Wednesday, March 31, 2021

TNPSC CURRENT AFFAIRS MARCH 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS MARCH 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ மார்ச் 2: தமிழக பசுமை இயக்கத் தலைவரும் சூழலியல் செயற்பாட்டளருமான ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர் வெ. ஜீவானந்தம் காலமானார். மார்க்சியம், காந்தியம் சார்ந்து இயங்கிவந்த அவர் தமிழகத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்.


❇️ மார்ச் 4: ஆண்டிகுவாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரண் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய மூன்றாவது வீரரானார்.


❇️ மார்ச் 5: மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில் மக்கள் வாழ எளிதான நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடத்தைப் பிடித்தது. முதலிடத்தை பெங்களூரு பிடித்தது.


❇️ மார்ச் 5: ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது எனவும் இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.


❇️ மார்ச் 5: 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. சிறுதானியங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த அறிவிப்பு பயன்படும்.


❇️ மார்ச் 5: மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


❇️ மார்ச் 6: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சாம்பியன்கள், சீனியர் கமிட்டியின் தலைவராக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.


❇️ மார்ச் 8: உலக மல்யுத்த வீராங்கனைகள் தரவரிசைப் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதலிடம் பிடித்தார்.


❇️ மார்ச் 10: உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பொறுப்பேற்றார். முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தநிலையில், புதிய முதல்வர் தேர்வுசெய்யப்பட்டார்.


❇️ மார்ச் 10: மூன்றாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். கரஞ்ச் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.


❇️ மார்ச் 11: ஆசியாவின் முதல் தேசிய ஓங்கில் (டால்பின்) ஆராய்ச்சி மையம் பிஹார் தலைநகர் பாட்னா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.


❇️ மார்ச் 12: பிரேசிலைச் சேர்ந்த கரினா ஒலியோனி (38) என்ற பெண், எத்தியோப்பியாவில் எர்டா அல் என்ற எரிமலையிலிருந்து வெளியேறிய 1,187 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள எரிமலைக் குழம்பு ஏரியைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.


❇️ மார்ச் 13: 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்துக்கு ‘செல்லாத பணம்’ நாவலுக்காக அறிவிக்கப்பட்டது.


❇️ மார்ச் 13: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதியாட்டத்தில் மும்பை சிட்டி முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றது.


❇️ மார்ச் 14: சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 10 ஆயிரம் ரன் எடுத்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் படைத்தார். உலக அளவில் இதற்கு முன் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ஸ் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.


❇️ மார்ச் 15: ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.


❇️ மார்ச் 16: இந்தியாவின் முதல் வன சிகிச்சை மையம் உத்தரகாண்ட் மாநிலம் கலிகாவில் தொடங்கப்பட்டது.


❇️ மார்ச் 16: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தமிழக வீராங்கனை பவானிதேவி தேர்வானார். வாள் வீச்சில் பங்குபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.


❇️ மார்ச் 18: உலகில் மிகவும் மாசுபட்ட 30 நகரங்களில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ‘ஐக்யூ ஏர்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியாவின் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.


❇️ மார்ச் 19: பஞ்சாபில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீ. ஓட்டப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 23.26 விநாடிகளில் தொலைவைக் கடந்து புதிய சாதனைப் படைத்தார். 1998இல் இதே இலக்கை 23.30 விநாடிகளில் பி.டி.உஷா கடந்திருந்த சாதனையைத் தனலட்சுமி முறியடித்தார்.


❇️ மார்ச் 20: தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த தேவேந்திர குலத்தார், கல்லாடி, குடும்பர், பள்ளர், பண்ணாடி, வாதிரியார், கடையன் ஆகிய 7 சாதியினரைத் தேவேந்திர குல வேளாளர் என்கிற பொதுப் பெயரில் அழைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


❇️ மார்ச் 21: சர்வதேச காசநோய் தடுப்புக் கூட்டாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டார்.


❇️ மார்ச் 22: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,220 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிக பட்சமாக கரூரில் 77 பேர், குறைந்த பட்சமாக தியாகராய நகரில் 14 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


❇️ மார்ச் 23: 2020ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது ‘வங்க பந்து’ என்றழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.


❇️ மார்ச் 23: 67ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. ‘அசுரன்’ சிறந்த தமிழ் திரைப்படமாகவும், அப்படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். விஜய்சேதுபதி (சிறந்த துணை நடிகர்), நாகவிஷால் (சிறந்த குழந்தை நட்சத்திரம்), டி.இமான் (சிறந்த இசையமைப்பாளர்- பாடல்கள்) ஆகியோரும் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.


❇️ மார்ச் 25: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாவதற்கு என்.வி.ரமணாவின் பெயரைத் தற்போதைய தலைமை நீதிபதி போப்டே பரிந்துரைசெய்தார். இவருடைய பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.


❇️ மார்ச் 26: அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் துணை சுகாதார அமைச்சர் பதவிக்குத் திருநங்கையான மருத்துவர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.


❇️ மார்ச் 26: வங்கதேச சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதையொட்டி வங்கதேசத்தின் டாக்கா - மேற்குவங்கத்தின் புதிய ஜல்பய்குரி இடையே புதிய பயணிகள் ரயில் தொடங்கப்பட்டது.


❇️ மார்ச் 28: ஒரு நாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய இணை என்கிற பெருமையை ரோஹித் சர்மா-ஷிகர் தவான் ஜோடி பெற்றது. இதற்கு முன் இந்தப் பெருமையை சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஜோடி பெற்றிருந்தது.


❇️ மார்ச் 29: சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர்கிவன் என்ற பெரிய கப்பல் ஒரு வார கால போராட்டத்துகுப் பிறகு மீட்கப்பட்டது. டிரெட்ஜர்கள், இழுவை படகுகள் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.


❇️ மார்ச் 30: உலகிலேயே முதன்முறையாக கரோனா தொற்றிலிருந்து விலங்கு களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘கார்னிவாக்-கோவ்’ என்ற தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.


❇️ மார்ச் 31: இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி ஆகியவற்றை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்தது. இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை அந்நாடு கைவிடுவதாக அறிவித்தது. ஆனால், இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


❇️ மார்ச் 11: புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை 'ஆல் பாஸ்'.


❇️ மார்ச் 1: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடிக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏப்ரல் 8ல் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.


❇️ மார்ச் 2: ராஜ்யசபா, லோக்சபா 'டிவி' சேனல், ஒரே சேனலாக (சன்சாத்) இணைப்பு.


❇️ மார்ச் 4: வாழ்வதற்கு சிறந்த நகர பட்டியலில் பெங்களூரு முதலிடம், சென்னைக்கு 4வது இடம் மத்திய அரசு அறிவிப்பு.


❇️ மார்ச் 8: கட்டாய மதமாற்ற திருமணத்தை தடுக்கும் சட்டம் ம.பி.,யில் நிறைவேற்றம்.


❇️ மார்ச் 9: இந்தியா - வங்கதேசம் இடையே 1.9 கி.மீ., நீளம் கொண்ட 'மைத்ரி சேது' பாலத்தை பிரதமர் மோடி துவக்கினார்.


❇️ மார்ச் 10: இந்திய கப்பல்படையில் 'பி-75 கரன்ஜ்' நீர்மூழ்கி கப்பல் சேர்ப்பு. முழுவதும் நீரில் மூழ்கிய நிலையில், மணிக்கு 37 கி.மீ., வேகத்தில் செல்லும்.


❇️ மார்ச் 10: உத்தரகண்ட் முதல்வராக தீரத்சிங் ராவத் பதவியேற்பு.


❇️ மார்ச் 10: இந்திய கப்பல்படையில் 'பி-75 கரன்ஜ்' நீர்மூழ்கி கப்பல் சேர்ப்பு


❇️ மார்ச் 11: கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுக்கு பின் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மஹா சிவராத்திரி பூஜை நடத்தினார்.


❇️ மார்ச் 16: கருக்கலைப்பு உச்சவரம்பை 20ல் இருந்து 24 வாரமாக உயர்த்தும் மசோதா பார்லிமென்டில் நிறைவேறியது.


❇️ மார்ச் 19:'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.


❇️ மார்ச் 31: மின் விபத்தை தடுக்க ரயிலில் இரவு 11:00--அதிகாலை 5:00 மணி வரை அலைபேசி, லேப்டாப் 'சார்ஜ்' செய்ய தடை.


❇️ மார்ச் 5: ராணுவ செலவினங் களுக்கு சீனா ரூ. 16 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.


❇️ மார்ச் 11: பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட பேச முடியாத, காது கேளாத இந்தியப் பெண் கீதா, 5 ஆண்டுக்குப்பின் மகாராஷ்டிராவில் தாயுடன் சேர்ந்தார்.


❇️ மார்ச் 12: 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்த 'குவாட்' மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசன் பங்கேற்பு.


❇️ மார்ச் 19: ஐ.நா.,வின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம், இந்தியா 139வது இடம் பிடித்தன.


❇️ மார்ச் 19: தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுகு ஹசன் பதவியேற்பு.


❇️ மார்ச் 22: நைஜரில் பயங்கர வாதிகளின் தாக்குதலில் 137 பேர் பலி.


❇️ மார்ச் 26: வங்கதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.


❇️ மார்ச் 27: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 115 பேர் சுட்டுக்கொலை.


❇️ மார்ச் 31: விலங்குகளுக்கான 'கார்னிவாக் கோவ்' கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டு பிடித்தது.


No comments:

Popular Posts