Ad Code

Responsive Advertisement

எட்டாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 8th Tamil Part 3


கல்வி, அறிவு சார்ந்தவை:
  1. "கல்வி கரையில கற்பவர் நாள்சில" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
    விடை: நாலடியார்
  2. "கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாவாம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
    விடை: குமரகுருபரர்
  3. "தாய் மொழி வாயிலாக கல்வி பெற்றால் சிறப்பு" என்று கூறியவர் யார்?
    விடை: திரு. வி.க
  4. "தாய்நாடு என்னும் பெயர் தாய் மொழியைக் கொண்டே பிறப்பது" என்று கூறியவர் யார்?
    விடை: திரு.வி.க
  5. "தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டா" என்று கூறியவர் யார்?
    விடை: திரு.வி.க
  6. புறவுலக ஆராய்ச்சிக்கு அறிவியல் எதைப் போன்றது?
    விடை: கொழு கொம்பு
  7. "எனக்கு பிடித்த நூலோடு வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சி அடைவேன்" என்றவர் யார்?
    விடை: நேரு
மருத்துவம் சார்ந்தவை:
  1. "வேர்பாரு: தாழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே" என்ற வரியை சொன்னவர் யார்?
    விடை: சித்தர்கள்
  2. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி குருதி தேவைப்படுகிறது?
    விடை: 800 மி.லி
இலக்கணம், புணர்ச்சி சார்ந்தவை:
  1. மூன்றாம் வேற்றுமை உருபான 'ஆல்', 'ஆன்' எவ்வகையான பொருளில் வரும்?
    விடை: கருவிப்பொருள், கருத்தாப்பொருள்
  2. நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக 'ஆக' என்னும் அசை சேர்ந்து வந்தால் அது என்ன?
    விடை: ஆக
  3. "தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார்" என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
    விடை: பொருட்டு
  4. "பாம்பின் நிறமொரு குட்டி" என்பது ஐந்தாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
    விடை: ஒப்பு
  5. எண்ணுப்பெயர்களில் எந்த எண்களுக்கு மட்டும் வல்லினம் மிகும்?
    விடை: 8, 10
  6. "சிதம்பரம் சென்றான்" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை என்ன?
    விடை: நான்காம் வேற்றுமைத்தொகை
  7. பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையே 'ஆன', 'ஆகிய' என்னும் பண்பு உருபுகள் மறைந்து வருவது என்ன?
    விடை: பண்புத்தொகை
  8. "சென்றனர் வீரர்" என்பது எவ்வகைத் தொடர்?
    விடை: வினைமுற்றுத் தொடர்
  9. "அக்களத்து" என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
    விடை: அ + களத்து
  10. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவதை எவ்வாறு என்பர்?
    விடை: புணர்ச்சி
  11. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது என்ன விகாரம்?
    விடை: தோன்றல் விகாரம்
  12. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது என்ன விகாரம்?
    விடை: திரிதல் விகாரம்
  13. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது என்ன விகாரம்?
    விடை: கெடுதல் விகாரம்
குறிகள் சார்ந்தவை:
  1. முகவரியில் இறுதிவரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் என்ன குறி வரும்?
    விடை: காற்புள்ளி
  2. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் என்ன குறி வரும்?
    விடை: அரைப்புள்ளி
  3. சொற்றொடரின் இறுதியில் என்ன குறி வரும்?
    விடை: முற்றுப்புள்ளி
  4. நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களில் என்ன குறி வரும்?
    விடை: இரட்டை மேற்கோள்குறி
இலக்கியம், சமயம் சார்ந்தவை:
  1. தேவாரம் பாடிய மூவரில் ஒருவர் யார்?
    விடை: சுந்தரர்
  2. தே + ஆரம் என்பதன் பொருள் என்ன?
    விடை: இறைவனுக்கு சூடப்படும் மாலை
  3. தே + வாரம் என்பதன் பொருள் என்ன?
    விடை: இனிய ஓசை பொருந்திய பாடல்கள்
  4. கலித்தொகை பாடலில் இல்வாழ்வு என்பது எதைச் செய்தல் ஆகும்?
    விடை: அலந்தவர்க்கு (வறியவர்க்கு) உதவி
  5. கலித்தொகை பாடலில் பண்பு எனப்படுவது யாது?
    விடை: பாடறிந்து ஒழுகுதல் (பண்பு என்பது பாடறிந்து ஒழுகுதல்)
  6. கலித்தொகைப் பாடலில் பாதுகாப்பு என்பது யாரைப் பிரியாது வாழ்வதாகும்?
    விடை: அன்புடையோரை
  7. கலித்தொகை எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
    விடை: 5
  8. 'நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்' என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
    விடை: புறநானூறு
  9. "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரம்நடம் பயில்வார்" என்ற வரியை இயற்றியவர் யார்?
    விடை: திருஞானசம்பந்தர்
  10. "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்குபேரி" என்ற வரி இடம் பெற்ற நூல் என்ன?
    விடை: பெரிய புராணம்
  11. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
    விடை: நாச்சியார் திருமொழி
  12. "மாக்கண் முரசம்" என்று கூறும் நூல் எது?
    விடை: மதுரைக்காஞ்சி
  13. மண்ணமை முழவு பற்றிக் கூறும் நூல் எது?
    விடை: பொருநராற்றுப்படை
  14. "அருவர் வருவர் எனா இறைஞ்சின" என்ற பாடலை இயற்றியவர் யார்?
    விடை: ஜெயங்கொண்டார்
  15. ஜெயங்கொண்டார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
    விடை: தீபங்குடி
  16. ஜெயங்கொண்டாரை "பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர் யார்?
    விடை: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
  17. கலிங்கத்துப்பரணியின் பா வகை என்ன?
    விடை: கலித்தாழிசை
  18. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
    விடை: ஔவையார்
இசைக்கருவிகள் சார்ந்தவை:
  1. உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு வகை --------- ஆகும்?
    விடை: கைப்பறை
  2. உடுக்கையின் வாய்ப்பகுதி எதனால் பொருத்தப்பட்டது?
    விடை: ஆட்டுத்தோல்
  3. உடுக்கையின் எந்த வாயின் மீது அடிப்பர்?
    விடை: வலது
  4. சிறிய உடுக்கைக்கு என்ன பெயர்?
    விடை: குடுகுடுப்பை
  5. தில்லையில் நடமாடும் நடராசனின் கைகளில் எதைக் காணலாம்?
    விடை: உடுக்கை
  6. குடமுழா எந்த வகை இசைக்கருவி ஆகும்?
    விடை: தோல் கருவி
  7. வேடர் வேட்டையின் போது பயன்படுத்தும் இசைக்கருவி எது?
    விடை: கொம்பு
  8. சங்கின் ஒலியை எவ்வாறு அழைப்பர்?
    விடை: சங்கநாதம்
  9. சங்கை இலக்கியங்களில் எவ்வாறு கூறுவர்?
    விடை: பணிலம்
  10. சாலராவின் வேறு பெயர் என்ன?
    விடை: பாண்டில்
  11. வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்த இசைக்கருவி எது?
    விடை: சேகண்டி
  12. சேகண்டியின் மற்றொரு பெயர் என்ன?
    விடை: சேமங்கலம்
  13. மணற்கடிகார வடிவத்தில் அமைந்த இசைக்கருவி எது?
    விடை: திமிலை
  14. திமிலை வேறு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது?
    விடை: பாணி
  15. பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும் போது எதை முழங்குவர்?
    விடை: ஆகோட்பறை
  16. பறையை முழக்கிக் கொண்டு ஆடும் ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது?
    விடை: தப்பாட்டம்
  17. தமிழர்கள் போர் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது எது?
    விடை: முரசு
  18. காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவு எது?
    விடை: நாழிகை முழவு, காலை முழவு
  19. மீன் வடிவில் அமைந்த மகரயாழ் எத்தனை நரம்புகளை உடையது?
    விடை: 19
  20. யாழின் வடிவம் மாற்றமடைந்து பிற்காலத்தில் எதுவாக உருமாறியது?
    விடை: வீணை
  21. பரிவாதினி என்னும் வீணை எப்பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது?
    விடை: மகேந்திரவர்மன்
சமூகம், புவியியல் சார்ந்தவை:
  1. பானை செய்வதற்கு களிமண்ணுடன் எதை கலக்கவேண்டும்?
    விடை: மெல்லிய மணல், சாம்பல்
  2. குழந்தைகளைப் படுக்க வைக்க பயன்படும் பாய் எது?
    விடை: தடுக்குப்பாய்
  3. உட்கார்ந்து உணவு உண்ண உதவும் பாய் எது?
    விடை: பந்திப் பாய்
  4. பிரம்பின் தாவரவியல் பெயர் என்ன?
    விடை: கலாமஸ் ரொடாங்
  5. தற்போது பிரம்பு எந்தெந்த இடங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது?
    விடை: அசாம், அந்தமான், மலேசியா
  6. சேர நாட்டின் துறைமுகப்பட்டினங்கள் எவை?
    விடை: தொண்டி, முசிறி, காந்தளூர்
  7. சேலம், கோவை மற்றும் கேரளப் பகுதிகள் இணைந்தது எந்த நாடு ஆகும்?
    விடை: சேரநாடு
  8. செங்குட்டுவன் கடற்போரில் பெற்ற வெற்றியால் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
    விடை: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
  9. முசிறி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை?
    விடை: மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், மணி, பட்டு
  10. சேரநாட்டில் விலையை கணக்கிட அடிப்படையாக இருந்தது எது?
    விடை: நெல்
  11. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர்" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
    விடை: அகநானூறு
  12. புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை எங்குள்ளது?
    விடை: நீலகிரி
  13. கோவன்புத்தூர் என்னும் பெயர் மருவி எவ்வாறு வழங்கப்பட்டு வருகிறது?
    விடை: கோயம்புத்தூர்
  14. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
    விடை: திண்டுக்கல்
  15. சின்னாளப்பட்டி எதற்கு பெயர் பெற்றது?
    விடை: சுங்குடிச் சேலைகள்
  16. தமிழ்நாட்டில் பரப்பளவின் அடிப்படையில் இரண்டாவது பெரிய நகரம் எது?
    விடை: ஈரோடு
  17. மிகச்சிறந்த பின்னலாடை நகரம் எது?
    விடை: திருப்பூர்
  18. முட்டை நகரம் என்று அழைக்கப்படுவது எது?
    விடை: நாமக்கல்
  19. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது?
    விடை: சேலம்
  20. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுவது எது?
    விடை: ஏற்காடு
  21. வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
    விடை: கரூர்
  22. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் மாவட்டம் எது?
    விடை: கரூர்
  23. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது?
    விடை: கோயம்புத்தூர்
  24. முத்துநகரம் என அழைகபடுவது எது?
    விடை: தூத்துக்குடி
  25. தமிழ்நாட்டின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் எங்குள்ளது?
    விடை: நெய்வேலி
ஆசிரியர்கள், நூல்கள் சார்ந்தவை:
  1. "காலம் உடன் வரும்" என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
    விடை: கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
  2. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
    விடை: திருப்பூர்
  3. "வா இந்தப்பக்கம்", "கோடையும் வசந்தமும்" என்ற நூல்களை எழுதியவர் யார்?
    விடை: மீரா
  4. மீரா நடத்திவந்த இதழின் பெயர் என்ன?
    விடை: அன்னம் விடு தூது
அரசியல், ஆளுமைகள் சார்ந்தவை:
  1. மதிய உணவுத் திட்டம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது?
    விடை: காமராஜர்
  2. எம்.ஜி.இராமச்சந்திரனின் பெற்றோர் கேரளாவிலிருந்து எங்கு குடிபெயர்ந்தனர்?
    விடை: இலங்கை
  3. எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையில் உள்ள கண்டி நகரில் பிறந்த தேதி என்ன?
    விடை: 17.01.1917
  4. எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
    விடை: சென்னை பல்கலைக்கழகம்
  5. எம்.ஜி.ஆர் அவர்கள் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்தினார்?
    விடை: ஐந்தாவது
  6. எம்.ஜி.ஆர் எம்மாவட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்?
    விடை: தஞ்சாவூர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement