Wednesday, September 28, 2022

TNPSC G.K - 114 | இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்.

இங்கிலாந்து  இயற்றிய 1773, ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் இந்தியத்துணைக் கண்டத்தில் செயல்படும் கிழக்கிந்திய கம்பெனியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் இந்தியத் தலைமை ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. முதலில் இந்தியத் தலைமை ஆளுநரின் அலுவலகம் கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் இயங்கியது. 1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின்னர், 1858 முதல் இந்தியத் தலைமை ஆளுநர் பதவியின் பெயர் இந்திய வைஸ்ராய் என மாற்றப்பட்டது. இந்தியாவில் கம்பெனி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் ஆணைப்படி, இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். வைஸ்ராயின் தலமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்த் தில்லிக்கு மாற்றப்பட்டது. கானிங் பிரபு முதல் இந்திய வைஸ்ராய் ஆக 1858ல் தில்லியில் பதவி ஏற்றுக் கொண்டார்.
  • வாரன் ஹேஸ்டிங்ஸ், 1774 -1785 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • ஜான் மெக்பெர்சன், 1785 - 1786 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • காரன்வாலிஸ், 1786 - 1793 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • ஜான் சோர், 1793 - 1797 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • அலூர்டு கிளார்க் மார்ச், 1798 - மே, 1798 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • வெல்லஸ்லி 1798 - 1805 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • ஜார்ஜ் பார்லோ, 1805 - 1807 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • முதலாம் மிண்டோ பிரபு, 1807 - 1813 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • பிரான்சிஸ் ஹேஸ்டிங்ஸ், 1813 - 1823 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • வில்லியம் ஆமேர்ஸ்ட் பிரபு, 1823 - 1828 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • வில்லியம் பென்டிங்கு பிரபு, 1828 - 1836 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • ஜார்ஜ் ஈடன், 1836 - 1842 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • எல்லன்பரோ பிரபு, 1842 - 1844 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • ஹென்றி ஹார்டிங்கே, 1844 - 1848 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • டல்ஹவுசி பிரபு, 1848 - 1856 தலைமை ஆளுநராக செயல்பட்டார்.

  • கானிங் பிரபு, 1856 - 1862 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • எல்ஜின் பிரபு, 1862 - 1863 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • வில்லியம் டென்னிசன், 1863 - 1864 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • ஜான் லாரன்ஸ், 1864 - 1869 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • மாயோ பிரபு, 1869 - 1872 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • தாமஸ் பாரிங் நார்த் புரூக் பிரபு, 1872 - 1876 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • லிட்டன் பிரபு, 1876 - 1880 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • ரிப்பன் பிரபு, 1880 - 1884 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • டப்ரின் பிரபு, 1884 - 1888 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • ஹென்றி பெட்டி, 1888 - 1894 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • எல்ஜின் பிரபு, 1894 - 1899 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • கர்சன் பிரபு, 1899 - 1905 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • நான்காம் மிண்டோ பிரபு, 1905 - 1910 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • ஹார்டிங் பிரபு, 1911 - 1916 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • செம்ஸ்போர்டு பிரபு, 1916 - 1921 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • ரீடிங் பிரபு, 1921 - 1926 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • இர்வின் பிரபு, 1926 - 1931 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • வெல்லிங்டன் பிரபு, 1931 -l 1936 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, 1936 - 1943 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • ஆர்ச்சிபால்ட் வேவல், 1943 - 1947 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • மவுண்ட் பேட்டன் பிரபு, பிப்ரவரி, 1947 - ஆகஸ்டு, 1947 வைசிராய் ஆக செயல்பட்டார்.

  • மவுண்ட் பேட்டன் பிரபு, இரண்டாம் முறை 15 ஆகஸ்டு 1947 - 21 சூன் 1948 விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக செயல்பட்டார்.

  • ராஜகோபாலாச்சாரி 21 சூன் 1948 - 26 ஜனவரி 1950 விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரலாக செயல்பட்டார்.

No comments:

Popular Posts