I. இலக்கியம் மற்றும் புலவர்கள்:
- "புதிய அறம் பாட வந்த அறிஞன்," "மறம் பாட வந்த மறவன்" என்று பாரதியாரைப் புகழ்ந்தவர்: பாரதிதாசன்.
- "வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே" என்ற அடிகளை இயற்றியவர்: பாரதியார்.
- "ஓடை ஆட உள்ளம் தூண்டுதே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்: வாணிதாசன்.
- வாணிதாசன் யாருடைய மாணவர்: பாரதிதாசன்.
- "தொடுவானம்," "எழிலோவியம்" ஆகிய நூல்களின் ஆசிரியர்: வாணிதாசன்.
- "கோணக்காத்து பாட்டு" பாடலின் ஆசிரியர்: வெங்கம்பூர் சாமிநாதன்.
- "பஞ்சக் கும்மிகள்" நூலைத் தொகுத்தவர்: புலவர் செ.ராசு.
- "பேர்தற்கு அரும்பிணி தாம்இவை" எனத் தொடங்கும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்: நீலகேசி.
- நீலகேசியின் ஆசிரியர்: பெயர் தெரியவில்லை.
- "உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்," "காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின்" எனத் தொடங்கும் பாடல்களின் ஆசிரியர்: கவிமணி தேசிய விநாயகம்.
- கவிமணி தேசிய விநாயகத்தின் மொழிபெயர்ப்பு நூல்: உமர்கய்யாம் பாடல்.
- "மருமக்கள் வழி மான்மியம்" என்ற நூலின் ஆசிரியர்: கவிமணி தேசிய விநாயகம்.
- "ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்" என்ற நூலை எழுதியவர்: சுஜாதா.
- "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்: குமரகுருபரர்.
- "சகலகலாவல்லிமாலை," "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்" ஆகிய நூல்களை இயற்றியவர்: குமரகுருபரர்.
- "கேடில் விழுச்செல்வம் கல்வி" என்ற வரிகள் இடம்பெற்று உள்ள நூல்: திருக்குறள்.
- "ஏடென்று கல்வி: சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி" என்றவர்: குலோத்துங்கன்.
- திரு.வி.க பிறந்த ஊர்: திருவாரூர்.
- "பொதுமை வேட்டல்" என்ற நூலை எழுதியவர்: திரு.வி.க.
- "பண்ணின்தமிழ் அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை" என்ற பாடலின் ஆசிரியர்: சுந்தரர்.
- சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் வைக்கப்பட்டுள்ள திருமுறை: ஏழாம் திருமுறை.
- "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்" என்ற கலித்தொகை பாடலை இயற்றியவர்: நல்லந்துவனார்.
- கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர்: நல்லந்துவனார்.
- "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" என்ற வரி இடம்பெற்ற நூல்: திருப்பாவை.
- தமிழில் எழுந்த முதல் பரணி நூல்: கலிங்கத்துப் பரணி.
- கலிங்கத்துப்பரணி கொண்டுள்ள தாழிசைகளின் எண்ணிக்கை: 599.
II. இலக்கணம் மற்றும் மொழியியல்:
- "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" என்ற வரியைக் கூறியவர்: தொல்காப்பியர்.
- உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை அழைக்கும் விதம்: உயிரளபெடை.
- விசும்பு என்னும் சொல்லின் பொருள்: வானம்.
- புலியின் ஒலி மரபு: உறுமும்.
- யானையின் ஒலி மரபு: பிளிரும்.
- எகர ஒகர குறில் எழுத்துக்கள் குறிக்க எழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்துள்ளது: தொல்காப்பியர்.
- தமிழில் 'சொல்' என்பதற்கு என்ன பொருள்: நெல்.
- "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது யாருடைய கூற்று: தொல்காப்பியர்.
- ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துக்கள்: நொ, து.
- அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன்: ஏவலன்.
- அம்பு விடும் கலையை தமிழ் எவ்வாறு அழைக்கிறது: ஏகலை.
- உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் பிறக்கும் இடம்: கழுத்து.
- வல்லின மெய்யெழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்: மார்பு.
- மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்: மூக்கு.
- ஆய்த எழுத்து பிறக்கும் இடம்: தலை.
- பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்கள்: முற்றுவினை.
- ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று: ஏவல் வினைமுற்று.
- வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று: வியங்கோள் வினைமுற்று.
- வியங்கோள் வினைமுற்று விகுதிகள்: க, இய, இயர், அல்.
- பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்: எச்சம்.
- வினையைக் கொண்டு முடியும் எச்சம்: வினையெச்சம்.
- ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது: முற்றெச்சம்.
- வேற்றுமை உருபுகள் இடம்பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால்: வேற்றுமைத்தொகை.
- முதல் வேற்றுமையின் வேறு பெயர்: எழுவாய் வேற்றுமை.
- இரண்டாம் வேற்றுமையின் வேறு பெயர்: செயப்படுபொருள் வேற்றுமை.
- மூன்றாம் வேற்றுமை உருபுகள்: ஆல், ஆன், ஒடு, ஓடு.
- நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு: கு.
- உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை: ஆறாம் வேற்றுமை.
- "காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" என்று குறிப்பிடும் நூல்: நன்னூல்.
- சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க வருவது: இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.
- "பொற்றொடி வந்தால்" என்பது: அன்மொழித்தொகை.
- "தாய்தந்தை" என்பது (உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு): உம்மைத்தொகை.
III. திருக்குறள் மற்றும் அணிகள்:
- "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி: இல்பொருள் உவமை அணி.
- "கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி: பிறிதுமொழிதலணி.
- திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்: 2000 ஆண்டுகள்.
- அறத்துப்பால் கொண்டுள்ள இயல்களின் எண்ணிக்கை: 4 (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்).
- "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்" என்ற குறளில் பண்புடைமை என்று சொல்லப்படுவது: அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறப்பதும்.
IV. அறிவியல் மற்றும் மருத்துவம்:
- சித்த மருத்துவத்தில் எதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது: மூலிகை, தாதுப்பொருள், உலோகம்.
- மனித மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை: பத்தாயிரம் கோடி (நூறு பில்லியன்).
- மூளை, உடம்பின் எடையில் கொண்டுள்ள பங்கு: 1/50.
- உடலின் அசைவுகளையும், உணர்ச்சிகளையு வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது: சிறுமூளை.
- மூளையின் எந்தப் பகுதியில் நாம் வடிவங்களை உணருகிறோம்: வலது பகுதி.
- சராசரி மனிதன் தன் வாழ்நாளில் தூங்கும் வருடங்கள்: 20 வருடங்கள்.
V. வரலாறு, பண்பாடு மற்றும் புவியியல்:
- கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன: கி.மு.3 ஆம் நூற்றாண்டு.
- செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன: கி.பி.ஏழாம் நூற்றாண்டு.
- சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க எந்நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்: அமெரிக்கா.
- சுகுவாமிஷ் பழங்குடியினர் எதைத் தந்தையாக கருதுகிறார்கள்: வானம்.
- பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினர்: காடர்.
- காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்: ஆல்அலப்பு.
- முதுமக்கள் தாழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: ஆதிச்சநல்லூர்.
- கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படும் மூங்கில் வகை: கூட்டு மூங்கில்.
- பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை: பனையோலைகள்.
- பதிகம் என்பது குறிக்கும் பாடல்களின் எண்ணிக்கை: 10 பாடல்கள்.
- கலித்தொகை பாடலில் அன்பு எனப்படுவது: உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
- கலித்தொகை பாடலில் அறிவு எனப்படுவது: அறிவற்றவர் கூறும் சொற்களை பொறுத்தல்.
- சேரர்களுக்கு உரிய பூ: பனம் பூ.
- ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு: அமராவதி.
- கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்ட கிரேக்க அறிஞர்: தாலமி.
- தமிழகத்தில் மஞ்சள் சந்தை நடைபெறும் இடம்: ஈரோடு.
- இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான "நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா" அமைந்துள்ள இடம்: திருப்பூர்.
VI. இசைக் கருவிகள்:
- இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர்: பாணர்.
- விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள்: தோல் கருவி.
- உடுக்கையின் உடல் எதனால் ஆனது: பித்தளை.
- பெரிய உடுக்கைக்கு உள்ள பெயர்: தவண்டை.
- குழலில் உள்ள துளைகளின் எண்ணிக்கை: ஏழு.
- முதற்கருவி என்று அழைக்கப்படுவது: மத்தளம்.
- பேரியாழ் கொண்டுள்ள நரம்புகள்: 21.
- சகோடயாழ் கொண்டுள்ள நரம்புகள்: 14.


0 Comments