Wednesday, September 28, 2022

TNPSC G.K - 115 | இந்தியக் குடியரசுத் தலைவர் .

  • டாக்டர் ராஜேந்திரப் பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு விடுதலை வீரர். 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 1952 ஆம் ஆண்டு கே. டி. ஷா அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 1957 ஆம் ஆண்டு சவுதிரி ஹரி ராம் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

  • சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், மே 13, 1962 முதல் மே 13, 1967 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு மெய்யியலாளர், கல்வியியலாளர். 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். சவுதிரி ஹரி ராம் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்.

  • ஜாகீர் உசேன், மே 13, 1967 முதல் மே 3, 1969 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு கல்வியியலாளர். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். கோட்டா சுப்பாராவ் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

  • வி. வி. கிரி, மே 3, 1969 முதல் ஜூலை 20, 1969 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி ஆவார். இவர் இடைக்கால குடியரசுத் தலைவராக செயல்பட்டார்.

  • முகம்மது இதயத்துல்லா, ஜூலை 20, 1969 முதல் ஆகஸ்ட் 24, 1969 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் இடைக்கால குடியரசுத் தலைவராக செயல்பட்டார். கிரி தேர்தலில் போட்டியிட தற்காலிக குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முகமது இதயத்துல்லா தற்காலிகக் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

  • வி. வி. கிரி, ஆகத்து 24, 1969 முதல் ஆகத்து 24, 1974 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி. 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்.

  • பக்ருதின் அலி அகமது, ஆகத்து 24, 1974 முதல் பெப்ரவரி 11, 1977 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு அரசியல்வாதி. 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். பக்ருதின் அலி அகமது பதவியில் இருக்கும் போதே மரணமடைந்தார்.

  • பசப்பா தனப்பா ஜாட்டி, பிப்ரவரி 11, 1977 முதல் ஜூலை 25, 1977 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு வழக்கறிஞர், அரசியல்வாதி ஆவார்.இவர் இடைக்கால குடியரசுத் தலைவராக செயல்பட்டார்.

  • நீலம் சஞ்சீவி ரெட்டி, ஜூலை 25, 1977 முதல் ஜூலை 25, 1982 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு விவசாயி, அரசியல்வாதி. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். ஜனதா கட்சியின் நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரானார்

  • ஜெயில் சிங், ஜூலை 25, 1982 முதல் ஜூலை 25, 1987 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு விடுதலை வீரர், அரசியல்வாதி. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். ஹன்ஸ் ராஜ் கண்ணா அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.

  • ரா.வெங்கட்ராமன், ஜூலை 25, 1987 முதல் ஜூலை 25, 1992 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி. 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர். வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். பாகிஸ்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர்.

  • சங்கர் தயாள் சர்மா, ஜூலை 25, 1992 முதல் ஜூலை 25, 1997 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு விடுதலை வீரர், அரசியல்வாதி. 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். ஜார்ஜ் கில்பர்ட் ஸ்வெல் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அவர் ஜனாதிபதியாக இருந்த கடைசி ஆண்டில், மூன்று பிரதமர்களை பதவிப்பிரமாணம் செய்வது அவரது பொறுப்பாக இருந்தது.

  • கே. ஆர். நாராயணன், (கொச்செரில் ராமன் நாராயணன்) ஜூலை 25, 1997 முதல் ஜூலை 25, 2002 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு எழுத்தாளர், வெளிநாட்டுத் தூதுவர், அரசியல்வாதி. 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். டி.என்.சேஷன் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

  • ஏ.பி.ஜே.அப்துல் கலாம், (ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்) சூலை 25, 2002 முதல் ஜூலை 25, 2007 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு அறிவியலாளர், பொறியாளர். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர். கேப்டன் லட்சுமி எனப்படும் இலட்சுமி சாகல் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

  • பிரதீபா பட்டீல், சூலை 25, 2007 முதல் சூலை 25, 2012 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு அரசியல்வாதி. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். பைரன் சிங்க் ஷெகாவத் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

  • பிரணப் முகர்ஜி, ஜூலை 25, 2012 முதல் ஜூலை 25, 2017 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு அரசியல்வாதி. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பி. ஏ. சங்மா அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

  • ராம் நாத் கோவிந்த், சூலை 25, 2017 முதல் சூலை 25,2022 வரை குடியரசுத் தலைவராக செயல்பட்டார். இவர் ஒரு அரசியல்வாதி. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் மீரா குமார் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

  • திரௌபதி முர்மு, சூலை 25, 2022- தற்போது வரை குடியரசுத் தலைவராக செயல்பாடுகிறார். இவர் ஒரு அரசியல்வாதி. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். யஷ்வந்த் சின்ஹா அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடி அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவராவார்.

No comments:

Popular Posts