இயல் 1: அன்னை மொழியே & தமிழ்ச்சொல் வளம் - வினா விடைத் தொகுப்பு
நூல்களும் ஆசிரியர்களும்
- "உலகியல் நூறு" என்ற நூலின் ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- "பாவியக் கொத்து" என்ற நூலின் ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- "எண்சுவை எண்பது" என்ற நூலின் ஆசிரியர்: பெருஞ்சித்திரனார்
- "தமிழ் சொல் வளம்" என்னும் கட்டுரை இடம்பெற்ற நூல்: தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுக் கட்டுரை
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்: தேவநேயப் பாவாணர்
6. "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!" என்பதில் 'தென்னன்' குறிப்பது: பாண்டிய மன்னன்
7. துய்ப்பது என்ற சொல்லின் பொருள்: கற்பது (அல்லது தருதல்)
தமிழறிஞர்கள்
8. தேவநேயப் பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்: தமிழ்திரு.இரா.இளங்குமரனார்
9. தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்: தமிழ்திரு.இரா.இளங்குமரனார்
தமிழ்ச் சொல் வளம் - தாவர உறுப்புகளுக்கான பெயர்கள்
அடிமரத்தின் பெயர்கள்
10. கரும்பு, சோளம் போன்றவற்றின் அடிப்பகுதி: தட்டு அல்லது தட்டை
11. மூங்கிலின் அடிப்பகுதி: கழை
தாவரக் கிளைப் பிரிவுகள்
12. அடிமரத்தின்னின்று பிரியும் மாபெரும் கிளை: கவை
காய்ந்த தாவரப் பகுதிகள்
13. காய்ந்த சிறுகிளை: விறகு
14. காய்ந்த கழி: வெங்கழி
15. காய்ந்த இலை: சருகு
16. காய்ந்த தாளும் தோகையும்: சண்டு
கொழுந்து வகை
17. சோளம், கம்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து: குருத்து
பூவின் நிலைகள்
18. பூவின் தோற்ற நிலை: அரும்பு
19. பூ வாடிய நிலை: செம்மல்
பிஞ்சு வகைகள்
20. தென்னை, பனை முதலியவற்றின் பிஞ்சு: குரும்பை
21. இளம் பாக்கு: நுழாய்
22. இளம் நெல்: கருக்கல்
23. வாழைப்பிஞ்சு: கச்சல்
குலை வகைகள்
24. அவரை, துவரை முதலியவற்றின் குலைவகை: கொத்து
25. வாழைக்குலை: தாறு
காயின் வகைகள்
26. நுனியில் சுருங்கிய காய்: சூம்பல்
27. பதராய் போன மிளகாய்: சொண்டு
வித்து வகைகள்
28. மா, பலா முதலியவற்றின் வித்து: கொட்டை
இளநிலைப் பெயர்கள்
29. தென்னையின் இளநிலை: பிள்ளை
30. பனையின் இளநிலை: வடலி-----இயல் 2: இயற்கையும் சுற்றுச்சூழலும் - வினா விடைத் தொகுப்பு
சித்தர்களும் பாடல்களும்
- "மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்" என்று கூறியவர்: திருமூலர்
- "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்: சிலப்பதிகாரம்
- "நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொறுப்பிற்..." என்ற பாடலை இயற்றியவர்: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- "திக்குகள் எட்டும் சிதறி - தக்கத் தீம்தரிகிட..." என்ற பாடலின் ஆசிரியர்: பாரதியார்
- "கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர..." என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்: முல்லைப்பாட்டு
6. ஹிப்பாலஸ் பருவக்காற்று எனப் பெயர் சூட்டியவர்கள்: யவனர்கள்
7. வடகிழக்குப் பருவக்காற்றின் காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை
8. இந்தியாவின் முதுகெலும்பு: வேளாண்மை
9. குளிர்பதனப் பெட்டியில் தற்போது பயன்படுத்தப்படும் வாயு: ஹைட்ரோகார்பன்
10. தாஜ்மகால் கட்டப்பட்ட கற்கள்: வெள்ளைப் பளிங்கு கற்கள்
முல்லை நிலக் குறிப்புகள்
11. முல்லை நிலத்தில் காணப்படும் நீர் வகை: காட்டாறு
12. முல்லை நிலத்தில் உள்ள பூ வகைகள்: தோன்றிப்பூ, முல்லை, பிடவம்
13. முல்லை நிலத்தின் உரிபொருள்: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
14. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று: முல்லைப்பாட்டு
புயல் மற்றும் கடல்சார் சொற்கள்
15. வங்கக்கடலில் வீசும் புயல் எவ்வகைச் சுழற்சி கொண்டது: இடம்புரிப் புயல்
16. புயலின் பெயர்களை வழங்கியுள்ள நாடுகள்: வங்கதேசம், இந்தியா, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து
17. கப்பித்தான் என்பதன் பொருள்: தலைமை மாலுமி
18. தொங்கான் என்பதன் பொருள்: கப்பல் (போக்குவரத்து)
சொற்கள் மற்றும் தமிழாக்கம்
19. மெதுஉருளைகள் என்பதன் ஆங்கிலச் சொல்: Tyres
ப.சிங்காரம் பற்றிய குறிப்புகள்
20. ப.சிங்காரம் பணியாற்றிய இதழ்: தினத்தந்தி
21. ப.சிங்காரம் தனது சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை வழங்கியது: மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு
22. பாங்கர் மலர்கள் என்பவை: இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாத மலர்கள்-----இயல் 3: பண்பாடு & விருந்தோம்பல் - வினா விடைத் தொகுப்பு
விருந்தோம்பல் குறிப்புகள்
- "மோப்பக் குழையும் அனிச்சம்" என்ற குறளில் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் எனக் கூறியவர்: திருவள்ளுவர்
- கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர்: கம்பர்
- தனித்து உண்ணாமை என்பது தமிழரின் எந்தப் பண்பின் அடிப்படை: விருந்தோம்பல்
- நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல்: நற்றிணை
- விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து பின் சமைத்து சிவனடியார்க்கு விருந்து அளித்தவர்: இளையான்குடி மாறநாயனார்
- வாழை இலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும் தமிழ்ச்சங்கம்: அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
- காசிக்காண்டம் கூறும் விருந்தோம்பல் ஒழுக்கங்கள்: ஒன்பது
- "ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி..." என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்: விவேகசிந்தாமணி
9. கூர்ம புராணம் மற்றும் லிங்க புராணம் என்ற நூல்களை எழுதியவர்: அதிவீரராம பாண்டியர் (சீவலமாறன்)
10. நைடதம் மற்றும் திருக்கருவை அந்தாதி என்ற நூல்களை எழுதியவர்: அதிவீரராம பாண்டியர்
11. வாயுசம்கிதை என்ற நூலை எழுதியவர்: அதிவீரராம பாண்டியர்
மலைபடுகடாம் குறிப்புகள்
12. மலையை யானையாக உருவகம் செய்து மழையில் எழும் ஓசைகளை அதன் மதம் என்று விளக்கும் நூல்: மலைபடுகடாம்
13. மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னனின் ஊர் மலைப்பகுதியில் விளையும் பயிர்: கம்பு (கரிசல் மண்ணின் இயற்கை தங்கம்)
கி.ராஜநாராயணன் குறிப்புகள்
14. கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை: கோபல்லபுரத்து மக்கள்
15. கி.ராஜநாராயணன் படைத்த நூல்கள்: 20-க்கும் மேற்பட்டவை
16. யாருடைய கதைகள் ஒரு கதைசொல்லியின் போக்கில் அமைந்திருக்கும்: கி.ராஜநாராயணன்
ஊர் மற்றும் பாடல் குறிப்புகள்
17. "கறங்கு இசை விழவின் உரந்தை" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்: அகநானூறு
18. உறையூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது: திருச்சி-----இயல் 4: அறிவியல் & தொழில்நுட்பம் - வினா விடைத் தொகுப்பு
சொற்கள் மற்றும் தமிழாக்கம்
- டிஜிட்டல் ரெவல்யூஷன் (Digital Revolution) என்பதன் தமிழ் சொல்: மின்னணுப் புரட்சி
2. பெருமாள் திருமொழி எந்தத் தொகுப்பில் உள்ளது: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
3. குலசேகர ஆழ்வார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்: எட்டாம் நூற்றாண்டு
4. "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்..." என்ற திருவாசகப் பாடலைப் பாடியவர்: மாணிக்கவாசகர்
5. பரிபாடல் எவ்வகை நூல்: பண்ணோடு பாடப்பட்ட நூல்
வானியல் மற்றும் அறிவியல் வல்லுநர்கள்
6. நம் பால் வீதிகள் போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று நிரூபித்த அமெரிக்க வானியல் வல்லுநர்: எட்வின் ஹப்பிள் (1924)
7. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் உள்ள காட்சிக்கூடங்களின் எண்ணிக்கை: 10
8. "அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன்" என்று கூறியவர்: ஐன்ஸ்டைன்
ஸ்டீபன் ஹாக்கிங் குறிப்புகள்
9. ஸ்டீபன் ஹாக்கிங் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஆண்டு: 1963
10. பேரண்டப்பெருவெடிப்பு பற்றிய யாருடைய ஆராய்ச்சிகள் முக்கியமானவை: ஸ்டீபன் ஹாக்கிங்
11. ஸ்டீபன் ஹாக்கிங் எந்தப் பல்கலைக்கழகத்தில் "லூகாசியன் பேராசிரியர்" பதவியை வகித்தார்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
12. "தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களை பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது" என்று கூறியவர்: ஸ்டீபன் ஹாக்கிங்
13. ஸ்டீபன் ஹாக்கிங் தனது எத்தனையாவது பிறந்தநாளில் ஈர்ப்புவிசை அற்ற பயணத்தை மேற்கொண்டார்: 60
பிற பாடலாசிரியர்கள் மற்றும் நூல்கள்
14. "கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை..." என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்: அகநானூறு
15. "முகம் தெரியா நபர் இடையே இனம் புரியா உறவு முறை" என்ற கவிதையை எழுதியவர்: டெபோரா பர்னாந்து
16. "நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே" என்ற பாடலின் ஆசிரியர்: பாரதியார்
17. "பஞ்சபூதங்களின் அறிவியல் கதைகள்" என்ற நூலின் ஆசிரியர்: நீலமணி
18. "அன்றாட வாழ்வில் அறிவியல்" என்ற நூலின் ஆசிரியர்: தமிழ்செல்வன்
துறைமுக நகர்
19. சீன நாட்டில் 'காண்டன்' நகருக்கு 500 கல் வடக்கே உள்ள துறைமுக நகர்: சூவன்சௌ-----இயல் 5: கல்வி & மொழிபெயர்ப்பு - வினா விடைத் தொகுப்பு
மொழிபெயர்ப்பு குறித்த கூற்றுகள்
- "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்றவர்: மணவை முஸ்தபா
- "மொழிபெயர்த்தல்" என்ற தொடரை தொல்காப்பியர் எந்த இயலில் குறிப்பிட்டுள்ளார்: மரபியல்
- சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் செப்பேடு: சின்னமனூர்ச் செப்பேடு
4. ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு: கீதாஞ்சலி
5. "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை டாக்டர். ஸ்ரீதர் மொழிபெயர்த்த ஆண்டு: 2016
சதாவதானம்
6. "சதாவதானம்" என்ற கலையில் சிறந்து விளங்கியவர்: செய்குதம்பிப் பாவலர்
பாரதியார் கூற்றுகள்
7. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று கூறியவர்: பாரதியார்
8. "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர்: பாரதியார்
ஆங்கிலச் சொற்களுக்கான தமிழாக்கம்
9. "Camel" என்பதற்கு இணையான இரு வேறு பொருள்கள்: ஒட்டகம், வடம் (கயிறு)
10. "Underground Drainage" என்பதன் தமிழாக்கம்: புதைச்சாக்கடை
11. "Tele" என்பது குறிப்பது: தொலை


0 Comments