Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TNPSC G.K - 185 | பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு - நாடு அதை நாடு.

TNPSC-GENERAL-TAMIL   
கல்விச்சோலை
Wednesday, October 05, 2022

புலி தங்கிய குகை :


சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

- காவற்பெண்டு

சொல்லும் பொருளும் :


  • சிற்றில் – சிறு வீடு
  • யாண்டு – எங்கே
  • கல் அளை – கற்குகை
  • ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு

நூல் வெளி :


  • காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
  • சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர்.
  • சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு பாடியுள்ளார்.
  • இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

பாஞ்சை வளம் :


கறந்த பாலையுங் காகங் குடியாது – எங்கள்

கட்டபொம்மு துரை பேரு சொன்னால்

வரந்தருவாளே சக்க தேவி – திரு

வாக்கருள் செய்வாளே சக்க தேவி

நூல் வெளி :


  • நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

பழைய நூல் குறிப்பு :


  • (தேசிங்கு ராசன் தேசிங்கு ராஜாவின் தந்தை சொரூபசிங். டெல்லி பாதுஷாவின் குதிரை நீலவேணி. ஆற்காட்டு நவாபின் தூதுவன் தோன்ற மல்லன். ராஜா தேசிங்கின் வீரத்தை பற்றிக் கூறியவன் சேக் முகமது.சுவடி திரட்டும் பதிப்பும் என்பது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொகுப்பு நூல்)

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் :


  • தேசியம்=உடல், தெய்வீகம்=உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்.
  • வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் ; உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்; "சுத்தத் தியாகி" என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் 30.10.1908 ஆம் ஆண்டு செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் -உக்கிர பாண்டியத்தேவர் – இந்திராணி அம்மையார்.
  • இவர் இளமையிலேயே அன்னையை இழந்ததால் இசுலாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.
  • முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக் கல்வியைக் கமுதியிலும் உயர்நிலைக் கல்வியை மதுரை பசுமலைப் பள்ளியிலும் இராமநாதபுரத்திலும் பயின்றார். அவ்வூரில் பிளேக் நோய் பரவியதால் அவரது படிப்பு பாதியில் நின்றது.
  • பல்துறை ஆற்றல்
  • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
  • சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச்சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற ஆற்றல்கள் பெற்று விளங்கினார்.
  • வாய்ப்பூட்டுச் சட்டம்மூலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று இருவருக்குத் தடை விதித்தது. வடஇந்தியாவில் பேசத் தடை விதிக்கப்பட்டவர் பாலகங்காதர திலகர்.தென்னாட்டில் முத்துராமலிங்கத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவரது விடுதலை வேட்கையை அறிந்த திரு. வி. கலியாணசுந்தரனார் "தேசியம் காத்த செம்மல்" என்று பாராட்டியுள்ளார்.

நேதாஜி :


  • வங்கச்சிங்கம் -நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு. தமது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.
  • முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பால் 06.09.1939 நேதாஜி மதுரைக்கு வந்தார்.
  • நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் தமிழர்கள் இணைந்தனர்.
  • விடுதலைக்குப் பின் 23.01.1949 - "நேதாஜி" என்னும் பெயரில் வார இதழ் ஒன்றை மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கி நடத்தினார்.

மேடைபேச்சு :


  • முதன் முதலில் பேசிய மேடைப் பேச்சுத் தலைப்பு மற்றும் ஊர் = விவேகானந்தரின் பெருமை (3 மணி நேரம்), சாயல்குடி.
  • அந்த கூட்டத்தில் பெருந்தலைவர் காமராசரும் இருந்தார்.
  • இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை; முத்துராமலிங்கத் தேவரின் ‘வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் என்றார் காமராசர்
  • தென்னாட்டுச் சிங்கம் - முத்துராமலிங்கத்தேவர் அவருக்கே பொருந்தும் என அண்ணா பாராட்டியுள்ளார்
  • உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது முத்துராமலிங்கத்தேவர் வழக்கம்; - மூதறிஞர் இராஜாஜி.
  • பாராளுமன்றத்தில் இவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின.

முத்துராமலிங்க தேவரின் தேர்தல் வெற்றிகள் :


  • 1937 சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
  • இலண்டனில் பாரிஸ்டருக்குப் படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி -இராமநாதபுரம் மன்னரை எதிர்த்துப் போட்டியிட்ட தேவரின் வெற்றியையும் பொப்பிலி அரசரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.வி.கிரியின் வெற்றியையுமே மாணவர்கள் எதிர்பார்த்திருந்தோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
  • 1946 இல் போட்டியின்றி வெற்றிபெற்றார்.
  • 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.
  • 1962 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக, பரப்புரை செய்ய இயலாதபோதிலும் தேர்தலில் வெற்றிபெற்றார்.

போராட்டங்கள் :


  • குற்றப்பரம்பரைச் சட்டம், 1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.
  • அவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது.
  • மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது. அதை எதிர்த்து 08.07.1939 மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார்.
  • அர்ச்சகர்கள் ஆலயப்பணியைப் புறக்கணித்தனர். தேவர் திருச்சுழியிலிருந்து அர்ச்சகர்கள் இருவரை அழைத்துவந்து ஆலய நுழைவுப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்தார்.

சிறப்புகள் :


  • சொந்தமாக 31 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை உழுபவர்க்கே பங்கிட்டுக் கொடுத்தார்.
  • கமுதியில் -பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச்செய்தார்.
  • 1938 ல் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.
  • மதுரையிலிருந்த நூற்பு ஆலையில் தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டுப் போராட்டம் நடத்தினார். இதனால் 7 மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
  • உழவர்களின் நலனுக்காக இராஜபாளையத்தில் மிகப் பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.
  • பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.

சிறை வாசம் :


  • சுதந்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலிப்பூர், அமராவதி, தாமோ , கல்கத்தா , சென்னை, வேலூர் போன்ற சிறைகளில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
  • இரண்டாம் உலகப்போரின்போது மத்திய பிரதேசத்தின் தாமோ என்னும் நகரில் உள்ள இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டார்.
  • தேவர் 1936, 1955 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை பர்மா சென்றிருந்தார். (பெண்கள் - கூந்தல் நிகழ்வு)
  • 1936 ல் விருதுநகர் தேர்தலில் போட்டியிட காமராசர் விரும்பினார். ஆனால் நகராட்சிக்கு வரி செலுத்துபவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் நிலைமை இருந்தது அப்போது முத்துராமலிங்கர் ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கி காமராஜர் பெயரில் வரி கட்டி தேர்தலில் போட்டியிட வைத்தார்
  • புத்த சமயத் தலைமை துறவியாகிய இச்சாண்டோ முன்னிலையில் புத்தரின் சிந்தனைகளைப் பற்றிச் சிறப்பாக உரையாற்றினார் இதைக் கண்டு வியந்து முத்துராமலிங்கத் தேவரை அவர் பாராட்டினார்.

முத்துராமலிங்க தேவரின் சிறப்புப் பெயர்கள் :


  • தேசியம் காத்த செம்மல்
  • வித்யா பாஸ்கர்
  • பிரணவ கேசரி
  • சன்மார்க்க சண்டமாருதம்
  • இந்து புத்தசமய மேதை.

பொதுவான குறிப்புகள் :


  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075 சுதந்திர போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாட்கள் 4000 தன் வாழ்வில் 5 ல் 1 பங்கைச் சிறையில் கழித்த தியாகச் செம்மல் தேவர்.
  • பசும்பொன்னில் உள்ள அவர் நினைவிடத்தில் அக்டோபர் 30 நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எடுக்கப்படுகிறது.
  • தமிழகச் சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய நாடளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
  • இந்திய அரசால் 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது
  • மறைவு- 30.10.1963 நாளில் இவ்வுலகை விட்டு நீங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்

கப்பலோட்டிய தமிழர் :


  • "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்ற வள்ளுவர்.
  • சுதேசக் கப்பல் கம்பெனி ஒன்று உருவானது. (பாண்டியர்போல் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்) மதுரை பாண்டித்துரையார் அக்கம்பெனியின் தலைவர்.
  • வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அக்கப்பல் தூத்துகுடியிலிருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு புறப்பட்டது.
  • வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது. சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன் என்றார் பாலகங்காதர திலகர்
  • பாரதியார் வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்று கூறினார்
  • சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்- சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.
  • 6 ஆண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும், கொடும் சிறை தண்டனை அனுபவித்தார்.
  • தொல்காப்பியம், இன்னிலை அவர் படித்த நூல்கள்
  • ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்று ‘ மனம் போல் வாழ்வு’ அதைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
  • இயற்றிய நூல்கள் மெய்யறிவு, மெய்யறம்.
  • பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் -என்றார் வீர சிதம்பரனார்.

நூல் வெளி :


  • இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • சிறப்புப் பெயர் - சொல்லின் செல்வர்.
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர்.
  • இவரது ‘தமிழின்பம்’ என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
  • படைப்புகள்-ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு

வழக்கு :


  • எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்.
  • இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும்.

இயல்பு வழக்கு :


  • ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும்.
    1. இலக்கணமுடையது
    2. இலக்கணப்போலி
    3. மரூஉ

இலக்கணமுடையது :


  • நிலம், மரம், வான், எழுது - ஆகிய சொற்கள்.
  • எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகப் பொருள்தரும். இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்.

இலக்கணப்போலி :


  • இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் கூறாமல் முன்றில் என மாற்றிக் கூறுகின்றனர்.
  • கிளையின் நுனியைக் கிளைநுனி - எனக் கூறாமல் நுனிக்கிளை - எனக் குறிப்பிடுகிறோம்.
  • இவ்வாறு இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
  • இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
  • (எ.கா.) புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்.

வாயில்-வாசல் :


  • இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும்.
  • வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.

மரூஉ :


  • எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவதில்லை.
  • தஞ்சாவூர் - தஞ்சை என்றும், திருநெல்வேலி-நெல்லை எனவும் வழங்குகிறோம்.
  • இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
  • (எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

தகுதி வழக்கு :


  • ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
  • தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
    1. இடக்கரடக்கல் :
    2. மங்கலம்
    3. குழூஉக்குறி

இடக்கரடக்கல் :


  • பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
  • (எ.கா.) கால் கழுவி வந்தான்.
  • குழந்தை வெளியே போய்விட்டது.
  • ஒன்றுக்குப் போய் வந்தேன்.

மங்கலம் :


  • செத்தார் என்பது மங்கலமில்லாத சொல்.
  • செத்தார் -எனக் குறிப்பிடாமல் துஞ்சினாரெனக் குறிப்பிட்டனர்.
  • இப்பொழுது இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம்.
  • இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
  • (எ.கா.) ஓலை - திருமுகம், கறுப்பு ஆடு - வெள்ளாடு
  • விளக்கை அணை - விளக்கைக் குளிரவை, சுடுகாடு – நன்காடு

குழூஉக்குறி :


  • பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர்.
  • இவ்வாறு ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
  • (எ.கா.) பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
  • ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

இப்படியும் கூறலாம் :


  • இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.
  • நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
  • மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
  • பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி

போலி :


  • சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ வரும் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து வந்து அதே பொருள் தருவது போலி எனப்படும்.
  • போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.
  • போலி மூன்று வகைப்படும்.
    1. முதற்போலி.
    2. இடைப்போலி.
    3. கடைப்போலி

முதற்போலி :


  • பசல் – பைசல், மஞ்சு- மைஞ்சு, மயல்- மையல்.
  • இவ்வாறு சொல்லின் முதலில் வரும் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.

இடைப்போலி :


  • அமச்சு – அமைச்சு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர்- அரையர்.
  • இவ்வாறு சொல்லின் இடையில் வரும் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.

கடைப்போலி :


  • அகம்- அகன், நிலம்- நிலன், முகம் – முகன், பந்தல்- பந்தர், சாம்பல்- சாம்பர்
  • இவ்வாறு சொல்லின் இறுதியில் வரும் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும்.
  • அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம், லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலிகளாக வரும்.

முற்றுப்போலி :


  • ஐந்து- அஞ்சு- இதில் அஞ்சு என்னும் சொல் ஐந்து என்னும் சொல்லின் போலி வடிவமாகும்.
  • அஞ்சு என்ற சொல்லில் உள்ள எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டு இருந்தாலும் அஃது ஐந்து என்னும் பொருளையே தருகிறது.
  • இவ்வாறு ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

தொடர் :


  • ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும்.
  • அவை 1. எழுவாய் 2. பயனிலை 3. செயப்படுபொருள்

எழுவாய் :


  • ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய்.
  • (எ.கா.) நீலன் பாடத்தைப் படித்தான்.
  • பாரி யார்?
  • புலி ஒரு விலங்கு.
  • இத்தொடர்களில் நீலன், பாரி, புலி ஆகியன எழுவாய்கள்.

பயனிலை :


  • ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை.
  • (எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
  • கரிகாலன் யார்?
  • கரிகாலன் ஒரு மன்னன்.
  • இத்தொடர்களில் கட்டினான், யார், மன்னன் ஆகியன பயனிலைகள்.

செயப்படுபொருள் :


  • யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.
  • (எ.கா.) நான் கவிதையைப் படித்தேன்.
  • என் புத்தகத்தை எடுத்தது யார்?
  • நெல்லிக்கனியைத் தந்தவர் அதியமான்.
  • இத்தொடர்களில் கவிதை, புத்தகம், நெல்லிக்கனி ஆகியன செயப்படு பொருள்கள்.

கலைச்சொல் அறிவோம் :


  • கதைப்பாடல் - Ballad
  • பேச்சாற்றல் - Elocution
  • துணிவு -Courage
  • ஒற்றுமை -Unity
  • தியாகம் -Sacrifice
  • முழக்கம் -Slogan
  • சமத்துவம் -Equality
  • அரசியல் மேதை -Political Genius 
TNPSC-GENERAL-TAMIL
கல்விச்சோலை

TNPSC-GENERAL-TAMIL

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger