Sunday, October 02, 2022

TNPSC G.K - 153 | தென்னிந்திய மன்னர்கள்.

  • பண்டைய தமிழகத்தை ஆண்ட அரசர்கள் - சேர, சோழ, பாண்டியர்கள்.

  • சோழர்களின் தலைநகரம் - உறையூர் .

  • சோழர்களின் துறைமுகம் - காவிரிப்பூம்பட்டினம் .

  • சோழர்களின் சின்னம் - புலி .

  • சோழர்களின் அடையாளப் பூ - அத்தி .

  • சேரர்களின் தலைநகரம் - வஞ்சி .

  • சேரர்களின் துறைமுகங்கள் - தொண்டி, முசிறி .

  • சேரர்களின் சின்னம் - வில், அம்பு.

  • சேரர்களின் அடையாளப் பூ - பனம்பூ .

  • சேர அரசர்களில் தலைசிறந்தவன் - சேரன் செங்குட்டுவன்.

  • சேரர்கள் கேரள புத்திரர்கள் எனப்படுவர்.

  • பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை.

  • பாண்டியர்களின் துறைமுகம் - கொற்கை.

  • பாண்டியர்களின் சின்னம் - மீன் .

  • பாண்டியர்களின் அடையாளப் பூ : வேம்பு.

  • பாண்டிய அரசர்களில் தலைசிறந்தவன்: நெடுஞ்செழியன்.

  • பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர்கள் - சாதவாகனர்கள்.

  • சாதவாகனர்கள், ஆந்திர புத்திரர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்..

  • சாதவாகனர்களின் தலைநகரம் : பிரதிஸ்தான்.

  • சாளுக்கியர் நாணயங்களில் பன்றிச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அது வராகன்' எனப்பட்டது.

  • சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, புள்ளளூர் போரில் மகேந்திரவர்ம பல்லவரைத் தோற்கடித்தார்.

  • சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்ம பல்லவருக்கு வாதாபி கொண்டான்' என்ற பெயர் வந்தது.

  • நரசிம்மவர்மர், மற்போரில் சிறந்து விளங்கியதால் 'மாமல்லன்' என்றழைக்கப்படுகிறார்.

  • பல்லவர்களின் தலைநகரம் : காஞ்சிபுரம்.

  • பல்லவர்களின் சின்னம் - நந்தி.

  • மகேந்திரவர்மர் கோயில் கட்டிய இடங்கள்: மாமண்டூர், பல்லவபுரம்.

  • மகேந்திரவர்மரை சைவ சமயத்துக்கு மாற்றியவர் - அப்பர்.

  • மகேந்திரவர்மர் கட்டியது தான் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில்.

  • மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயர்கள் : சித்திரகாரப்புலி, விசித்திர சித்தர்.

  • பல்லவர்கால ஓவியங்கள் காணப்படும் சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

  • மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர் - நரசிம்மவர்ம பல்லவர்.

  • மகேந்திரவர்மர் எழுதிய நூல் - மத்த விலாச பிரகடனம்.

  • பல்லவர்கள் காலத்தில் தண்டி என்ற புலவர் காவ்யதரிசனம் என்ற நூலை எழுதினார்.

No comments:

Popular Posts