TNPSC - LAB ASSISTANT EXAM. HALL TICKET DOWNLOAD


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 02/2018 நாள். 25.01.2018-ன்படி 56 பணியிடங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர் (Forensic Science Department) பதவிக்கான எழுத்துத்தேர்வு 06.05.2018 அன்று முற்பகல் மட்டும் சென்னை உட்பட 8 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள தகுதியான விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். | The Commission has issued Notification No.02/2018 dated: 25.01.2018, for the Written Examination for 56 vacancies in the post of Laboratory Assistant in Forensic Science Department for the year 2016-2018 in the Tamil Nadu Forensic Science Subordinate Service. The examination which is scheduled to be held on 06.05.2018 FN at 8 district centres including Chennai. The Memo of admission (Hall Ticket) for the eligible candidates has been hosted in the Commission's website (www.tnpsc.gov.in and www.tnpscexams.net). If there is any doubt in downloading Hall Ticket, the candidate may got clarified from the Commission's e-mail ID contacttnpsc@gmail.com or the Commission's Grievance Cell toll free number 1800 425 1002.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு



அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசின் முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் நேற்று வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 10 பிரிவுகள் உள்ளன. இது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இந்த பாடப்பிரிவுகளில் 1,020 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டு சட்டப்படி அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை-2018 ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வில் சேர்த்து நடத்த வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்து இருந்தார். அதை அரசு நன்கு பரிசீலனை செய்து என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்த இந்த கல்வியாண்டு (2018-2019) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் இனி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த இருக்கிறது.

தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் DOWNLOAD.


தொடக்கக்கல்வித்துறை | Student Cumulative Record | மாணவர் சேர்க்கை வின்ணப்பம் - DOWNLOAD. DOWNLOAD   DOWNLOAD 

CLASS 10 SOCIAL SCIENCE EM MODEL QUESTION PAPERS MARCH 2018 - T.S.SARAVANAN



CLASS 10 SOCIAL SCIENCE EM MODEL QUESTION PAPERS MARCH 2018 - T.S.SARAVANAN S/O P.SIVABALAN (Late) B.Sc(Chem),B.Ed.,M.A(Eng.Lit),M.Phil(Eng.Lit),B.A(His) 17/1-239/72 A- 5,KARUMALAIKOODAL, NEHRU NAGAR, METTUR DAM (R.S), SALEM (D.T), - 636402 EMAIL; sharavananvepp@gmail.com For conversation: 8675509227 DOWNLOAD


CLASS 10 SCIENCE TM MARCH 2018 PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY I.CHINNAPPARAJ,



CLASS 10 SCIENCE TM MARCH 2018 PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY I.CHINNAPPARAJ, MSC.,M.PHIL.,B.ED., B.T-ASST – SCIENCE DE BRITTO HR SEC SCHOOL DEVAKOTTAI – 630303. SIVAGANGAI DISTRICT. DOWNLOAD

CLASS 10 SCIENCE EM PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY M.G RAYMOND & JOHNSON PRABHU,



CLASS 10 SCIENCE EM PUBLIC EXAMINATION 2017 -18 SCIENCE - KEY ANSWERS PREPARED BY M.G RAYMOND & JOHNSON PRABHU, ST.PAUL'S MAT. HR. SEC. SCHOOL, BLOCK-4, NEYVELI. 9442980841 /9629705161 DOWNLOAD

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர். 

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல்! ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் திறந்ததும் அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கூறினார்

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு உத்தரவு


ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு உத்தரவு | தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 7 சதவீதமாக உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதேபோன்று ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:- ஓய்வு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இருந்து வரும் அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும். 1.1.2018 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கான நிலுவைத்தொகை ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது? மே மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோனை.


