Saturday, July 30, 2016

குலகல்வியை வலியுறுத்தும் புதியகல்விக்கொள்கை எதிர்ப்போம் !

குலகல்வியை வலியுறுத்தும் புதியகல்விக்கொள்கை எதிர்ப்போம் !

தேசிய கல்விக் கொள்கை -2016 மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விகொள்கை நாம் அனைவரும் அறிந்த ஒன்று கல்விகொள்கையின் சாராம்சங்களை அலசி, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது ஆசிரியர்களான நமது கடமை என உணர்கிறேன்

1.நமது மொழி,கலாச்சாரம்,பண்பாடு அகியவை முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

2.பத்தாம் வகுப்பிற்கு மேல் பணம் படைத்தவரகள் மட்டும் உயர்கல்வியை தொடரமுடியும்

3.பள்ளி,கல்லுரிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.

4.கணிதம்,அறிவியல் பொதுபாடத்திட்டம் எனும் போது அவை ஆங்கிலத்திலும் , இந்தியிலும் மட்டுமே இருக்கும்.தமிழ் மொழி கல்விக்கு வாய்ப்பு இருக்காது.

5.கல்வி உதவித்தொகை படிப்படியாக குறைத்து நிறுத்தப்படும்.

6.ஆசிரியர்களுக்கு தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும்?

7.தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்க வழிவகைசெய்கிறது.

8.வேதக் கல்வி முறையை மறைமுகமாக திணிக்கிறது

நீங்களும் கல்விகொள்கையை படித்து ,மத்திய அரசுக்கு நாம் எதிர்பை தெரிவிக்கும் வண்ணம் கீழ் உள்ள மின்அஞ்சலில் கருத்துக்களை அதிகம் அனுப்புங்கள்.

நமது மொழியை,உரிமையை தக்கவைத்து கொள்வது நமது கடமை நண்பர்களே !!!

மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம், ஆசிரியர்களிடம் விசாரணை!

மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம், ஆசிரியர்களிடம் விசாரணை!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, ம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுகூட்டலுக்கு 2,707 பேர் விண்ணப்பித்தனர். இந்த மறுமதிப்பீட்டில் 2,220-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. அதைத் தொடர்ந்து தேர்வுத் துறை சார்பில் தொடர்புடைய ஆசிரியர்களை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டுவருகிறது.இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:வழக்கமாக பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டின்போது சிலருக்கு மட்டும் மதிப்பெண்களில் மாற்றங்கள் இருக்கும். இந்த முறை ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. இதில் 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. சில மாணவர்களுக்குப் பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. குறிப்பாக சில மாணவர்களுக்கு 80 மதிப்பெண்கள் வரை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில்தான் மதிப்பெண்கள் அதிகம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று ஆசிரியர்கள்விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.இந்த விசாரணையில் திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திருத்தப்பட்ட மறுகூட்டல் விடைத்தாள்களில் மதிப்பெண் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தற்போது சம்பந்தப்பட்டஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் தவறு கண்டறியப்பட்டால், அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு குறைக்கப்படும்' என்றனர்.

கட்டாய பணி நிரவலில் ஆசிரியர்கள் கடும் பாதிப்பு !

கட்டாய பணி நிரவலில் ஆசிரியர்கள் கடும் பாதிப்பு !

கட்டாய பணி நிரவலில் துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில் கடைசியாக நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், பணி அனுபவம் இல்லாத, இடைநிலை ஆசிரியர்களால், 2015ல் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை.அதே ஆண்டில், பணி நிரவலின்போது மாவட்டந்தோறும், ஒரு பாடத்துக்கு, 15 ஆசிரியர்கள் வீதம், 75 ஆசிரியர்கள் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இதன்படி, தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.ஏனெனில், புதிய கலந்தாய்வுவிதிப்படி, 1.6.2016ல், ஓராண்டு பணி அனுபவம் பெற வேண்டும். பணிநிரவலில் இடமாறுதல் பெற்றஆசிரியர்களுக்கென பிரத்யேக உத்தரவும் இல்லை. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பணி நிரவல் என்பது கட்டாய பணிமாறுதல்தான். இதில், பலர் சொந்த ஊரை விட்டு துாக்கியடிக்கப்பட்டு, இருஆண்டுகளாக கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.'கடந்தாண்டு வரை, பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில்பங்கேற்க எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டது.நடப்பாண்டில் பின்பற்றும் புதிய நடைமுறையால், சொந்த ஊருக்கே திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. அரசாணையில் தக்க திருத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் கூறுகையில்,''அரசாணை விதிப்படி, கலந்தாய்வு பணிகள் நடக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டால்,விண்ணப்பங்கள் பெறுவதில் சிக்கல் இல்லை,'' என்றார்.

வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி !

வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி !

தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி என, தெரியவந்துள்ளது. இவர்களது பதிவை நீக்குவதற்கு, பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 'நம்நாட்டில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், ௩௦ சதவீதம் பேர் போலியாக இருக்கலாம்' என, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன்குமார் மிஸ்ரா தெரிவித்திருந்தார். இதையடுத்து, பார் கவுன்சிலில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், புதிதாக பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சிலுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.

உத்தரவு

இதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வழக்கறிஞர்கள் பதிவை, பார் கவுன்சில் சரிபார்க்க வேண்டும். அதற்காக, கல்வி சான்றிதழ்களை, பார் கவுன்சிலுக்கு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த, 2015ல், சென்னை உயர் நீதிமன்றமும், வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டிருந்தது.உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய பார் கவுன்சிலின் உத்தரவின்படி, தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பார் கவுன்சிலில், ௮௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர்.இவர்களில், ௧௬ ஆயிரம் பேர், சரிபார்ப்புக்காக அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். ஜூன் மாதத்துக்குள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என, 'கெடு' விதிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால், மூன்று மாதங்களுக்கு, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை:தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், பலரது சான்றிதழ் காணாமல் போனதும், பார் கவுன்சில் அனுப்பிய கடிதங்களுக்கு பதில் வராததும் தெரியவந்துள்ளது.போலி சான்றிதழ்கள் அளித்து பதிவு செய்ததும், திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலை பட்டம் பெற்று, அதன்பின் சட்டப் படிப்பு முடித்து பதிவு செய்த விபரங்களும் தெரியவந்துள்ளன.இதன்படி, தற்போது வரை நடந்த சரிபார்ப்பில், ,௦௦௦க்கும் மேல் போலிகள் இருப்பதாக, தமிழ்நாடு பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலி வழக்கறிஞர்களை களையெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மாணவ, மாணவியர் உள்பட 100 பேருக்கு வாந்தி, மயக்கம் !

மாணவ, மாணவியர் உள்பட 100 பேருக்கு வாந்தி, மயக்கம் !

மேலூர் அருகே மாவிளக்கு சாப்பிட்ட 20 மாணவர்கள் உள்பட 100 பேர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் அரசுப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர், நேற்றுகாலை 11.30 மணியளவில் திடீரென வாந்தி எடுக்கத் துவங்கினர். இதில் 15 பேர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் நாககுமார் (11), தீபிகா (12), கீதா (12), அபிராமி (12), அவையம்மாள் (12), செல்வி (12), பொன்னழகு (13), சின்னபொண்ணு (11), ஜெயபாரதி (9), முத்துராக்கு (9), ஹரிகேசவன் (12), ரவிகுமார் (13), அழகுபாண்டி (13), சிவா (13) ஆகியோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவ, மாணவியர் அனைவரும் வெள்ளிமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். கோயில் திருவிழாவில் 2 நாட்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட மாவிளக்கை இவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர் என தெரியவந்தது. வாந்தி, மயக்கம் காரணமாக மாணவ, மாணவிகள் 20 பேர் உள்பட அவ்வூரை சேர்ந்த 100 பேர் அரசு, தனியார் மருந்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் வீரராகவராவ் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணி !

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணி !

ஓஎன்ஜிசி என அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கு நிரப்பப்பட உள்ள 417 பட்டதாரி டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 417

பணி - காலியிடங்கள் விவரம்:

1. AEE (Cementing) - Mechanical - 07

2. AEE (Cementing) - Petroleum - 04

3. AEE (Civil) - 15

4. AEE (Drilling) - Mechanical - 33

5. AEE (Drilling) - Petroleum - 04

6. AEE (Electrical) - 31

7. AEE (Electronics) - 17

8.AEE (Instrumentation) - 14

9. AEE (Mechanical) - 52

10. AEE (Production)-Mechanical - 13

11. AEE(Production)-Petroleum - 09

12. AEE(Production)- Chemical - 53

13. AEE (Reservoir) - 16

14. Chemist - 30

15. Geologist - 34

16. Geophysicist (Surface) - 29

17. Geophysicist (Wells) - 22

18. Materials Management Office - 23

19. Programming Officer - 05

20. Transport Officer - 06

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE -2016-இல் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com/wps/wcm/connect/f008b797-00f0-4216-b0a0-ec30d9e997e2/gtrec270701.pdf?MOD=AJPERES என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

41 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

41 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

41  அரசு உயர்நிலை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அவர்களது பட்டியல் :

  1 என்.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்

2 மு.மணிமேகலா தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் தஞ்சாவூர்

3 எம்.எஸ்.மல்லிகா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி தொரப்பாடி, வேலூர்-2 மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம்

4 ஆர்.கலைச்செல்வன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளிசின்னசேமூர், ஈரோடு மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோபிச்செட்டிபாளையம் ஈரோடு

5 ஆர்.சண்முகம் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அரிமழம்- 622 201 புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி

6 பி.வி.சாவித்ரி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி காசநாடுபுதூர்தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருவாரூர்

7 இ.மொக்கத்துரை தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி பி.சுப்பலாபுரம், தேனி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தேனி

8 கே.வீரேஸ்வரன் நாயர் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி பொன்மனை, கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகர்கோவில்

9 கே.சங்கரநாராயணன் தலைமையாசிரியர் அரச மேல்நிலைப் பள்ளி ஜாகீர்அம்மாபாளையம் சேலம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்

10 எஸ்.தமிழரசி, தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளிபட்டூர், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம்

11 ஆர்.சௌந்தரநாயகி, தலைமையாசிரியை, கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாட்டின்புதூர், தூத்துக்குடி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி

12எஸ்.கற்பகவல்லி, தலைமையாசிரியை  அரசு உயர்நிலைப் பள்ளி புக்கத்துறை, காஞ்சிபுரம் மாவட்டம்மாவட்டக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்  

13 ஏ.கே.கங்காதரரெட்டி தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி பழையநாப்பாளையம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்

14 ஆர்.லோகநாதன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி, குலமங்கலம், மதுரை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்

15 கா.பழனிச்சாமி தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி வெங்கடசமுத்திரம் தர்மபுரி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், தர்மபுரி

16 என்.விசாகமூர்த்தி தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப் பள்ளி சோளிங்கர், வேலூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் காஞ்சிபுரம்

17 ஜி.லில்லிபுஷ்பராணி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, ஆண்டார்குப்பம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்

18 கே.தேன்மொழி தலைமையாசிரியயை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி சிங்காநல்லூர் கோயமுத்தூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோயமுத்தூர்

19 கே.அருளரங்கன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டிப்பாளையம்நாமக்கல் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல்

20 என்.சரசுவதி தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அஞ்சூர் காஞ்சிபுரம் மாவட்டம் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் ஆய்வாளர் சென்னை-6

21 சி.செல்வராசு தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி புதுப்பாடி, வேலூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி, சேலம் மாவட்டம்

22 எம்.பரிமளம் தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி அனகாபுத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை சென்னை-15

23 இ. செந்தமிழ்ச்செல்வி தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி சிவ்வாடா, திருவள்ளூர் மாவட்டம் உதவி இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்ககம்சென்னை-6

24 ஆர்.எத்திராஜூலு தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அயப்பாக்கம் திருவள்ளூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (வடக்கு), சென்னை-8

25 அ.பாலுமுத்து தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி தேக்கம்பட்டி, தேனி மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்தேனி மாவட்டம்

26 ஆர்.எடிசன் தலைமையாசிரியர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரூர், அடையார், சென்னை-90 மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை (கிழக்கு), சென்னை

27 ஐ.முகம்மது அயூப் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி, தென்சிறுவள்ளூர் விழுப்புரம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி

28 எஸ்.ஆஷாகிறிஸ்டி எமெரால்ட் தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்பட்டாம்பாக்கம் கடலூர் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம் மாவட்டம்

29 ஏ.செல்வராஜ் தலைமையாசிரியர் அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளி கோயமுத்தூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், நீலகிரி மாவட்டம்

30 கே.தங்கவேல் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளிநாழிக்கல்பட்டி, சேலம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கரூர்

31 டி.பாலசுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி ஓ.சிறுவயல், சிவகங்கை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி இராமநாதபுரம் மாவட்டம்

32 எஸ்.முருகேசன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளிமுடுவார்பட்டி, மதுரை மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் மதுரை

 

33ஆர்.ஜெயபாண்டி உதவித்திட்ட அலுவலர் (அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் தரத்தில்) அனைவருக்கும் கல்வி இயக்கம் திருநெல்வேலிமாவட்டக் கல்வி அலுவலர், திருநெல்வேலி  

34 எம்.செல்வராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி மாதேயன்குட்டை, சேலம் மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், கரூர்

35 எஸ்.வளர்மதி தலமையாசிரியை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்

36 ஜி.ஜெயராஜ் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி வினைதீர்த்தநாடார்பட்டி திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மாதேவி திருநெல்வேலி மாவட்டம்

37 எம்.அன்புக்கரசி தலைமையாசிரியை அரசு (ம) மேல்நிலைப் பள்ளி வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சென்னை-6

38 அ. இராமகிருஷ்ணன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளிவி.ராமசாமிபுரம், மதுரை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், விருதுநகர்

39 எம்.எஸ்.உமா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி இலக்கியம்பட்டி, தர்மபுரி மாவட்டம் மாநகராட்சி கல்வி அலுவலர், கோயமுத்தூர் 

40 மு.வேலம்மாள் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளிலட்சுமிபுரம், தேனி மாவட்டம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், விருதுநகர்

41 த.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி கோவிலம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம்

30 இளநிலை அறவியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

30 இளநிலை அறவியல் அதிகாரி பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலை சேவை பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: 11/2016 விளம்பர எண்: 441 தேதி: 29.07.2016

பணி: Junior Scientific Officer

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Biolpgy - 06

2. Chemistry - 22

3. Physice - 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம்: ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.10.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 வரை தாள் - I, மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 வரை தாள் - II-க்கான எழுத்துத் தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்: 29.07.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.08.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://www.tnpsc.gov.in/notifications/2016_11_not_eng_jr_sci_officer.pdf என்ற இணையதள விளம்பர அறிக்கைக்கான லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி

மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை செயலகத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 64 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Assistant

காலியிடங்கள்: 64

தகுதி: +2 தேர்ச்சி + முன்னாள் ராணுவத்தினர், பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 05.09.2016 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + த ஊதியம் ரூ.4,200

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://loksabha.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Joint Recruitment Cell

Room No. 521, Parliament House Annexe,

New Delhi - 110001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://164.100.47.132/JRCell/Module/Notice/216Security%20Assistant.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு.

வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள் கண்டுபிடிப்பு.

தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7,௦௦௦க்கும் மேற்பட்டது போலி என, தெரியவந்துள்ளது. இவர்களது பதிவை நீக்குவதற்கு, பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 'நம்நாட்டில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், ௩௦ சதவீதம் பேர் போலியாக இருக்கலாம்' என, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன்குமார் மிஸ்ரா தெரிவித்திருந்தார். இதையடுத்து, பார் கவுன்சிலில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், புதிதாக பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சிலுக்கு, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.

உத்தரவு

இதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வழக்கறிஞர்கள் பதிவை, பார் கவுன்சில் சரிபார்க்க வேண்டும். அதற்காக, கல்வி சான்றிதழ்களை, பார் கவுன்சிலுக்கு வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த, 2015ல், சென்னை உயர் நீதிமன்றமும், வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டிருந்தது.உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய பார் கவுன்சிலின் உத்தரவின்படி, தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பார் கவுன்சிலில், ௮௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர்.இவர்களில், ௧௬ ஆயிரம் பேர், சரிபார்ப்புக்காக அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். ஜூன் மாதத்துக்குள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என, 'கெடு' விதிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால், மூன்று மாதங்களுக்கு, கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை:தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில், பலரது சான்றிதழ் காணாமல் போனதும், பார் கவுன்சில் அனுப்பிய கடிதங்களுக்கு பதில் வராததும் தெரியவந்துள்ளது.போலி சான்றிதழ்கள் அளித்து பதிவு செய்ததும், திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலை பட்டம் பெற்று, அதன்பின் சட்டப் படிப்பு முடித்து பதிவு செய்த விபரங்களும் தெரியவந்துள்ளன.இதன்படி, தற்போது வரை நடந்த சரிபார்ப்பில், ,௦௦௦க்கும் மேல் போலிகள் இருப்பதாக, தமிழ்நாடு பார் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலி வழக்கறிஞர்களை களையெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில்கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை.

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில்கூடுதல் மதிப்பெண்: ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுகூட்டலுக்கு 2,707 பேர் விண்ணப்பித்தனர். இந்த மறுமதிப்பீட்டில் 2,220-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. அதைத் தொடர்ந்து தேர்வுத் துறை சார்பில் தொடர்புடைய ஆசிரியர்களை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: வழக்கமாக பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டின்போது சிலருக்கு மட்டும் மதிப்பெண்களில் மாற்றங்கள் இருக்கும். இந்த முறைஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. இதில் 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாகவந்துள்ளது. சில மாணவர்களுக்குப் பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. குறிப்பாக சில மாணவர்களுக்கு 80 மதிப்பெண்கள் வரை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில்தான் மதிப்பெண்கள் அதிகம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று ஆசிரியர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில்பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திருத்தப்பட்ட மறுகூட்டல் விடைத்தாள்களில் மதிப்பெண் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,"தற்போது சம்பந்தப்பட்டஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் தவறு கண்டறியப்பட்டால், அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு குறைக்கப்படும்' என்றனர்.

சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; இன்றே கடைசி நாள்' என, இந்திய மருத்தும் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெளிவுபடுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முன்தினம் முடிந்தது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள். இதுவரை, 5,100 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.மாணவர் சேர்க்கை அதிகாரி கூறுகையில், 'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறவும், சமர்ப்பிக்கவும், ஒரு மாத காலம் அவகாசம் தரப்பட்டது.விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது. இன்று மாலைக்குள் விண்ணப்பிப்பது அவசியம்' என்றார்.

'தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

'தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்!'

பள்ளி, கல்லுாரிகளில், பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில், தேசியக் கொடியை பயன்படுத்தினால், அதற்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என, மாணவர்களுக்கு உரிய விதிகளை கற்றுத் தரும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

*.தேசியக் கொடியை, மக்காத பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மூலம் தயாரித்து பயன்படுத்தக் கூடாது.

*.அரசு அறிவிப்பின்றி, அரை கம்பம் அல்லதுமுக்கால் கம்பத்தில், பறக்க விடக் கூடாது. இரவு நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.

*.தேசியக் கொடிக்கு சரியான முறையில், 'சல்யூட்' செய்தல் வேண்டும்.

*.கொடியின் மேல்பக்க காவி நிறத்தை, உள்நோக்கத்துடன் தலைகீழாக பிடித்தல், தரையில் மண் படும்படி இழுத்தல் கூடாது.பழைய சாயம் போன, கிழிந்த கொடியை பயன்படுத்த கூடாது.

*.கொடியை தங்கள் உடையின் ஒரு பகுதியாகவோ,இடுப்பு கீழ் அணியும் உடையாகவோ, ஆபரணம்,அலங்காரமாகவோ பயன்படுத்த கூடாது.

*.இந்த விதிகளை பின்பற்ற, மாணவர்கள், பள்ளி, கல்லுாரி ஊழியர், அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விதிகளை மீறுவோருக்கு, குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்க, சட்டத்தில் இடம் உள்ளது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'

தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை மாணவர்களை சேர்க்க, ஜூலை, 31 வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வந்தால்,அவர்களை நிராகரிக்காமல், செப்.,30 வரை சிறப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

கல்வி கொள்கை குறித்து கருத்து ஆகஸ்ட் 16 வரை அவகாசம்

'புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆக., 16 வரை கருத்து தெரிவிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இருபது ஆண்டு பழமையான கல்விக் கொள்கையை மாற்ற, மத்திய அரசின்சார்பில், கல்வியாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி, ஆசிரியர்களுக்கு கட்டாய திறனறி தேர்வு நடத்துதல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுதல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் உள்ளிட்ட, பல பரிந்துரைகளை அளித்துள்ளது.இதன் முக்கிய அம்சங்களை, ஒரு மாதத்திற்கு முன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை, ஜூலை, 31 வரை மத்திய அரசுக்கு அனுப்பலாம் என, உத்தரவிடப்பட்டது.இப்போது, ஆசிரியர் கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை, மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கருத்துக்களை, nep.edu@gov.in என்ற மத்திய அரசின் இ - மெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்

B.Ed,க்கு நுழைவுத் தேர்வு

B.Ed,க்கு நுழைவுத் தேர்வு

தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க,மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டது; புதிய பாடத்திட்டமும் அறிமுகமானது.இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முன்னாள் தலைவர் எம்.ஏ.சித்திகி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு சார்பில், இரண்டு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் கண்டிப்பாக அமைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை அமைக்க வேண்டும்

* பி.எட்., படிப்புக்கு தேசிய அளவில் நுழைவு மற்றும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, உதவித்தொகை வழங்க வேண்டும்

* எம்.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்டில் இருந்து, ஓராண்டாக மாற்றப்படும். தொலைநிலை கல்வியில், எம்.எட்., படிக்க அனுமதிக்க வேண்டும்

* தேர்ச்சி பெற்று செல்லும் மாணவர்களின் செயல்பாடுகளை, குறிப்பிட்ட காலத்துக்கு ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்

* கல்வியியல் படிப்பில் திருத்தங்கள் கொண்டு வர, ஆசிரியர் கல்வியியல் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை.

18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை.

தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் 41 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் கூடுதலாக தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்துள்ளார்.அதன்படி, தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைப்பது தொடர்பாக முன்னதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து சிபிஎஸ்இ துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்படும்; திருநெல்வேலி, வேலூர், புதுக்கோட்டை, ஈரோடு, சிதம்பரம், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருச்சி, தேனி, கோவை, சென்னை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகைப்பட்டினம், நாமக்கல், சேலம், விருதுநகர் ஆகிய 18 நகரங்களில் இந்தப் பள்ளிகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த நகரங்களில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைக்கப்பட்டால் துணை நகரங்களில் உள்ள மாணவர்கள் பயனடைவார்கள் என்றனர்.

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு

பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரை களின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும் என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ''நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருப்பதால் பத்திரப் பதிவே நடப்பதில்லை. எனவே, இதை குறைக்க வேண்டும்'' என்றார்.இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ''பத்திரப் பதிவுக் கான வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெயல லிதாவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதை ஏற்று பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்க குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இக்குழு பரிந்துரைகளின்படி வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படும்'' என்றார்.

EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:

EMIS 2016-17 உள்ளீடு தகவல்கள் -வழிமுறைகள்:

2016-17 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மட்டும் புதிதாக உள்ளீடு செய்ய வேண்டும்....

2016-17 ஆம் கல்வியாண்டில் ,மற்ற வகுப்புகளில் (2,3,4,6,7-ஆம் வகுப்பு) புதிதாக சேர்ந்த மாணவர்களை சேர்க்க Common Student Pool -ல் இருந்து தான் எடுக்க(பெற) வேண்டும்...

 2015-16 ஆம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் 2,3,4,6,7-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்று தற்போது 2016-17  கல்வியாண்டில் வேறு பள்ளியில் படிப்பவர்களின்  தரவுகளை Common Student Pool-க்கு அனுப்பி நீக்கி விட வேண்டும்.

2015-16 ஆம் கல்வியாண்டில் 5,8 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் தற்போது COMMON STUDENT POOL- ல் இருக்கும்.வேறு பள்ளியில் இருந்து தற்போது உங்கள் பள்ளியில் 2016-17 கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களின் தரவுகளை Common pool லிருந்து எடுக்கவேண்டும்...

புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.COMMON STUDENT POOL-லிருந்து எடுக்கப்படும் தரவுகளில் ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அதை சரி செய்யவும்....

தங்கள் பள்ளியில் தற்போது உள்ள அனைத்து மாணவர்களின் தரவுகளில் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ அதை சரிசெய்து UPDATE செய்யவும்

 இவை அனைத்து ஆகஸ்ட் 7-க்குள்(07/08/16) முடிக்க வேண்டும்...

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்.

64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்.

தமிழகத்தில் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கணிதக் கற்றல் திறனை மேம்படுத்த, கணித உபகரணங்கள் வழங்கும் பொருட்டு ரூ.1.28 கோடி நிதிவழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மரத்தால் செய்யப்பட்ட 31 உபகரணங்கள் உள்ளடக்கிய 9 தொகுப்புகள் வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர் பட்டியல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.டான்சி நிறுவனம் வழங்கும் இந்தக் கணித உபகரணங்களை, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய வகையில் வைத்து, இருப்புப் பட்டியலை அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் தெரிவித்து பதிவேடு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விவரங்களையும் தொடக்கக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்

24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்

நாம்  செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து, ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q..

இதை தனிநபர் செய்ய முடியாது..அனைத்து ஆசிரியர்களுக்கும் தான் செய்தாக வேண்டும்..இது உ.தொ.க அலுவலரின் வேலை..

24-Q File செய்து முடிக்கும்போது FORM -16 generate ஆகும்.. இந்த வேலையை அனைவருக்கும் பொதுவாக ஒரு ஆடிட்டரை வைத்து செய்து, Generate ஆன Form -16 ல் கையொப்பமிட்டு உ.தொ.க அலுவலர் நமக்கு தருவார்..இது ஒவ்வொரு காலாண்டுக்கும் செய்ய வேண்டிய வேலை..

அடுத்ததாக E-filing என்பது,

நமது Form -16 அல்லது IT statementஐ வைத்துக் கொண்டு, வருமான வரி அலுவலகத்தில் ஒரு புக்லெட் போன்ற ITR படிவத்தை வாங்கி, நிரப்பி, அதை மீண்டும் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து ACKNOWLEDGEMENT வாங்குவோம்..

வருமானவரி  அலுவலகத்தில் நமது ITR படிவத்தை வைத்து ONLINE ல் தரவேற்றம் செய்வார்கள்..

அப்போது நமக்கு 24-Q செய்த போது தரவேற்றிய தொகையும், தற்போது நாம் வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்த ITR ல் உள்ள தொகையும் ஒரே மாதிரி இருந்தால் நமக்கு பிரச்சினை இல்லை.. ஆனால், வித்தியாசம் இருந்தால், அந்தத் தொகையை நாம் திருப்பி செலுத்துமாறு வருமான வரித் துறையில் இருந்து நமக்கு கடிதம் வரும்..

இந்த மனஉளைச்சலை தவிர்க்க நாம் E-filing செய்யும் போது,

ஏற்கனவே 24-Q செய்த போது தரவேற்றிய தொகையையும், தற்போது நாம் தரவேற்றும் தொகையையும் Tally செய்து விடுவதால் நமக்கு வருமானவரித் துறையில் இருந்து வரியை மீண்டும் கட்டும்படி எவ்வித கடிதமும் வராது..

*யாரெல்லாம் E-filing செய்ய வேண்டும்?*

Taxable income 5,00,000/- க்கு மேலும்,

Refund வரவேண்டி இருப்பவர்களும் *கட்டாயம்* செய்ய வேண்டும்..

ஆனாலும் அனைவரும் செய்து கொள்வது நல்லது..நமது வருமானவரிக் கணக்கு முறையாக சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று சேர்ந்து விட்டது என்ற திருப்தி நமக்கு ஏற்படும்..

2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில் கடைசியாக நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், பணி அனுபவம் இல்லாத, இடைநிலை ஆசிரியர்களால், 2015ல் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை.அதே ஆண்டில், பணி நிரவலின்போது மாவட்டந்தோறும், ஒரு பாடத்துக்கு, 15 ஆசிரியர்கள் வீதம், 75 ஆசிரியர்கள் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இதன்படி, தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.ஏனெனில், புதிய கலந்தாய்வுவிதிப்படி, 1.6.2016ல், ஓராண்டு பணி அனுபவம் பெற வேண்டும். பணிநிரவலில் இடமாறுதல் பெற்றஆசிரியர்களுக்கென பிரத்யேக உத்தரவும் இல்லை. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பணி நிரவல் என்பது கட்டாய பணிமாறுதல்தான். இதில், பலர் சொந்த ஊரை விட்டு துாக்கியடிக்கப்பட்டு, இருஆண்டுகளாக கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.'கடந்தாண்டு வரை, பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில்பங்கேற்க எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டது.நடப்பாண்டில் பின்பற்றும் புதிய நடைமுறையால், சொந்த ஊருக்கே திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. அரசாணையில் தக்க திருத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் கூறுகையில்,''அரசாணை விதிப்படி, கலந்தாய்வு பணிகள் நடக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டால்,விண்ணப்பங்கள் பெறுவதில் சிக்கல் இல்லை,'' என்றார்.