, திரும்பச் செலுத்த, மெட்ரிக் பள்ளிக்கு கட்டண நிர்ணயக் குழு பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் (செட்) மிக அதிக அளவாக 10.64 சதவீதம் (5,495) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.