சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அவர்களின் பணிகள்
- சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் யார்?விடை: தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்
- தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?விடை: அயோத்திதாசர்
- அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?விடை: காத்தவராயன்
- அயோத்திதாசர் பிறந்த தேதி என்ன?விடை: 20 மே 1845
- அயோத்திதாசர் யாரிடம் கல்வி மற்றும் சித்த மருத்துவம் கற்றார்?விடை: அயோத்திதாச பண்டிதர்
- அயோத்திதாசர் திருமணத்திற்குப் பிறகு எங்கு சென்று வாழ்ந்தார்?விடை: பர்மா
- அயோத்திதாசருக்குத் தெரிந்த மொழிகள் யாவை?விடை: பாளி, தமிழ், வடமொழி, ஆங்கிலம்
- அயோத்திதாசர் 'ஒரு பைசாத் தமிழன்' என்ற வார இதழைத் தொடங்கிய ஆண்டு எது?விடை: 1907
- 'ஒரு பைசாத் தமிழன்' இதழின் பெயரை அயோத்திதாசர் எவ்வாறு மாற்றம் செய்தார்?விடை: தமிழன்
- அயோத்திதாசர் தோற்றுவித்த அமைப்பு எது? அதன் ஆண்டு என்ன?விடை: திராவிட மகாஜன சங்கம் (1892)
- 'மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது மழை' என்று கூறியவர் யார்?விடை: அயோத்திதாசர்
- அயோத்திதாசர் பதிப்பித்த நூல் எது?விடை: அகத்தியர் 200
- அயோத்திதாசர் எழுதிய நூல்கள் எவை?விடை: புத்தர் சரித்திரப்பா, இந்திர தேச சரித்திரம், விவாக விளக்கம், போகர் 700
- 'இந்திர தேச சரித்திரம்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: அயோத்திதாசர்
- அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை எங்கு அமைந்துள்ளது?விடை: சென்னை - தாம்பரம்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
- எம்.ஜி.இராமச்சந்திரனை மக்கள் எவ்வாறு அழைத்தனர்?விடை: புரட்சித் தலைவர், மக்கள் திலகம்
- பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: எம்.ஜி.ஆர்
- எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?விடை: சென்னை பல்கலைக்கழகம்
- எம்.ஜி.ஆர் மதுரை மாநகரில் நடத்திய உலகத்தமிழ் மாநாடு எத்தனையாவது?விடை: ஐந்தாவது
- எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த மாவட்டம் எது?விடை: தஞ்சாவூர்
திருமூலர் மற்றும் குணங்குடி மஸ்தான் சாகிபு
- 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற பாடலை இயற்றியவர் யார்?விடை: திருமூலர்
- 63 நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர் யார்?விடை: திருமூலர்
- திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?விடை: 3000
- பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?விடை: 10
- 'நமன்' என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: எமன்
- 'கள்ளக்கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு' எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு
- குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?விடை: சுல்தான் அப்துல் காதர்
- குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இருந்த இடங்கள் எவை?விடை: சதுரகிரி, புறாமலை, நாகமலை
- குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றிய கண்ணி நூல்கள் எவை?விடை: எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி
- 'ஆனந்தவெள்ளம்' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?விடை: ஆனந்தம் + வெள்ளம்
புதுமைப்பித்தன் - சிறுகதைகள்
- புதுமைப்பித்தன் எத்தனைக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்?விடை: நூற்றுக்கும்
- 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்', 'சாபவிமோசனம்' ஆகிய சிறுகதைகளின் ஆசிரியர் யார்?விடை: புதுமைப்பித்தன்
- 'மனித எந்திரம்' என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது?விடை: மணிக்கொடி
பண்டைய அளவைகள் மற்றும் நாணயப் பெயர்கள்
- மாகாணி, வீசம் என்பவை அக்காலத்தில் வழக்கில் இருந்த எப்பெயர்கள்?விடை: அளவைப்பெயர்கள்
- அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணய பெயர்கள் எவை?விடை: அணா, சல்லி, துட்டு
யாப்பு இலக்கணம்
- மரபுக்கவிதைகளை எழுதுவதற்கான இலக்கணம் எவ்வாறு அழைக்கப்படும்?விடை: யாப்பு இலக்கணம்
- யாப்பு இலக்கணத்தின் படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை? அவை யாவை?விடை: 6 (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை)
- எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது எது?விடை: அசை
- குறில் அல்லது நெடில் எழுத்து தனித்து வந்தாலும், ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது என்ன அசை?விடை: நேரசை
- இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வருவது என்ன அசை?விடை: நிரையசை
- சீர் எத்தனை வகைப்படும்?விடை: 4
- தளை எத்தனை வகைப்படும்?விடை: 7
- அடி எத்தனை வகைப்படும்?விடை: 5
தொடை வகைகள்
- முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எது?விடை: மோனைத் தொடை
- இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எது?விடை: எதுகைத் தொடை
- இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வரத் தொடுப்பது எது?விடை: இயைபுத் தொடை
- பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதலாக வருவது எது?விடை: அந்தாதித் தொடை
பாவிற்குரிய ஓசைகள்
- வெண்பாவிற்குரிய ஓசை எது?விடை: செப்பலோசை
- ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை எது?விடை: அகவலோசை
- கலிப்பாவிற்கு உரிய ஓசை எது?விடை: துள்ளலோசை
- வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது?விடை: தூங்கலோசை
- யாப்பு என்றால் என்ன பொருள்?விடை: கட்டுதல்
மு. மேத்தா
- 'நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான்' எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?விடை: மு. மேத்தா
- வானம்பாடி இயக்கக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?விடை: மு. மேத்தா
- மு. மேத்தா எழுதிய நூல்கள் எவை?விடை: கண்ணீர் பூக்கள், ஊர்வலம், சோழ நிலா, மகுட நிலா
- மு. மேத்தா எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?விடை: ஆகாயத்துக்கு அடுத்த வீடு
- 'கவலைகள் கைக்குழந்தைகள் அல்ல' என்று பாடியவர் யார்?விடை: மு. மேத்தா
அண்ணல் அம்பேத்கர்
- விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?விடை: அம்பேத்கர்
- அம்பேத்கர் பிறந்த மாநிலம் எது?விடை: மகாராஷ்டிரம் (ரத்னகிரி மாவட்டம்)
- அம்பேத்கர் எங்குள்ள பள்ளியில் கல்வியைத் தொடங்கினார்?விடை: சதாரா
- அம்பேத்கர் உயர் கல்வி கற்க பரோடா மன்னர் உதவியுடன் எங்கு சென்றார்?விடை: அமெரிக்கா
- 'இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்' என்பது யாருடைய முதல் நூல்?விடை: அம்பேத்கர்
- 'இந்தியாவின் தேசிய பங்கு வீதம்' என்ற ஆய்வுக்காக அம்பேத்கர் பெற்ற பட்டம் என்ன?விடை: முனைவர் பட்டம்
- அம்பேத்கர் 1920-இல் பொருளாதாரப் படிப்பிற்காக எங்கு சென்றார்?விடை: இலண்டன்
- 'ரூபாய் பற்றிய பிரச்சினை' என்ற ஆராய்ச்சி கட்டுரைக்காக அம்பேத்கர் பெற்ற பட்டம் என்ன?விடை: முனைவர் பட்டம்
- 'ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை' என்ற அமைப்பை அம்பேத்கர் நிறுவிய ஆண்டு எது?விடை: 1924
- அம்பேத்கர் எம்மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்?விடை: புத்த சமயம்
- லண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1930
- பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது?விடை: 1931 (செப்டம்பர் 24)
- சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கியவர் யார்?விடை: அம்பேத்கர்
- 'ஒடுக்கப்பட்ட பாரதம்' எனும் இதழை அம்பேத்கர் தொடங்கிய ஆண்டு எது?விடை: 1927
- அம்பேத்கர் நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஆண்டு எது?விடை: 1930
- அம்பேத்கர் தன்னைப் புத்த சமயத்தில் இணைத்துக் கொண்ட ஆண்டு எது?விடை: 1956 அக்டோபர் 14
- 'புத்தரும் அவரின் தம்மமும்' என்ற புத்தகம் வெளியான ஆண்டு எது?விடை: 1957
- அம்பேத்கர் மறைந்த ஆண்டு எது?விடை: 1956 டிசம்பர் 6
- சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் எது?விடை: சமாஜ் சமாத சங்கம்
- அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1990
கோமகள்
- 'பால் மனம்' என்ற கதையை எழுதியவர் யார்?விடை: கோமகள்
- கோமகளின் இயற்பெயர் என்ன?விடை: இராஜலட்சுமி
- கோமகளின் எந்த நாவல் தமிழக அரசின் விருதைப் பெற்றது?விடை: அன்னை பூமி
- கோமகளுக்கு 'தமிழ் அன்னை விருது' வழங்கிய பல்கலைக்கழகம் எது?விடை: தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- 'பால் மனம்' என்ற கதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?விடை: மீதமிருக்கும் சொற்கள் (அ. வெண்ணிலா தொகுப்பு)
அணிகள்
- உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது எவ்வகை அணி?விடை: பிறிதுமொழிதல் அணி
- 'கடலோடா கால்வல் நெடுந்தேர்' என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?விடை: பிறிதுமொழிதல் அணி
- இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றில் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது எது?விடை: வேற்றுமை அணி
- 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?விடை: வேற்றுமை அணி
- ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது எவ்வகை அணி?விடை: இரட்டுறமொழிதல் அணி
- இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் என்ன?விடை: சிலேடை அணி
- வஞ்சிக்கப்புகழ்ச்சி அணிக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?விடை: தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
- 'கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?விடை: பிறிது மொழிதல் அணி
- 'நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?விடை: உவமை அணி
- 'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந்து அற்று' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?விடை: உவமையணி
திருக்குறள் மற்றும் பாவை நூல்கள்
- திருக்குறளில் ஆண்மை எனப்படுவது யாது?விடை: பகைவர்க்குத் துன்பம் வரும்போது உதவி செய்தல்
- 'அறிவு அருள் ஆசை அச்சம்' என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?விடை: இறையரசன்
- இறையரசனின் இயற்பெயர் என்ன?விடை: சே. சேசுராசா
- இறையரசன் எந்த நூலைத் தழுவி 'கன்னிப்பாவை' என்ற நூலை இயற்றியுள்ளார்?விடை: திருப்பாவை
- மார்கழித் திங்களில் பெண்கள் நோன்பு இருப்பதை எவ்வாறு அழைப்பர்?விடை: பாவை நோன்பு
- திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: ஆண்டாள்
- திருவெம்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
தமிழ் இலக்கணம் (தொடர்)
- ஒருமைத் தொடர்களில் எவற்றை பயன்படுத்த வேண்டும்?விடை: தான், தன்னை, தன்னால் (தாம், தம்மை - பன்மைக்குரியவை)


0 Comments