ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 16


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 16


வாழ்த்து, திருக்குறள், மொழி மற்றும் கவிதை
  1. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் யாவை?
    விடை: நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், செந்தாப் போதார், பெருநாவலர், மாதானுபங்கி.
  2. தம் எண்ணங்களையும் கருத்துகளையும் பிறருக்கு அறிவிக்கும் கருவி எது?
    விடை: மொழி.
  3. பாரதியார் வாழ்ந்த காலம் எது?
    விடை: 11.12.1882 - 11.09.1921.
  4. புதுக்கவிதை வளர்ச்சியில் யாருடைய பங்கு போற்றத்தக்கது?
    விடை: வல்லிக்கண்ணன்.
  5. தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண் விடுதலை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலானவற்றை பாடற் பொருட்களாகக் கொண்ட கவிதைகள் யாருடையவை?
    விடை: பாரதிதாசன்.
  6. இரவி என்பதன் பொருள் என்ன?
    விடை: சூரியன்.
திருவிளையாடற் புராணம், கடற்பயணம் மற்றும் கெலன் கெல்லர்
  1. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?
    விடை: திருவாலவாய்க் காண்டம்.
  2. "கொங்கு தேர் வாழ்க்கை..." என்று தொடங்கும் பாடலை இறைவன் யாருக்காகப் பாடினார்?
    விடை: தருமிக்காக.
  3. மதுரைக்காண்டம், கூடல்காண்டம், திருவாலவாய்க்காண்டம் ஆகியவற்றில் உள்ள படலங்களின் எண்ணிக்கை முறையே எத்தனை?
    விடை: 18 படலம், 30 படலம், 16 படலம்.
  4. பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பவை எதனைக் குறிக்கும் பெயர்கள்?
    விடை: மரக்கலத்தைக் குறிக்கும் பெயர்கள்.
  5. பழந்தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பொருட்கள் யாவை?
    விடை: இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலம், இலவங்கம், இஞ்சி.
  6. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், அறிவியல் ஈடுபாடும் கொண்டவராகவும் விளங்கியவர் யார்?
    விடை: கெலன் கெல்லர்.
  7. கெலன் கெல்லரின் ஆசிரியர் யார்?
    விடை: அன்னி சல்லிவான்.
  8. கெலன் கெல்லரின் ஆசிரியர் அன்னிசல்லிவான் இறந்த ஆண்டு எது?
    விடை: 1930.
  9. "வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை; ஒன்று போனால் இன்னொன்று வரும்" என்று கூறியவர் யார்?
    விடை: கெலன் கெல்லர்.
  10. "சாதுவன்" வணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பை கூறும் நூல் எது?
    விடை: மணிமேகலை.
  11. மணிமேகலையை மணிபல்லவத்தீவிற்கு தூக்கிச் சென்ற தெய்வம் யாது?
    விடை: மணிமேகலா தெய்வம்.
சீட்டுக்கவி, ஆனந்தரங்கர், முத்தொள்ளாயிரம் மற்றும் பிற செய்திகள்
  1. குதிரையைக் குறிக்கும் பெயர்கள் யாவை?
    விடை: கந்துகம், கோணம், கொக்கு, குந்தம், பாடலம், சடிலம்.
  2. சேலத்து வேந்தன் செழியத்தரையினிடம் குதிரை வேண்டி சீட்டுக்கவி எழுதி அனுப்பியவர் யார்?
    விடை: அந்தகக்கவி வீரராகவர்.
  3. திருக்கழுக்குன்றப் புராணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
    விடை: அந்தகக்கவி வீரராகவர்.
  4. செய்யுள் வடிவில் எழுதப்படும் கடிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
    விடை: சீட்டுக்கவி.
  5. கந்துகம், குந்தகம், பாடலம், சடிலம் ஆகிய சொற்களின் பொருள் யாது?
    விடை: பந்து, சூலம், பாதிரிப்பூ, சடை.
  6. துபாசி என்றால் என்ன?
    விடை: இருமொழிப்புலமையுடையவர் (மொழிபெயர்ப்பாளர்).
  7. வளவு என்பதன் பொருள் யாது?
    விடை: வீடு.
  8. "ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை" என்பது யாருடைய கனவு?
    விடை: பாரதியார்.
  9. "தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து" என்று கூறியவர் யார்?
    விடை: மு.வரதராசனார்.
  10. முத்தொள்ளாயிரம் என்ற நூலில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?
    விடை: மூன்று தொள்ளாயிரம்.
  11. புறாவிற்குத் தன் தசையை அளித்த மன்னன் யார்?
    விடை: சோழ மன்னன்.
  12. பாண்டிய மன்னனின் யானை தன் தந்தங்களை எதனைக் கொண்டு மார்போலை எழுதும்?
    விடை: எழுத்தாணியாகக் கொண்டு.
  13. 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று எது?
    விடை: பரணி.
  14. திருவிழாக்களில் காவடி, தேர் இழுப்பதும் எந்த தீவில் இன்னும் நடைபெற்று வருகின்றன?
    விடை: ரியூனியன் தீவில்.
  15. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாகத் திகழும் மொழி எது?
    விடை: தமிழ்மொழி.
  16. தமிழர்கள் எந்த நாடுகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் கலந்துகொண்டு பல பதவிகளை வகித்து வருகின்றனர்?
    விடை: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.
  17. தமிழர்கள் எந்த நாடுகளில் குடியரசு தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
    விடை: சிங்கப்பூர், மொரிசியசு.
  18. தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்), சதுரகாதி (தமிழின் முதல் அகராதி), தேம்பாவணி, பரமார்த்த குரு கதை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
    விடை: வீரமாமுனிவர்.
திரு.வி.க., உமர்கய்யாம், உணவே மருந்து மற்றும் மூலிகைகள்
  1. திரு.வி.க. இயற்றிய உரைநடை நூல்கள் யாவை?
    விடை: இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி.
  2. திரு.வி.க. இயற்றிய செய்யுள் நூல்கள் யாவை?
    விடை: முருகன் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், அருள்வேட்டல், கிறித்துவின் அருள்வேட்டல், அருகன் அருகே, உரிமைவேட்டல், பொதுமை வேட்டல், பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும்.
  3. "அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்" எனக் கூறுவது எது?
    விடை: உமர்கய்யாம் பாடல்கள்.
  4. "துன்ப நோயை நீக்கிடுமேல் துவ்வா விடமும் அமுதாகும்" எனக் கூறுவது எது?
    விடை: உமர்கய்யாம் பாடல்கள்.
  5. "ஏழையாகி எளியவரின் எளியனாக ஆக வேண்டும்" எனக் கூறுவது எது?
    விடை: உமர்கய்யாம் பாடல்கள்.
  6. மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும் இறைவனது படைப்பையும் பாடுபொருளாக கொண்டவை எது?
    விடை: உமர்கய்யாம் பாடல்கள்.
  7. கவிமணியின் உமர்கய்யாம் பாடல்கள் எதனை விளக்குகின்றன?
    விடை: வாழ்க்கை தத்துவத்தை.
  8. அறுசுவையின் பயன்களுள் இனிப்பு, துவர்ப்பு எதனைத் தரும்?
    விடை: வளம், ஆற்றல்.
  9. அறுசுவையின் பயன்களுள் கைப்பு, கார்ப்பு எதனைத் தரும்?
    விடை: மென்மை, உணர்வு.
  10. அறுசுவையின் பயன்களுள் உவர்ப்பு, புளிப்பு எதனைத் தரும்?
    விடை: தெளிவு, இனிமை.
  11. பசிப்பிணிக்கு எது மருந்து?
    விடை: உணவே மருந்து.
  12. நோய்க்கு முதல் காரணம் எது?
    விடை: உப்பு.
  13. பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிப்பது எது?
    விடை: இஞ்சி.
  14. கண் குளிர்ச்சியையும் அறிவும் தெளிவையும் உண்டாக்குவது எது?
    விடை: நல்லெண்ணெய்.
  15. சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கச் செய்வது எது?
    விடை: சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர்.
  16. உடலுக்கு வலிவூட்டவும் கழிவை அகற்றவும் பயன்படுவது எது?
    விடை: கீரை.
  17. "மீதூண் விரும்பேல்” என்றுக் கூறியவர் யார்?
    விடை: ஔவையார்.
  18. "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று கூறியவர் யார்?
    விடை: கவிமணி.
  19. கீழாநெல்லியின் வேறு பெயர்கள் யாவை?
    விடை: கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.
  20. தூதுவளையின் வேறு பெயர்கள் யாவை?
    விடை: தூதுவளை, சிங்கவல்லி.
  21. "குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு" என்ற வழக்கு ஏற்படக் காரணம் என்ன?
    விடை: பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால்.
  22. கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்கள் யாவை?
    விடை: கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்.
  23. குரல் வளத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீடிக்கும் மூலிகை எது?
    விடை: தூதுவளை.
  24. மலப்புழுக்களை வெளியேற்றி வயிற்றைத் தூய்மை செய்வது எது?
    விடை: குப்பைமேனி.
  25. முறிந்த எலும்பு விரைவில் கூட, எதனை அரைத்துத் தடவ வேண்டும்?
    விடை: முருங்கைப் பட்டையை அரைத்துத் தடவிட.
  26. வீக்கத்தைக் குறைக்க, கண்பார்வையை ஒழுங்குபடுத்த, உடலை வலுவாக்க பயன்படுவது எது?
    விடை: முருங்கைப் பட்டை.
  27. இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும்பங்கு வகிப்பது எது?
    விடை: முருங்கை.
  28. வாய்ப்புண், குடற்புண் நீக்க பயன்படுவது எது?
    விடை: மணத்தக்காளிக்கீரை.
  29. பல் சார்ந்த நோய்களைக் குணமாக்க பயன்படும் கீரை எது?
    விடை: அகத்திக்கீரை.
