G.O.Ms.No.1294 Dated: 27.10.77 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை.

G.O.Ms.No.1294 Dated: 27.10.77. - Service Associations – Special Casual Leave – Eligibility to Office bearers of Recognised Service Association – Guidelines – Fixed. ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை
G.O.Ms.No.1294 Dated: 27.10.77. - Service Associations – Special Casual Leave – Eligibility to Office bearers of Recognised Service Association – Guidelines – Fixed. ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை Courtesy : வெ. ரமேஷ் | DOWNLOAD

G.O.NO.229, 22nd JANUARY 1974 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை

G.O.NO.229, 22nd JANUARY 1974 - Service Associations – Recognition by Government – Statutory Rules regarding Recognition of Associations – Issued.ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை Courtesy : வெ. ரமேஷ் | DOWNLOAD

2018 ஏப்ரல் மாதத்தில் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் ஆய்வறிக்கையில் தகவல்

2018 ஏப்ரல் மாதத்தில் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் ஆய்வறிக்கையில் தகவல் | 2018 ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கான குறுகிய கடன் வட்டி விகிதங்களை பாரத ரிசர்வ் வங்கி குறைக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ரேட் பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 6-ந் தேதி அன்று கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை அறிவித்தது. அப்போது இவ்வங்கி குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. எனவே, ரெப்போ ரேட் எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்க நிலவரங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. நவம்பர் மாதத்தில் சில்லரை விற்பனை விலை பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 15 மாதங்களில் இல்லாத ஏற்றமாகும். அம்மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி, நீண்ட கால அடிப்படையில் சில்லரை விலை பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது. நவம்பர் மாதத்தில் இது 4.88 சதவீதமாக உயர்ந்து இருப்பதால் இவ்வங்கி வட்டி விகிதங்களை குறைக்குமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் (2017-18) மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் 4.3 முதல் 4.7 சதவீதம் வரை இப்பணவீக்கம் இருக்கும் என இவ்வங்கி தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச நிதிச்சேவை நிறுவனமான பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வங்கி வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. நடப்பு டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.2 சதவீதமாக உயரும் என்றும், அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டில் இது 4.5 சதவீதமாக குறையும் என்றும் இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. ஆய்வுக்கூட்டம் பாரத ரிசர்வ் வங்கி தனது கொள்கை முடிவுகளை தீர்மானிக்க சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆய்வுக்கூட்டம் பிப்ரவரி 6, 7 தேதிகளில் நடைபெற உள்ளது. வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 7-ந் தேதி (புதன்கிழமை) வெளிவரும்.

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் | பள்ளிக்கூடங்களில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த விருப்பம் உள்ளவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புத்தக கண்காட்சி சட்டசபையில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது பள்ளிக்கல்வி அமைச்சர், அனைத்து அரசு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்க்கவும் பள்ளி அளவில் புத்தகக் கண்காட்சி நடத்துதல் அவசியமாகும். முதல்-அமைச்சர் ஆணைப்படி, இக்கண்காட்சி புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே செல்லும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளாக ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்திடக் சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியில் நடைபெறும். இதற்கான நாள் மற்றும் நேரத்தை அவர்கள் இணைந்து முடிவு செய்வர். நடமாடும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது குறித்து தலைமை ஆசிரியர், முதல்வர் உரிய முன்னறிவிப்பு செய்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களை கலந்துகொள்ள செய்வார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தகக் கண்காட்சியினை அவரவர் தம் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான அறைகளில் வைத்தோ நடத்தலாம். இதற்கான இடவசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் பள்ளிகளிலேயே பதிப்பாளர்கள் இருந்து செயல்படுவதற்கான வசதிகளை தலைமை ஆசிரியர், முதல்வர் செய்துகொடுப்பார். தள்ளுபடி நடமாடும் புத்தகக் கண்காட்சிக்கு பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் தேவையெனில் அவற்றை பதிப்பாளர்களே தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த நடமாடும் புத்தகக் கண்காட்சிகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. சாதி, மதம் சார்ந்த பகைமைகளைத் தூண்டும் அல்லது சட்டத்திற்குப் புறம்பாக அமையும் நூல்கள் கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல்நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத் திறன்கள், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். புத்தகங்களின் விலையில் குறைந்தது 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு தேவையான நூல்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு நூல்களை நன்கொடையாகவும் வழங்கலாம். 30-ந் தேதிக்குள் நடமாடும் புத்தகக் கண்காட்சியில் மேற்கண்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு பங்கேற்க விரும்பும் பதிப்பாளர்கள் மற்றும் நூல் விற்பனையாளர்கள் தங்களின் விருப்பத்தையும், பங்கேற்கவிழையும் மாவட்டங்களையும் கடிதம் வாயிலாக, இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அல்லது de-e-c-h-e-n-n-ai@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார் புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியப்பணியில் 31 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாகத்திகழும் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரியாக சிறப்புடன் பணியாற்ற, சிவகங்கை மாவட்டக்கல்வி அதிகாரி மாணிக்கம்,துணை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள தமிழ்ச்செல்வன்,முன்னாள் மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரமசிவம்,சண்முகம்,தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் பீட்டர் ராஜா,அருள் சுந்தரராஜ்,திராவிடச்செல்வம்,மணவாளன்,சேகர் ஆகியோரும், பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும்,ஆசிரியர்கள், DIET முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் வாழ்த்தினார்கள்.

DELHI PUBLIC SCHOOL RECRUITMENT 2018 | DELHI PUBLIC SCHOOL MEERUT | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - PGT, TGT | NO. OF VACANCIES -MANY | LAST DATE : 08.01.2018


DELHI PUBLIC SCHOOL RECRUITMENT 2018 | DELHI PUBLIC SCHOOL MEERUT | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - PGT, TGT | NO. OF VACANCIES -MANY | LAST DATE : 08.01.2018 | DELHI PUBLIC SCHOOL MEERUT (An Institution of M.P. Singh Foundation) (Under the Aegis of the Delhi Public School Society) Baghpat Road, Near Baghpat Bypass Crossing, Meerut Phone: 0121-2439063/80/81, www.dpsmeerut.in REQUIRES Top-class professionals who, preferably are graduates/post-graduates with B.Ed. from a university of repute with 1st Division throughout & (1) Computer savvy with excellent communication skills (2) Having a minimum 5 years exp. of working in a reputed English Medium School. CTET qualified will be given preference. PGT: Physics, Chemistry, Mathematics, Biology, Computer Science, Accountancy, Business Studies, Economics, English, Multimedia & Web-tech, Psychology, Fine Arts, Political Science, Geography & History. TGT: English, Mathematics, Hindi, Computer Science, Social Science (History, Political Science, Geography & Economics), Science (Physics, Chemistry & Biology) PRT: For all subjects. With an ability to run hobby clubs. NTT : For all subjects. With an ability to run hobby clubs. Dance and Music Teachers (Full Time): • Dance Teachers Indian Classical & Western • Music Teachers Western (Vocal) Foreign Language Teachers: French & German Only short-listed candidates will be called for the interview. Salary, allowances, other Perks & fringe benefits etc. as per DPS Society rules. Accommodation will be provided by school. Higher emoluments will not be a constraint for deserving candidates. | DOWNLOAD

CAA RECRUITMENT 2018 | COASTAL AQUACULTURE AUTHORITY | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CONSULTANT / COMPUTER PROGRAMMER | NO. OF VACANCIES -10 | LAST DATE : 12.01.2018 | DATE OF WALK IN INTERVIEW : 12.01.2018




§ DATE OF NOTIFICATION : 28.12.2017
§ EMPLOYMENT TYPE : Govt Job
§ APPLICATION : OFFLINE
§ WEBSITE : http://www.caa.gov.in/
§ NAME OF THE POST : CONSULTANT / COMPUTER PROGRAMMER
§ EDUCATIONAL QUALIFICATION : REFER PROSPECTUS
§ VACANCIES : 6
§ SALARY : Rs.30,000
§ SELECTION PROCEDURE : WALK IN INTERVIEW
§ LAST DATE : 12.01.2018

CAA RECRUITMENT 2018 | COASTAL AQUACULTURE AUTHORITY | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CONSULTANT / COMPUTER PROGRAMMER | NO. OF VACANCIES -10 | LAST DATE : 12.01.2018 | DATE OF WALK IN INTERVIEW : 12.01.2018 | COASTAL AQUACULTURE AUTHORITY Ministry of Agriculture and Farmers Welfare. Government of India GDR Tower, 12-A, Bharathi Street. Vanuvampettai, Madipakkam P0, Chennai-600091. Ph:044-22603784/3502. Fax:044-22603780 Email: aquaauth@vsnl.net, aquaauth@gmail.com WANTED CONSULTANTS (Full Time) Coastal Aquaculture Authority (CAA), Chennai requires the services of Five Consultants for a period of one year to assist the authority in executing certain specific works as given below: CONSULTANT (4 Nos.) : To assist in works relating to registration of farms / hatcheries, hatchery inputs; Documentation, processing & consolidation of reports of farms / hatchery inspection / monitoring and collection & analysis of samples from farms and hatcheries. CONSULTANT (1 No.) : To assist in all technical works including processing and consolidation of reports of inspection and monitoring and other related works. Experience in editing annual report, publications and legal works is desirable. COMPUTER PROGRAMMER (1 No.) : A Programmer with 5 or more years of experience in PHP based development. Information on the job details such as educational qualifications, age limit experience, terms of reference, remuneration etc., is available in the CAA website. www.caa.gov.in. | DOWNLOAD | DOWNLOAD

TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018


TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018 | DOWNLOAD

தமிழ் வழியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது

தமிழ் வழியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் சென்னை, டிச.28- தமிழ் வழியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 960 பேர்களுக்கு 'பெருந்தலைவர் காமராஜர் விருது' வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த போது கூறியதாவது:- பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ் வழியில் படித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவ-மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாளில் வழங்கப்பட உள்ளது. 10-ம் வகுப்பில் 15 மாணவர்கள், பிளஸ்-2 வகுப்பில் 15 மாணவ-மாணவிகளை தேர்ந்து எடுத்து 32 மாவட்டங்களை சேர்ந்த 960 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருது பெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு அறிவித்து இருப்பது தமிழகத்தில் இதுதான் முதல் தடவை. தேர்வு செய்யும் முறை என்னவென்றால் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 60 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு 40 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த செயல்பாடுகள் வருமாறு:- சான்றிதழ் * நடிப்பு, கிராமிய நடனம், இசைக்கருவிகளை வாசித்தல், கவிதை, கட்டுரை, கதை சொல்லுதல், பேச்சாற்றல், வினாடி-வினா, பரதநாட்டியம், ஓவியம் வரைதல் போன்ற கலை இலக்கிய திறன்களில் குறிப்பிடத்தக்க பரிசு பெற்றவர்களாக இருக்கவேண்டும். * விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட, மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் (ஏதேனும் ஒன்றில்) வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். * அறிவியல் மன்றம், அறிவியல் கண்காட்சி, மற்றும் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் போன்ற இதர அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கேற்று தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசு பெற்றவர்களாக இருக்கவேண்டும். * சாரண-சாரணியர், சுற்றுச்சூழல் மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவை சங்கம், சாலை பாதுகாப்பு குழு ஆகியவற்றில் ஏதாவது இடம் பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட செயல்பாடுகளில் திறன் பெற்றவர்களுக்கு 40 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். 100 மாணவர்கள் தேர்வு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அந்த திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள். அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் போன்ற 4 பாடப்பிரிவுகளில் இருந்து தலா 25 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணமாக அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 100 மாணவர்கள் ஜப்பான், சீனா, தென் கொரியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, எகிப்து, பிரான்ஸ், ரஷியா, சுவீடன் போன்ற பல வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்கள் அந்த நாடுகளின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து வருவார்கள். 286 பாடப்பிரிவுகள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்கும் வகையில் 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் ஆகிய துறைகளை மட்டுமே தேர்வு செய்வார்கள். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்கள் வருங்காலத்தில் என்ன பாடத்தை எடுத்து படிக்கலாம்? என்று அறிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை பெரிய அளவில் பெயர்பலகைகளில் வைக்கப்படும். பிளஸ்-2 மாணவர்களுக்கு 412 இடங்களில் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதலில் 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் பயிற்சி பெறுவதற்கு 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் 'ஆன்-லைனில்' விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து 'லேப்-டாப்' வழங்கப்படும். 'வெயிட்டேஜ்' முறை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக 'வெயிட்டேஜ்' முறை என்பது 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அதில் ஏதோ ஒரு குறைபாடு இருந்து வருகிறது. இதுகுறித்து நானும், துறை செயலாளரும் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். அதன்பிறகு அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? என்பது குறித்து கூறுவோம். இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பிலும் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன்மீதும் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் சிறிய அளவில் குறைபாடு நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தவறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறைபாடு குறித்து 'எல்காட்' நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உடன் இருந்தார்.

TTDC RECRUITMENT 2018 | TAMILNADU TOURISM DEVELOPMENT CORPN. LTD-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CHIEF FINANCIAL OFFICER, COMPANY SECRETARY AND ASSISTANT MANAGER (TRAINEE) / (HOTELS) | NO. OF VACANCIES -10 | LAST DATE : 29.01.2018

TTDC RECRUITMENT 2018 | TAMILNADU TOURISM DEVELOPMENT CORPN. LTD-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CHIEF FINANCIAL OFFICER, COMPANY SECRETARY AND ASSISTANT MANAGER (TRAINEE) / (HOTELS) | NO. OF VACANCIES -10 | LAST DATE : 29.01.2018 | DOWNLOAD

தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்



தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள் | இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்டகங்களாக அவை திகழ்கின்றன.

வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலன்களை அடையலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிக்கத் தூண்டும் நிகோட்டினை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும். இதன் மூலம் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.

பப்பாளிப்பழம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்று, பப்பாளி. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பெண்களை அவதிப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. பழுக்காத பப்பாளிப்பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.

கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாவுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்தும் சாப்பிடலாம். சொறி, சிரங்கு மற்றும் ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நலம் பயக்கும். வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்கும், முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.

அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்குப் பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், தாது உப்புகள் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. தாது உப்புகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் முக்கியமாகும். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிக மாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது. தொப்பையைக் கரைக்கமுடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அன்னாசி ஒரு நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் பருகிவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

மாதுளம்பழம்: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாறை அருந்தலாம். மேலும் இது, கர்ப்பகால ரத்தசோகையைப் போக்கும். உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாறுடன் கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். மாதுளை கடுமையான இதய வலியைப் போக்கக்கூடியது.

நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018


நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD

COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION | APPLICATIONS ARE INVITED FOR THE POST OF SANITARY INSPECTOR IN VARIOUS MUNICIPALITIES GOVERNED UNDER TAMIL NADU MUNICIPAL PUBLIC HEALTH SERVICE REGULATIONS 1970. LAST LATE : 19.01.2018.

COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION | APPLICATIONS ARE INVITED FOR THE POST OF SANITARY INSPECTOR IN VARIOUS MUNICIPALITIES GOVERNED UNDER TAMIL NADU MUNICIPAL PUBLIC HEALTH SERVICE REGULATIONS 1970. LAST LATE : 19.01.2018. The eligible candidates possessing the required qualification, age and other qualifications may apply in the prescribed format. No.of vacancy Women General Destitute Widow Ex- Serviceman Total Priority Non Priority Priority Non Priority General 0 7 7 19 0 1 34 BC 0 6 8 10 2 3 29 BC (M) 1 0 0 2 0 1 4 MBC 0 6 5 9 0 2 22 SC 1 2 4 7 2 1 17 SC(A) 1 0 0 2 0 0 3 ST 0 0 0 0 1 0 1 Total 110 Qualification Must possess B.Sc.,( Chemistry) with a Sanitary Inspector's Certificate granted by The Additional Director of Health Services and Family Planning, Chennai as the Chairman, Board of Examiners, constituted by Government in this behalf (or) must possess a Health Inspector's Certificate awarded by the Principal, Medical College, Trivandrum (or) must possess a Sanitary Inspector's Certificate awarded by the Director of Public Health, Bombay (or) Sanitary Inspector Certificate awarded by the Gandhigram Rural Institute and Must possess physical fitness for camp life and satisfy the physical standard prescribed for Health Inspectors. i) (ii) (iii) (iv) Age limit (as on 01.07.2017) Limit SC (A) SC ST MBC BC BC(M) OC I Age Maximum 35 35 35 32 32 32 30 The Application should be sent the following address in the format given below by Post or in person on or before 5.00 pm. of 19.01.2018 and the top of the envelop "application for the Post of Sanitary Inspector" should be mentioned. | DOWNLOAD

APPLICATIONS ARE INVITED FOR ADMISSION TO B.ED. PROGRAMME 2018-2020 THROUGH THE SCHOOL OF DISTANCE EDUCATION | APPLICATIONS ARE ISSUED FROM : 13.12.2017 • SPOTADMISSION FROM 13.12.2017 • LAST DATE FOR RECEIPT OF FILLED IN APPLICATIONS : 30.04.2018


APPLICATIONS ARE INVITED FOR ADMISSION TO B.ED. PROGRAMME 2018-2020 THROUGH THE SCHOOL OF DISTANCE EDUCATION | APPLICATIONS ARE ISSUED FROM : 13.12.2017 • SPOTADMISSION FROM 13.12.2017 • LAST DATE FOR RECEIPT OF FILLED IN APPLICATIONS : 30.04.2018 | SCHOOL OF DISTANCE EDUCATION BHARATHIAR UNIVERSITY State University - Reaccredited with 'A' Grade by NAAC Ranked 287 among Indian Universities by MHRD - NIRF COIMBATORE - 641046, TAMIL NADU. Ph: 0422-2422222. 2427742 Fax : 0422-2423330, Website: www.b-u.ac.in APPLICATIONS ARE INVITED FOR ADMISSION TO B.Ed. PROGRAMME 2018-2020 through the School of Distance Education Approved by the Distance Education Bureau (DEB-UGC), New Delhi & National Council for Teacher Education (NCTE), Bangalore • Applications are issued from : 13.12.2017 • SpotAdmission from 13.12.2017 • Last date for receipt of filled in Applications : 30.04.2018 • For more details refer Website / Prospects Further Details : Contact Department of Education, SDE between 10.00 am. to 5.00 p.m. 0422- 2427742 Dr. R. Mathivanan Director i/c: DIPR/1398/DIS/2017 Dr.B.Vanitha Registrar i/c

50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் ஜெயலலிதா பிறந்தநாளில் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் ஜெயலலிதா பிறந்தநாளில் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | ஜெயலலிதா பிறந்தநாளில் 50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஊட்டியில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது- 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் இன்றைக்கு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசு, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் உயிருடன் இருந்தபோது படித்த இளம்பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த திட்டம், ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தொடங்கி வைக்கப்படும். அம்மா இருசக்கர வாகனம், பாதி விலை மானியத்தில், ஒரு ஸ்கூட்டர் ரூ.50,000 என்றால், ரூ.25,000 மானியமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். முதலில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஊழல் குற்றச்சாட்டு அ.தி.மு.க ஐ.சி.யு.வில் இருப்பது போல பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கின்றார், அவர் டாக்டர், அப்படித்தான் கண்ணுக்குத் தெரியும், சிந்தனை அப்படித்தான் வரும். 2018-ல் ஊழலற்ற நிர்வாகமாக கொண்டுவரவேண்டுமென்று இவர்கள் சொல்கிறார்கள். இவர்கள் மேல் இருக்கின்ற சி.பி.ஐ. வழக்கு முடியட்டும். ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர் தன் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டை இல்லை என்று நிரூபித்துக்காட்டவேண்டும், அதற்குப்பின் சொன்னால் சரியாக இருக்கும். முதலில் அவர்கள் திருந்தட்டும். சட்டம்-ஒழுங்கு இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு சான்று, தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஒரு செய்தி. அந்த அறிக்கையில், இந்தியாவிலுள்ள 6 மெட்ரோ நகரங்களில், பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த முதல் பெருநகரமாக இருப்பது தமிழ்நாட்டினுடைய சென்னை மாநகரம் தான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் 25.7 சதவீதம், மும்பையில் 6.4 சதவீதம், கொல்கத்தாவில் 3.5 சதவீதம் உள்ளது. இதுவே சென்னையில் 2 சதவீதமாக உள்ளது. அதுபோலவே அகில இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. ஆகவே, சட்டம், ஒழுங்கு எந்தளவிற்கு பேணிக்காக்கப்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று என்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

ரத்த அழுத்தம் நோய்தானா ?

ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கப்படுகிறது. பரம்பரை, உடற்பருமன், முதுமை, முறையற்ற உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய், அட்ரீனல், தைராய்டு கோளாறு போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவுப் பழக்கமும் மன அழுத்தமுமே இதற்கு முக்கியக் காரணங்கள். துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், செயற்கை உணவு வகைகள் எனக் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாலும், பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவரையும் மன அழுத்தம் பாதிப்பதாலும். உங்களைப் போல் பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. | DOWNLOAD

அதிக மகிழ்ச்சியும் துயரமே! |

அதிக மகிழ்ச்சியும் துயரமே! | கலைஞர்கள் பலர், மிதமான மன எழுச்சியின்போது படைப்பூக்கத்தின் உச்சத்தை எட்டியிருக்கிறார்கள் அதீதத் தன்னம்பிக்கையால் பயம் என்னும் தேவையான உணர்வு குறைந்து விடும் எழுச்சியும், சோர்வும் மாறி மாறி எதிரெதிர் துருவத்துக்குச் செல்லும் நோய்க்கு 'இருதுருவ மனநிலை' என்று பெயர் வாழ்க்கை, ஒரு பியானோ போன்றது. கறுப்பு, வெள்ளைக் கட்டைகள் இரண்டுமே மாறிமாறி இசைத்தால்தான் இசை பிறக்கும். வெள்ளை கட்டை மகிழ்ச்சி, கறுப்புக் கட்டை சோகம் - எஸ்ஸான் இத்தொடரின் ஆரம்பத்தில், எப்படி எல்லா விஷயங்களிலுமே எதிரெதிர் துருவங்கள் உள்ளன, அதில் நடுநிலையிலிருந்து அதீத தூரம் உள்ள... | DOWNLOAD

அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு | மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்முறையாக மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கடந்த நவம்பர், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் நேற்று இணையதளங்களில் வெளியிடப்பட்டதோடு ஒவ்வொரு மாணவருக்கும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிவிக்கும் முறை தற்போதுதான் முதல் முறையாக அண்ணா பல்கலை.யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்காகவும் கூடுதல் வசதியாகவும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.உமா தெரிவித்தார். மற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளை இணையதளங்களிலும் (www.annauniv.edu,coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu) அறிந்து கொள்ளலாம்.

ஜன.5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு

ஜன.5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு | தமிழகத்தில் 1.84 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 5-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் 2 அடிநீள கரும்பு என பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதை யடுத்து, கரும்பு கொள்முதல் பணியை கூட்டுறவுத் துறை தொடங்கியுள்ளது. மேலும், முந்திரி, திராட்சை ஆகியவை தலா 20 கிராம் மற்றும் குறிப்பிட்ட அளவு ஏலக்காய் ஆகியவற்றை சிறிய பாக்கெட்களில் அடைக்கும் பணியும் கூட்டுறவுத் துறையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 6-ம் தேதி முதல் மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். பொங்கலுக்கு முன் 1.84 கோடி குடும்ப அட்டைகளுக்கும் பொருட்களை வழங்க வேண்டும் என்று நியாயவிலைக் கடைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ‘வெயிட்டேஜ்’ முறை மாற்றம்

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக 'வெயிட்டேஜ்' முறை என்பது 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அதில் ஏதோ ஒரு குறைபாடு இருந்து வருகிறது. இதுகுறித்து நானும், துறை செயலாளரும் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். அதன்பிறகு அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? என்பது குறித்து கூறுவோம். இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பிலும் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன்மீதும் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் சிறிய அளவில் குறைபாடு நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தவறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறைபாடு குறித்து 'எல்காட்' நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உடன் இருந்தார்.

அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம்

அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கும் பணிகளுக்கு, 2018 ஜன., 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) கட்டுப்பாட்டில் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.புதிய கல்லுாரிகள் துவங்க அங்கீகாரம் பெறுவதும், செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகள் புதிய பாடப்பிரிவுகள் துவங்கவும், கூடுதல் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆண்டு தோறும், அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். அதன் படி, 2018-19ம் கல்வியாண்டிற்கான அங்கீகாரம் பெறுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. வரும், ஜன., 1 முதல் 31ம் தேதி வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகள் மட்டும், அபராதத்துடன் பிப்., 5ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணி, 2018 பிப்., 1ம் தேதி முதல் ஏப்., 10ம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும், விபரங்களுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., இணையதளத்தை www.aicte-india.org பார்க்கலாம்.

போலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம்

போலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம் போலீஸ் வேலைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் மொத்தம் 6,140 பணியிடங்கள் காலியாகவுள்ளது. இதில், 5,538 இரண்டாம் நிலை காவலர், 365 இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் 237 தீயணைப்பு வீரர்கள் பணியிடம் அடங்கும். இக்காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தேர்வு நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கிறது. ஆன்லைன் மற்றும் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வோருக்கு, ஜன., 27ம் தேதியும், அஞ்சல் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க ஜன., 30ம் தேதியும் கடைசி நாளாகும்.ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தரை தளத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள்

கண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள் | மத்திய அரசின் கீழ் செயல்படும், 'நேஷனல் டிரஸ்ட்' எனும் தேசிய அறக்கட்டளை சார்பில், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளின் கீழ், கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் இந்தியா ஹெகத்தான்- 2017' என்ற தலைப்பில் தேசிய அளவில், போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், கண்டுபிடிப்புகளை வடிவமைக்க, பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆராய்ச்சி கருத்துருக்கள் தெளிவான விபரங்கள், வடிவமைப்புகளுடன், 2018 பிப்.,1ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கல்லுாரிகள் மூலமேஅனுப்பப்பட வேண்டும்.தேர்வு பெறும், கண்டுபிடிப்புகளுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும், தெளிவான விபரங்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு | அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதேபோல், 130 அரசுப் பள்ளிகளில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி செயல்பாடுகளில், பெற்றோர், பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருப்பதோடு, பெற்றோரையும் ஒருங்கிணைத்து, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பஞ்சாயத்து தலைவர் முதல், அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட, கவுன்சிலர், எம்.எல்.ஏ., ஆகியோரையும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்.இதன்மூலம், பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதோடு, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சாராம்சத்தை பொதுமக்களுக்கு, இவ்விழா நிகழ்வுகள் மூலம் எடுத்துரைக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 515 பள்ளிகளுக்கு...எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 80, 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கு தனியாக, நிதித்தொகை பிரித்தளிக்கப்படும். இதேபோல், 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாக, நிதியுதவி அளிக்கப்படும். இதன்படி, 254 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 261 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை வட்டார வளமையங்களுக்கு பிரித்தளித்து, அந்தந்த பள்ளி மேலாண்மை குழு பெயரில், காசோலையாக வழங்கப்படும்.ஏப்ரல் மாத இறுதிக்குள், ஆண்டு விழா கொண்டாட, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு இலவச கையேடு

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன் நீட், ஐ,ஐ.டி., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு கையேடுகள் வழங்கியுள்ளது. நீட்ஐ .ஐ.டி., ஜே.இ.இ. போன்ற தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த சிறப்புமையங்கள் துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மாவட்டம் தோறும் தலா 3 'தொடுவானம்' சிறப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.இம் மையங்களில் ஆன்-லைன் வசதியுடன் வீடியோ கான்பரசிங் முறையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இம்மையங்களில் பயிற்சி பெற தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.இவர்களுக்கு 'ஸ்பீடு இன்ஸ்டியூட்' மூலம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் போட்டித்தேர்விற்கான 300 பக்க கையேடுகள் பாகம்,1, பாகம் 2 என இரு புத்தகங்களாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதில், தேவையான இடங்களில் அட்டவணை தரப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் பல்வேறு தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்தவை உட்பட 500க்கும் மேற்பட்ட கேள்விகள, இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு புத்தகத்தின் மதிப்பு ரூ. 300க்கும் மேல் இருக்கும் என, கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு

கனவு ஆசிரியர்' விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு | தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:– அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்,உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர்,தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு தேர்வுகள் துறை இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்தின் இயக்குனர், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் திட்ட இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) உறுப்பினர் செயலராகவும் மாநில குழு அமைக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மூத்த உதவி தொடக்க கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமை ஆசிரியர், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள் வீதம் 192 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.

TNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள். DOWNLOAD

ONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.


ONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது. BUY NOW

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம்-மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு.


ஆந்திரா நடைமுறையைப் பின்பற்ற முடிவு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு | அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரவும், ஆந்திராவில் இருப்பதைப் போன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது. தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர் எனில் பிளஸ் 2 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி) வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிளஸ் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வுகளில் மதிப் பெண் குறைந்த அளவே வழங்கப்பட்டதால், வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டும் என்றும், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தகுதித் தேர்வில் தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தினால் வேலையில் சேர்ந்துவிட்டதாகவும், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பிளஸ் 2 மதிப்பெண் குறைவாக இருந்த காரணத்தினால் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இந்த நிலையில், வெயிட்டேஜ் முறையில் உள்ள பாதிப்புகளை ஆராய்ந்து குறைகளைச் சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் வித்தியாசமாக இருக்கிறது. அங்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன் னொரு போட்டித் தேர்வு நடத்து கிறார்கள். இறுதியாக, தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 20 சதவீதமும், போட்டித்தேர்வுக்கு 80 சதவீதமும் வெயிட் டேஜ் அளிக்கப்படுகிறது. முந் தைய தேர்வுகளான பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட், இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுவதே இல்லை. அங்கு பின்பற்றப்படும் வெயிட் டேஜ் முறையால் எந்த தேர்வர் களுக்கும் பாதிப்பு இல்லை. ஆந்திராவில் பின்பற்றப்படும் பணிநியமன நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படுமா என்று தமிழக அரசு அமைத்துள்ள குழு உறுப்பினர்களிடம் கேட்டபோது, "தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னொரு போட்டித்தேர்வு நடத்தி அந்த வெயிட் டேஜ் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் ஆந்திர நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இதனால், தற்போதை வெயிட் டேஜ் முறைக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வராது. தகுதித் தேர்வு மதிப்பெண், எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் அமைவதால், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும் கவலைப்படத் தேவையில்லை. எனவே, ஆந்திர தேர்வுமுறையை தமிழகத்தில் நடை முறைப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தனர்.ஜெ.கு.லிஸ்பன் குமார்

BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD

  1. BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். DOWNLOAD
  2. BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.DOWNLOAD

TNPSC - ORAL TEST FOR THE POST OF ASST. DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE | TNPSC நேர்காணல் தேர்வு 04.01.2018 தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.


TNPSC - ORAL TEST FOR THE POST OF ASST. DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE | தமிழ்நாடு தொழில் மற்றும் வணிக உதவி இயக்குநர் (தொழில் கூட்டுறவு) பதவிக்கான எழுத்துத் தேர்வு 16.07.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 1035 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 12 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் தேர்வு 04.01.2018 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். | The Written Examination for the post of Assistant Director of Industries and Commerce (Industrial Co-operatives) in the Tamil Nadu Industries Service was held on 16.07.2017 FN & AN. Totally 1035 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 12 candidates those who have been provisionally admitted to Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Oral Test will be held on 04.01.2018 at the Commission's office.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4 ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி 13.12.2017 வரை 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. பின்னர் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலின் பாதிப்பு காரணமாக கடைசி தேதி 20.12.2017 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடைசி நாளான 20.12.2017 அன்று வரை 20.83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் கூடுதலாக 9,040 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு 11.34 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும், 9.48 லட்சம் ஆண் விண்ணப்பதாரர்களும் 54 மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் தேர்வுக்கட்டணத்தை இன்று (21.12.2017) நள்ளிரவு வரை ஆன்லைனில் (Online) செலுத்தலாம். விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் "APPLICATION STATUS" என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in ல் உள்ளன.

|

உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.


(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும்? மற் றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமா?என்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் உயர்கல்வி துறை வழங்கிய பதில்கள்.
கோரிய விவரங்கள்: 
(i) பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) சுற்றறிக்கை அறிவிப்பு எண்: No.F.1-2/2016(PS/Amendment) நாள்: 11th July, 2016 படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் படி ஜூலை 11, 2009 க்கு அடுத்து முனைவர் பட்டம் (Ph.D) பயில பதிவு செய்தவர்கள் கட்டாயமாக தேசிய அல்லது மாநில அளவிலான உதவி பேராசிரியருக்கான தகுதி (நெட்/செட்) தேர்வினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது முனைவர் பட்டம் பெற்றாலும் நெட்/செட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறவேண்டும் அல்லது முதுகலை பட்ட படிப்பு (M.A/M.Sc/M.Com) உடன் நெட்/செட் தகுதி இருந்தால் போதும் என்று யுஜிசி (UGC) கூறியுள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணி நியமணம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது தமிழகத்தில் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? அல்லது எப்பொழுது கட்டாயமாக்கப்படும்? ஒரு சமயம் தாங்கள் இந்த தகவலை தெரிவிக்க இயலாது என்றால், யாரிடம் இதனை கேட்பது. 
(ii) பல்கலைக்கழக மானிய குழுவானது முழு நேரம் முறையில் (Full-Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் (Research Experience) நாட்களை கற்பித்தல் அனுபவமாக (Teaching Experience) கருத்தில் கொள்கிறது. இந்த நடைமுறை தமிழகத்திலும் உள்ளதா? இந்த கணக்கீடானது உதவி பேராசிரியர் (Assistant Professor) நேர்காணலின் போது பொருந்துமா அல்லது இணை பேராசிரியர் (Associate Professor) நேர்காணலின் போது பொருந்துமா?
கடித எண் 19648/எப்.2/2017-1 நாள் 13.12.2017 வாயிலாக பெறப்பட்ட பதில்கள்  
(i) அரசு கடித எண்.13792/எப்.2/2017-10 நாள். 13.01.2017 -ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் தெரிவு செய்வது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உரிய அறிவுறுத்துங்கள் வழங்கப்பட்டுள்ளன.

(ii) முழு நேரமுறையில் (Full Time Mode) முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக எடுத்துக் கொள்வது குறித்து தமிழக அரசால் தனியே ஆணைகள் ஏதும் வெளியிடப்படவில்லை. DOWNLOAD  DOWNLOAD

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு


திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி. படித்தவர்களுக்கு அரசு பணிகள், பதவி உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10-ம் வகுப்பு, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD

‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு ஒரு மதிப்பெண் நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு கணக்கெடுக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்



'வந்தே மாதரம்' தொடர்பான கேள்விக்கு ஒரு மதிப்பெண் நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு கணக்கெடுக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம் | 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 'வந்தே மாதரம்' தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது. இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், 'வந்தே மாதரம்' முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் 'வந்தே மாதரம்' பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவு தேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, "வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்று பதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.| 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 'வந்தே மாதரம்' தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது. இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், 'வந்தே மாதரம்' முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் 'வந்தே மாதரம்' பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவு தேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, "வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்று பதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.ஜெ.கு.லிஸ்பன் குமார்

GO NO 156 , Date : 07.12.2017- இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு அளித்தல் ஆணை



GO NO 156 , Date : 07.12.2017-இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு அளித்தல் ஆணை | DOWNLOAD

TNPSC - GROUP IV SERVICES & VAO - EXTENSION OF DATES FOR SUBMISSION OF ONLINE APPLICATION - தொகுதி – 4 – விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு



TNPSC - Group IV services & VAO - Extension of dates for submission of online application - தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு | தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018ம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும் , குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018 ல் எவ்வித மாற்றமுல் இல்லை | STUDY MATERIAL DOWNLOAD

ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம்


ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம் | பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில்பணியாற்றுகின்றனர். இவர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஆசிரியர்களாக பணியிட மாற்றம் வழங்க, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 350 ஆசிரியர்கள் பாடவாரியாக, மாவட்டம் விட்டு மாவட்டம்; ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றப்பட உள்ளனர். இதற்கான வழிகாட்டுதலை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், வழங்கி உள்ளார். DOWNLOAD

புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு


புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு | கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மட்டும் அல்லாமல் அதை விட மேலான கல்வியை அரசுப்பள்ளியில் கொண்டுவந்து அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்திடவும். கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக இணைக்கவும் கணினி ஆசிரியர்கள் சார்பில் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .. நாள்:07/01/2018 காலை 9மணி அளவில். இடம்:ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள "மல்லிகை அரங்கம்" வ.உ.சி பூங்கா செல்லும் வழி. ஈரோடு மாவட்டம். """இன்றைய ஏழை மாணவர்கள் தான் நாளைய -கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை"" . தமிழாக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்த விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர் ஈரோடு நோக்கி,, திரு வெ.குமரேசன்,9626545446, 9789180422 மாநிலப் பொதுச்செயலாளர் , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு


தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு | தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் வழங்கும் புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் அறிமுகப்படுத்த தொழில்நுட்பக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) மற்றும் கணக்கியல் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. கீழ்நிலை, மேல்நிலை, அதிவேகம் என வெவ்வேறு நிலைகளில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, ஆகஸ்டு) நடைபெறும் இத்தேர்வுகளில் சுமார் 3 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அரசு வேலையில் சேர மட்டுமின்றி பொதுவான அரசுப் பணிகளுக்கு இவை கூடுதல் மற்றும் விரும்பத்தக்க தகுதிகளாக கருதப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, தற்போது தட்டச்சு படிக்கும் ஆர்வம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரம் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வெழுதும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு மற்றும் டிப்ளமா, பல்கலைக்கழக தேர்வுகளைப் போன்று விடைத்தாள் நகல் பெற முடியாது. மறுமதிப்பீடும் செய்ய இயலாது. (எஸ்எஸ்எல்சி தேர்வில் விடைத்தாள் நகல் பெறலாம்.மறுகூட்டல் செய்யலாம். ஆனால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது) தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மற்ற தேர்வுகளைப் போன்று விடைத்தாள் நகல் வழங்க வேண்டும், மறுமதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளில், விடைத்தாள் நகல் வழங்கும் முறை மற்றும் மறுமதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் பிறப்பித்துள்ளார். விடைத்தாள் நகல் பெற ரூ.150-ம், தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) தேர்வில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ரூ.400-ம், சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) மற்றும் கணக்கியல் தேர்வு மறுமதிப்பீட்டுக்கு ரூ.500-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறையானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத் தேர்விலிருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆர்.பழனிசாமி தெரிவித்தார். இதன்மூலம் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைப் பெற முடிவதுடன் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். மேலும், தங்கள் விடைத்தாள்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன? மதிப்பீட்டில் ஏதேனும் தவறுகள் நேர்ந்துள்ளனவா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள முடிவதுடன் குறைகள் இருந்தால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி அடையவும், கிரேடுகளை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.

மத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு



மத்திய அரசு பணியில் சேர ஆசையா? | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மத்திய அரசுத் துறையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஆண்டு தோறும் கணிசமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி உயர்நிலைக் கல்வி (பிளஸ்-2) தரத்திலான தேர்வு மூலம், மத்திய அரசுத்துறைகளில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ஸ்டாப் செலக்சன் கமிஷன், சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு துறையில் இளநிலை உதவியாளர், அஞ்சலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு 3 ஆயிரத்து 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1-8-2018 தேதியில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு பணித்திறன் தேர்வும் நடத்தப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம், வருகிற 18-12-2017-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பிக்கும்போது ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இளையதளம் வழியாகவும், ஸ்டேட் வங்கி வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 4 முதல் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. விரிவான விவரங்களை www.ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.



தமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிரப்பி வருகிறது. தற்போது வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 130 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 30 இடங்களும், தோட்டக்கலை உதவி இயக்குனர் பணிக்கு 100 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிஎச்.டி. படித்தவர்கள் 32 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி., பி.சி.எம்., பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. கல்வித்தகுதி: தோட்டக்கலை தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரிக்கு தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-12-2017-ந்தேதியாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்


ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப் படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 படித்த பெண்களை, நர்சிங் பயிற்சி அளித்து ராணுவப் பணியில் அமர்த்திக் கொள்ளும் 'பி.எஸ்சி. நர்சிங் கோர்ஸ்-2018' பயிற்சி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பயிற்சியில் சேர்பவர்கள், 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுடன் அதற்கான சான்றிதழ் பெறலாம். அத்துடன், ராணுவ பணி வாய்ப்பையும் பெற முடியும். இந்திய குடியுரிமை பெற்ற திரு மணமாகாத இளம் பெண்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேரலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரத்தை இனி பார்க்கலாம்... வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1-10-1993 மற்றும் 30-9-2001-ந் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பிளஸ்-2 படிப்பை முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியியல், பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 4 ஆண்டு காலம் நர்சிங் பயிற்சி பெற்ற பின், பணி நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். இது பற்றிய விவரங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்


இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரெயில்வே. தற்போது ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 1785 பேரும், தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் 1050 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர மத்திய மண்டலத்தில் அப்ரண்டிஸ் அல்லாத அலுவலக பணிகளுக்கும் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மண்டலத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின்படி 20 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விவரங்களை அறிவோம்... தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள 1785 பணியிடங்களில் காரக்பூர் பணிமனைக்கு 360 பேரும், கேரேஜ் பிரிவில் 121 பேரும், என்ஜினீயரிங் ஒர்க்‌ஷாப் பிரிவில் 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிக்னல் டெலிகாம் ஒர்க்‌ஷாப், டிராக் மெஷின், டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக் லோகோ ஷெட், கேரேஜ் வேகன் டெப்போ, டி.இ.இ., எஸ்.எஸ்.இ. போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 1-1-2018 தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படு கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 2-1-2018-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை www.ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் பிலாஸ்பூர் பிராந்தியத்தில் 432 பேரும், நாக்பூர் பிராந்தியத்தில் 313 பேரும், ராய்ப்பூர் பகுதியில் 305 பேரும் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். மெக்கானிக், ஸ்டெனோகிராபர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், வெல்டர், பிளம்பர், மாசன், பெயிண்டர், கார்பெண்டர், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், சர்வேயர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10,12-ம் வகுப்பு படித்து, பணியிடங்கள் சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-12-2017-ந் தேதியாகும். அப்ரண்டிஸ் பயிற்சி அல்லாமல் மும்பையை தலைமை இடமாக கொண்ட மத்திய ரெயில்வே மண்டலத்தில் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு 150 பேரும், கூட்ஸ் கார்டு பணிக்கு 125 பேரும், தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படித்திருப்பதுடன், குறிப்பிட்ட வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு, தட்டச்சு திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் கூட்ஸ் கார்டு பணிக்கு பட்டப்படிப்பு படித்த, 42 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவர்கள் www.rrccr.com என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதேபோல தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 20 பேருக்கு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்து, விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெயில்வே பணியைப் பெறலாம். இது பற்றிய விவரங்களை www.rrcmas.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18-12-2017-ந் தேதி கடைசி நாளாகும்.

MARCH 2018-HSC-PRIVATE NOTIFICATION | மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


பிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்கள் வாரி யாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிசம்பர் 11 முதல் 16 வரை நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் (சேவை மையங்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது). இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அபராத கட்டணத்துடன் டிசம்பர் 18 முதல் 20 வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். 2016 ஜூன், ஜூலை பருவம் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் எஸ்எஸ்எல்சி முழுமையாக தேர்ச்சிப்பெற்று 2 ஆண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நேரடி தனித்தேர்வர்களாக எழுத முடியும். இதுவே, அவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD

FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.




FIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்? உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா? அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா? ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள்? அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST (WWW.FINDTEACHERPOST.COM) ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். முற்றிலும் இலவசமான பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது.  | DOWNLOAD