Wednesday, October 05, 2022

TNPSC G.K - 178 | பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு - கூடித் தொழில் செய்.

நானிலம் படைத்தவன் :


கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை

மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி

...அஞ்சுவதை அஞ்சி அகற் றி விலக்கிடுவான்

- முடியரசன்

சொல்லும் பொருளும் :


  • மல்லெடுத்த – வலிமைபெற்ற
  • மறம் – வீரம்
  • சமர் – போர்
  • எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
  • நல்கும் – தரும்
  • கலம் – கப்பல்
  • கழனி – வயல்
  • ஆழி - கடல்

பொதுவான குறிப்புகள் :


  • முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
  • பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களைஎழுதியுள்ளார்.
  • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
  • படைப்பு- புதியதொரு விதி செய்வோம்
  • வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி
  • மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவவோம்
  • சிங்க மராட்டியர்த ம் கொண்டு
  • சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்! - பாரதியார்

கடலோடு விளையாடு :


  • விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
  • விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
  • அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா

சொல்லும் பொருளும் :


  • கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
  • மின்னல் வரி - மின்னல் கோடு
  • அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்

நெய்தல் திணை :


  • நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
  • மக்கள் : பரதவர், பரத்தியர்
  • தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
  • பூ : தாழம்பூ

பொதுவான குறிப்புகள் :


  • இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
  • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.
  • சு. சக்திவேல் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலைப் படைத்துள்ளார்.

வளரும் வணிகம் :


  • பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்; வாங்குபவரை நுகர்வோர் என்பர்.

வணிகத்தின் வகைகள் :

  • தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் என்பது வணிக பிரிவுகள்.
  • வண்டியில் வெளியூருக்கு குழுவாகச் செல்லுபவர்கள் ‘வணிகச்சாத்து’எனப் பெயர்
  • துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.
  • தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது.

தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து

பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி

  • உமணர் போகலும் -நற்றிணை – 183
  • பாலொடு வந்து கூழொடு பெயரும் …… -குறுந்தொகை – 23
  • பொன்னொடு வந்து கறியொடு பெயரும் …… -அகநானூறு - 149

ஏற்றுமதி-இறக்குமதி :


  • பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டுப் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
  • அரேபியாவிலிருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

வணிகத்தின் நேர்மை :


  • வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
  • பிறவும் தமபோல் செயின் -திருக்குறள் - 120
  • நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பட்டினப்பாலை
  • கொள்வதும் மிகை கொளாது
  • கொடுப்பதும் குறைபடாது -பட்டினப்பாலை
  • சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
  • கோடாமை சான்றோர்க்கு அணி. - திருக்குறள்

உழைப்பே மூலதனம் :


  • பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது ஔவையார்

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் :


சுட்டு எழுத்துகள் :

  • ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள்
  • அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்

அகச்சுட்டு :

  • இவன், அவன், இது, அது - இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை.
  • இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.

புறச்சுட்டு :

  • அவ்வானம், இம்மலை, இந்நூல்-இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
  • இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.

அண்மைச்சுட்டு :

  • இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு - அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன.
  • எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.
  • சேய்மைச்சுட்டு
  • அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் – தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும்.
  • சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ’அ’ ஆகும்.

(இடைச்சுட்டு) :

  • அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘ உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்பட்டுள்ளது.
  • (எ.கா.) உது, உவன

சுட்டுத்திரிபு :

  • அம்மரம், இவ்வீடு, அந்த மரம், இந்த வீடு- அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
  • வினா எழுத்துகள்
  • வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள்.
  • எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
  • மொழியின் முதலில் வருபவை - எ, யா (எங்கு, யாருக்கு)
  • மொழியின் இறுதியில் வருபவை - ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
  • மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை - ஏ (ஏன், நீதானே)

அகவினா :

  • வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
  • எது, யார், ஏன் - என்பதில் வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை

புறவினா :

  • அவனா? வருவானோ? - என்பதில் - ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
  • இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

கலைச்சொல் அறிவோம் :


  • பண்டம் - Commodity
  • கடற்பயணம் - Voyage
  • பயணப்படகுகள் - Ferries
  • தொழில் முனைவோர் - Entrepreneur
  • பாரம்பரியம் - Heritage
  • கலப்படம் - Adulteration
  • நுகர்வோர் - Consumer
  • வணிகர் - Merchant

No comments:

Popular Posts