Wednesday, January 31, 2018

CLASS 11 BOTANY & BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 11 BOTANY & BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல் | அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜன் தெரிவித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கிரப் சார்பில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது, முதல்வர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை ஜாக்டோ-ஜியோ கிரப் நிர்வாகிகள் ஒருங்கிமைப்பாளர் சண்முகராஜன் தலைமையில் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் சண்முகராஜன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். அப்போது, ஆளுநர் அறிவுரைப்படி பிப்ரவரி இறுதிக்குள் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடுவதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று (31.01.2018) வெளியீடு

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை வெளியிடப்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பரில் நடந்த இளங்கலை, முதுகலை படிப்புகள், தொழில்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் 31-ம் தேதி (இன்று) மாலை வெளியிடப்படுகின்றன. பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். http://results.unom.ac.in/, www.ideunom.ac.in, www.egovernance.unom.ac.in மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்டுடன் பிப்ரவரி 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். | DOWNLOAD

5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு

5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு | 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு சில அமைச்சகங்கள் பதில் அளித்தபோதிலும், வேறு சில அமைச்சகங்கள் உரிய பதில் அளிக்கவில்லை. அதனால், 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நிதி ஆலோசகர்களையும், அனைத்து அமைச்சகங்களின் இணை செயலாளர்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

பொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு | பொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக கல்வி கற்காத மாணவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். பொதுத்தேர்வு தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமையில் மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- மார்ச் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை வழக்கம்போல நேர்மையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வேண்டும். மாற்றுச்சான்றிதழ் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக படிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புவது வழக்கமாக உள்ளது. அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள். அவ்வாறு மாற்றுச்சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலாவது அப்படி மாற்று சான்றிதழ் கொடுத்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

CLASS 12 BIO-BOTANY EM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 12 BIO-BOTANY EM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD

CLASS 12 BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 12 BIO-BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD

CLASS 12 BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY

CLASS 12 BOTANY TM MATERIALS - M. PRASANNA. M.A., (H.R), M.A., (TAM), M.A., (EDU), M.SC., (PSY), M.SC., M. PHIL., B.ED., PG ASSISTANT IN BOTANY | DOWNLOAD

CLASS 11 COMPUTER SCIENCE ENGLISH MEDIUM - FULL PORTION TEST - R.PRADEEP


CLASS 11 COMPUTER SCIENCE ENGLISH MEDIUM - FULL PORTION TEST - R.PRADEEP MCA., B.ED., LOTUS MATRIC HIGHER SECONDARY SCHOOL, KAKAPALAYAM, SALEM – 637504 | DOWNLOAD

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு | தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு | மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. நாடுமுழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 7-ம் தேதி நடந்தது. நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 20 ஆயிரம் டாக்டர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியான பின்னர், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 30, 2018

​​TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD | 9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

​​9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரத்து 351 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 301 தாலுகா மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 20 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளங்களில் ( www.tnpsc.ex-ams.net, www.tnpsexams.in) வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது விண்ணப்பம் நிராகரிக்கபட்ட காரணம் தெரிய வரும். சரியான முறையில் விண்ணப்பித்து, பணம் செலுத்தியும், ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான செல்லான் நகலுடன் விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டண ரூபாய், செலுத்திய அஞ்சலக முகவரி அல்லது வங்கி, வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி, பணபரிமாற்ற ஐ.டி. மற்றும் தேதி ஆகியவற்றை தேர்வாணைய மின் அஞ்சல் முகவரிக்கு (contacttnpsc@gmail.com) பிப்ரவரி 6-ந்தேதிக்குள் அனுப்பவும். இந்த தகவலை அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு | பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். சிறப்பு பயிற்சிதனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது. வினாத்தாள்எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி தேர்வுகள் நடத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் பெற, சான்றிதழ் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போலி மாணவர்கள் பட்டியலை தடுப்பது, நலத்திட்டங்களை உரிய மாணவர்களுக்கு வழங்குவது, மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு, ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என,ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆதார் எண் இல்லாத மாணவர்கள், ஆதார் பதிவு செய்ய, இன்று முதல்சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டு முகவரியுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை, பள்ளிகள் வழங்கிய அங்கீகாரசான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஆவணமாக பயன்படுத்தலாம் என, வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் இருந்து நீக்கும்படி,தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான,'எமிஸ்' இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

CLASS 11 CHEMISTRY MODEL BOARD QUESTION PAPER 2018 TM/EM - PRABAKAR S


CLASS 11 CHEMISTRY MODEL BOARD QUESTION PAPER 2018 TM/EM Prepared by : S.Prabakar M.Sc, M.Phil, B.Ed, PGDCA, T.Agri, Chief Executive, S.P Coaching Centre, Mariyamman Kovil Street, Harur- 636903. Ph : 9843082238 , 9489182238 | DOWNLOAD TM | DOWNLOAD EM

CLASS 11 - CHEMISTRY MATERIAL FOR ENGLISH MEDIUM COMPLETE QUESTION BANK BY Dr.D.EZHILARASAN

CLASS 11 - CHEMISTRY MATERIAL FOR ENGLISH MEDIUM COMPLETE QUESTION BANK BY Dr.D.EZHILARASAN, M.SC., B.Ed., M.A., Ph.D, P.G.T IN CHEMISTRY, NATIONAL SCHOOL, TINDIVANAM | DOWNLOAD

TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி - ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் கற்றல் குறைபாடுள்ள 1 லட்சம் மாணவர்களுக்கு, பிப்ரவரி 20ம் தேதி வரை சிறப்பு பயிற்சிவழங்கப்படும். தமிழக மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இருப்பினும், மத்திய அரசின் நிலைப்பாட்டின்படி, மாணவர்கள் 'நீட்' தேர்வை எதிர்கொள்ள ஏற்கனவே 100 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 312 மையங்கள் பிப்ரவரி 4ம் தேதிக்குள் திறக்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்கு பின், 2,000 மாணவர்களை தேர்வு செய்து, சென்னையில் உள்ள 4 கல்லூரிகளில் கூடுதல் கவனம் செலுத்தி'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படும். அம்மாணவர்கள் தங்கவும், உணவுக்கும் அரசு ஏற்பாடு செய்யும். வரும் காலங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்படும் என்றார். புதிய கல்விக்கொள்கை: போலியோ சொட்டு மருந்து முகாமை கோபியில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், லண்டனில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை?


கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை? அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு களில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம். ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை. அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் "கணினி அறிவியல்" பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்..?? தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட் சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்?? தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve) தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..?? எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன... வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்... 2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PLUS TWO TAMIL CENTUM TIPS | பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர்.

தேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால் மதிப்பெண் நிச்சயம் குறையும். 'தினை/திணை' போன்ற பொருள் மாறும் மயங்கொலிப் பிழைகள் விடைத்தாள் திருத்துபவருக்குப் பளிச்செனத் தெரியும். 'ஒருமை/ பன்மை' குறித்த கருத்துப் பிழைகளும் இவற்றில் அடங்கும். இந்தப் பிழைகள் குறித்து இரண்டாம் தாளில் தனிப் பாடப் பகுதியே உள்ளது. இப்பகுதியை நன்கு புரிந்துகொண்டு படிப்பதுடன் அவற்றை விடைத்தாளில் கவனமாகப் பின்பற்றினால், சிறு பிழைகளால் நேரும் ஓரிரு மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர், அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி. | DOWNLOAD

வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கம்

மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விருப்பம் உள்ள 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உணவு பதப்படுத்துதல், சிறுவணிகம், வாகனம்சார் திறன், உடல் நலம் பேணுதல், வனப்பு மற்றும் உடல் நலம் போன்ற தொழில் திறன்களை ஆசிரியர்கள் கற்பிக்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு பள்ளியை தேர்ந்து எடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்த பயிற்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:- வேலைவாய்ப்பு கல்விக்கான பயிற்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வை சந்திக்க ஆன்லைன் மூலம் 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்டமாக 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த மையங்களில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். மீதம் உள்ள 312 மையங்களும் சில நாட்களில் ஏற்படுத்தப்படும். இந்த மையங்களில் சிறப்பாக படிக்கும் மாணவர்களில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தலா 500 மாணவர்கள் வீதம் 4 கல்லூரிகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பிளஸ்-2 தேர்வுக்கு பிறகு நடக்கும். அவர்கள் தங்கி படிக்க ஏற்பாடும் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான மடிக்கணினி மார்ச் மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு 'நீட்' தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 2 பேர் தான் எம்.பி.பி.எஸ். சேர்ந்தனர். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இருந்து 1,000 மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வார்கள். அந்த அளவுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் பட்டியலிடப்பட்டு உள்ளன. முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார். பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் நாகராஜமுருகன், பயிற்சி நிபுணர் ராஜ் கில்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு முயற்சி பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு 'நீட்' தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த, தேவைப்பட்டால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

CLASS 11 - PHYSICS MODEL QUESTION PAPER | S. RANGANATHAN

CLASS 11 - PHYSICS MODEL QUESTION PAPER | S. RANGANATHAN, M.SC, M.ED, M.PHIL, Ph.D, HAPPY EDUCATION - BANYAN TREE, 99 437 937 99, PONDICHERRY. | DOWNLOAD

TNPSC FREE ONLINE TEST 8 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 8 - தமிழகம் சில கேள்விகள் பாகம் 1

TNPSC FREE ONLINE TEST 8 | TAKE A TEST | KNOW YOUR SCORE | தேர்வு 8 - தமிழகம் சில கேள்விகள் பாகம் 1 | DOWNLOAD

CLASS 11 - PHYSICS T/M IMPORTANT QUESTIONS - N.DHANASEKARAN, GHSS, ARUNGULAM | DOWNLOAD

PLUS ONE PHYSICS T/M IMPORTANT QUESTIONS - N.DHANASEKARAN, GHSS, ARUNGULAM | DOWNLOAD

TNOU - B.ED ADMISSION NOTIICATION - 2018


TNOU - BED ADMISSION - NO ENTRANCE EXAM-NEW METHOD FOR THE SELECTION OF CANDIDATES WILL BE ON THE BASIS OF THE MARKS SECURED IN THE QUALIFYING UG / PG DEGREE EXAMINATION.தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி B.Ed சேர்க்கை | DOWNLOAD

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது.

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை | பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும். பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும். திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது, மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன், ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை.

மாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை | வேதா டி. ஸ்ரீதரன் | 'மாணவர்களை அழகாக எழுதவைப்பது பள்ளிகளுக்குப் பெரிய சவாலாக இருப்பது ஏன்?' இது எனது பயிற்சி வகுப்புகளின் தொடக்கத்தில் நான் முன்வைக்கும் கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொல்வார்கள். எனினும், பள்ளிகளில் மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்கு ஆசிரியர்களின் அறியாமையே முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். கையெழுத்து என்பது ஒருசில எழுத்து வடிவங்களைக் காகிதத்தில் எழுதுவது மட்டுமே. பள்ளிகளில் கணிதம், இலக்கணம், உயிரியல், வேதியியல் முதலான எத்தனையோ கடினமான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவை அனைத்துமே சவாலான விஷயங்கள்தாம். இருந்தாலும், இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், ஒரு சில சாதாரணக் கோட்டு வடிவங்களை எழுதுவதற்கு மாணவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படியானால், கையெழுத்து விஷயத்தை எப்படிக் கையாளுவது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்றுதானே பொருள்? இதைத்தான் அறியாமை என்று நான் குறிப்பிட்டேன். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு எழுதத் தெரியுமோ, அவ்வாறே மீண்டும் மீண்டும் எழுதிவருகிறார்கள். இது தவறானது. மாறாக, எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும். சரியான விதத்தில் எழுதுவது என்றால் என்ன? ஓர் எழுத்து வடிவத்தை முறையான விதத்தில் எவ்வாறு உருவாக்க வேண்டுமோ, அந்த விதத்தில் உருவாக்குவதுதான் சரியான அணுகுமுறை. இதில் மூன்று முக்கிய விஷயங்கள் உண்டு. 1. பென்சிலை லாகவமாகப் பிடிப்பது. 2. பென்சிலைக் காகிதத்தின் மீது மென்மையாக அழுத்துவது. 3. பென்சிலைக் காகிதத்தின்மீது சரியான திசையில் நகர்த்துவது. இந்த மூன்று விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த மூன்று விஷயங்களையும் கற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் முறையாக எழுதக் கற்றுக்கொள்வது அல்லது பயிற்சிசெய்வது. ஆக, மாணவர்கள் முதலில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து அன்றாட எழுத்து வேலையின் மூலம் அவர்கள் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும். கையெழுத்துப் பயிற்சி என்பது முறையாக எழுதிப் பழகுவது. முறையாக எழுதிப் பழகும்போது மாணவர்கள் சரியாக எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆக, பயிற்சியின் பயன் கற்றுக்கொள்வது. எனவே, வெறுமனே ஒரே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் எழுதுவதைப் பயிற்சி என்று சொல்ல முடியாது. கையெழுத்துப் பயிற்சி என்பது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. 1. பயிற்சி தரப்படும் விதம் 2. கையெழுத்துப் பயிற்சி ஏடு முதலில் விரலால் மட்டும் எழுதுவது. உதாரணத்துக்கு, ஆள்காட்டி விரலால் மணல்மீது எழுதுவது சுலபமானது. அடுத்ததாக, எழுத்தின்மீது பென்சிலால் எழுதிப் பழகுவது நல்லது. இவற்றைத் தொடர்ந்து காலி இடத்தில் எழுத வேண்டும். இந்த மூன்றும் கையெழுத்துப் பயிற்சியின் முக்கியமான படிநிலைகள். எத்தகைய கையெழுத்துப் பயிற்சி ஏடுகளில் இந்த மூன்றுவிதமான பயிற்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அவைதான் கையெழுத்துப் பயிற்சிக்குப் பொருத்தமானவை. இந்த விஷயங்கள் மிகச் சுலபமானவையே. ஆனாலும், மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். கையெழுத்துப் பயிற்சி என்றால் என்ன, மாணவர்களுக்கு எவ்வாறு கையெழுத்துப் பயிற்சி தர வேண்டும் முதலிய விஷயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு. கட்டுரையாளர், கையெழுத்துப் பயிற்சி நிபுணர்

Monday, January 29, 2018

TNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN

TNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கான, 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ 14.11.2017 அன்று வெளியிட்டு, அதற்கான எழுத்துத் தேர்வினை வருகிற 11.02.2018 அன்று முற்பகல் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களிலும் நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 20.8 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். § விண்ணப்பதாரரின் பெயர் § விண்ணப்ப பதிவு எண் (Registration ID) § விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்) § செலுத்திய இடம் அஞ்சலகம் / வங்கி § வங்கிக்கிளை / அஞ்சலகம் முகவரி § Transaction ID and Date 06.02.2018க்குப் பிறகுப் பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என இரா.சுதன், இ.ஆ.ப தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார். | DOWNLOAD

SSLC - SOCIAL SCIENCE TM-EM - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS

SSLC - SOCIAL SCIENCE TM-EM - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | DOWNLOAD EM | DOWNLOAD TM

SSLC - SCIENCE TM-EM - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS

SSLC - SCIENCE TM-EM -ALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | DOWNLOAD EM | DOWNLOAD TM

SSLC - TAMIL - MATHS TM-EM - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS

SSLC - TAMIL - MATHS TM-EM - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | DOWNLOAD TM | DOWNLOAD TM

SSLC - TAMIL - PAPER I AND II - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS


SSLC - TAMIL - PAPER I AND II - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | DOWNLOAD

SSLC - ENGLISH - PAPER I AND II - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | DOWNLOAD

SSLC - ENGLISH - PAPER I AND II - HALF YEARLY EXAMINATION - DEC. 2017 QUESTION PAPER WITH ANSWERS - SURA BOOKS | DOWNLOAD

பொதுத்தமிழ்

1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? - குறிப்பறிதல்.

2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் ? - கரிகாலன்

3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் ? - திரு.வி.க.

4. 'திருமகள்" இதழின் ஆசிரியர் யார் ? - கவியரசு கண்ணதாசன்

5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது ? - மதுரை.

6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் ? - வேதநாயகம்பிள்ளை.

7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் ? - நல்லூர் நத்தத்தனார்

8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்

9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல்

10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ? - மணிமேகலை

11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் ? - நாமக்கல் கவிஞர;

12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர்? - வையாபுரி பிள்ளை

TNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


TNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தடயஅறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி) ஆதரவற்ற விதவைகளுக்கும் (பொதுப்பிரிவு உட்பட) வயது வரம்பு இல்லை. எழுத்துத் தேர்வு மே 6 நடத்தப்படும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு இல்லை. தகுதியானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். | DOWNLOAD

ஹைட்ரஜன்-சில குறிப்புகள்

* மிக லேசான தனிமம் ஹைட்ரஜன்.
* ஹைட்ரஜனின் அணு எண் 1.
* புரோட்டியம், டியூட்ரியம், டிரிடியம் என்பவை ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்.
* புரோட்டியம், ஒரு புரோட்டான் மட்டும் கொண்டது.
* டியூட்ரியம், ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்டது.
* டிரிடியம் ஒரு புரோட்டான், 2 நியூட்ரான்கள் கொண்டது.
* இயற்கையில் அதிகம் காணப்படுவது புரோட்டியம் 99.98 சதவீதம்.
* டியூட்ரியம் இயற்கையில் 0.015 சதவீதம் உள்ளது.
* டிரிடியம் மிக மிக அரிதானது, நிலைத்த தன்மையற்றது. ஹைட்ரஜனுக்குப் பெயரிட்டவர் லவாய்ஸியர்.
* ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் ஹேவண்டிஸ்.
* ஹைட்ரஜனுக்கு ஹேவண்டிஸ் வைத்த பெயர் எரியும் வாயு.
* ஹைட்ரஜன் என்பதன் பொருள் தண்ணீரை உருவாக்குவது.
* டியூட்ரியம் ஆக்சைடு என்பது கனநீராகும்.
* கனநீர் அணு உலைகளில் நியூட்ரான் வேகத்தை கட்டுப்படுத்தும் தணிப்பானாக பயன்படுகிறது.
* ஹைட்ரஜனின் எரிசக்தி 32 கலோரிகள்.
* எதிர்கால எரிபொருள் தேவையைச் சமாளிக்க ஹைட்ரஜனே அதிகம் உதவும்.

விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்கள்

விவசாயத்தில் முன்னிலை | சில விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்களை அறிந்து கொள்ளலாம்...
  1. நெல் - மேற்கு வங்காளம்
  2. கோதுமை - உத்திரப்பிரதேசம்
  3. கம்பு, சோளம் - மகாராஷ்டிரா
  4. கேழ்வரகு - கர்நாடகா
  5. கரும்பு - உத்திரப்பிரதேசம்
  6. புகையிலை - ஆந்திரப் பிரதேசம்
  7. பருத்தி, நிலக்கடலை - குஜராத்
  8. தேயிலை - அஸ்ஸாம்
  9. ரப்பர் - கேரளா
  10. காபி - கர்நாடகா
  11. பருப்பு வகைகள் - மத்திய பிரதேசம்
  12. தேங்காய் - கேரளா
  13. சணல் - மேற்கு வங்காளம்
  14. நறுமணப் பொருள்கள் - கேரளா

இந்திய தேசிய இயக்கம் - மிதவாதிகள் காலம்

* இந்திய தேசிய இயக்கம் 3 கட்டங்களைக் கொண்டது. அவை மிதவாதிகள் காலம், வீரத்தை நம்பியவர்கள் காலம், காந்திசகாப்தம் என அழைக்கப்படுகின்றன.
* மிதவாதிகள் காலம் 1885 முதல் 1905 வரை என்று வரையறை செய்யப்படுகிறது.
* 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை மும்மபயில் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம். இவர் ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரி.
* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி.
* இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் 1885-ல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 72 பேர், 'பிரேவ் 72' என அழைக்கப்பட்டனர்.
* காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாம் மாநாடு 1886-ல் கொல்கத்தாவில் நடைபெற்றது.
* மிதவாதிகளின் தலைவர் கோபாலகிருஷ்ணகோகலே.
* மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோகலே.
* கோகலே இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவினார்.
* 1887-ல் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் காங்கிரஸ் கூட்டத்தின் தலைவர் பத்ருதீன் தியாப்ஜி.
* காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் பதவி வகித்த முதல் ஆங்கிலேயர் ஜார்ஜ் யூல் (1904).

பொது அறிவு | வினா வங்கி

பொது அறிவு | வினா வங்கி 
1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது?
2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார்?
3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ஏவிய முதல் நாடு எது?
4. ஐ.நா. தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
5. பென்சிலின் மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
6. உலகில் முதன் முதலில் உயில் எழுதும் முறையை ஆரம்பித்தவர்கள் யார்?
7. விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தி தருவது எது?
8. காற்றின் ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
9. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது?
10. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது?
11. முதன் முதலில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியவர் யார்?
12. நெருப்பை அணைக்கப் பயன்படும் வாயு யாது?
13. கியூலெக்ஸ் கொசுக்கள் பரப்பும் வியாதி எது?
14. உலகின் முதல் பெண் இயக்குனர் யார்?
15. பறவைகளின் இறகுகளை நீரில் நனையாமல் காக்கும் சுரப்பி பொருள் எது?
16. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி செயலகம் எங்கு அமைந்துள்ளது?
17. பழனியின் பண்டைய காலப் பெயர் என்ன?
18. பயோனியர் விண்கலம் எந்த கிரகத்திற்கு அனுப்பப்பட்டது?
19. சணல் தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலம் எது?
20. டிப்தீரியா வியாதி எந்த உடலுறுப்பை தாக்கும்?
 விடைகள் : 
1. புலிகட் ஏரி, 2. வீரமாமுனிவர், 3. ஜெர்மனி, 4. அக்டோபர் 24, 5. ஒருவகை காளான்கள், 6. ரோமானியர்கள், 7. குளுக்கோஸ், 8. ஹைக்கோ மீட்டர், 9. திருவனந்தபுரம், 10. கைபர் கணவாய், 11. சாரன்ஜிலாரி (பிரான்ஸ்), 12. கார்பன்-டை- ஆக்சைடு, 13. யானைக்கால், 14. ஆலிஸ்கைபிரான்ஸ், 15. பிரீன் சுரப்பி, 16. புதுடெல்லி, 17. வையாபுரி, 18. வியாழன், 19. மேற்கு வங்காளம், 20. தொண்டை

INDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு

INDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு தகுதி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் எனப்படும் இந்திய எண்ணெய் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின், தெற்கு மண்டல கிளையில் தற்போது நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு 51 இடங்களும், ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு 46 இடங்களும், ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு ஒரு இடமும் உள்ளது. இந்த பணியிடங்கள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானதாகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்புடன், கனரக வாகன லைசென்ஸ் (ஹெவி) பெற்றவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் ஏவியேசன் பணிக்கு விண்ணப்பிக்கலாம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வு சோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-2-2018-ந் தேதியாகும். நகல் விண்ணப்பம் 16-2-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். 101 அப்ரண்டிஸ் பணிகள் மற்றொரு அறிவிப்பின்படி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 9 சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. 31-1-2018-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 3-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நகல் விண்ணப்பத்தை 17-2-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

join indian army | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்ப்பு

என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 44-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 55 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திரு மணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1993 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் 'சி' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழுத்தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடை பெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை Directorate General Recruiting/ RtgA, NCC Entry, West Block, R.K.Puram, New Delhi110066 என்ற முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். நகல் சென்றடைய கடைசி நாள் 15-2-2018. மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். சட்டம் படித்தவர்கள் சேரலாம் இதேபோல ஜேக் என்ட்ரி ஸ்கீம் (21) என்ற பயிற்சி சேர்க்கையின்படி சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதில் 7 ஆண்களும், 7 பெண்களும் சேர முடியும். இதில் சேர விரும்புபவர்கள் 1-7-2018 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எல்.எல்.பி. சட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வழியாக 13-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

POWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி.

POWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி மின்தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர் களுக்கு கேட் தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஜி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இது மத்திய மின்சாரத்துறையின் கீழ் செயல்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மின்பரிமாற்ற நிறுவனமாக திகழும் இந்த நிறுவனத்தில் தற்போது அசிஸ்டன்ட் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை கேட் 2017 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக்கல் பிரிவில் 100 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 20 பேரும், சிவில் பிரிவில் 20 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 150 இடங்கள் நிரப்பப்படுகின்றன. பி.இ., பி.டெக் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்து 2017-க்கான கேட்தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 31-12-2016-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பணிக்கேற்ற உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும். விருப்பமும் தகுதியும்உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.powergridindia.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

SBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை . கடைசி நாள் 12-2-2018.

SBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- ஸ்டேட் வங்கி முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் விரிவான வங்கிச் சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெறுவதை இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள். 2018-ம் ஆண்டில் பல ஆயிரம் பணியிடங்களை ஸ்டேட் வங்கி நிரப்ப இருக்கிறது. முதல்கட்டமாக சிறப்பு அதிகாரி தரத்திலான 121 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற உயர் பதவி பணியிடங்கள் இதில் உள்ளன. கிரெடிட் அனலிஸ்ட், அசெட் மேனேஜ்மென்ட், பிசினஸ் டெவலப்மென்ட் மார்க்கெட்டிங், ஹை வேல்யு அக்ரி பிசினஸ் டெவலப்மென்ட், ரிலேசன்ஷிப் மேனேஜ்மென்ட், புராடெக்ட் டெவலப்மென்ட், டேட்டா இன்டர்பிரிடேசன், டெக்னாலஜி, வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: மேலாளர் தரத்திலான பணிக்கு 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை மேலாளர் பணிக்கு 25 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30-6-2017-ந் தேதியை அடிப் படையாகக் கொண்டு கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., ஐ.சி.டபுள்யு.ஏ., ஏ.சி.எஸ்., ரூரல் மார்க்கெட்டிங், ரூரல் மேனேஜ்மென்ட், பி.ஜி. அக்ரிகல்சர் போன்ற முதுநிலை படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் காணலாம். தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர், பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். 4-2-2018-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் மும்பை முகவரிக்கு சென்றடைய கடைசி நாள் 12-2-2018-ந் தேதியாகும்.

டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் சுருக்கமாக டி.எம்.ஆர்.சி.எல். எனப் படுகிறது. நாட்டின் தலைமையிடமும், யூனியன் பிரதேச பெருநகரமுமான டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்டம் பிரமாண்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் தரத்திலான அதிகாரி பணிகள் மற்றும் நான்எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 1,896 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு ஆட்தேர்வின் அடிப்படையில் 88 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதிகபட்சமாக ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 440 இடங்களும், மெயின்டனர் பணிக்கு 1058 இடங்களும் உள்ளன. இவை தவிர அசிஸ்டன்ட் மேனேஜர், ஆபீஸ் அசிஸ்டன்ட், லீகல் அசிஸ்டன்ட் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: அசிஸ்டன்ட் மேனேஜர், ஜூனியர் என்ஜினீயர், மெயின்டனர் பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். கல்வித்தகுதி: பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் தரத்திலான எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காத்திருக்கின்றன. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மெயின்டனர் பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் போன்ற பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. தேர்வு செய்யும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் புகைப்படம், கையொப்பம் மற்றும் அவசியமான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26-2-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.delhimetrorail.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். சென்னை மெட்ரோ சென்னை மெட்ரோ நிறுவனத்தில் சைட் என்ஜினீயர் பணிக்கு 8 இடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றுகளுடன் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் 3-2-2018-ந் தேதி கோயம்பேடு மெட்ரோரெயில் நிறுவன வளாகத்தில் நடக்கிறது. காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பெயரை பதிவு செய்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம். இதுபற்றிய விவரங்களை http://chennaimetrorail.org என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

வறுமையில் வாடும் இந்தியா


வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்தியா 97-வது இடத்தில் இருப்பது தெரியவந்து உள்ளது. மனிதனுக்கு 4-6 வயதில் உள்ளவர்களுக்கு 1,950 கலோரியும், 10-12 வயதினருக்கு 1,970 கலோரியும், 13-15 வயதினருக்கு 2,060 முதல் 2,450 கலோரியும், 16-18 வயதினருக்கு 2,060 முதல் 2,640 கலோரியும் உணவு தேவைப்படுகிறது. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா. எனினும், இந்தியர்களில் 5-ல் ஒருவர் ஏழை. உலகில் 76 கோடி மக்கள் ஏழைகள். 80 கோடி பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வறுமை, சுதந்திர வாழ்வை பின்பற்றுவதில் இருக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. வறுமையை அளவிடுவதில் இருக்கும் குழப்பத்தைக் களையவும், அவை தொடர்பான தகுந்த பார்வையை பெறவும் சமீபத்திய இரண்டு அறிக்கைகள் முயற்சிக்கின்றன. முதலாவது சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணை (ஜி.எச்.ஐ.) எனும் அறிக்கை. அடுத்தது, உலக வங்கி வெளியிட்ட வறுமைக் குறைவு மற்றும் இந்தியாவின் வளத்தை பகிர்வதற்கான வழிமுறைகள் எனும் அறிக்கை. உலக நாடுகளில் நிலவும் வறுமையின் அளவை கணக்கிட உலகளாவிய பட்டினி அட்டவணை முயற்சி செய்கிறது. இந்த அட்டவணை மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு, இறப்பு விகிதம் ஆகியவற்றின் சதவீதம் எனும் 4 கூறுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறது. இந்த அட்டவணை 0 முதல் 100 வரையிலான அளவீடுகளை கொண்டிருக்கிறது. இதில் 100 என்பது முற்றிலும் பட்டினி எனும் நிலையையும், 0 என்பது முற்றிலும் பட்டினியின்மை எனும் நிலையையும் குறிக்கிறது. உலக நாடுகளும், பிரதேசங்களும் கூட பட்டினியின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. 9.9-க்கோ அல்லது அதற்கு குறைவாகவோ அளவீட்டின் கீழ் வரும் நாடுகள் குறைந்த அளவு பட்டினி கொண்டிருப்பவை என்று கருதப்படுகிறது. 10 முதல் 19.9 வரையிலான அளவீட்டை கொண்ட நாடுகள் நடுத்தரமானவை என்றும், 20 முதல் 34.9 அளவீட்டுக்குள் வருபவை தீவிர நிலையில் இருக்கும் நாடுகள் என்றும், 35 முதல் 49.9 வரையிலான அளவீட்டில் வரும் நாடுகள் அபாயகரமான நிலையில் இருப்பவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. அதற்கும் கீழ் அளவீடு கொண்ட நாடுகள் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கும் நாடுகள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய பட்டினி அட்டவணையில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. வறுமை அளவைக் குறைப்பதில் வளரும் நாடுகளுக்கு பிரதான பங்கு இருக்கிறது என்பது புலப்படுகிறது. 2000-ல் இருந்து இந்த நாடுகளில் வறுமை அளவு 29 சதவீதம் குறைந்து இருக்கிறது. 2017 அட்டவணையில் சஹாராவின் தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளும், தெற்காசியாவும் அதிகபட்ச ஜி.எச்.ஐ. புள்ளிகள் கொண்டிருக்கின்றன (முறையே 30.1 மற்றும் 29 புள்ளிகள்). இந்த அட்டவணையில் பரிசீலிக்கப்பட்டிருக்கும் 118 நாடுகளின் பட்டியலில் இந்தியா படுமோசமாக 97-வது இடத்தை பிடித்து இருக்கிறது. அதாவது, இன்னமும் 'தீவிர' நிலையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தான் நாம் இருக்கிறோம். பட்டினியுடன் தொடர்புடைய வறுமையானது, சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியில் உள்ள மிகச் சிக்கலான பிரச்சினைகளில் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி அனுபவத்தில் உலக வங்கி அறிக்கை கவனம் செலுத்துகிறது. நான்கு முக்கிய விஷயங்கள் இதில் வெளிப்படுகின்றன. முதலாவதாக 1994-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் வறுமை கணிசமான அளவு குறைந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே கால கட்டத்தில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் சதவீதம் 45-ல் இருந்த 22 சதவீதமாக குறைந்து உள்ளது. அதாவது, 13.3 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். எனினும் இந்தியாவின் வளர்ச்சி அப்படி ஒன்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும் இந்த அறிக்கை சொல்கிறது. இரண்டாவதாக, இந்தியாவில் குறிப்பிட்ட சில தரப்பு மக்களின் நிலை, பிற மக்களின் நிலையுடன் ஒப்பிடுகையில் படுமோசமாக இருக்கிறது. 2012-ம் ஆண்டு நிலவரப்படி வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களில் 43 சதவீதம் பேர் பழங்குடியினர், 29 சதவீதம் பேர் பட்டியல் இனத்தவர்கள். மூன்றாவதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் வறுமை நிரந்தரமாக இருப்பதாக தோன்றுகிறது. முற்றிலும், வறுமை எனும் அடிப்படையில் இந்தியாவில் முதல் இடங்களில் இருக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் (6 கோடி பேர் ஏழைகள்), பீகார் (3.6 கோடி பேர்), மத்தியப்பிரதேசம் (2.4 கோடி பேர்) போன்ற மாநிலங்கள் முதன்மையான இடத்தில் இருந்தன. முதல் 7 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் ஏழைகளில் 62 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். வறுமை எனும் விஷயத்தில் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடும் முக்கியமானது. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவர் ஏழை. ஒவ்வொரு ஐந்து பேரிலும் 4 பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். அத்துடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் வறுமை விகிதம் 7 சதவீதம் தான். வறுமையின் அளவு குறைவதற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமான இன்னொரு புரிதல். வளர்ச்சி விகிதத்தில் பின்தங்கி இருக்கும் மாநிலங்களின் தனிநபர் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி குறைவாக இருப்பதுடன் வறுமையும் அதிகமாக உள்ளது. நான்காவதாக, வளர்ச்சியும், மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிகமுக்கியமானவை. ஆகையால் அடுத்த 15 ஆண்டுகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் முதலாவது, இரண்டாவது இலக்குகளில் மேம்பாடு காண்பதே இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இனிவரும் எதிர்காலத்தில் வறுமையை இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் முயற்சி செய்திடல் வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL

மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL ! YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos 

SAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..



ஆசிரியர்களுக்கான ஒரு தளம்! YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. ஒரு வாரத்தில் 1300 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம் சார்ந்த காணொளிகள், EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link http://www.youtube.com/user/smspms2020

கலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..

30 வீடியோ பதிவுகள் தொகை நுண் கணிதத்திலும் (Integral calculus), 10 வீடியோ பதிவுகள் தாவரவியலிலும் (Transport mechanism in plants), நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மொத்த பதிவுகள் 440 ஆகி விட்டது...!!! நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....! நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்...! ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீனம் தமிழ் குடும்பத்தினருக்கு இனியும் தாங்க முடியாத பாரமாக இருக்கக் கூடாது. ஆட்டத்தின் போக்கினை மாற்றும் வலிய சக்தி, கலாபாரதி..... இதோ இங்கே இருக்கின்றது. தமிழத்தின் அறிவுமகள் அனிதாவின் நிகழ்வு போன்று இன்னொன்று நடக்க நாம் அனுமதிக்க கூடாது. மாணவர்களுக்கு தேர்வும் நெருங்கி வருகின்றது...! மாணவர்களுக்கு வெற்றி கிட்டட்டும்...! மக்களின் கலாபாரதியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துகள் கோடி...! அன்புடன் யோகராஜன்... கலாபாரதி அகடமி. http://www.youtube.com/c/KalabharathiAcademy

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம் | பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறைதேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வு,மார்ச், 1ல் துவங்குகிறது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில்,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்த வாரம் துவங்குகிறது.வரும், 2ம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும், செய்முறைதேர்வைதுவங்கி, பிப்., 16க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய,தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வை முறைகேடின்றி நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

900 HIGH SCHOOL HM POST VACCANT | 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி

900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி 'ஈகோ' பிரச்னையால் கிடப்பில் பட்டியல் | ஆசிரியர்கள், அதிகாரிகளின் 'ஈகோ' பிரச்னையால் 900 பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பமுடியவில்லை.அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரியாகவும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. நேரடி முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியராகஇருந்து, முதுநிலைபதவி உயர்வு பெற்றவர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக வர முடியாது என்ற விதி, பல ஆண்டுகளாகபின்பற்றப்பட்டது.ஆனால், 2008ல், இந்த விதிக்கு மாறாக, முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.இதை எதிர்த்து,பதவி உயர்வு பெற்றபட்டதாரி ஆசிரியர்மற்றும் தமிழாசிரியர்கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், 'பதவி உயர்வு பெற்று, ஐந்து ஆண்டுகளை தாண்டிய முதுநிலை ஆசிரியர்களுக்கு, உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி வழங்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.மேலும், இந்த பிரச்னையில் இறுதி முடிவு எடுக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுவிசாரணை நடத்தவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக உள்ள, 900 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இடங்களை நிரப்ப, 3,000 பேர் இடம் பெற்ற, தோராய பட்டியலை, கடந்த மாதம், பள்ளிக்கல்வி இயக்குனரகம்தயாரித்தது. அதில், முதுநிலை ஆசிரியர்கள், 2,000க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றனர். அதற்கு, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.எனவே, மீண்டும் பதவி உயர்வு பிரச்னை, உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தயாரித்த பட்டியலுக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், பதவி உயர்வு நடவடிக்கை மீண்டும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தன்னிச்சையான முடிவுஇது குறித்து, பதவி உயர்வு பெற்ற, பட்டதாரிஆசிரியர் மற்றும்தமிழாசிரியர் கழகம் சிறப்புதலைவர், அண்ணாமலை கூறியதாவது:அரசின் பணியாளர் விதிகளின்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, நேரடி பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஆனால், ஒரு முறை பதவி உயர்வு பெற்ற, முதுநிலை ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம் முயற்சிக்கிறது.முதுநிலை பதவி உயர்வு பெற்று, ஐந்து ஆண்டுகளைதாண்டியவர்களுக்கும், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தர, அவர்களின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்படுகின்றன.இது, விதிகளுக்குமுரணானது. விதிப்படி பதவி உயர்வு வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், பள்ளிக்கல்வித் துறை மவுனமாக உள்ளது.அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகளால், 900 உயர்நிலைப் பள்ளிகளில், தலைமைஆசிரியர்களை நியமிக்கமுடியவில்லை. அதனால்,நிர்வாகப் பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, January 28, 2018

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும் - புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்புபணி நடந்துவருகிறது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம்,கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலகவளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார். பின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும். ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,'' என்றார்.  

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் 30-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும். தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க முதல்கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறுவதற்காக 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

CURRENT AFFAIRS 2018-01-13-19 | கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | 
  • சென்னையில் உள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் வீடு, டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். (ஜனவரி 13)
  • தமிழகத்தில் டெல்டா பயிர்களை காப்பாற்ற காவிரியில் உடனடியாக 7 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். (ஜனவரி 13)
  • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மோதலில் சமரச முயற்சியில் பார் கவுன்சில் இறங்கியது. இதுதொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. (ஜனவரி 13)
  • அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் மீது அவதூறு கருத்து கூறினார் என்ற குற்றச்சாட்டால் டிரம்புக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போர்க்கொடி தூக்கின. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. (ஜனவரி 13)
  • எழுத்தாளர் ஞாநி சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. ஞாநி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். (ஜனவரி 15)
  • இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நேட்டன்யாஹூ, பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகள் இடையே வேளாண்மை, விமானப் போக்குவரத்து உள்பட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (ஜனவரி 15)
  • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஜனவரி 15)
  • நியூசிலாந்தின் மான்கானுய்யில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. (ஜனவரி 15)
  • ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 38 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 90 பேர் படுகாயம் அடைந்தனர். (ஜனவரி 15)
  • டிசம்பர் மாதத்தில் கம்பி, தகடு உள்ளிட்ட உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி 9.64 லட்சம் டன்னாக உயர்ந்தது. (ஜனவரி 15)
  • புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. (ஜனவரி 16)
  • உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 571 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவை முட்டியதில் 40 வீரர்கள் காயமடைந்தனர். (ஜனவரி 16)
  • நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். (ஜனவரி 16)
  • டிசம்பர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 12 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1488 கோடி டாலராக அதி கரித்தது. (ஜனவரி 16)
  • உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். (ஜனவரி 16)
  • ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம் : ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாப்புவா நியூ கினியாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. (ஜனவரி 16)
  • 4 நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி சந்திப்பு : தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 4 சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்தித்து உரையாடினார். ஆனால், பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று அட்டார்னி ஜெனரல் கூறினார். (ஜனவரி 16)
  • கடந்த 2017-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் மத்திய அரசுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி அன்னியச் செலாவணி வருவாய் கிடைத்தது. (ஜனவரி 17)
  • ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுகோய் போர் விமானத்தில் பறந்தார். தனது 45 நிமிட போர் விமான பயணம் அற்புதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். (ஜனவரி 17)
  • திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவில் 27-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே. ஜோதி அறிவித்தார். (ஜனவரி 18)
  • 'பத்மாவத்' திரைப்படத்துக்கு ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. (ஜனவரி 18)
  • அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த 'அக்னி-5' ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. (ஜனவரி 18)
  • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுரேஷ் குண்டு பாய்ந்து பலியானார். (ஜனவரி 18)
  • எதிர்வரும் 2018- 2019 மத்திய பட்ஜெட்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு கணிசமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. (ஜனவரி 18)
  • டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மேலும் 29 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. (ஜனவரி 18)
  • கடந்த ஆண்டின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தேர்வு செய்தது. ஐ.சி.சி. கனவு டெஸ்ட், ஒருநாள் போட்டி அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார். (ஜனவரி 18)
  • மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தையும் சேர்த்து கேள்வித்தாள்களைத் தயாரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். (ஜனவரி 18)
  • தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆக அதிகரிக்கப்பட்டது. (ஜனவரி 19)