ஆசிரியர் இடமாறுதல்  ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது? | தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், கல்வி ஆண்டு துவக்கத்தில், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 2017க்கு முன் வரை, ஜூலை மற்றும் ஆகஸ்டில், இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. 2017 முதல், கோடை விடுமுறையின் போதே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளதால், மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியும் பாதிக்கப்படாமல், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த முறை, அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, கவுன்சிலிங்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் - தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம் | பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிந்து, நேற்று முன்தினம் முதல், விடைத்தாள் திருத்தும் துவங்கியுள்ளது. முதல் நாளில், தலைமை விடை திருத்துனர்கள், விடைத்தாள்களை திருத்தம் செய்தனர்.அப்போது, அரசு தேர்வுத்துறை வழங்கிய, புதிய கட்டுப்பாட்டால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவது தெரிய வந்தது.அதாவது, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்யும் போது, விடையையும், அதற்கான குறியீட்டையும் சேர்த்து எழுத வேண்டும்.அவ்வாறு, எழுதாதோருக்கு மதிப்பெண் வழங்க வேண்டாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு குறித்து, வினாத்தாளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் கவனக்குறைவால், விடை அல்லது குறியீட்டை மட்டுமே எழுதியிருந்தனர்.இது குறித்து, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். இந்த பிரச்னை குறித்து, நமது நாளிதழிலும், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, விடை திருத்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.ஒரு மதிப்பெண், அப்ஜெக்டிவ் வகை வினாக்களில், விடைக்கான குறியீடு அல்லது விடையில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதியிருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.விடைக்குறியீடு மற்றும் விடை என, இரண்டையும் எழுதி, அதில் ஒன்று, விடைக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டால், அந்த கேள்விக்கு, பூஜ்யம் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் | பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் | பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே விதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்த பள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்க முடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும் பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு புதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை!



தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை! | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், "தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் வரும்போது, தங்களது உடல்நிலை, குடும்ப சூழ்நிலை காரணமாகச் சம்பந்தப்பட்ட, தகுதியுள்ள ஆசிரியர்கள், தங்களுக்கான பதவி உயர்வை தற்காலிகமாக வேண்டாம் என்று கூறலாம். இதனால் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும். அதேசமயம், ஒவ்வோர் ஆண்டு தயாரிக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இவர்கள் பெயர் முதலாவதாக இருக்கும். அவர்களது பெயருக்கு அருகிலேயே மூன்று ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என எழுதி வைத்திருப்பார்கள். பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும்போது, பதவி உயர்வு வேண்டாம் என்பவர்கள். கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு செய்வதாக எழுதித் தர வேண்டும். 2015-16 ம் கல்வியாண்டுக்கான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2015 மே மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் காலதாமதமாக 17.8.2015-ம் தேதி நடைபெற்றது. அப்போது சிலர் தங்களது சூழ்நிலை காரணமாகப் பதவி உயர்வை வழக்கத்தின்படி தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு வேண்டாம் என எழுதிக் கொடுத்துள்ளார்கள். எழுதிக் கொடுத்த 2015-16, 2016-17, 2017-18 ஆகிய மூன்று கல்வியாண்டு இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 17.8.2015 தேதியன்று 3 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு துறப்பு செய்தவர்களுக்கு வரும் மே மாதம் நடைபெறும் 2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் பதவி உயர்வு தர வேண்டும். ஆனால், இவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு பதவி உயர்வுக்குதான் அழைக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கை தற்போது வந்துள்ளது. அரசாங்கத்தின் உத்தரவு 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என்று இருந்தாலும், 4 கல்வியாண்டுகள் கழித்தே பதவி உயர்வு வழங்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பதவி உயர்வு பட்டியல் ஜனவரி 1-ம் தேதி தயாரிக்கப்படும். எனவேதான் ஆசிரியர்கள் 3 ஆண்டு பதவி உயர்வு துறப்பு என்று எழுதிக் கொடுத்தாலும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 17.8.15 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் 3 ஆண்டுகள் பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தவர்கள் 17.8.2018-க்குப் பின் வரும் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மே மாதம் நடைபெறும் கலந்தாய்விலிருந்து இதை நடைமுறைப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தொடக்கக் கல்வி இயக்குநர் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

பள்ளி கட்டணம் 16க்குள் விண்ணப்பிக்கலாம்


பள்ளி கட்டணம் 16க்குள் விண்ணப்பிக்கலாம் | தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்திற்காக, வரும், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் செயல்படும், தனியார் சுயநிதி பள்ளிகளின்கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, அரசு சார்பில், சுயநிதி கல்வி கட்டண கமிட்டி செயல்படுகிறது. இந்த கமிட்டியின் சார்பில், வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்கு, பல பள்ளிகள் விண்ணப்பிக்கவில்லை. அந்த பள்ளிகளின் பட்டியலை எடுத்து, வரும், 16ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வி கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதற்கான பட்டியல் http://tamil nadufeecommittee.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விடைத்தாள் முறைகேடு புதிய கமிட்டியால் சர்ச்சை


விடைத்தாள் விற்பனை முறைகேட்டில் தொடர்புடைய, பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், நாளை ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்காக, புதிய கமிட்டி அமைத்திருப்பது, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கோவை, பாரதியார் பல்கலையில், மாணவர்கள் தேர்வு எழுதும் விடைத்தாள்கள், டன் கணக்கில் சேரும்போது, அவை முறைப்படி, ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்த, 2015ல்,150 டன் விடைத்தாள், முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக புகார் கிளம்பியது. இதில், பல்கலை நிர்வாகத்துக்கு, 17 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.முறைகேடு தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கிளாடியஸ் லீமா ரோஸ் மற்றும் இரண்டு அலுவலக பணியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். அப்போது, துணைவேந்தராக இருந்த ஜேம்ஸ் பிச்சை உத்தரவின்படி, இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்கு, விசாரணை கமிட்டி அமைக்கப் பட்டது. இதன்பின், மூன்றாண்டுகளில், நான்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், விசாரணை விபரங்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், கிளாடியஸ் லீமா ரோஸ்பணிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. முறைகேட்டில் முக்கிய தொடர்புடைய அலுவலர் மீது எந்த நடவடிக்கையும்எடுக்காமலிருப்பது, பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், கண் துடைப்புக்காக, மீண்டும் புதிய கமிட்டி ஒன்றை அமைத்து, விசாரணையை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமிட்டிகள் அமைத்தே, காலத்தை நகர்த்துவது, இந்த முறைகேட்டை மூடி மறைப்பதற்கான முயற்சி என, பல தரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், ''தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கிளாடியஸ் லீமா ரோஸ், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ''விடைத்தாள் விற்பனை தொடர்பாக, அவருக்கு சார்ஜ் மெமோ வழங்கி, ஓய்வூதிய, பணிக்கால பணப்பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். பழைய கமிட்டியின் அறிக்கையில் திருப்தி இல்லாததால், புதிய கமிட்டியை அமைத்துள்ளோம்,'' என்றார்.

CLASS 11 CHEMISTRY TM APRIL - 2018 FULL KEY ANSWER (TAMIL MEDIUM) P.IYAPPAN M.SC., B.ED., M.PHIL., P.G TEACHER IN CHEMISTRY K.N. HR.SEC. SCHOOL KAMUTHI. RAMANATHAPURAM (DT)


CLASS 11 CHEMISTRY TM APRIL - 2018 FULL KEY ANSWER (TAMIL MEDIUM) P.IYAPPAN M.SC., B.ED., M.PHIL., P.G TEACHER IN CHEMISTRY K.N. HR.SEC. SCHOOL KAMUTHI. RAMANATHAPURAM (DT) DOWNLOAD

CLASS 12 COMPUTER SCIENCE TM - EM PUBLIC EXAMINATION MARCH 2018 - ONE MARK KEY ANSWER MANIVANNAN C,M.Sc.,B.Ed., - GHSS VALIKANDAPURAM, PERAMBALUR DIST


CLASS 12 COMPUTER SCIENCE TM - EM PUBLIC EXAMINATION MARCH 2018 - ONE MARK KEY ANSWER - MANIVANNAN C,M.Sc.,B.Ed., - GHSS VALIKANDAPURAM, PERAMBALUR DISTDOWNLOAD

CLASS 12 COMPUTER SCIENCE TM FULL ANSWER KEY MARCH 2018 TAMIL MEDIUM ONE MARK WITHIN BOOK PAGE BY K.JAISANKAR MA,BED,DCTTC,PGDCA,. COMPUTER INSTRUCTOR . ANNAI ERICA HR SEC SCHOOL P.K.AGARAM TRICHY DT. CELL 9943038332.


CLASS 12 COMPUTER SCIENCE TM FULL ANSWER KEY MARCH 2018 TAMIL MEDIUM ONE MARK WITHIN BOOK PAGE BY K.JAISANKAR MA,BED,DCTTC,PGDCA,. COMPUTER INSTRUCTOR . ANNAI ERICA HR SEC SCHOOL P.K.AGARAM TRICHY DT. CELL 9943038332. DOWNLOAD

CLASS 11 COMPUTER SCIENCE EM MODEL QUESTION PAPER MARCH 2018 - Pradeep Raja - rpradeepbca@gmail.com


CLASS 11 COMPUTER SCIENCE EM MODEL QUESTION PAPER MARCH 2018 - Pradeep Raja - rpradeepbca@gmail.com DOWNLOAD - FULL TEST  DOWNLOAD FULL TEST - BOOK BACK

CLASS 11 COMPUTER SCIENCE EM STUDY MATERIALS PREPARED BY S.J.SUNESH COMPUTER SCIENCE INSTRUCTOR EXCEL HIGHER SECONDARY SCHOOL THIRUVATTAR KANYAKUMARI DISTRICT MOB: 8903759872 EMAIL : sunesh.stanly@gmail.com


CLASS 11 COMPUTER SCIENCE EM STUDY MATERIALS PREPARED BY S.J.SUNESH COMPUTER SCIENCE INSTRUCTOR EXCEL HIGHER SECONDARY SCHOOL THIRUVATTAR KANYAKUMARI DISTRICT MOB: 8903759872 EMAIL : SUNESH.STANLY@GMAIL.COM  DOWNLOAD

TRB ECONOMICS PG TRB ECONOMICS MODEL QUESTIONS AND ANSWERS ACHAMILLAI EDUCATIONAL TRUST - AET ACHAMILLAI 9786226622


TRB ECONOMICS PG TRB ECONOMICS MODEL QUESTIONS AND ANSWERS ACHAMILLAI EDUCATIONAL TRUST AET ACHAMILLAI 9786226622   DOWNLOAD

அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்.


அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சொந்த செலவில் புதிய சீருடை வாங்கிக்கொள்ள வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் | தமிழக அரசு பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய சீருடைகளை, அவர்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, இல வச சீருடைகள் லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறத்தில் வழங்கப்படுகிறது. 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் அதே நிறத்திலான சீருடைகளை தங்கள் சொந்த செலவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நலத்துறைகளின்கீழ் செயல்படும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இலவச சீருடை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தனித் தனி சீருடையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகப்படுத்தியது. 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சாம்பல் நிற முழுக்கால் சட்டை, இளஞ்சிவப்பு கோடிட்ட மேல் சட்டை, மாணவியருக்கு சாம்பல் நிற கோட் அறிமுகமானது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கரு நீல முழுக்கால் சட்டை, கருநீல நிற கோடிட்ட மேல் சட்டை, மாணவியருக்கு கருநீல கோட் கொண்ட சீருடை அறிமுகமானது. இந்நிலையில், 9 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை சொந்த செலவில் சீருடை வாங்கிக்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் தற்போது சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.  DOWNLOAD


CLASS 12 BOTANY TM ANSWER KEY MARCH 2018 DOWNLOAD | T.VENKATESH KUMAR - TVKBIOLOGY.BLOGSOPT.IN- 9894925571


CLASS 12 BOTANY TM ANSWER KEY MARCH 2018 DOWNLOAD - T.VENKATESH KUMAR - TVKBIOLOGY.BLOGSOPT.IN- 9894925571 DOWNLOAD

CLASS 11 COMPUTER SCIENCE EM - MODEL QUESTION PAPER S NARENDIRAN


CLASS 11 COMPUTER SCIENCE EM - MODEL QUESTION PAPER S NARENDIRAN DOWNLOAD

CLASS 12 COMPUTER SCIENCE TM-EM MARCH 2018 1 MARK ANSWER KEY - R.PRADEEP M.C.A.,B.ED., PG ASST IN COMPUTER SCIENCE, LOTUS MATRIC HR SEC SCHOOL, KAKAPALAYAM, SALEM-637504.


CLASS 12 COMPUTER SCIENCE TM-EM MARCH 2018 1 MARK ANSWER KEY - R.PRADEEP M.C.A.,B.ED., PG ASST IN COMPUTER SCIENCE, LOTUS MATRIC HR SEC SCHOOL, KAKAPALAYAM, SALEM-637504. DOWNLOAD

CLASS 11 BIOLOGY ZOOLOGY FULL PORTION NEW MODEL QUESTIONS PAPER TAMIL - ENGLISH MEDIUM BY N.RAJKUMAR


CLASS 11 BIOLOGY ZOOLOGY FULL PORTION NEW MODEL QUESTIONS PAPER TAMIL - ENGLISH  MEDIUM BY N.RAJKUMAR DOWNLOAD

CLASS 10 ENGLISH PAPER 1 ANSWER KEY MARCH 2018 - SURA BOOK


 CLASS 10 ENGLISH PAPER 1 ANSWER KEY MARCH 2018 - SURA BOOK DOWNLOAD

CLASS 10 TAMIL PAPER 2 ANSWER KEY MARCH 2018 - SURA BOOK


CLASS 10 TAMIL PAPER 2 ANSWER KEY MARCH 2018 - SURA BOOK  DOWNLOAD

CLASS 10 TAMIL PAPER 1 ANSWER KEY MARCH 2018 - SURA BOOK


CLASS 10 TAMIL PAPER 1 ANSWER KEY MARCH 2018 - SURA BOOK DOWNLOAD

ப்ளஸ் டூ முடித்ததுமே வேலைபெறும் வகையில் புதிய பாடத்திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன்தகவல்


ப்ளஸ் டூ முடித்ததுமே வேலைபெறும் வகையில் புதிய பாடத்திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன்தகவல் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில், ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை இன்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செயல்வழி கற்றல்மூலம்அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வதுகுறித்து நடத்தப்படும் இந்த பயிற்சிப் பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளதாகவும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இவை உதவும் என்றார்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, "ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும் என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 1, 6,9,11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டுஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும். வர இருக்கிறபுதிய பாடத்திட்டம், 12-ம் வகுப்பு முடித்தவுடன் வேலை பெறும் வகையில் தரமான பாடத்திட்டமாக அமையும். இந்த ஆண்டு, தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என்றும்,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி, நீட் தேர்வுக்குப் பயிற்சிபெற வழிவகை செய்துள்ளதாகவும் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும் என்றார். பத்திரிகையாளர்கள் பேட்டியின்போது, "முறைகேடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்றும், பகுதி நேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்த ஆண்டு நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார். 

பள்ளிக்கல்வித்துறையில் உருவானது S.S.A.S திட்டம் -சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா



மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் செயல்படுகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார். DOWNLOAD

CLASS 11 CHEMISTRY EM MARCH 2018 TYPE A AND TYPE B ENGLISH MEDIUM ANSWER KEY DOWNLOAD- P.ARUMAIRAJ M.SC, CSIR REACH MATRIC HR SEC SCHOOL CHETTIMEDU.


CLASS 11 CHEMISTRY EM MARCH 2018 TYPE A AND TYPE B ENGLISH MEDIUM ANSWER KEY DOWNLOAD. PREPARED BY P.ARUMAIRAJ M.SC, CSIR REACH MATRIC HR SEC SCHOOL CHETTIMEDU. DOWNLOAD A TYPE  DOWNLOAD B TYPE

CLASS 11 CHEMISTRY TM MARCH - 2018 ANSWER KEY. RAVI. N and செ. அருள்நம்பி



CLASS 11 CHEMISTRY TM MARCH - 2018 ANSWER KEY. RAVI. N LECTURER IN CHEMISTRY GOVT. GIRLS HR. SEC. SCHOOL PUDUCHERRY - 09 & செ. அருள்நம்பி, முதுகலை வேதியியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, லெப்பைக்குடிக்காடு, பெரம்பலூர் மாவட்டம் – 621 108  DOWNLOAD

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளில் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி-வேதியியல், சிறப்புத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. மே 16-ல் முடிவு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 7-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 18-ம் தேதியும், மார்ச் 16-ல் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வருகிற 20-ம் தேதியும் நிறைவடைகின்றன. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

THODUVANAM SUBJECT WISE SCHEDULE - CRASH COURSE SATELLITE | மாணவர்களுக்கு 412 தொடுவானம் மையங்களிலும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.


போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் அரசு / அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு 412 தொடுவானம் மையங்களிலும் ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி 10/11/12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முதற்கட்டமாக தொடங்கப்பட்ட 100 தொடுவானம் மையங்களில்  இயற்பியல் / வேதியியல் / விலங்கியல் / தாவரவியல் பாடங்களில் முந்தைய வகுப்புகளின் தொடர்ச்சியும், மீதமுள்ள 312 தொடுவானம் மையங்களில், பாடப்பகுதிகள் புதிதாக தொடக்கத்தில் இருந்தும் கொடுக்கப்படும்.  DOWNLOAD

தமிழ்நாடுபொறியியல் சேர்க்கை– 2018 | இவ்வாண்டுபொறியியல் கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவுசெய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்.. முழு விவரம் ..


தமிழ்நாடுபொறியியல் சேர்க்கை– 2018 12-வதுவகுப்பு இறுதித்தேர்வுஎழுதிமுடிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு இவ்வாண்டுபொறியியல் கலந்தாய்வுசேர்க்கைமுழுமையாக இணையதளத்தின் மூலம் நடக்கவிருக்கிறது. விண்ணப்பம் பதிவுசெய்தல்,விண்ணப்பத்திற்கானபணம் செலுத்துதல்,கலந்தாய்விற்காக உங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை வரிசைப்படி பதிவுசெய்தல், இட ஒதுக்கீடுசெய்தல், இட ஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் ஆகியஅனைத்தும் இணையதள மூலமாகவே நடைபெறும். தமிழ்நாடுபொறியியல் சேர்க்கையின் இணையதளத்தை உங்கள் வீட்டிலிருந்தோ, அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆயினும் மாணவர்களின் நலன்கருதிதமிழ்நாடுபொறியியல் சேர்க்கை உதவிமையங்கள்  (மாவட்டத்திற்குகுறைந்ததுஒன்றுவீதம்)நிறுவப்பட்டுள்ளன. இந்தஉதவிமையங்கள் மூலம் நீங்கள் இணையஉதவிமற்றும் சேவைகளை இலவசமாகப் பெறலாம்.  DOWNLOAD

டான்செட் தேர்வுக்கு ஏப்.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


'டான்செட்' தேர்வுக்கு ஏப்.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மூலம் நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்து கிறது. வரும் கல்வியாண்டு (2018-19) மாணவர் சேர்க்கைக்கான டான்செட் தேர்வுகள் மே 19, 20-ல் நடக்க உள்ளன. மே 19 காலை எம்சிஏ படிப்புக்கான தேர்வு, பிற்பகல் எம்பிஏ நுழைவுத் தேர்வு, 20-ம் தேதி காலை எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் தேர்வு நடத்தப்படும். இதற்கு இணையதளம் (www.annauniv.edu) மூலம் ஏப்ரல் 23 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்துவிட்டது FIND TEACHER POST ANDROID MOBILE APP … தனியார் பள்ளிகளில் வேலைதேடும் ஆசிரிய பட்டதாரிகளுக்கான FIND TEACHER POST ன் ANDROID MOBILE க்கான APP வெளியிடப்பட்டுள்ளது.


வந்துவிட்டது… தனியார் பள்ளிகளில் வேலைதேடும் ஆசிரிய பட்டதாரிகளுக்கான FIND TEACHER POST ன் ANDROID MOBILE க்கான APP… தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரிய பட்டதாரிகளே... தனியார் பள்ளிகளின் தாளாளர்களே.. முதல்வர்களே... உங்கள் அனைவரின் தேவையையும் மிக சுலபமாக்கிட FIND TEACHER POST தனது புதிய ANDROD APP யை வெளிட்டுள்ளது. அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் தங்களது செல்லிடபேசியில் வைத்திருக்கவேண்டிய மிக முக்கியமான APP இதுவாகும். ஏற்க்கனவே FIND TEACHER POST ல் பதிவு செய்துள்ளவர்களும் கண்டிப்பாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்துகிறோம். FTP ன் பழைய APP பயன்படுத்துபவராக இருந்தால் அதை UNINSTALL செய்து விட்டு புதிய APP யை INSTALL செய்து கொள்ளவும். நீங்கள் செய்ய வேண்டியவை: • உங்களது MOBILE PHONE ல் GOOGLE PLAY STORE க்கு சென்று findteacherpost என Type செய்து FIND TEACHER POST – APP யை INSTALL செய்து கொள்ளவும் (http://ftpa.in/appk).உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள் (FTP APP LINK: http://ftpa.in/appk)  அவர்களையும் பயன்பெற வையுங்கள்.  DOWNLOAD | DEMO PDF DOWNLOAD

G.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!


 G.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு! DOWNLOAD

CLASS 11 CHEMISTRY TM LESSON WISE SHORT HINDS- TAMIL MEDIUM PREPARE BY P.KUMARESAN.M.SC .B.ED.M.PHIL PG.ASST.IN CHEMISTRY TNMM GHSS KILKUVALAIVEDU VANDAVASI T.K TIRUVANNAMALAI DT 7708946919


CLASS 11 CHEMISTRY TM LESSON WISE SHORT HINDS- TAMIL MEDIUM PREPARE BY P.KUMARESAN.M.SC .B.ED.M.PHIL PG.ASST.IN CHEMISTRY TNMM GHSS KILKUVALAIVEDU VANDAVASI T.K TIRUVANNAMALAI DT 7708946919 DOWNLOAD

G.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு


G.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு DOWNLOAD

CLASS 11 BIOLOGY ZOOLOGY TM ONE MARK QUESTIONS DOWNLOAD KARTHICK R



CLASS 11 BIOLOGY ZOOLOGY TM ONE MARK QUESTIONS DOWNLOAD KARTHICK R DOWNLOAD

CLASS 12 CHEMISTRY TM MARCH 2018 FULL KEY ANSWER P.IYAPPAN M.SC., B.ED., M.PHIL., P.G TEACHER IN CHEMISTRY K.N. HR.SEC. SCHOOL KAMUTHI. RAMANATHAPURAM (DT)


CLASS 12 CHEMISTRY TM MARCH 2018 FULL KEY ANSWER (TAMIL MEDIUM) P.IYAPPAN M.SC., B.ED., M.PHIL., P.G TEACHER IN CHEMISTRY K.N. HR.SEC. SCHOOL KAMUTHI. RAMANATHAPURAM (DT) DOWNLOAD

TRB ECONOMICS PG TRB ECONOMICS MODEL QUESTIONS AND ANSWERS ACHAMILLAI EDUCATIONAL TRUST AET ACHAMILLAI 9786226622


TRB ECONOMICS PG TRB ECONOMICS MODEL QUESTIONS AND ANSWERS ACHAMILLAI EDUCATIONAL TRUST AET ACHAMILLAI 9786226622   DOWNLOAD

CLASS 10 ENGLISH II PAPER MODEL PUBLIC EXAMINATION – MARCH 2018 - M.MUTHUPRABAKARAN M.A.,M.PHIL.,B.ED., GRADUATE ENGLISH TEACHER, GHSS, PUZHUTHIPATTI, SIVAGANGAI.


CLASS 10 ENGLISH II PAPER MODEL PUBLIC EXAMINATION – MARCH 2018 - M.MUTHUPRABAKARAN M.A.,M.PHIL.,B.ED., GRADUATE ENGLISH TEACHER, GHSS, PUZHUTHIPATTI, SIVAGANGAI. DOWNLOAD

CLASS 11 CHEMISTRY EM UNIT 9 SOLVED PROBLEMS MR. B.UTHRAKUMAR PGT CHEMISTRY

 CLASS 11 CHEMISTRY EM UNIT 9 SOLVED PROBLEMS MR. B.UTHRAKUMAR PGT CHEMISTRY DOWNLOAD

CLASS 11 CHEMISTRY EM MARCH 2018 MODEL QUESTION PAPER DOWNLOAD - D.EZHILARASAN, PGT IN CHEMISTRY, MONTFORT SCHOOL, TINDIVANAM.


CLASS 11 CHEMISTRY EM MARCH 2018 MODEL QUESTION PAPER DOWNLOAD - D.EZHILARASAN, PGT IN CHEMISTRY, MONTFORT SCHOOL, TINDIVANAM. DOWNLOAD