கலைச்சொற்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள்:
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | இறையரசனின் இயற்பெயர் என்ன? | சே. சேசுராசா |
| 2 | இறையரசன் எழுதிய "கன்னிப்பாவை" எந்த நூலைத் தழுவியது? | திருப்பாவை |
| 3 | பாவை நோன்பு எந்த மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது? | மார்கழி |
| 4 | திருப்பாவையை இயற்றியவர் யார்? | ஆண்டாள் |
| 5 | திருவெம்பாவையை இயற்றியவர் யார்? | மாணிக்கவாசகர் |
| 6 | "செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்" என்ற வரியை இயற்றியவர் யார்? | ஆண்டாள் |
| 7 | "அறிவு அருள் ஆசை அச்சம்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? | இறையரசன் |
| 8 | "மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு" எதற்கு உண்டு? | மாமழை |
| 9 | "பெருநீரால் வாரி சிறக்க" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? | தகடூர் யாத்திரை |
| 10 | தகடூர் யாத்திரை நூலின் ஆசிரியர் யார்? | பெயர் தெரியவில்லை |
| 11 | தகடூர் யாத்திரை பாடல்கள் எந்த தொகுப்பு நூலில் கிடைத்துள்ளன? | புறத்திரட்டு |
| 12 | பஞ்சத்தை காட்டும் அடையாளமாக நிகழும் நோன்பு எது? | மழைச்சோற்று நோன்பு |
| 13 | "பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்" என்ற நூலின் பதிப்பாசிரியர் யார்? | அ. கௌரன் |
| 14 | "காலம் உடன் வரும்" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? | கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் |
| 15 | கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் பெற்ற விருது என்ன? | இலக்கியச் சிந்தனை விருது |
| 16 | கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்கள் எவை? | கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புக்கடலை குடிக்கும் பூனை |
| 17 | கலிங்கத்துப்பரணி பா வகை என்ன? | கலித்தாழிசை |
| 18 | "வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி" என்ற பாடலை இயற்றியவர் யார்? | ஜெயங்கொண்டார் |
| 19 | "முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட" எனத் தொடங்கும் கவிதையை எழுதியவர் யார்? | மீரா |
| 20 | மீராவின் இயற்பெயர் என்ன? | மீ. ராசேந்திரன் |
| 21 | மீரா நடத்திய இதழ் எது? | அன்னம் விடு தூது |
| 22 | மீரா எழுதிய நூல்கள் எவை? | ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப்பக்கம் |
| 23 | விடுதலைத் திருநாள் கவிதை மீராவின் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது? | கோடையும் வசந்தமும் |
| 24 | "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது" என்ற வரியை இயற்றியவர் யார்? | ஔவையார் |
| 25 | ஔவையாருக்கு நெல்லிக்கனியை வழங்கியவர் யார்? | அதியமான் |
| 26 | "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்ற பாடலை இயற்றியவர் யார்? | திருமூலர் |
| 27 | "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்" என்ற வரியை இயற்றியவர் யார்? | திருமூலர் |
| 28 | 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், 18 சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் யார்? | திருமூலர் |
| 29 | திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது? | 3000 |
| 30 | "தமிழ் மூவாயிரம்" என அழைக்கப்படும் நூல் எது? | திருமந்திரம் |
| 31 | திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறை? | பத்தாவது |
| 32 | "கள்ளக்கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு" என்ற பாடலின் ஆசிரியர் யார்? | குணங்குடி மஸ்தான் சாகிபு |
| 33 | குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இருந்த இடங்கள் எவை? | சதுரகிரி, புறாமலை, நாகமலை |
| 34 | குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய கண்ணிகள் எவை? | எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி |
| 35 | தந்தை பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்? | அயோத்திதாசர் |
| 36 | அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன? | காத்தவராயன் |
| 37 | அயோத்திதாசர் யாரிடம் கல்வி கற்றார்? | அயோத்திதாச பண்டிதர் |
| 38 | "ஒரு பைசாத் தமிழன்" இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? | 1907 |
| 39 | "ஒரு பைசாத் தமிழன்" இதழின் விலை என்ன? | காலணா |
| 40 | அயோத்திதாசர் பதிப்பித்த நூல் எது? | அகத்தியர் 200 |
| 41 | அயோத்திதாசர் எழுதிய வரலாற்று நூல் எது? | இந்திர தேச சரித்திரம் |
| 42 | திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது? | 1892 |
| 43 | "வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமை" என்றவர் யார்? | அயோத்திதாசர் |
| 44 | சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்? | புதுமைப்பித்தன் |
| 45 | புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன? | சொ. விருத்தாசலம் |
| 46 | "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? | புதுமைப்பித்தன் |
| 47 | "சாப விமோசனம்", "பொன்னகரம்" சிறுகதைகளின் ஆசிரியர் யார்? | புதுமைப்பித்தன் |
| 48 | "மனித எந்திரம்" சிறுகதை எந்த இதழில் வெளியானது? | மணிக்கொடி |
| எண் | சொல் | பொருள் |
|---|---|---|
| 1 | நிறை | மேன்மை |
| 2 | பொறை | பொறுமை |
| 3 | மையல் | விருப்பம் |
| 4 | வாரி | வருவாய் |
| 5 | யாணர் | புதுவருவாய் |
| 6 | மரளி | காலன் (எமன்) |
| 7 | கரி | யானை |
| 8 | பிளம் | மலைக்குகை |
| 9 | நமன் | எமன் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலெழுத்தும் இணைவதை எவ்வாறு அழைப்பர்? | புணர்ச்சி |
| 2 | நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது என்ன? | உயிரீற்றுப் புணர்ச்சி |
| 3 | நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது என்ன? | மெய்யீற்றுப் புணர்ச்சி |
| 4 | வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது என்ன? | உயிர் முதல் புணர்ச்சி |
| 5 | வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது என்ன? | மெய் முதல் புணர்ச்சி |
| 6 | நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது என்ன? | இயல்பு புணர்ச்சி |
| 7 | புணர்ச்சியின் போது மாற்றங்கள் நிகழ்வது எவ்வாறு அழைக்கப்படும்? | விகாரப் புணர்ச்சி |
| 8 | விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? | மூன்று |
| 9 | புணர்ச்சியில் புதிதாக ஒரு எழுத்து தோன்றுவது எவ்வகை விகாரம்? | தோன்றல் விகாரம் |
| 10 | புணர்ச்சியில் ஒரு எழுத்து வேறு எழுத்தாக மாறுவது எவ்வகை விகாரம்? | திரிதல் விகாரம் |
| 11 | புணர்ச்சியில் ஒரு எழுத்து மறைவது எவ்வகை விகாரம்? | கெடுதல் விகாரம் |
| 12 | எந்தச் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்? | அந்த, இந்த |
| 13 | எந்த வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்? | எந்த |
| 14 | இரண்டாம் வேற்றுமை உருபாகிய 'ஐ' வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகுமா? | மிகும் |
| 15 | உவமைத்தொகையில் வல்லினம் மிகுமா? | மிகும் |
| 16 | உருவகத்தில் வல்லினம் மிகுமா? | மிகும் |
| 17 | எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகுமா? | மிகாது |
| 18 | அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகுமா? | மிகாது |
| 19 | இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகுமா? | மிகாது |
| 20 | யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள் எத்தனை? | ஆறு |
| 21 | குறில் அல்லது நெடில் எழுத்து தனித்தோ ஒற்றடுத்தோ வருவது என்ன? | நேரசை |
| 22 | இரு குறில் அல்லது குறில் நெடில் இணைந்து வருவது என்ன? | நிரையசை |
| 23 | செய்யுளின் உறுப்புகளில் "தொடை" எத்தனை வகைப்படும்? | எட்டு |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? | தருமபுரி |
| 2 | நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் எவை? | தேயிலை, புகைப்படச்சுருள், வெடிமருந்து |
| 3 | சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் எது? | சின்னாளப்பட்டி |
| 4 | மஞ்சள் சந்தை நடைபெறும் ஊர் எது? | ஈரோடு |
| 5 | முட்டை நகரம் என்று அழைக்கப்படுவது எது? | நாமக்கல் |
| 6 | பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுவது எது? | திருப்பூர் |
| 7 | தமிழகத்தின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் மாவட்டம் எது? | திண்டுக்கல் |
| 8 | தமிழர்கள் எதனைத் தமது உடைமைகளாகக் கொண்டிருந்தனர்? | அறம், வீரம் |
| 9 | எம்.ஜி.ஆர் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கிய திட்டம் எது? | காலணி வழங்கும் திட்டம் |
| 10 | எம்.ஜி.ஆருக்கு "டாக்டர்" பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது? | சென்னை பல்கலைக்கழகம் |
| 11 | எம்.ஜி.ஆர் எந்த நகரில் 5-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார்? | மதுரை |
| 12 | எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? | 1988 |
| 13 | எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை எங்கு தோற்றுவித்தார்? | தஞ்சாவூர் |
| 14 | எம்.ஜி.ஆரின் பெற்றோர் பெயர் என்ன? | கோபாலன் - சத்யபாமா |
| 15 | எம்.ஜி.ஆர் பிறந்த தேதி என்ன? | 17.01.1917 |
| 16 | எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித்தந்த திட்டம் எது? | சத்துணவுத் திட்டம் |
| 17 | அயோத்திதாசர் திருமணத்திற்குப் பின் எங்கு வாழ்ந்தார்? | பர்மா |
| 18 | அயோத்திதாசர் அறிந்த மொழிகள் யாவை? | தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம் |
| 19 | அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை எங்குள்ளது? | தாம்பரம் |


0 Comments