திருக்குறள் சான்றாண்மை, சுரதா மற்றும் காமராசர்
  1. திருக்குறள் கூறும் தவம் என்பது யாது?
    விடை: பிற உயிர்களை கொல்லாமை.
  2. சால்பு என்பது யாது?
    விடை: பிறர் குறைகளைச் சொல்லாமை.
  3. ஒரு செயலைச் செய்பவர்க்கு வலிமை தருவது எது?
    விடை: பணிவு.
  4. சான்றாண்மையை அளந்தறியும் உரைகல் எது?
    விடை: தோல்வியை ஒப்புக்கொள்வதே.
  5. மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது?
    விடை: பகைவர்.
  6. யாருக்கு நன்மையே செய்ய வேண்டும்?
    விடை: தீங்கிழைத்தவர்க்கும்.
  7. "பழந்தமிழ் கற்றல் இன்பம் பல நாடு சுற்றல் இன்பம்", "கற்றவர் முன் தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம்" என்று கூறியவர் யார்?
    விடை: சுரதா.
  8. சுரதா அவர்கள் பிறந்த ஊர் எது?
    விடை: நாகை மாவட்டம் பழையனூர்.
  9. சுரதா அவர்கள் பிறந்த நாள் எது?
    விடை: 23.11.1921.
  10. சுரதா அவர்களின் பெற்றோர் பெயர் யாது?
    விடை: திருவேங்கடம் செண்பகம்.
  11. சுரதா என்ற பெயரின் விரிவாக்கம் யாது?
    விடை: சுப்புரத்தினதாசன்.
  12. சுரதா இயற்றிய நூல்கள் யாவை?
    விடை: தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்.
  13. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்ற சுரதாவின் நூல் எது?
    விடை: தேன்மழை.
  14. சுரதா பெற்ற பட்டமும் விருதும் எது?
    விடை: கலைமாமணி பட்டம், பாவேந்தர் விருது.
  15. தமிழக இயலிசை நாடக மன்றம் வழங்கும் பட்டம் எது?
    விடை: கலைமாமணி.
  16. காமராசரின் பெற்றோர் பெயர் யாது?
    விடை: குமாரசாமி, சிவகாமி.
  17. காமராசர் எந்த நூல்நிலையத்தில் படித்து திறமையாகப் பேசவும், வாதம் செய்யவும் கற்றுக்கொண்டார்?
    விடை: மெய்கண்டான் புத்தகசாலை.
  18. காமராசர் கலந்துகொண்ட போராட்டங்கள் எவை?
    விடை: சைமன்குழு எதிர்ப்பு, உப்புச்சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
  19. தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவராக காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?
    விடை: 1939.
  20. 1945இல் யாருடைய தலைமையில் அமைச்சரவை அமைய காமராசர் காரணமாக இருந்தார்?
    விடை: பிரகாசம்.
  21. 1947இல் யாருடைய தலைமையில் அமைச்சரவை அமைய காமராசர் காரணமாக இருந்தார்?
    விடை: ஓமந்தூர் இராமசாமி.
  22. 1949இல் யாருடைய தலைமையில் அமைச்சரவை அமைய காமராசர் காரணமாக இருந்தார்?
    விடை: குமாரசாமி.
  23. இராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஆண்டு எது?
    விடை: 1954.
  24. காமராசர் ஆட்சிக் காலத்தில் தொழிலமைச்சராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் யார்?
    விடை: ஆர்.வெங்கட்ராமன்.
  25. காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வியமைச்சராக இருந்து, அவருக்கு உறுதுணையாகப் பணியாற்றியவர் யார்?
    விடை: சி.சுப்பிரமணியம்.
  26. கிண்டி, அம்பத்தூர், இராணிப்பேட்டை முதலிய இடங்களில் யார் ஆட்சிக்காலத்தில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன?
    விடை: காமராசர்.
  27. நிலச்சீர்திருத்தம் செய்து, நில உச்சவரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது யாருடைய ஆட்சிக்காலத்தில்?
    விடை: காமராசர்.
  28. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த காமராசர் கொண்டு வந்த திட்டத்தின் பெயர் யாது?
    விடை: காமராசர் திட்டம்.
  29. காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவியேற்ற ஆண்டு எது?
    விடை: 1963.
  30. இந்திய பிரதமர் நேரு இறந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரியை போட்டியின்றி பிரதமராக தேர்ந்தெடுத்தவர் யார்?
    விடை: காமராசர்.
  31. லால்பகதூர் சாஸ்திரி எதிர்பாராத முறையில் உயிரிழந்த பிறகு நேருவின் மகள் இந்திராகாந்தியை பிரதமராக தேர்ந்தெடுத்தவர் யார்?
    விடை: காமராசர்.
  32. காமராசர் இயற்கை எய்திய ஆண்டு எது?
    விடை: 1975 அக்டோபர் 2.
  33. எந்த ஆண்டு காமராசருக்கு நடுவணரசு பாரத ரத்னா விருது வழங்கியது?
    விடை: 1976.
  34. சத்தியமூர்த்தியைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர் யார்?
    விடை: காமராசர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement