இயல் 1
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "ஊக்கிவிடும்" என்பதன் பொருள் யாது? | ஊக்கப்படுத்தும் |
| 2 | "அற்புதம்" என்பதன் பொருள் யாது? | விந்தை |
| 3 | "ஒப்புமை" என்பதன் பொருள் யாது? | இணை |
| 4 | மொழியின் முதல் நிலை யாது? | பேசுவதும் கேட்பதும் |
| 5 | மொழியின் இரண்டாம் நிலை யாது? | எழுதப்படுவதும், படிக்கப்படுவதும் |
| 6 | "கவனி" என்ற சொல்லின் பொருள் என்ன? | பேணுதல், பாதுகாப்பு |
| 7 | குறில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படும் அசைச் சொல் எது? | கரம் (எ.கா: அகரம், இகரம்) |
| 8 | வன்தொடர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக? | பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று |
| 9 | 'வ்' என்ற எழுத்தைத் தொடர்ந்து குற்றியலுகரச் சொற்கள் உள்ளதா? | இல்லை |
| 10 | சு, டு, று ஆகியவை இறுதியில் வரும் குற்றியலுகரச் சொற்கள் எந்த வகையில் சேராது? | இடைத்தொடர் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "அதிமதுரம்" என்பதன் பொருள் என்ன? | மிகுந்த சுவை |
| 2 | "விடுதி" என்பதன் பொருள் என்ன? | தங்கும் இடம் |
| 3 | "பரவசம்" என்பதன் பொருள் என்ன? | மகிழ்ச்சிப் பெருக்கு |
| 4 | தமிழ்நாட்டில் வனக்கல்லூரி எங்குள்ளது? | மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) |
| 5 | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்குள்ளது? | கோவை |
| 6 | ஜாதவ் பயேங்க்கு "இந்திய வனமகன்" பட்டம் வழங்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்கிய ஆண்டு எது? | 2012 |
| 7 | மகரக் குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக? | வலம் வந்தான், போன்ம், மருணம் |
| 8 | சொல்லின் முதலில் மட்டுமே வரும் குறுக்கம் எது? | ஔகாரக் குறுக்கம் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "கல் அளை" என்பதன் பொருள் என்ன? | கற்குகை |
| 2 | "ஈன்ற வயிறு" என்பதன் பொருள் என்ன? | பெற்றெடுத்த வயிறு |
| 3 | "யாண்டு" என்பதன் பொருள் என்ன? | எங்கே |
| 4 | "பொக்கிஷம்" என்பதன் பொருள் என்ன? | செல்வம் |
| 5 | "விஸ்தாரம்" என்பதன் பொருள் என்ன? | பெரும்பரப்பு |
| 6 | "கமுகு" என்பதன் பொருள் என்ன? | பாக்கு |
| 7 | பாஞ்சாலங்குறிச்சியில் எது நாயை விரட்டும் எனப்படுகிறது? | முயல் |
| 8 | பிளேக் நோய் பரவியதால் யாருடைய பள்ளிப்படிப்பு பாதியில் நின்றது? | முத்துராமலிங்க தேவர் |
| 9 | முத்துராமலிங்க தேவர் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்த மொழிகள் எவை? | தமிழ், ஆங்கிலம் |
| 10 | காமராஜர் தேர்தலில் போட்டியிட, முத்துராமலிங்க தேவர் ஆட்டுக்குட்டி வாங்கிக் கொடுத்து எதனை கட்ட வைத்தார்? | வரி |
| 11 | வட இந்தியாவில் வாய்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் யார்? | பாலகங்காதர திலகர் |
| 12 | "வங்கசிங்கம்" எனப் போற்றப்படுபவர் யார்? | நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் |
| 13 | தேவரின் பேச்சு "உள்ளத்திலிருந்து வெளிப்படுகிறது, உதடுகளிலிருந்து அல்ல" என்று கூறியவர் யார்? | மூதறிஞர் ராஜாஜி |
| 14 | 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தேவர் யாரை எதிர்த்து வெற்றி பெற்றார்? | ராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி |
| 15 | முத்துராமலிங்க தேவர் போட்டியின்றி வெற்றி பெற்ற தேர்தல் ஆண்டு எது? | 1946 |
| 16 | தேவர் விவசாயிகளுக்காக ஏற்படுத்திய சங்கம் எது? | ஜமீன் விவசாயிகள் சங்கம் |
| 17 | விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கத் தேவர் ஏற்படுத்தியது எது? | பாரதமாதா கூட்டுறவுப் பண்டகச் சாலை |
| 18 | தேவர் மதுரையில் எத்தனை தொழிலாளர் சங்கங்களின் தலைவராக இருந்தார்? | 23 |
| 19 | இரண்டாம் உலகப்போர் காலத்தில் தேவர் எந்தச் சிறையில் அடைக்கப்பட்டார்? | தாமோ சிறை (மத்தியப் பிரதேசம்) |
| 20 | முத்துராமலிங்க தேவர் பர்மா சென்ற ஆண்டுகள் எவை? | 1936, 1955 |
| 21 | வ.உ.சிதம்பரனார் இயற்றிய நூல்கள் யாவை? | மெய்யறம், மெய்யறிவு |
| 22 | சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி யார்? | பின்கே |
| 23 | இலக்கணமுடையது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக? | நிலம், மரம், வான், எழுது |
| 24 | மரூஉ-க்கு எடுத்துக்காட்டுகள் தருக? | தஞ்சை, கோவை, குடந்தை, எந்தை |
| 25 | மங்கலம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக? | திருமுகம் (ஓலை), வெள்ளை ஆடு (கறுப்பு ஆடு), நன்காடு (சுடுகாடு) |
| 26 | இடக்கரடக்கல் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக? | கால் கழுவி வந்தேன், குழந்தை வெளியே போய்விட்டது |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "உரவுநீர்" என்பதன் பொருள் என்ன? | பெருநீர்ப்பரப்பு |
| 2 | "வேயா மாடம்" என்பதன் பொருள் என்ன? | வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம் |
| 3 | "உரு" என்பதன் பொருள் என்ன? | அழகு |
| 4 | "வங்கூழ்" என்பதன் பொருள் என்ன? | காற்று |
| 5 | "நீகான்" என்பதன் பொருள் என்ன? | நாவாய் ஓட்டுபவன் |
| 6 | "எல்" என்பதன் பொருள் என்ன? | பகல் |
| 7 | "மாட ஒள்ளெரி" என்பதன் பொருள் என்ன? | கலங்கரை விளக்கம் |
| 8 | நீளம், அகலம், உயரத்தை அளக்கத் தமிழர்கள் பயன்படுத்திய அளவை எது? | தச்சுமுழம் |
| 9 | மார்கோபோலோ எந்த நாட்டுப் பயணி? | இத்தாலி |
| 10 | மரத்தாலான ஆணிகளின் பெயர் என்ன? | தொகுதி |
| 11 | "தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறியவர் யார்? | வாக்கர் |
| 12 | கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் எதனைக்கொண்டு இணைத்தனர்? | மரப்பிசின் |
| 13 | சமுக்கு என்னும் கருவியைக் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கூறும் நூல் எது? | கப்பல் சாத்திரம் |
| 14 | ஜூல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? | பிரான்சு |
| 15 | வடசொற்களின் இரண்டு வகைகள் யாவை? | தற்சமம், தற்பவம் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "வெற்பு" என்பதன் பொருள் என்ன? | மலை |
| 2 | "கழனி" என்பதன் பொருள் என்ன? | வயல் |
| 3 | "நிகர்" என்பதன் பொருள் என்ன? | சமம் |
| 4 | நாலடியாரின் வேறு பெயர்கள் யாவை? | நாலடி நானூறு, வேளாண் வேதம் |
| 5 | "கோட்படா" என்பதன் பொருள் என்ன? | ஒருவரால் கொள்ளப்படாது |
| 6 | "வாய்த்து ஈயில்" என்பதன் பொருள் என்ன? | வாய்க்கும்படி கொடுத்தாலும் |
| 7 | "விலங்கோடு மக்கள் அனையர்..." என்ற திருக்குறள் எதனை வலியுறுத்துகிறது? | கற்றாரோடு ஏனையவர் |
| 8 | சுப்புரபாரதிமணியன் எழுதிய சிறுகதைகள் எக்கருத்துக்களை வலியுறுத்தின? | குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் |
| 9 | ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் எழுத்துகள் யாவை? | நொ, து |
| 10 | "கு" என்னும் சொல்லின் பொருள் என்ன? | பூமி |
| 11 | "சீ" என்னும் சொல்லின் பொருள் என்ன? | இகழ்ச்சி |
| 12 | "தே" என்னும் சொல்லின் பொருள் என்ன? | கடவுள் |
| 13 | "தை" என்னும் சொல்லின் பொருள் என்ன? | தைத்தல் |
| 14 | "நோ" என்னும் சொல்லின் பொருள் என்ன? | வறுமை (நோய்/துன்பம்) |
| 15 | "பே" என்னும் சொல்லின் பொருள் என்ன? | மேகம் |
| 16 | "பை" என்னும் சொல்லின் பொருள் என்ன? | இளமை |
| 17 | "வி" என்னும் சொல்லின் பொருள் என்ன? | மலர் |
| 18 | "வௌ" என்னும் சொல்லின் பொருள் என்ன? | கவர் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "பிரும்மாக்கள்" என்பதன் பொருள் என்ன? | படைப்பாளர்கள் |
| 2 | "நெடி" என்பதன் பொருள் என்ன? | நாற்றம் |
| 3 | "மழலை" என்பதன் பொருள் என்ன? | குழந்தை |
| 4 | "பூரிப்பு" என்பதன் பொருள் என்ன? | மகிழ்ச்சி |
| 5 | "மேனி" என்பதன் பொருள் என்ன? | உடல் |
| 6 | "வண்கீரை" என்பதன் பொருள் என்ன? | வளமான கீரை |
| 7 | "பரி" என்பதன் பொருள் என்ன? | குதிரை |
| 8 | "கீழ்த்திசை நூலகம்" தொடங்கப்பட்ட ஆண்டு எது? | 1869 |
| 9 | கன்னிமரா நூலகத்தின் எந்தத் தளத்தில் மறைமலையடிகள் நூலகம் உள்ளது? | மூன்றாம் தளம் |
| 10 | வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற ஆண்டுகள் யாவை? | 1973 முதல் 1976 வரை |
| 11 | வள்ளுவர் கோட்டத் தேரின் மொத்த உயரம் என்ன? | 128 அடி |
| 12 | உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தல்லாகுளம் பகுதியில் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது? | 87,000 சதுர அடி |
| 13 | பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலைக்கூடம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? | 1973 |
| 14 | பூம்புகார் சிற்பக்கலைக்கூடம் எத்தனை மாடங்களைக் கொண்டது? | ஏழு நிலை மாடங்கள் |
| 15 | பூம்புகார் சிற்பக்கலைக்கூடத்தில் யாருக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது? | மாதவி |
| 16 | முதனிலைத் தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டுகள் தருக? | இடி, கொதி |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | "மாரி" என்பதன் பொருள் என்ன? | மழை |
| 2 | "முன்றில்" என்பதன் பொருள் என்ன? | வீட்டின் முன் இடம் (திண்ணை) |
| 3 | "குழி" என்பது எதைக் குறிக்கும் சொல்? | நில அளவைப் பெயர் |
| 4 | "மணி" என்பது எதைக் குறிக்கும் சொல்? | முற்றிய நெல் |
| 5 | "சான்" (சாண்) என்பது எதைக் குறிக்கும் சொல்? | நீட்டல் அளவைப் பெயர் |
| 6 | "பொதியிலாயினும் இமயமாயினும்" என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் யார்? | இளங்கோவடிகள் |
| 7 | நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது? | திருநெல்வேலி |


0 Comments