Wednesday, October 05, 2022

TNPSC G.K - 184 | பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு - அணிநிழல் காடு.

காடு :


கார்த்திகை தீபமெனக்

காடெல்லாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடீ – கிளியே

சிங்கம் புலிகரடி

சிறுத்தை விலங்கினங்கள்

எங்கும் திரியுமடீ – கிளியே

இயற்கை விடுதியிலே!

- சுரதா

சொல்லும் பொருளும் :


 • நச்சரவம் - விடமுள்ள பாம்பு

நூல் வெளி :


 • சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
 • இவர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.
 • உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் "உவமைக் கவிஞர்" என்றும் அழைப்பர்.
 • அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் படைப்புகள்.
 • தேன்மழை நூலின் உட்பிரிவுகளில் இயற்கை எழில் ஒன்று.
 • இக்கவிதை கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.
 • கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ‘கிளிக்கண்ணி’ ஆகும்.

காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் :


 • கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.

நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே

நாளில் மறப்பாரடீ.

– பாரதியார்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் :


என்றும் என்மன வெளியில்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

குன்றுகளின் நடுவே மாமலை போல

- ராஜமார்த்தாண்டன்

நூல் வெளி :


 • ஆசிரியர்-ராஜமார்த்தாண்டன்
 • சிறப்பு: கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர்.
 • கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
 • ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுப் பெற்றவர்.
 • சிறந்த தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு-கொங்குதேர் வாழ்க்கை நூலாகும்.
 • அப்படியே நிற்கட்டும் அந்த மரம் நூல் இவரின் படைப்பு.

கொப்புகள் விலக்கிக் கொத்துக் கொத்தாய்

கருவேலங்காய் பறித்துப் போடும் மேய்ப்பனை

ஒருநாளும் சிராய்ப்பதில்லை கருவமுட்கள்.

 

குழந்தை வரைந்தது

பறவைகளை மட்டுமே

வானம் தானாக உருவானது.

– கலாப்ரியா

விலங்குகள் உலகம் :


யானைகள் :

 • உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன.
 • ஆசிய யானை
 • ஆப்பிரிக்க யானை.
 • ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு.
 • பெண் யானைக்குத் தந்தம் இல்லை.
 • ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
 • ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உட்கொள்ளும். 65 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

தெரிந்து கொள்வோம் :

 • தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் – மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)
 • கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (BSc. Forestry), முதுநிலை வனவியல் (MSc. Forestry) உள்ளன

கரடிகள் :

 • ஓர் அனைத்துண்ணி. பழங்கள், தேன். உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல் ஆகியவற்றை உண்ணும்.
 • கரையான் அதற்கு மிகவும் பிடித்த உணவு
 • நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடைவரை இருக்கும்

புலி, சிங்கம் :

 • கருவுற்ற புலியானது 90 நாட்களில் 2 அல்லது 3 குட்டிகள் ஈனும். அந்தக் குட்டிகளை 2 ஆண்டுகள்வரை வளர்த்து வரும்
 • உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன.
 • இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ‘கிர் சரணாலயத்தில்’ மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.
 • நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தைவிட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள்.

மான்கள் :

 • இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான், புள்ளி மான் -எனப் பல வகையான மான்கள் உள்ளன.

இந்திய வனமகன் :


 • அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங்.
 • அவர் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர்.
 • அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் உதவியால் மரம் வளர்க்கும் திட்டம்பற்றி அறிந்தார்.
 • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2012 ஆம் ஆண்டு ஜாதவுக்கு ‘இந்திய வனமகன் (Forest Man of India)’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.
 • இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
 • கௌகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியுள்ளது.

நால்வகைக் குறுக்கங்கள் :


ஐகாரக்குறுக்கம் :

 • ஐ, கை, பை-என ஐகார எழுத்து, தனித்து வரும்பொழுது- 2 மாத்திரை அளவில் ஒலிக்கும்.
 • வையம், சமையல், பறவை - எனச் சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது - 2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது.
 • ஐகாரம் சொல்லின் முதலில்- 1 1/2 மாத்திரை ஒலிக்கும்.
 • ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் - 1 மாத்திரை ஒலிக்கும்.

ஔகாரக்குறுக்கம் :

 • ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய 2 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
 • ஔவையார், வௌவால் - எனச் சொற்களின் முதலில் வரும்போது - 2 மாத்திரை அளவிலிருந்து - 1-1/2மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
 • ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

மகரக்குறுக்கம் :

 • அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய 1/2 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
 • வலம் வந்தான்- என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது 1/2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
 • போலும் என்னும் சொல்லைப் போன்ம், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர்.
 • இச்சொற்களில் மகரமெய்யானது ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் - 1/2 மாத்திரை அளவிலிருந்து -1/4 மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஆய்தக் குறுக்கம் :

 • அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, -அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
 • முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும்.
 • இவற்றில் ஆய்த எழுத்து 1/2 மாத்திரை அளவிலிருந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

கலைச்சொல் அறிவோம் :


 • தீவு – Island
 • உவமை - Parable
 • காடு - Jungle
 • வனவியல் - Forestry
 • இயற்கை வளம் - Natural Resource
 • வன விலங்குகள் - Wild Animals
 • வனப் பாதுகாவலர் - Forest Conservator
 • பல்லுயிர் மண்டலம் - Bio Diversity

திருக்குறள் :


அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்

-ஔவையார் (திருவள்ளுவமாலை)

நூல் வெளி :


 • திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
 • முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் சிறப்புப் பெயர்கள்.
 • தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
 • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது.
 • இதில் அறம்-38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
 • இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.

No comments:

Popular Posts