Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 10th Tamil Part 2


அலகு 1: தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளம்
  1. "மொழி ஞாயிறு" எனப் போற்றப்படுபவர்: தேவநேயப் பாவாணர்
  2. கார்த்திலா (Cartila) என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் ஆண்டு: 1554
  3. ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட 'கார்டிலா' நூலின் முழுப்பெயர்: Cartila de lingoa Tamul e Portugues
  4. "நூறாசிரியம்" என்ற நூலை எழுதியவர்: பெருஞ்சித்திரனார்
  5. திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்: தமிழ்திரு.இரா.இளங்குமரனார்
  6. சந்தக்கவிமணி பாடிய இரட்டுறமொழிதல் பாடலில் தமிழ் ஆழி (கடல்)-யுடன் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது.
  7. "தம்பி நெல்லையப்பருக்கு" என்ற கடிதத்தை எழுதியவர்: பாரதியார்
  8. ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு: மலேசியா
  9. கடல் கடந்து முதலில் அச்சேறிய மொழி: தமிழ்
  10. போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகர்: லிசுபன்
அலகு 2: இயற்கையும் சுற்றுச்சூழல் அறிவும்

காற்றின் திசையும் பெயர்களும்:
  1. கிழக்கிலிருந்து வீசும் காற்று: கொண்டல்
  2. மேற்கிலிருந்து வீசும் காற்று: கோடை
  3. வடக்கிலிருந்து வீசும் காற்று: வாடை
  4. தெற்கிலிருந்து வீசும் காற்று: தென்றல்
பருவக்காற்று மற்றும் அதன் விளைவுகள்:
5.  பருவக்காற்றின் உதவியால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்குப் பயணம் செய்யும் வழியைக் கண்டுபிடித்தவர்: கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்
6.  ஹிப்பாலஸ் பருவக்காற்று எனப் பெயர் சூட்டியவர்கள்: யவனர்கள்
7.  தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்குத் தேவையான மழையின் அளவு: 70%
8.  "கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது" என்று காற்றின் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டவர்: மதுரை இளநாகனார்

காற்றாலை மின்சாரம்:
9.  உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம்: 5
10. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்தின் இடம்: 1

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
11. கதிரவனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்களைத் தடுக்கும் அரண்: ஓசோன் மண்டலம்
12. அமில மழை பொழிவுக்குக் காரணமான வாயுக்கள்: கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு
13. "மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியவர்: தேவகோட்டை வா. மூர்த்தி

பிற செய்திகள்:
14. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ்ப் பாடல்கள்: திருவெம்பாவை, திருப்பாவை
15. "நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா" என்று பாரதியாரைப் பாராட்டியவர்: பாரதிதாசன்
16. முல்லைப்பாட்டு அடிகளின் எண்ணிக்கை: 103
17. முல்லைப்பாட்டின் பா வகை: ஆசிரியப்பா
18. முல்லை நிலத்தில் காணப்படும் மரங்கள்: கொன்றை, காயா, குருந்தம்

புயல் குறித்த தகவல்கள்:
19. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை வந்த ஆண்டு: 2000
20. 'கஜா' என்ற புயலின் பெயரை வழங்கிய நாடு: இலங்கை
21. 'பெய்ட்டி' என்ற புயலின் பெயரை வழங்கிய நாடு: தாய்லாந்து
22. புயலின் வலம்புரி, இடம்புரி சுழற்சி விளைவை 1835-ல் கண்டுபிடித்தவர்: காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்
23. "பல் பல பலவின் பயங்கெழு கொல்லி" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்: அகநானூறு

அலகு 3: பண்பாடு மற்றும் விருந்தோம்பல் சிறப்பு
  1. விருந்தோம்பல் பற்றிய 17-ஆம் நூற்றாண்டு சுவரோவியம் உள்ள இடம்: சிதம்பரம்
  2. "வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" - இவ்வரி இடம்பெற்ற நூல்: கம்பராமாயணம்
  3. நெய்தல் நிலத்தில் பாணர்களை வரவேற்று 'குழல் மீன் கறி' கொடுத்ததாகக் கூறும் நூல்: சிறுபாணாற்றுப்படை
  4. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்று கூறியவர்: ஔவையார்
இலக்கிய ஆளுமைகள்:
5.  முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர்: அதிவீரராம பாண்டியர்
6.  அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்: சீவலமாறன்
7.  மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்: நன்னன்
8.  மலைபடுகடாம் அடிகளின் எண்ணிக்கை: 583
9.  கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்: கி.ராஜநாராயணன்
10. எழுத்துலகில் 'கி.ரா' என அழைக்கப்படுபவர்: கி.ராஜநாராயணன்
11. "மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து" என்ற வரி இடம்பெற்ற நூல்: முக்கூடற்பள்ளு

அலகு 4: அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சிந்தனைகள்
  1. பரிபாடல் எவ்வகை நூல்: எட்டுத்தொகை
  2. "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல" என்ற பாடலின் ஆசிரியர்: கீரந்தையார்
  3. தற்போது பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை: 24
பக்தி இலக்கியம்:
4.  குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள உய்யவந்த பெருமானை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.
5.  பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஐந்தாம் திருமொழி ஆகும்.

அறிவியல் நிறுவனங்கள்:
6.  பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு: 1988

ஸ்டீபன் ஹாக்கிங்:
7.  ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய 'காலத்தின் சுருக்கமான வரலாறு' நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்: 40
8.  ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த நாள்: கலிலியோ நினைவு நாள்
9.  ஸ்டீபன் ஹாக்கிங் இறந்த நாள்: ஐன்ஸ்டைன் பிறந்த நாள்
10. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள்: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ஃப் விருது, அடிப்படை இயற்பியல் பரிசு

வரலாறு:
11. சீனாவில் உள்ள சிவன் கோவில் யாருடைய காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டது: சோழர்

அலகு 5: கல்வி மற்றும் மொழிபெயர்ப்பின் தேவை
  1. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்று கூறும் செப்பேடு: சின்னமனூர்ச் செப்பேடு
  2. தேசிய உணர்வு மற்றும் ஒருமைப்பாட்டிற்காக இந்திய அரசு ஒரு கருவியாகக் கொண்டது: மொழிபெயர்ப்பு
  3. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர்: ராகுல் சாங்கிருத்யாயன்
ஆளுமைகள்:
4.  செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்: இடலாக்குடி (கன்னியாகுமரி)
5.  சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்: செய்குதம்பிப் பாவலர்
6.  பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர்: திருமறைக்காடு (வேதாரண்யம்)
7.  பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள்: வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
8.  கமலாலயன் அவர்களின் இயற்பெயர்: வே.குணசேகரன்
9.  "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை" என்ற வரி இடம்பெற்ற நூல்: ஐங்குறுநூறு

அலகு 6: கலை மற்றும் அழகியலின் வெளிப்பாடு

நாட்டுப்புறக் கலைகள்:
  1. கரகாட்டத்தில் கரகச் செம்பில் நிரப்பப்படுபவை: மணல், பச்சரிசி
  2. காவடி ஆட்டத்தின் வேறு பெயர்: காவடி
  3. ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்: தேவராட்டம்
  4. தேவராட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவி: தேவத்துந்துபி (உறுமி)
  5. பொய்க்கால் குதிரை ஆட்டம் ராஜஸ்தானில் அழைக்கப்படுவது: கச்சிக்கொடி
  6. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் அழைக்கப்படுவது: குதிரைக்களி
  7. "தக தகதக்க... என்று தாளம்" - என்ற திருப்புகழ் வரிகளைப் பாடியவர்: அருணகிரிநாதர்
  8. பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டம்: புலியாட்டம்
  9. திரௌபதி அம்மன் வழிபாட்டில் ஒரு முக்கிய பகுதி: தெருக்கூத்து
கலைஞர்கள்:
10. நா.முத்துசாமி பெற்ற விருதுகள்: தாமரைத்திரு விருது, கலைமாமணி விருது

வரலாறு:
11. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தெருவிற்குப் பெயர் சூட்டப்பட்ட மன்னன்: இராசராச சோழன்

இலக்கியம்:
12. உமா மகேஸ்வரி பிறந்த மாவட்டம்: மதுரை
13. உமா மகேஸ்வரியின் கவிதை தொகுதிகள்: நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை

பிள்ளைத்தமிழ்:
14. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடல்களின் எண்ணிக்கை: 100
15. பிள்ளைத்தமிழில் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கு உரிய பருவங்கள்: சிற்றில், சிறுபறை, சிறுதேர்
16. பிள்ளைத்தமிழில் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கு உரிய பருவங்கள்: கழங்கு, அம்மானை, ஊசல்

கம்பராமாயணம்:
17. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பாயும் ஆறு: சரயு
18. "ஏழைமை வேடன் இறந்திலன்" - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்: கம்பராமாயணம்
19. கம்பர் இயற்றிய நூல்கள்: சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுபது, சிலை எழுபது

சா.கந்தசாமி:
20. சா.கந்தசாமி பிறந்த மாவட்டம்: நாகப்பட்டினம்
21. சா.கந்தசாமி அனைத்துலக விருதைப் பெற்ற குறும்படம்: சுடுமண் சிலைகள்
22. 'தொலைந்து போனவர்கள்', 'சூரிய வம்சம்', 'சாந்தகுமாரி' ஆகிய புதினங்களின் ஆசிரியர்: சா.கந்தசாமி

அலகு 7, 8 & 9: வரலாறு, அறம் மற்றும் மனிதம்

ம.பொ.சிவஞானம்:
  1. ம.பொ.சிவஞானம் பிறந்த ஆண்டு: 1906 (ஜூன் 26)
  2. "தலைலை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்" என்று முழங்கியவர்: ம.பொ.சிவஞானம்
  3. சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர்: ம.பொ.சிவஞானம்
கு.ப.ராஜகோபாலன்:
4.  கு.ப.ராஜகோபாலன் பணியாற்றிய இதழ்கள்: தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன்

வரலாறு:
5.  இரண்டாம் இராசராச சோழனின் பட்டங்கள்: கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி

சாதனையாளர்கள்:
6.  எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐநா அவையில் பாடிய ஆண்டு: 1966
7.  ரோஜம் கிருஷ்ணன் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினம்: வேருக்கு நீர்
8.  மதுரையின் முதல் பட்டதாரி பெண்: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
9.  இந்திய அரசின் தாமரைத்திரு விருது பெற்றவர்: கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
10. "களஞ்சியம்" என்ற மகளிர் குழுவை ஆரம்பித்தவர்: சின்னப்பிள்ளை
11. சின்னப்பிள்ளை வாஜ்பாய் கைகளால் பெற்ற விருது: ஸ்திரீ சக்தி புரஸ்கார் (பெண் ஆற்றல் விருது)

ஜெயகாந்தன்:
12. ஜெயகாந்தன் ஞானபீட விருது பெற்றதற்கான பங்களிப்பு: இலக்கியம்
13. "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற குறும் புதினத்தின் ஆசிரியர்: ஜெயகாந்தன்

கிறித்துவத் தமிழ்த் தொண்டு:
14. வீரமாமுனிவர் திருச்சி ஆண்ட எந்த மன்னரைச் சந்தித்தார்: சந்தாசாகிப்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement