வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை – நேர் பிழை.
வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை – எதிர் பிழை.
பொருளின் நீளத்தை ஒரு மி.மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிட பயன்படுவது – திருகு அளவி.
மெல்லிய கம்பி, தாள் மற்றும் தகடு ஆகியவற்றின் தடிமனை அளவிட பயன்படுவது – திருகு அளவி.
ஒரு நிலையான மறைக்குள் இயங்கும் திருகை சுற்றும் போது அதன் முனை முன்னோக்கி நகரும் தொலைவு இதற்கு நேர் தகவில் இருக்கும் – சுற்றப்பட்ட சுற்றுகளுக்கு நேர் தகவில் இருக்கும்.
ஒரு பொருளின் நிறையை ஒரு மி.கிராம் அளவிற்க்கு துள்ளியமாக அளவிட பயன்படும் தராசு - இயற்பியல் தராசு.
இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு – 10 மி. கிராம்.
இயற்பியல் தராசில் குறிமுள், அலைவுக்குப்பின் அளவுகோல் வந்து நிற்கும் புள்ளி – நிலைப்புள்ளி.
திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு – 0.01 மி.மீ.
ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப்பொருள்களின் கன அளவு – நிறை எனப்படும்.
0 Comments